“சன்” னுக்கு கிடைத்தது – “புதிய தலைமுறை”க்கு கிடைக்க வேண்டாமா…?

.

.

கடந்த 3-4 நான்கு நாட்களாக “சன்” னுக்கு
பயங்கர டென்ஷன் …
எக்மோர் ஆபீசுக்கு கொண்டு சென்று விட்டார்கள்…
இரவு பூராவும் விசாரணை –
காலையிலும் வெளியே விடவில்லை….
உள்ளே உட்கார்ந்திருக்கிறார், நடக்கிறார்,
தனி அறையில் ஓய்வெடுக்கிறார் –

ஒரு பக்கம் மகிழ்ச்சி –
இன்னொரு பக்கம் சும்மா பெயருக்கு விசாரித்து விட்டு
வெளியே விட்டு விடுவார்களோ ? – என்று பதட்டம்…

பிறகு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார்கள்
என்றவுடன், “அய்யைய்யோ – உடல்நிலையை காரணம் காட்டி,
மருத்துவ மனையிலேயே அட்மிட் செய்து விடுவார்களோ ?”
என்று பயம், சந்தேகம்.

எல்லாம் “ச்சும்மா” – நீதிமன்றம் சொன்னதால் பெயருக்கு
விசாரணை செய்து விட்டு அனுப்பி விடுவார்களோ என்று
மீண்டும் குழப்பம்….

“வேண்டுமானால் பாருங்களேன் – விசாரணை
செய்வதாக கோர்ட்டுக்கு காட்டி விட்டு, திரும்பவும்
வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் ”

திருவிளையாடல் தருமியைப் போல் –
சன் செய்தியாளர்களும், அறிவிப்பாளர்களும்
தவித்த தவிப்பு….
அடடா – 40 மணி நேர தவிப்பு அது…

இரண்டு நாட்கள் தொடர்ந்து “சன் நியூஸ்” பார்த்தவர்கள்
இத்தனை உணர்வுகளும், அவர்களது தொலைக்காட்சி
செய்திகளில் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே
இருந்ததை கவனித்திருக்கலாம்.

இறுதியாக, கைது உத்திரவு பிறப்பிக்கப்பட்டு,
புழல் சிறைக்கு அழைத்துப் போகிறார்கள் என்று
தெரிந்த பிறகு தான் நிம்மதி….
” ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே “..!!!

( இதில் வேடிக்கை என்னவென்றால், இன்னொரு திமுக
சேனலான கலைஞர் செய்தி, முடிந்த வரை செய்தியை
அடக்கி வாசிக்கவே முனைந்தது – நடந்து முடிந்த
சட்டமன்ற தேர்தலின்போது, திமுகவுக்கு தேர்தல்
நிதியாக திருவாளர் ரவி பச்சமுத்து அவர்கள் 10 கோடி
நன்கொடை அளித்ததாக செய்தி வெளிவந்தது
சிலருக்கு தெரிந்திருக்கலாம்… இது அதன் விளைவாகவும்
இருக்கலாம்…!!! )

இதற்கு நேர் மாறாக புதியதலைமுறையில் total silence.
இந்த செய்திகள் எதுவுமே –
தலைமுறையில் வெளியாகவில்லை…
அவர்கள் வேற்றுலகில் இருந்தார்கள்.

இன்று திடீர் திருப்பம் –
போனவர் புழலுக்கு போய் விட்டார்.
திங்கட்கிழமை ஜாமீன் மனு விசாரிக்கப்படும். சரி…

ஆனால், புதிய தலைமுறைக்கு ஒரு பதில் வாய்ப்பு –
டெல்லியில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை –
முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து மாறன் சகோதரர்கள்
நேரில் ஆஜராகி இருக்கிறார்கள் –
சிபிஐ தரப்பு கடுமையாக எதிர்க்கிறது….!!!

அவர்களுக்கு ஒரே டென்ஷன் –
“புதிய தலைமுறை”க்கு சரியான வாய்ப்பு ….
பழைய சரித்திரங்கள் எல்லாம் புரட்டப்படுகின்றன –
வழக்கின் ஆதி அந்தம் எல்லாம்
விவரமாக சேனலில் விவரிக்கப்படுகின்றன –

ஆனால்………………………………………?

அவர்கள் எதிர்பார்க்கும் அந்த முடிவு வருமா…?
திஹார் சிறை வாசலை படம் பிடித்துக் காட்டும் வாய்ப்பு
புதிய தலைமுறைக்கு கிட்டுமா…?

கடவுளே …!
(சரி, நம்பிக்கை இல்லாதவர்களுக்காக) – இயற்கையே….!!

உன் ஆட்சியில்
“சன்”னுக்கு ஒரு நீதி,
“தலைமுறை”க்கு ஒரு நீதியா…?

இரண்டிற்கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டாமா…?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to “சன்” னுக்கு கிடைத்தது – “புதிய தலைமுறை”க்கு கிடைக்க வேண்டாமா…?

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  ஹ்ஹஹா….. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
  தீதும் நின்றும் பிறர்தர வாரா. ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்தால் சரிதான்

 2. drkgp சொல்கிறார்:

  KDs will escape

 3. selvarajan சொல்கிறார்:

  ” கேடி ” யான பிரதர்ஸும் — ” பச்சை ” யான முத்துவும் — ஆற்றிய –ஆற்றுகின்ற ” சமூக தொண்டுகளுக்கு ” இருவரின் தொ[ ல் ]லைக் காட்சி ஊடகங்களுக்கும் போட்டி — ? சூப்பர் … ! ” CENTRAL JAIL NO .4 ” என்கிற வளைந்த போர்டு — வேறு எதையோ நமக்கு உணர்த்துகிறது …. உள்ளே போனாலும் — ஜாமீன் என்கிற பெயரில் வெளியே வந்து அவரவர் ” தொழிலை ” தொடர்வது ஒன்றும் — அதிசயமில்லை — நம் நாட்டில் … அப்படித் தானே … ?

 4. selvarajan சொல்கிறார்:

  // ஆட்டோவில் ஏறி பத்திரிகையாளர்களிடம் எஸ்கேப் ஆன தயாநிதிமாறன் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/dayanidhi-maran-take-auto-avoid-reporters-261309.html …. எவ்வளவு கூச்சம் — வெட்கம் — ரோஷம் — சூடு -சொரணையுள்ள மனுஷன் … ? இப்போதே பத்திரிக்கைகள் ” எஸ் கேப் ” என்று எழுதுவது — பின்னால் நடக்கப் போவதை – முன் கூட்டியே … அறிவிக்கின்றனவா ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   சின்ன மாறன் எவ்வளவு “ஜாலி”யாக ” பின்பக்கமாக “டாட்டா”
   காட்டிக் கொண்டு போகிறார் பாருங்கள்….!!!

   அது நமக்கும் சேர்த்து தானே… 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Srini சொல்கிறார்:

  Yet another KM style – post. Very good sir. Couldn’t control my laugh… finally both will escape… we are in india

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   YES Srini –

   “டாட்டா” நமக்கும் சேர்த்து தான்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதிக்குத் தண்டனை கொடுக்கக்கூடாது” என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, நம் தேசத்தில் எல்லாக் குற்றவாளிகளும் தப்பித்துவிடுகிறார்கள். (பணம், அரசியல் செல்வாக்கு உடைய என்று சேர்த்துக்கொள்ளவும்). ஏழைகளும், ஏதிலிகளும் மட்டும்தான் தண்டிக்கப்படுகிறார்கள். ஆள்பவர்களுக்கும் நீதி அரசர்களுக்கும்தான் எப்படி இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பது என்று தெரியவில்லை.

  (1. மால்யாவுக்கு கடன் அளிக்கும் ஆணையில் கையெழுத்திட்ட, ஆதரவு கொடுத்த அத்தனை வங்கி ஆபீசர்களையும் முதலில் ஜெயிலில் போடவும். விசாரணை அப்புறம்தான். மால்யாவின் மனைவி, மகன் போன்ற ரத்த சம்பந்தம் உள்ளவர்களையும் கைதியாக்கவும். உடனே, கொடுத்த பணம் வசூலாகும். ஆபீசர்களும், கையூட்டோ அல்லது அரசியல் அழுத்தம் காரணமாக நேர்மை தவறிச் செயல்படுவது முடிவுக்கு வரும். 2. சென்னை தொலைபேசி மேலாளராக இருந்து சன் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு நிறைய லைன் கொடுத்து அரசுப் பணம் இழப்பிற்குக்காரணமாக இருந்தவருடைய பென்ஷனை உடனடியாக நிறுத்தி, அவரையும், அவரது குடும்பத்தையும் சிறையில் வைக்கவேண்டும். இதுபோல் நிறைய குற்றங்களுக்கு சுலபத் தீர்வு, உடனடித் தீர்வு சொல்ல முடியும்).

  இப்படி எல்லாம் உடனடி action எடுத்தால் சமூகமும், இந்தியாவும் மேன்மையடைய வாய்ப்பு கிட்டும். இல்லாட்டா இவைகள் வெறும் செய்தியாகும். அவ்வளவுதான். குற்றம் புரிபவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரே ஒரு லாபம் என்னவென்றால், வெளியில் இத்தகைய நியூஸ் வெளிவருவதால், இவர்களுக்கு பாரத ரத்னா கிடைக்காது. இல்லாட்டா 2009லேயே கருணானிதிக்குக் கொடுத்திருப்பார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   ராகுல் காந்தி – ஆர்.எஸ்.எஸ்.ஸை அவமதித்தாரா.
   இல்லையா …? -இது மிகவும் அவசரமான கேஸ்.

   சசிகலா புஷ்பா – பொய் வக்காலத்து – மிக மிக அவசர கேஸ்.

   பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் –
   காவிரி ட்ரிபியூனல்,
   மேகதாது,
   கச்சத்தீவு,
   முல்லைப் பெரியாறுக்கு மத்திய போலீஸ்,
   7 தமிழர் வழக்கு,
   லண்டனுக்கு ஓடிப்போன லலித் மோடி வழக்கு,
   சன் டிவிக்கு 740 கோடி ரூபாய் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு,
   சின்ன மாறன் வீட்டிலிருந்து – பெரிய மாறன் தொலைக்காட்சிக்கு
   மத்திய அரசின் BSNL கேபிள் பதித்த 400 கோடி ரூபாய் வழக்கு –
   நீரா ராடியா டேப் வழக்கு,
   2ஜி வழக்கு,
   கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வழக்கு…
   (இன்னும் எத்தனையோ – அவசரத்திற்கு இவ்வளவு தான்
   நினைவுக்கு வந்தது…)

   இதெல்லாம் – ஆட்டோவில் ஏறி டாட்டா காட்டத்தான் லாயக்கு…

   இந்த நாட்டின் நீதி – அதி உச்ச நீதி…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Do you still believe in for a big change tomorrow if not to-day after seeing all these Mr.KM?
  It is meaningless belief.. Some how my mind recollects the following quote wrote by somebody.
  “O Lord give me the courage to change what I can. The fortitude to bear what I cannot .And
  the wisdom to know the difference.”

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Gopalakrishnan,

   // Lord give me the courage to change what I can.
   And the wisdom to know the difference.//

   Don’t you see – this is what being tried
   in this Blogsite….by us together ….?

   -with best wishes,
   Kavirimainthan

 8. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  we r in democratic country,what to do?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.