இதற்கெல்லாம் திருவாளர் “சித்து” மசிய மாட்டார்…!!!

.

.

சர்வ கட்சி கூட்டம் கூட்டி
எத்தகைய தீர்மானம் போட்டாலும் சரி –
தமிழ்நாட்டில் எத்தனை
” கடையடைப்பு “கள் நிகழ்த்தினாலும் சரி –
அத்தனை கட்சித்தலைவர்களும் கூட்டாக
நேரில் சென்று பிரதமரிடம் மனு கொடுத்தாலும் சரி –

கல்லுளி மங்கன் திருவாளர் சித்து –
ஒரு சிறிது கூட அசைய மாட்டார்…

dc-Cover-777pon7v8ah9rlgl6raj71j4p7-20160826025626.Medi

நேற்று திரு.கே.பி.ராமலிங்கம் தலைமையில்
சென்றவர்களின் ” உண்மை ” அனுபவத்தை கேட்டால்
அது நன்கு விளங்கும்….

டெல்லியில் இருக்கும் இன்னொரு பெரிய மனிதர்
இந்த மாதிரி சமயங்களில் அதி சிறந்த ஆயுதமான
“மௌன விரத ” த்தை மேற்கொள்வார்….
இல்லையேல் இருக்கவே இருக்கிறது –
அயல்நாட்டுப் பயணம்…!
இவரைப் பார்ப்பதால் விளையக்கூடிய அதிக பட்ச பயன் –
“சேர்ந்து ஒரு Group Photograph ” எடுத்துக் கொள்ளலாம்…

ஏற்கெனவே காவிரி நடுவர் ஆணையத்தின் தீர்ப்பில்
மழை குறைவு, தண்ணீர் பஞ்சம் – காலங்களில்
distress share formulae ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறதே
அதை ஏன் கடைபிடிக்கவில்லை என்று கேட்க
இங்கு யாருக்கும் நாதியில்லை….
வக்கு இல்லை …. மனம் இல்லை…
என்ன செய்து விட முடியும் இவர்களால்…
என்கிற அலட்சியம்…!

நீதிமன்றங்கள் இது குறித்து சீரியசாக விவாதிப்பதை
இன்னும் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்காவது
( மழை, விவசாயம் – சீசன் முடியும் வரை )
எடுத்துக் கொள்ளா….!!!

அவை அதிமுக்கியமான வேறொரு விஷயத்தை
விவாதித்துக் கொண்டிருக்கின்றன –
“ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். பற்றி என்ன சொன்னார்…
அது சரியா, இல்லையா …? மன்னிப்புக் கேட்கச் சொல்லி
கேஸை முடிக்க முடியுமா…? முடியாதா ..? ”

தமிழர்களுக்கு சூடு, சொரணை இருந்தால் –
இந்த முறைகளை எல்லாம் கைவிட்டு விட்டு –
புத்திசாலித்தனமாக, “யோசித்து ”
மூளையைப் பயன்படுத்தி,
“வேறு” வழிகளைப் பார்க்கத் துவங்க வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இதற்கெல்லாம் திருவாளர் “சித்து” மசிய மாட்டார்…!!!

 1. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் நீர் மேலாண்மைக்காக சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல் இருந்து விட்டு அடுத்தவர்களைக் குறை சொல்வது எந்த வகை நியாயம்?
  பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு எந்த ஒரு முதல்வரும் எதிர்கால சந்ததியினரை நினைத்துக்கூட பார்க்க நேரமில்லாது உள்ளனர்.
  அந்த வகையில் தமிழ்நாட்டு வளர்ச்சியைக் கெடுத்ததில் கலைஞருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
  அவரை எதிர்த்து அரசியல் செய்வது எளிதல்ல..
  அவருக்கு தன்னைத் தவிர ஒருவரும் நல்ல பெயர் பெற்றுவிடக் கூடாது என்பதே நிலையாகிப் போனது..
  இன்றும் மேட்டூர் அணை நிரம்பினால் மீண்டும் கடலுக்குத் தான் அந்த நீர் செல்கின்றது..அதை மாற்ற இன்று வரை ஆட்சியாளர்கள் முயலவில்லை
  மற்றவர்கள் முன்னேறினால் அதை எதிர்ப்பதே வாடிக்கையாய் வைத்துள்ளோம்.
  நம்முடைய அளவிலே நாம் நீர் மேலாண்மை திட்டங்களை தீட்டுவதில் முனைப்புக் காட்டாத வரை பிரச்சினைகள் தொடரத்தான் செய்யும்.
  -இலக்குமி மோகன்

  • R KARTHIK சொல்கிறார்:

   True. Couple of years back when they released water into the sea through kollidam, it was so painful to see.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இலக்குமி மோகன் மற்றும் இதர நண்பர்களுக்கு,

   நீங்கள் சொல்வது பழைய செய்தி….

   இப்போது நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது.
   இனி காவிரி நீர் கடலுக்கு போகாது –

   கொள்ளிடத்தில் போகும் உபரி நீரை தேக்கி,
   திசை திருப்பி விட்டு, பயன்படுத்திக் கொள்ள –

   கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலூர் மற்றும்
   நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனூர் – குமாரமங்கலம்
   கிராமங்களுக்கு இடையே கீழணையின் கீழ் புறம்,
   0.6 TMC அடி கொள்ளளவு கொண்ட தலை
   மதகுகளுடன் ஒரு கதவணை,
   சுமார் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுக்
   கொண்டிருக்கிறது. இந்தப் பணி முடிவடந்தால்,
   காவிரி நீர் கடலுக்கு வீணாகப் போவது தடுக்கப்படும்.

   இதைத் தவிர –
   காவிரி ஆற்றின் குறுக்கே 17 இடங்களில்
   சுமார் 33 கோடி ரூபாய் செலவில் –
   தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.

   திருச்சி அருகே, கம்பரசம்பேட்டையில், தடுப்பணை
   ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்து விட்டதை நானே
   நேரில் பார்த்தேன்.

   இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்தால் –
   விரைவில், காவிரி நீரை நாம் முழுமையாக
   பயன்படுத்திக் கொள்ளும் நிலை உருவாகுமென்று
   நம்பலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. ravi சொல்கிறார்:

  //தமிழர்களுக்கு சூடு, சொரணை இருந்தால்//
  உண்மையிலே தமிழர்களுக்கு இதெல்லாம் இருந்தால் காவிரியில் முதலில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இருப்போம் .. நதிக்குள்ளேயே ரோடு போட்டு மணல் அள்ளும் சாமர்த்தியம் தமிழர்களுக்கு மட்டுமே உரியது .. சும்மா கேரளாவுக்கும் , கர்நாடகாவுக்கும் வண்டி வண்டியாக மணல் போகிறது .. பொக்லைன் மூலம் மணல் அள்ள கூடாது என்கிற அத்தனை சட்டங்களையும் மீறி அரசும் வண்டி வண்டியாக மணல் அள்ளுகிறது..
  கடைசியில் காவிரி, அமராவதி இரண்டும் இருக்கும் கரூரில் தண்ணீர் பஞ்சம்..

 3. selvarajan சொல்கிறார்:

  // மத்திய அரசு தன் பொறுப்பினை தட்டிக்கழித்து
  இரு மாநிலங்களும் தங்களுக்குள்ளேயே முட்டிக் கொள்ளட்டும்
  என்று வேடிக்கை பார்ப்பது – முழுக்க முழுக்க அரசியல்.// என்று அன்றொருநாள் எழுதியிருக்கிறார் திரு. கா.மை . அவர்கள் —— .அதுமட்டுமல்ல முன்பு காங்கிரஸ் அரசின்போதே — அமைக்க வேண்டிய “காவிரி மேலாண்மை வாரியம் ” பா.ஜ.க. அரசிலும் அப்படியே அமைக்காமல் அதே நிலையில் இருப்பதை பார்க்கும் நீதிமன்றத்துக்கும் — இந்த வழக்கு என்றாலே ஒரு ” அயர்வை ” உருவாக்குகிறதோ — என்னவோ — மத்தியில் யார் வந்தாலும் ஒன்றும் செய்யப்போவது இல்லை — செய்யவும் மாட்டார்கள் என்பதால் தான் — ” சித்து ” மசியாமல் இருக்கிறார் .. ” சிந்து ” பாடுகிறார் … அப்படி …தானே …?

 4. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  இலக்குமி மோகன் அவர்களின் பின்னூட்டம் [மறுமொழி] மிகவும் சரியே,

  தமிழர்களுக்கு சூடு, சொரணை இருந்தால் –
  இந்த முறைகளை எல்லாம் கைவிட்டு விட்டு –
  புத்திசாலித்தனமாக, “யோசித்து ”
  மூளையைப் பயன்படுத்தி,“வேறு” வழிகளைப் பார்க்கத் துவங்க வேண்டும்.

  இதுவும் வெறும் கனவுதான் .
  ..
  நாமுந்தான் ஐம்பது வருடமாக வாக்காளர்களையும் ஆட்சியாளர்களையும் பார்க்கிறோமே..

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப கிரி,

  “வேறு” வழிகளை என்று நான் சொல்வது –

  தனக்குச் சொந்தமாக, சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத
  இஸ்ரேல் நாடு, எவ்வாறு, சொட்டு நீர் பாசனம் உட்பட
  அற்புதமான வழிவகைகளை கண்டுபிடித்து, இன்று
  தன் குடிநீர், விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு,
  நீர் மிகு நாடாக மாறி இருக்கிறது என்பதைப் பார்த்து,

  நமக்கேற்ற வழிவகைகளை நாமே “யோசித்து” –
  வடகிழக்கு பருவகாலத்தில் வரும் மழை/வெள்ள நீரை
  தேக்கி வைத்துக் கொண்டு, ஜனவரி இறுதி வரை
  நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
  முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

  திரும்பத் திரும்ப கர்நாடகாவை பிச்சை கேட்பதை விடுத்து,
  ஒரு பக்கம் சட்டபூர்வமாக நமது உரிமையை
  நிலைநாட்டும் அதே நேரத்தில்,

  நொந்து போய், சோர்ந்து போய் உட்கார்ந்து விடாமல்
  பிரச்சினையிலிருந்து மீளும் வழிகளைப் பார்க்க வேண்டும்.

  நமது விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடையாது.
  குறைந்த பட்சம் 5-6 மாதங்கள் வேலையின்றி,
  அல்லது அரைகுறையாக எதையாவது செய்து கொண்டு
  இருக்கிறார்கள். இந்த நாட்களில், உருப்படியாக தங்களுக்கு
  வேண்டிய பல பணிகளை செய்து கொள்ளலாம்.

  கிராம பஞ்சாயத்துகள், உள்ளூர்வாசிகளிடம் தான்
  இருக்கின்றன. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டமும்
  அவர்களே வகுப்பது தான். இவற்றை வைத்துக்கொண்டு –
  ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு மூன்று குளங்களை
  உருவாக்கி – மழைக்கால நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும்
  வழியைப் பார்க்க வேண்டும்.

  ஏரி, குளங்கள், வாய்க்கால்களை யாரும் தூர் வாரவில்லை
  என்று புலம்புவதை விட்டு விட்டு, இவர்களே ஒன்று கூடி
  அந்த பணிகளை மழை வரும் முன்பாக செய்து
  முடிக்க வேண்டும்.

  ஊருக்கு ஒன்பது விவசாய சங்கங்களை வைத்துக்கொண்டு,
  டிவி-க்கு முன்பாக ஆளாளுக்கு உளறுவதை நிறுத்திக் கொண்டு
  ஊருக்கு ஒரே ஒரு சங்கம் வைத்துக் கொண்டு –
  உள்ளூர் தேவைகள் அனைத்தையும் அதன் மூலம்
  நிறைவேற்றிக் கொள்ள பாடுபட வேண்டும்…

  நம்பிக்கை, முயற்சி, ஆகியவற்றை துணை கொண்டு,
  ஒன்றுபட்டு நின்றால் – நமது விவசாயிகளுக்கு இது
  ஒரு பிரச்சினையே இல்லை.

  தடைக் கற்களை, படிக் கற்களாக மாற்றிக் கொள்வது
  என்பது இது தான்.

  அரசியல்வாதிகள் தூண்டி விடுவதோடு சரி,
  தங்கள் தேவைகளுக்கு துணை வர மாட்டார்கள்.
  தங்களுக்கு தாங்களே தான் உதவி என்பதை
  அவர்கள் உணர வேண்டும்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  மழைக்கால நீரை சேர்த்து வைத்துக் கொள்ள வழியைப் பார்க்க வேண்டும். என்ற நீண்ட கருத்தாழமுள்ள பதிலுக்கு நன்றி ஐயா…

  திரும்பத் திரும்ப கர்நாடகாவை பிச்சை கேட்பதை விடுத்து,
  ஒரு பக்கம் சட்டபூர்வமாக நமது உரிமையை
  நிலைநாட்டும் அதே நேரத்தில், ஏரி, குளங்கள், வாய்க்கால்களை யாரும் தூர் வாரவில்லை என்று புலம்புவதை விட்டு விட்டு, கிராம பஞ்சாயத்துகள், உள்ளூர்வாசிகளிடம் தான்இருக்கின்றன. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டமும்
  அவர்களே வகுப்பது தான். இவற்றை வைத்துக்கொண்டு –
  ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு மூன்று குளங்களை
  உருவாக்கி – மழைக்கால நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும்
  வழியைப் பார்க்க வேண்டும்.இவர்களே ஒன்று கூடி
  அந்த பணிகளை மழை வரும் முன்பாக செய்து
  முடிக்க வேண்டும்.

 7. LVISS சொல்கிறார்:

  Who is the Sidhu being referred to here –No previous periya manithars in the past have been able to solve this, so why blame the present one — This can be solved only by politicians from both states sitting together and talking it out with a bit of give and take —
  Tamil Nadu has to find alternative ways to save water —
  About the distress share formula –There is a report in the New Indian Express today that the tussle over sharing cauvery water during distress may end soon — The Cauvery Monitoring Committee is to come up with a formula to resolve the dispute over sharing of water —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.LVISS,

   Are you talking about the news report
   that appear on line new indian express dating today…
   with a headline ” Cauvery Distress Formula Likely Soon”…?

   Please note that it is originally published
   on 25th November 2015 i.e. about 9 months ago…!

   But for the news report – nothing else came out – I believe.

   -with best wishes,
   Kavirimainthan

 8. Palaniappan Emappalli சொல்கிறார்:

  100 days work. waste. this system destroy our agriculture land peoples.in 10 years agriculture lands modify to factory or house properties.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.