வாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”….

mgr-vatal-nagaraj

.

கன்னட வெறியர் என்று அந்தக்காலத்தில் சொல்லப்பட்டு
வந்த வாட்டாள் நாகராஜ் என்கிற கன்னட சலுவளி இயக்கத்
தலைவரை எம்.ஜி.ஆர். அவர்கள் எப்படி எதிர்கொண்டார்
என்பது குறித்து நண்பர் கிஷோர் கே.சாமி தனது பேஸ்புக்
பக்கத்தில் இதே தலைப்பில் ஒரு பதிவை
வெளியிட்டிருக்கிறார்…

சுவையான அந்த சம்பவத்தை விமரிசனம் தள நண்பர்களும்
ரசிக்க, கீழே பதிவு செய்கிறேன் –
( நன்றி – திரு.கிஷோர் கே.சாமி )
————————–

கர்நாடக மாநிலத்தில் மக்கள் திலகத்தின் படங்களை ஓட்டக்
கூடாது என்று வாட்டள் நாகராஜ் தலைமையிலான கும்பல்
போஸ்டர்களை கிழிப்பதும் , திரையரங்குகள்
முன்னர் மறியல் செய்வதும் என்று செய்துக் கொண்டிருந்த
காலக் கட்டத்தில், அதை மக்கள் திலகம் எப்படி
எதிர்கொண்டார் என்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு ….

இது குறித்து தகவல் அறிந்ததும், மக்கள் திலகம் நேரே
பெங்களூருக்கு புறப்பட்டார்…
அந்த வாட்டாள் நாகராஜ் ஒரு முரடர் , அவரிடம் நீங்கள்
சென்று பேச வேண்டுமா என்று சிலர் தடுத்த பொழுதும்.
“நான் பேசப் போகிறேன், வாதிக்கப் போவதில்லை.
அவர் மனிதர் தான், ஒரு இயக்கத்தவர் தான்” என்று
வாட்டாள் நாகராஜின் அலுவலகத்திருள் சென்று விட்டார் .

வாட்டள் நாகராஜ், திமிருடன் அமர்ந்தப்படியே,
மக்கள் திலகத்தை அமரச் சொல்லி விட்டு , “என்னை பார்க்க
வந்ததன் நோக்கம் என்ன ? என்று கேட்க … மக்கள் திலகம் ”
தமிழ் படங்களை ஓட விடக் கூடாதுன்னு
நீங்க சொல்றீங்களாம் , அதுக்கு என்ன காரணம் ?
யாரும் சரியா சொல்லலை , அதான் உங்க வாயாலேயே
கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன் … “” என்றார் .

வாட்டள் நாகராஜ் சற்று யோசித்து பின்னர் ,
“எங்க கன்னட படத்தை நாங்க எப்படி எடுத்தாலும்
ஓடுறதில்லை, உங்க தமிழ் படங்கள் ஓடுது அதுக்குத்தான்
வசூல். அதனால் தான் என்றார்.

“சந்தோசம் , எந்த ஒரு
காரியத்துக்கும் அடிப்படையை யோசிக்கணும்.
நீங்க தமிழ் படத்தை தடுத்தாலும் பாதிப்பு கன்னடக்
காரர்களுக்குத் தான் என்று மக்கள் திலகம் சொல்ல ….
வாட்டள் முகம் சுளித்தபடி ” புரியலே …” என்று சொல்ல …

மக்கள் திலகம் தொடர்ந்தார் : ” கொஞ்சம் பொறுமையா
கேட்கணும், நாங்க எடுக்கறது தமிழ்
படமானாலும், அதில் பணிபுரியுற பெரும்பாலானவர்கள்
உங்க நாட்டுக்காரங்க தான்”.

ஆரம்ப கால டைரக்டர், 300 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் எடுத்தவர் சுந்தராவ் நட்கர்னி. அவர் கொங்கனியர்.
உங்க மாநிலத்தவர். பெரிய படங்கள் எடுத்த பந்துலு யார்
தெரியுமா? அவங்க மனைவி எம்.வி.ராஜம்மா யார் தெரியுமா ? உங்க நாட்டவங்க .

அங்கேயுள்ள ஸ்டூடியோ ஓனர் விக்ரம் யார்? அவர் உங்க
நாட்டவர் . அவர் என்னையும் வைத்து படம்
எடுத்தார் … படம் – பட்டிக்காட்டு பொன்னையா .

என்னோடு நடித்த சரோஜா தேவி யார்?
எல்லாரும் உங்க நாட்டு செல்வங்கள். உங்க நாட்டு மிகப் பெரிய ஹீரோ ராஜ்குமார் யார்?
பூர்வீகம் திருச்சியாம். அவருடைய முதல் படமே எங்க
நாட்டுக் காரர் தான் எடுத்தார் …. படம் ” வேடன் கண்ணப்பா “..

அவருக்கு அங்கே பெரிய வீடு இருக்கு .
நான் சொன்ன எல்லோருக்கும் அங்கே பெரிய பெரிய வீடு
இருக்கு. உங்க நாடு பெத்தது, இது தாய் நாடு …
எங்க நாடு வளர்த்தது , அது செவிலித் தாய் நாடு.
பெத்த தாயை விட வளர்த்தவளுக்கும் மரியாதை
கொடுக்கணும் இல்லையா? எங்க நாட்டுக்காரங்களுக்கு
இங்க வீடு இருக்கா? வாசல் இருக்கா?
ஒருத்தர் இங்கே இருக்கிறார், அவராலும் உங்களுக்கு
பெரிய வருமானம். சுவாமி ராகவேந்திரர் . புவனகிரியில்
பிறந்தவர்.

தூத்துக்குடியில் தான் சங்கு விளையுது, அதில் தான்
உங்க நாட்டு பிள்ளைங்களுக்கு பால் வார்ப்பாங்க.
உங்க காட்டுல தான் சந்தனம் விளையுது, அதில் தான்
எங்க நாட்டு தலைவர்களை தகனம் செய்வாங்க ….

இப்படி பிறப்புக்கும் இறப்புக்கும் இரண்டு நாடுகளும் ஒன்றுபடுது.

இதுக்கு மேலையும் நீங்க தமிழ் படத்தை
எதிர்க்க விரும்பினா. என் படங்களை கன்னட
ஏரியாக்களுக்கு விற்க வேண்டாம்னு சொல்லிடறேன்.
அந்த நஷ்டத்தை புரடியூசர்களுக்கு என் சம்பளத்திலிருந்து
கொடுத்து விடுகிறேன். பிலிம் சேம்பரிலும் சொல்லி
கர்நாடகாவுக்கு விற்க வேண்டாம்னு கேட்டுக்கறேன் என்றார்
மக்கள் திலகம் ……

அந்தக் கணமே தம்மையும் அறியாமல்
இருக்கையிலிருந்து எழுந்த வாட்டாள் நாகராஜ், மக்கள்
திலகத்தின் கைகளை பற்றிக் கொண்டு “இனிமே உங்க படத்துக்கு நானே பானர் கட்டறேன் , போஸ்டரும் ஓட்டறேன் ” என்றார்..

…..அது தான் மக்கள் திலகம்.
விவரிப்பு: எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் .

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

வாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”…. க்கு 2 பதில்கள்

  1. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

    எம்ஜி்ஆர் பற்றிய இரண்டு இடுகைகளையும் படித்தேன். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனத்தில் நிற்பவர் யார்? கல்விக்கண் திறந்த காமராஜரும் மனித நேயம் மிக்க எம்ஜி்ஆரும்தான். இப்போது 15 வயதாக இருப்பவர்களுக்கு எம்ஜி்ஆரைப் பற்றித் தெரியாது. அதனால் அடுத்த தேர்தலில் அதிமுக வாக்கு குறையும் என்று அதிமுக இல்லாதோர் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டிய அளவு மக்கள் மனத்தில் நிறைந்தவர் அவர்.

  2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    .Great M.G.R

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.