எதையும் செய்வார் கலைஞர் – பத்திரிக்கையாளர்களுக்காக ….!!!

karunanidhi

( சில ) பத்திரிக்கையாளர்களை பாக்கெட்டில்
போட்டுக் கொள்ள கலைஞர் கண்ட வழி …..

இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் – ஒன்று சென்னை
உயர்நீதிமன்றத்துடையது; மற்றொன்று உயர்நீதிமன்ற
மதுரை கிளையுடையது.

இரண்டுமே கலைஞரின் கொடைத்தன்மையை ( ? )
பறைசாற்றும் செய்திகள்….

——————–

முதலில் சென்னை நீதிமன்றத்தீர்ப்பு குறித்த விவரம் –

சேலம், அஸ்தம்பட்டியில், பொதுப்பணித்துறைக்கு
சொந்தமான கொல்லகுட்டை புறம்போக்கு ஏரி, 1.30 ஏக்கரில்

இருந்தது. அந்த ஏரியை, நத்தம் நிலமாக பெயர் மாற்றம்
செய்து, 34 பத்திரிகையாளர்களுக்கு, வீட்டுமனையாக
வழங்க, 2008 மே, 20ல், கலைஞர் அரசால் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஏரி நிலத்தை வீட்டுமனையாக மாற்றுவதை எதிர்த்து
ராமச்சந்திரன் என்பவரால் ஒரு பொதுநல வழக்கு
தொடரப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு,
அண்மையில் அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம்
முன்பாக விசாரணக்கு வந்திருக்கிறது.அதில் நீதிமன்றம்
சேலம் கலெக்டருக்கு கீழ்க்காணும் உத்திரவை
பிறப்பித்திருக்கிறது –

ஏரி புறம்போக்கை, நத்தம் புறம்போக்கு நிலமாக பெயர்
மாற்றம் செய்யப்பட்டது உண்மையா?

எதற்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டது…?

வீட்டுமனை பட்டா பெற
பத்திரிகையாளர்கள் தகுதியானவர்களா?
சதுரடி நிலம், 25 ரூபாய் என, எதன் அடிப்படையில்
விலை நிர்ணயிக்கப்பட்டது…?
மனுவில் குறிப்பிட்டுள்ளபடி, நீர்நிலை பகுதியான
ஏரி புறம்போக்கு என்பது உண்மையெனில் –

நான்கு மாதத்துக்குள், மாவட்ட கலெக்டர்
நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி
உத்தரவிட வேண்டும்.

———————————————

அடுத்த உத்திரவு சென்னை உயர்நீதிமன்றத்தின்
மதுரை கிளை சென்ற வாரம் பிறப்பித்திருப்பது –
வழக்கு விவரம் –

—————

திருச்சி கொட்டப்படு பெரிய குளம், கலைஞர் உத்திரவுப்படி வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன....

திருச்சி கொட்டப்பட்டு பெரிய குளம், கலைஞர் உத்திரவுப்படி வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன….

எஸ்.வினோத்ராஜ். என்பவர் உயர் நீதிமன்ற கிளையில்
தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவின்படி:

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 55 ஏக்கர் பரப்பளவில்
கொட்டப்பட்டு பெரியகுளம் உள்ளது. இந்த பெரியகுளம்
திருச்சி பகுதியின் முக்கிய நீராதார மாகவும், பறவைகள்
கூடும் இடமாகவும் உள்ளது. தற்போது கொட்டப்பட்டு

பெரியகுளத்தில் மண்ணை கொட்டி மூடி வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரித்த போது, பெரியகுளம்
திருச்சி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக

ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பெரிய குளத்தை
பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மண்ணைக் கொட்டி நிலமாக
மாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். இது தமிழ்நாடு
நீர் நிலை பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டத்துக்கு
எதிரான நடவடிக்கை.

கொட்டப்பட்டு பெரியகுளத்தை பிரஸ் கிளப்
உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்து –

கலைஞர் அரசு 16.5.2008-ல் பிறப்பித்த உத்தரவில்,
ஆற்று புறம் போக்காக இருக்கும் பெரியகுளம்
நிலத்தை நத்தம் புறம்போக்காக
தகுதி மாற்றம் செய்து –

பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு
வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அங்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க திருச்சி
மாநகராட்சி மறுத்துள்ளது. இருப்பினும் கொட்டப்பட்டு

பெரியகுளத்தில் மண்ணைக் கொட்டி வீட்டு மனைகளாக
மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இதனால், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை
வருவாய்த் துறை செயலர் 16.5.2008-ல் பிறப்பித்த
அரசாணையை செயல் படுத்தவும், கொட்டப்பட்டு
பெரிய குளத்தை நிலமாக மாற்றும் பணி உள்ளிட்ட
பணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.

மேலும் அரசாணையை ரத்து செய்து பிரஸ் கிளப்
உறுப்பினர்களுக்கு வேறு இடத்தில் இடம்
ஒதுக்கவும், கொட்டப்பட்டு கண்மாயை பாதுகாக்கவும்
உத்தரவிட வேண்டும்.

—–
இந்த மனு உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வு முன்
கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது –
கொட்டப்பட்டு பெரியகுளம் கண்மாயில் பணிகள்
மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

மேற்கண்ட இரண்டு வழக்குகளிலுமே –
ஏதோ ஊருக்கு ஒரு பொதுநல விரும்பியாவது
வேலை மெனக்கெட்டு, துணிச்சலாக,
உயர்நீதிமன்றம் வரை போய்
தடையாணை பெற்று வந்ததால் –

குளங்கள் தற்காலிகமாக தப்பித்துள்ளன.

—————-

சென்னையில் கடந்த ஆண்டு மழை,வெள்ளம் வந்தபோது
வாய் கிழியப்பேசிய கலைஞர் – இதற்கு என்ன விளக்கம்
கொடுப்பார்….?

அது பத்திரிகையாளரோ, வேறு யாராக வேண்டுமாயினும்
இருக்கட்டும்… அதென்ன ஏரி, குளங்களை –

“( ஜாதி ..? ) பெயர்” மாற்றி தானம் செய்வது…?
கொஞ்சமாவது பொறுப்புணர்வு வேண்டாமா …?

( சில ) பத்திரிக்கையாளர்களை பாக்கெட்டில்
போட்டுக் கொள்வதற்காக எந்த தப்பான காரியத்தையும்
செய்யலாமா…?

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த இவர்,
தான் பதவி வகித்த சுமார் 25 ஆண்டுக் காலங்களில் –
தனக்கு வேண்டப்பட்ட ஆசாமிகளுக்காக –
இன்னும் என்னென்ன
” மாற்றங்கள் ” செய்திருப்பாரோ..?

கோர்ட்டுக்கு போனதால் இந்த விவரங்கள்
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்
இப்போது வெளிவந்திருக்கின்றன…

இன்னும் இந்த மாதிரி எத்தனை ஏரி,
குளங்களை தாரை வார்த்திருப்பாரோ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to எதையும் செய்வார் கலைஞர் – பத்திரிக்கையாளர்களுக்காக ….!!!

 1. drramanathan சொல்கிறார்:

  I am not able to reply in this forum

 2. அறிவழகன் சொல்கிறார்:

  இப்படி நீர் நிலையை ஆக்ரமித்து சொத்து வாங்கிய பத்திரிகையாளர்கள் – ஆக்ரமிப்பு குறித்து ஆவேசமாக கட்டுரை எழுதினால், அது கருணாவின் செயலைவிட கேவலமாக இருக்கும்.

 3. Raghavendra சொல்கிறார்:

  கருணாநிதி தான் பத்திரிகையாளர்களை பாக்கெட்டில்
  போட்டுக் கொள்ள எதுவும் செய்யத்தயாராக இருந்தார் என்றால்,
  நீர் நிலைகளை அழித்து, வீட்டுமனைகளாக மாற்றிக்கொள்ள,
  அந்த பத்திரிகையாளர்களுக்கு எப்படி மனம் வந்தது ?
  மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டியவர்கள்
  இப்படி செய்யலாமா ?
  கே.எம்.சார், அந்த பத்திரிகை பெருமக்கள் யார் யார்
  எந்த பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற
  விவரம் தெரிந்தால் அதையும் போடுங்களேன்.

 4. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கருணானிதியைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமானால், யார் யார் அந்தப் பத்திரிகையாளர்கள் என்பதைக் கண்டுபிடித்து எழுதவேண்டும். கருணானிதி சொந்த நலன் இல்லாமல் எதுவும் செய்யமாட்டார். அந்த லிஸ்டில் அவருக்கு வேண்டிய பலர் இருப்பார்கள். ‘நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாப்போலே’ அதில் ஒரு சில உருப்படியான பத்திரிகையாளர்களும் இருந்திருப்பார்கள். அழகிரிக்கு உதவுவதற்காக, ஓரிருவரைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு, அண்ணா பெயரில் பலரை விடுவித்தவரல்லவா?

  பத்திரிகையாளருக்கு மனசாட்சி உண்டு என்று எண்ணும் மனம் உங்களுக்கு எப்படிவந்தது? ஒரு சிலர் இருக்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   GREAT – பிரணமாதம்….!!!

   அவர்கள் கொடுத்திருக்கிற
   “உண்மையான” சம்பள விவரங்கள்
   அதை விட பிரமாதம்… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. gopalasamy சொல்கிறார்:

  today.and.me , where you were ? kaadaaru maatham, naadaaru maatham ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   என்னுடைய மற்றும் இதர நண்பர்களுடைய
   விருப்பத்தை ஏற்று இனி அடிக்கடி இங்கே
   தோன்றுவீர்களாக…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. Sharron சொல்கிறார்:

  Good to see u back with good informations Mr. today and me

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.