மத்திய நிதியமைச்சர் “பங்கு” (ஷேர்) வர்த்தகத்தில் ஈடுபடலாமா…?

.

.

.

சாதாரணமாக தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும்
அரசியல் பிரமுகர்கள், தேர்தலில் ஜெயித்து மாநிலத்திலோ,
மத்தியிலோ, அமைச்சர் பொறுப்பு ஏற்கும்போது,
தாங்கள் அதுவரை ஈடுபட்டிருந்த தொழில், வர்த்தக
தொடர்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.

தாங்கள் பொறுப்பேற்கும் அரசு-அமைச்சக கடமைகளை
பாரபட்சம் இல்லாமல் நிறைவேற்ற இது அவசியப்படுகிறது.

மத்தியில் நிதியமைச்சராக பொறுப்பேற்பவர்களின் பங்கு
இதில் மிகப்பெரியது. பட்ஜெட் மூலம் எந்தெந்த தொழில்கள்,
சலுகைகள் பெறவிருக்கின்றன என்றும் எந்தெந்த துறைகள்
பாதிப்புக்கு உள்ளாகும் என்பது அவர்களுக்கு முன்கூட்டியே
தெரிய வருகிறது ….

உண்மையில், எந்தெந்த துறைக்கு சலுகைகள் அளிப்பது,
எந்தெந்த துறைகளுக்கு வரி விதிப்பது
என்பதை தீர்மானிப்பதே அவர்கள் தான்.

இத்தகைய அமைச்சர் பொறுப்பை ஏற்கும் ஒருவர்,
குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை
ஷேர் மார்க்கெட்டில் வாங்கி வைத்திருந்தால் –

அவற்றின் விலை உயருமா அல்லது கீழே போகுமா என்பது
அவருக்கு முன் கூட்டியே தெரிய வருவதால்
( அதை தீர்மானிக்கக்கூடிய பொறுப்பிலேயே அவர் இருப்பதால்,)
அதன் மூலம் வெளியே தெரியாத வகையில் அவர்
பண லாபம் அடைய முடியும் அல்லவா…?

சில குறிப்பிட்ட கம்பெனிகளின் ஷேர்களை வைத்திருக்கும்
அமைச்சர், பல கோடி ரூபாய்கள் ஆதாயம் பெறக்கூடிய
வாய்ப்பு இதில் அடங்கி இருக்கிறதல்லவா…?

அதே போல், அந்த அமைச்சர் குறிப்பிட்ட ஷேர்களை
பட்ஜெட்டிற்கு முன்பாகவே வாங்குவதன் மூலமாகவும்,
விற்பதன் மூலமாகவும் கூட பல கோடி ரூபாய்
பலன் அடைய வாய்ப்பு இருக்கிறதல்லவா…?

அமைச்சர் பொறுப்பு ஏற்கும் ஒருவர், பங்கு மார்க்கெட்
பட்டியலில் இருக்கும் கம்பெனி ஷேர்கள் மூலமாக
லாபம் பெறுவது வெளியே தெரியப்போவதும் இல்லை…!

இந்த முறை குறித்து ஏன் யாரும் யோசிக்கவில்லை…?

_______________________________________________

மேலே கூறியது மேலோடு போகிறது –
இது தனிச்செய்தி –

ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்போது,
தேர்தல் கமிஷன் முன்பு, முன்னாள் நிதியமைச்சர் திரு.ப.சி.
அவர்கள் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்திலிருந்து
சில விவரங்கள் கீழே –

திரு.ப.சி. மற்றும் அவரது மனைவி இருவருக்கும் சேர்த்து –
அசையும் சொத்துக்கள் சுமார் 54.30 கோடி ரூபாய் அளவிற்கு
இருப்பதாகவும், அசையா சொத்துக்கள் 41.35 கோடி ரூபாய்
அளவிற்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அசையும் சொத்துக்கள் என்பது, வங்கிக்கணக்குகளில்
அவருக்கு இருக்கும் ரொக்க டெபாசிட்டுகளுடன்,
சில கம்பெனிகளில் அவர் முதலீடு செய்திருக்கும்
ஷேர்களின் மதிப்பும் சேர்ந்தது ஆகும்.

2014-15 ஆண்டிற்கான தனது வருமானமாக
மொத்தம் 8.58 கோடி ரூபாய் என்று திரு.ப.சி. தகவல்
கொடுத்திருக்கிறார். ( இதைத்தவிர, அவரது மனைவியின்
வருமானம் தனியே 1.25 கோடி ரூபாய்.)

அதாவது திரு.ப.சி. அவர்களது சராசரி
மாத வருமானம் 71.5 லட்சம் ரூபாய்….!!!
( அதாவது, அவர் அமைச்சராகவோ, பாராளுமன்ற
உறுப்பினராகவோ இல்லாத சமயத்தில்…)

இது தொடர்பாக வலைத்தளத்தில் கிடைத்த –
அவரது அசையும் சொத்துக்கள் விவரம் சில கீழே –

pca-1

pca-3

pca-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மத்திய நிதியமைச்சர் “பங்கு” (ஷேர்) வர்த்தகத்தில் ஈடுபடலாமா…?

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நீங்கள் அமைச்சர் பங்குவணிக வர்த்தகம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளது உண்மை. ஆனால் பொதுவாக களவாணிகள் நேரடியாக எந்த வர்த்தகத்திலும் ஈடுபடமாட்டார்கள். தனக்குத் தெரிந்த, தன் சொந்தம் அல்லது சுத்திவளைத்து பணம் தன் சொந்தத்திற்குச் செல்லுகிறார்ப்போல்தான் செய்வார்கள். ஆனால், பாரத நாட்டு அமைச்சர்கள் நேர்மையாக உழைப்பவர்கள். அதனால் அவர்கள் பெரும்பாலும் தாக்கல் செய்யும் சொத்துவிவரத்தில், சொந்தக் கார், வீடு கூட இல்லாமல் ஏழையாக இருப்பார்கள். அவர்களது சொத்து எல்லாம் 1330 வருடத்தைய (sorry. Typo error. 1980 என்று இருக்கவேண்டும்) விலையில் மதிப்பிடப்பட்டிருக்கும் (ப.சி. கிட்ட ஒரு சந்தேகம்தான். கற்பகாம்பாள் ஈக்விடி 1 லட்சம், ரியல் எஸ்டேட் 1 லட்சம் மதிப்புள்ள பங்குகள் வைத்திருக்கிறாரே, அதை 1.25 லட்சத்துக்கு யாருக்காகிலும் விற்க வாய்ப்பு இருக்கிறதா? அதை வாங்கி உலகக் கோடீசுவரராக ஆகத் தோன்றுகிறது.

  • bandhu சொல்கிறார்:

   நெல்லைத்தமிழர் சரியான இடத்தில் கவனம் வைத்திருக்கிறார்! conflict of interest இருப்பது எல்லாமே இவர்கள் மறைமுக முதலீடு செய்ய உதவியாக இருப்பது இது போன்ற unlisted கம்பெனி முதலீடுகள்தான். unlisted என்பதால் விவரங்களை பொது வெளியில் தெரிவிக்க வேண்டியதில்லை. இது போன்ற unlisted கம்பெனி முதலீடுகளின் உண்மையான மதிப்பில் நூற்றில் ஒரு பங்கோ, ஆயிரத்தில் ஒரு பங்கோதான் மற்றவை அனைத்தும் இருக்கும்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   விவரங்கள் கீழே –
   எல்லா கம்பெனிகளும் ஒரே அட்ரஸ் தான் –

   இப்போது சொல்லுங்கள் –
   உங்களுக்கு,
   விலை கேட்க – வாங்க ” தில் ” இருக்கிறதா…?

   ——————————–
   Kapaleeswaran Estates private limited
   Private – incorporated on 08 February 1980.
   Activity –
   Growing of crops;
   market gardening; horticulture..!
   Directors are Srinidhi Karti Chidambaram and
   Karti Palaniappan Chidambaram.
   ———–
   Karpagambal Estate Private Limited is a
   Private incorporated on 08 February 1980.
   Activity
   Growing of crops;
   market gardening; horticulture…!!!
   Directors of Karpagambal Estate Private Limited
   are Nalini Chidambaram,
   Karti Palaniappan Chidambaram –

   ————

   Karpagavalli Estates private limited
   Private incorporated on 16 November 1994.
   Activity –
   involved in Agriculture & Allied Activities Activity
   have only 2 Active Directors / Partners:
   Karti Palaniappan Chidambaram,
   Srinidhi Karti Chidambaram,
   ——————————

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Karthik சொல்கிறார்:

  ithai vida mosam enna vendral. Jayant sinha was removed from Mos finance because of her wife relation with Equity market. he was there fro two budgets and now govt woke up….ithai enna solla…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.