நீ எங்கே விழுந்தாய் …? – நாங்கள் தான்……


.

.

.

bharathi-india-front-cover

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

bharathi-signature-tamil

bharathi-in-own-handwriting

chennaiyil-bharathi

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to நீ எங்கே விழுந்தாய் …? – நாங்கள் தான்……

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பாரதியை ஆவலுடன் தரிசித்த நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையவர்கள், பாரதியைக் காட்டாறு போலப் பாடும் கவி என்று எழுதுகிறார். ‘உங்கள் குரலில் உங்கள் பாடலைக் கேட்க ஆசை’ என்று சொன்னதற்கு, நினைத்தபோதெல்லாம் வருவதல்ல கவிதை என்று சொல்கிறார் பாரதி. மறு’நாள் வெகு அதிகாலையில் எழுந்து உணர்ச்சிவேகத்தில் கவிதையை பாரதி ஆவேசம் வந்ததுபோல் மணிக்கணக்காகப் பாடுகிறார். அவர் ஒரு யுக கவி என்றால் மிகையாகாது. பாரதியிடம் மிகவும் பிடித்தது, மதம், குலம் இவைகளை வைத்து எதையும் எடைபோடாதது. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், உருஷ்யப் புரட்சி பற்றியும் பாடியது.

  சித்திரை மாதப் புதுவருடப் பிறப்பை வாழ்த்தி இந்தியா பத்திரிகையில் வந்த அட்டையை வெளியிட்டதில் ஏதும் உள்குத்து உண்டா?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நெல்லைத்தமிழன்,

  “உள் குத்து ” –
  அதான் பாரதியே சித்திரையில் புத்தாண்டு வாழ்த்து
  சொல்லி விட்டார் அல்லவா…? பிரச்சினை தீர்ந்ததா…?

  //‘உங்கள் குரலில் உங்கள் பாடலைக் கேட்க ஆசை’//

  எனக்குக் கூட ரொம்ப நாளாக ஒரு ஏக்கம்…
  பாரதியின் குரல் எப்படி இருந்திருக்கும்….?
  அவர் பாடலை அவரே பாடக் கேட்க எப்படி இருந்திருக்கும்…?
  திரையில் (கப்பலோட்டிய தமிழன்) எஸ்.வி.சுப்பையாவை
  பார்க்கவே நமக்கு அவ்வளவு பிரமிப்பாக இருந்ததே…!

  இன்று உள்ள ‘டெக்னாலஜி’ அன்று இல்லாமல்
  போய் விட்டது நமக்கு பெரிய இழப்பு தான்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Yogi சொல்கிறார்:

   Sir

   Your father worked with Maha kavi.

   Any memories shared by him.

   If any please share.

   Rgs

   Yogi

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    யோகி,

    நான் தந்தையுடன் இருந்த காலங்களில் எனக்கு
    மிகச்சிறிய வயது. இத்தகைய அனுபவங்களின்
    அருமை புரியாத வயது.

    வளர்ந்து இளைஞனான பிறகு, நான் வீட்டிலிருந்து
    எங்கோ வெகுதொலைவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
    எப்போதோ, வருடத்திற்கு 4 நாட்கள் தான் சந்திப்போம்.

    என் முப்பதுகளிலேயே அவர் மறைந்து விட்டார்.
    இப்போது அவர் இருந்திருந்தால் – சுதந்திர போராட்ட நிகழ்வுகள்,
    நாயகர்கள் குறித்து எவ்வளவோ தெரிந்து கொண்டிருக்கலாமே –
    …. என்று எனக்குள் அடிக்கடி தோன்றும்…ஆனால்….?

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  // ஒருதலைக்காதலுக்கு விடை கொடுங்கள்… கருணாநிதி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-urges-the-youth-shun-the-violence-against-women-262486.html — ஓ … பாரதி … // நீ எங்கே விழுந்தாய் …? – நாங்கள் தான்……// நாங்கள்தான் குப்புற விழுந்து — மேலே ஒரு அறிக்கை விட்டுள்ளவரை போன்ற தலைவர்களின் வலையில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறோம் — காவிரியில் உச்ச நீதிமன்ற உத்திரவின்படி — தண்ணீர் திறக்கப்பட்டு வந்துக் கொண்டு இருப்பதை பற்றியோ — அங்கே கர்நாடகாவில் ” தமிழர்கள் ” தாக்கப்படுவதை பற்றியோ — ஒரு வரி அறிக்கைவிட மனமில்லாத — மற்ற ஒருதலைக் காதலைப் பற்றி அறிக்கைவிடும் — கயவர்களை போற்றுகின்ற நாங்கள் தான் — விழுந்து விட்டோம் — மஹா கவியே … ! உனது ஆத்மா எங்களை மன்னிக்குமா ….? ஓ … பாரதியே — நீ எங்கே – விழுந்தாய் … ??

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.