இந்த வார “துக்ளக்” – ஒரு டீஸர்….!!!`

.

.

அரசியல் வார இதழ்களில் இன்னமும்
பத்து ரூபாய்க்கே விற்பது துக்ளக் ஒன்று தான்…!

ஆசிரியர் சோ அவர்களைக் கேட்டால் –
லாபத்தில் கொஞ்சம் நஷ்டம் – சமாளித்துக் கொள்ளலாம்
என்கிறார்…

நமக்கு மனம் கேட்கவில்லை…
எனவே, நம்மால் முடிந்தது ஒரு ப்ரொமோ – 🙂 🙂

இன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழிலிருந்து –

 

thug-1a

thug-2a

thug-3a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இந்த வார “துக்ளக்” – ஒரு டீஸர்….!!!`

 1. selvarajan சொல்கிறார்:

  சிலிர்க்க வைக்கும் ஜனநாயகப் பற்று … ? — புல்லரிக்க வைக்கும் ” தன் ஜனநாயகப் ” பற்று மிக்கவரும் அவர்தான் — தனக்கு அடுத்து தன் புதல்வர் தான் ” முதல் மந்திரி ” என்று கூறியவர் — கட்சியில் முக்கிய பதவிகளை தன் ” குடும்ப உறுப்பினர்களுக்கு ” கொடுக்கும் பரோபகாரி — கட்சியின் அறக்கட்டளை சொத்துக்களை ” குடும்பத்திற்கே ” பங்கு போட்டு வைத்திருக்கும் { ஏழைப் } பங்காளர் — இதை விட ஒரு ஜனநாயக வாதி வேறு எப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறீர்கள் …. ? சட்டசபை — தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் — தங்கசாலைக் { தங்கம் என்பதை எப்படி விட முடியும் . ? } கூட்டம் என்பதெல்லாம் — மக்களுக்கு காட்டும் ஜனநாயக … பெப்பே … ?
  இவர்போல இன்னுமொரு கில்லாடி : — // நான் மலையாளி… என் முதல்வர் பினராயி விஜயன்…. கமல்ஹாசன் கடிதத்தால் பரபரப்பு //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-says-he-also-belongs-kerala-pinarayi-vijayan-as-his-c-261551.html — பாவம் …. அன்றைய ” செவாலியே சிவாஜி ” க்கு — மற்றவர்கள் வாழ்த்து கூறியே தீர வேண்டும் என்கிற எண்ணம் இல்லை — இவரைப் போல எதிர்பார்த்து கிடைக்கவில்லையே என்பதால் இவ்வாறு கூறவும் தெரியாமல் போனது … ஏனோ … ?

  • B.Venkata Subramanian சொல்கிறார்:

   இந்த விஷயத்தில் தமிழக முதல்வரின் வெளிப்படைத்தன்மை
   பாராட்டத்தகுந்தது.. ‘போலி’யாக அவர் எந்த வார்த்தையையும்
   சொல்வதில்லை. பிடிக்காதென்றால், அதையும் மறைப்பதில்லை.
   சென்னை வெள்ளத்தின்போது இவர் உதிர்த்த வார்த்தைகள்
   இவரது சுயநலத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியது. பிறகு இப்போது
   என்ன புதிதாக கிழித்து விட்டார் பாராட்டுவதற்கு ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இவர் ” மலையாளி ” என்பது தற்காலிகம்…
   “உலக நாயகர்” இப்படி மலையாளத்துக்குள் சுருங்கி விட முடியுமா ?

   “செவாலியே” பட்டம் பெற ஃப்ரான்சுக்கு போக நேர்ந்தால்,
   அங்கு நான் ஃப்ரெஞ்சுக்காரன், ஃப்ரெஞ்சு ஜனாதிபதி தான்
   எனக்கு ஜனாதிபதி, நான் கடைசியாக எடுத்த (தூங்காவனம்)
   படம் கூட ஃப்ரெஞ்சு படத்தை தழுவியது தான்;
   நான் அடுத்து மருதநாயகத்தை ஃப்ரென்சு மொழியிலும்
   எடுக்கப்போகிறேன் என்றெல்லாம் சொல்லக்கூடும்…

   -பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நான் எப்போதும் நினைப்பேன், எப்படி கருணானிதி மக்களை மடையர்களாக நினைக்கிறார் என்று. துக்ளக் படத்தில், 93 வருடமாக கருணானிதி நடிப்பதாக இருப்பது தவறு. 80 வருடங்களாகத்தான் அவர் நடிகன். எல்லோரும், ஸ்டாலினை, “அவர் திணிக்கப்பட்டவரல்ல. அரசியலில் பல வருடங்களாக இருக்கிறார்.. அது இது” என்று எழுதும்போது எனக்கு ஒரு சிறிய கதை ஞாபகம் வரும். தன் பெற்றோரைக் கொன்றதற்காக விசாரணைக்கூண்டில் இருக்கும் கைதி, ‘நான் பெற்றோர் இல்லாத அனாதையாகிவிட்டேன். அதனால் என்னை விடுதலை செய்யுங்கள்’ என்று சொல்வதைப்போல, வேறு யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல், ஸ்டாலினை மட்டும் வளர்த்து, அவருடைய வளர்ச்சிக்காகவே மற்றவர்களைப் பாடுபடவைத்து, திமுக சொத்தும் அதிகாரமும் தன் குடும்பத்திலேயே இருக்குமாறு கருணானிதி வைத்துவிட்டு, இப்போது, ‘ஜன’நாயகம்’ என்று கூறுவது ஒலிக்கிறது.

  எனக்கு இன்னொன்றும் புரியவில்லை. யாரையும் அவர் வாங்கின பட்டங்களைவைத்து யாரும் அழைப்பதில்லை (பெரியாரைத் தவிர என்று நினைக்கிறேன். இல்லாட்டா ஓட்டுக்காக, கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அழைப்பார்கள்). கருணானிதியை மட்டும் எல்லோரும் கலைஞர் என்று அழைக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்? காமராஜர் தமிழகத்துக்குச் செய்யாததையா இவர் செய்துள்ளார்? சோ அவர்களும் இதைச் செய்யும்போது (வயதுக்கு மரியாதை என்பதெல்லாம் ஜல்லியடிப்பது.) ஆச்சரியமாக இருக்கிறது. என்ன நிர்ப்பந்தம் என்று புரிந்துகொள்ள முடிவதில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   இவரை “கருணாநிதி” என்று சொன்னால் –
   வேறு யாரையோ சொல்வது போல் இல்லை….?

   “கலைஞர்” என்று சொன்னால் தானே –
   இவரைச் சொல்வது போல் இருக்கிறது…?

   ( நானும் “கலைஞர்” என்று தான் எழுதுகிறேன்… 🙂 🙂 )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.