ஒரு தமிழனின் ” பொற்கால” த்திற்கு கிடைக்கும் மரியாதை ….!!!

s-r-nathan-1

சிங்கப்பூர் தீவில் ஒரு தமிழருக்கு கிடைக்கும்
மரியாதை, மனதை வருடுகிறது….

இன்றைய தினம் சிங்கப்பூரில் –
முன்னாள் ஜனாதிபதி திரு.எஸ்.ஆர்.நாதன்
அவர்களின் இறுதிச்சடங்குகளின் போது, அவருக்கு
மிகவும் பிடித்தமான ஒரு பாடலை ஒலிபரப்பி,
அரங்கம் முழுவதும் அமைதியுடன் அவரை
நினைவுகூர்வது –
வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது
இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதை
உணர்த்துகிறது….

கீழே இரண்டு வீடியோக்கள் –

மறைந்த ஜனாதிபதிக்கு –
அரங்கம் ” தஞ்சாவூரு மண்ணெடுத்து ” என்கிற
பாடலை இசைத்து மரியாதை செலுத்துகிறது….
(இயக்குநர் சேரன் அவர்களின் “பொற்காலம்”
திரைப்படத்துக்காக வைரமுத்து அவர்கள் இயற்றி,
கிருஷ்ணராஜ் பாட, தேவா அவர்கள்
இசையமைத்த பாடல் – )

கீழே அதே பாடல் திரைப்படத்தில் வரும்
அழகான ஒரு காட்சியில் –

“இருந்தாலும், மறைந்தாலும் -பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ”

– மறைந்த ஜனாதிபதிக்கு நமது உளமார்ந்த அஞ்சலி….

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

ஒரு தமிழனின் ” பொற்கால” த்திற்கு கிடைக்கும் மரியாதை ….!!! க்கு 2 பதில்கள்

 1. செ. இரமேஷ் சொல்கிறார்:

  ‘அந்த காலத்தில்’ என்று பெரியவர்கள் எளிமைக்கு உதாரணமாக காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை எனது அப்பா, தாத்தா சொல்லுவார்கள். நான் அப்படிப்பட்ட தலைவர்களை அருகில் கண்டு பார்த்ததில்லை. அவ்வாறு நேரில் நான் கண்ட ஒரு மனிதர் திரு. நாதன் ஆவார். அவ்வளவு எளிமையான மனிதர். அவர் அதிபராக இருந்த போதும், பதவிக்காலம் முடிவடைந்த போதும் பல பொது நிகழ்ச்சிகளில் கண்டிருக்கிறேன். மிகவும் சாதாரணமாக பழகக்கூடியவர். அவரை போன்ற மனிதர்களை நேரில் கண்டதையே நான் பெரும் பேராக கருதுகிறேன். சென்ற முறை, தமிழுக்கான மரியாதை பற்றி நான் கூறியிருந்தேன். அதற்க்கு காரணம் இவர் போன்ற மக்களே. நான் அவரை தலைவராக கூறவில்லை, ஏனெனில், எப்போதும் ஒரு சக மனிதராகவே இருப்பதையே அவர் விரும்பினார். தமிழில் பாடல் ஒலித்ததை மட்டும் நீங்கள் கூறினீர்கள். வேறு ஒருவர், தமிழிலேயே நினைவுரை ஆற்றினார். இதே போன்ற ஒரு நினைவுரை, சென்ற ஆண்டு மறைத்த திரு. லீ குவான் யூ அவர்கள் மறைத்த போதும் ஒரு சாதாரண தொழிற்சங்க ஊழியர் ஒருவர் தமிழில் படித்தார். அந்த நிகழ்ச்சிக்கு திரு. மோடியும் வந்திருந்தார்.
  (மொழியைப் பற்றி கூறியவுடன் இந்த பதிவிலும் என்னால் பா.ஜ.கா வின் மொழி திணிப்பு பற்றி என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை).
  பின் குறிப்பு: எனது தாய்மொழி தமிழ் அல்ல. ஆனால் காதல் கொண்டவன். உணர்வால் தமிழனாக வாழ்பவன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரமேஷ்,

   சிங்கப்பூரிலிருந்து,
   திரு.நாதன் அவர்களை,
   நேரடியாக பல நிகழ்ச்சிகளில் அருகிருந்து பார்த்த
   உங்களிடமிருந்து வந்திருக்கும்
   இந்த பின்னூட்டம் எனக்கு மன நிறைவு தருகிறது.

   பதவியினால் சிலர் உயரத்தூக்கி வைக்கப்படுகிறார்கள்.
   பதவி போனதும் அவர்களை யாரும் திரும்பிக்கூட
   பார்ப்பதில்லை. எத்தனை உயர்ந்த பதவியை
   வகித்தாலும், என்றும் மனித நேயத்தோடும்,
   எளிமையோடும் வாழும் மனிதர்களை மட்டும்,
   இந்த உலகம் – இருந்தாலும், மறைந்தாலும் – மறப்பதில்லை.

   நீங்கள் கூறிய காமராஜர், கக்கன் போன்றவர்கள்
   இதற்கு எடுத்துக்காட்டு.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.