கர்நாடகா- தமிழ்நாடு கலவரங்கள்… தூண்டி விடுவது யார் ….?

water-life

ஜூன் முதல் வாரத்திலிருந்தே கர்நாடகாவில் தென்மேற்கு
பருவ மழை துவங்கிவிட்டது. அப்போது முதல் அங்கு
காவிரியின் குறுக்கே உள்ள 4 அணைகளிலும் –

தண்ணீர் சேரச்சேர….. உடனே உடனே திறந்து விட்டு,
கர்நாடகாவில் காவிரியால் நீர் நிரப்பக்கூடிய ஏரிகள்,
குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தையும் நிரப்பி,
அணைகளில் உயரம் கூடாமல் பார்த்துக் கொண்டது
கர்நாடகா.

பங்களூருக்கு குடிதண்ணீர் என்று வேடம் போட்டுக்கொண்டு,
பத்து மாதங்களும் தண்ணீரை குடிக்கக்கூடிய கரும்பு
பாசனத்திற்கு நீர் திறந்து விட்டது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அது அறிவிக்கப்பட்ட
நாளிலிருந்து, இன்று வரை கர்நாடகா மதித்ததே இல்லை.
தங்கள் இஷ்டம் போல், தங்கள் வசதி போல், தங்கள்
தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு எஞ்சி இருப்பதை
மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விட்டுக் கொண்டிருந்தது.

இரண்டு மாதங்கள் முழுவதுமாக பொறுத்து பார்த்து விட்டு
தான் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. அந்த
உச்சநீதி மன்றம் கொடுத்த 10 நாட்களுக்கான இடைக்கால
உத்திரவை கூட நிறைவேற்ற மனமில்லாமல்,
போராட்டங்களை கர்நாடகா காங்கிரஸ் அரசே தூண்டி
விட்டுக் கொண்டிருக்கிறது.

கர்நாடகாவை சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர்களும்
இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

தேசிய கட்சிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும்
தகுதியை இந்த இரண்டு கட்சிகளும் என்றோ
இழந்து விட்டன… மாநிலத்திற்கு மாநிலம் தங்கள்
நிறத்தை, வேடத்தை மாற்றிக் கொண்டிருக்கும்
பச்சோந்திகள் இவை இரண்டுமே…

வேண்டுமென்றே வன்முறையை தூண்டி விட்டு,
கலவரத்தை உண்டு பண்ணி,
தமிழர்களை அடித்து, அதை வீடியோ எடுத்து,
மீடியாவில் பரவ வைத்து –

தமிழ்நாட்டிலும் சட்டம்-ஒழுங்கு
பிரச்சினையை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள்.
இவர்களுக்கு எண்ணை வார்த்து, எரியும் நெருப்பை
ஊதிவிட 93 வயது முன்னாள் முதலமைச்சர் மிகுந்த
ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்….

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்,
எரிச்சலூட்டும் விதத்தில் அறிக்கைகளை
வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.

இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணம் –
பல பத்தாண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட விசாரணைகளுக்கு பின்னர் –

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி –
அதனை நிறைவேற்றக்கூடிய அதிகாரங்களுடன் கூடிய
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு
இன்னமும் அமைக்காதது தான்.

கர்நாடகாவில் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி
காங்கிரசும், பாஜகவும் ஆட்சியை பிடிக்கின்றபடியால்,
மத்தியில் ஆட்சியில் இருந்த / இருக்கும்
இந்த இரண்டு கட்சிகளுமே மேலாண்மை வாரியத்தை
அமைத்து கர்நாடகாவில் உள்ள தங்களது ஓட்டு வங்கியை
குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.

கர்நாடகாவில் துவங்கிய வன்முறை –
இதுவரை அமைதியாக இருந்து வந்த தமிழகத்தையும்
வன்முறைக்கு தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது….

கர்நாடகாவுடன் ஒப்பிடும்போது, தமிழர்கள் –
பொதுவாக மனசாட்சியுடன் செயல்படக்கூடியவர்கள்.
அப்பாவி பொது மக்கள் – அவர்கள் எந்த மாநிலத்தை
சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி – துன்புறுவதற்கு இந்த
போராட்டங்கள் காரணமாகி விடக்கூடாது.

இப்போது தமிழ்நாட்டில் துவங்கியுள்ள போராட்டங்கள்
காரணமாக – இங்குள்ள கர்நாடகா மாநில மக்கள்
எந்தவிதத்திலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின்
கடமை.

எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதோ –
மேலும் கொழுந்து விட்டு எரிய காரணமாக இருப்பதோ –
இரண்டுமே இன்றைய தினத்தில் மத்திய பாஜக அரசின்
கரங்களில் தான் இருக்கிறது.

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து,
காவிரி நதியில் அமைந்துள்ள அணைகளின்
கட்டுப்பாட்டை அதனிடம் ஒப்படைப்பதே சரியான –
நிரந்தர தீர்வாக இருக்கும்….

இதை செய்யத் தவறினால்,
தேச நலனை விட தங்கள் கட்சியின் நலன் தான் பெரிது –

– என்று காங்கிரஸ் அரசு இத்தனைக் காலங்களாக செய்த
அதே தவறை, அதே துரோகத்தைத்தான் பாஜக அரசும்
செய்கிறது என்றே பொருள்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கர்நாடகா- தமிழ்நாடு கலவரங்கள்… தூண்டி விடுவது யார் ….?

 1. desinghjothi சொல்கிறார்:

  சரியான ஆய்வு! கர்நாடக அரசு
  பரிவோடு நடந்தால் எளிதாகும் தீர்வு!

 2. Antony சொல்கிறார்:

  Rightly written…
  //பிரச்சினை என்று வந்துவிட்டால் கன்னடன் கன்னடனாக மட்டுமே இருக்கிறான். ஆனால் எப்பொழுதுமே தமிழன் தேவனாகவும், வன்னியனாகவும், தலித்தாகவும், முதலியாராகவும், திமுக்காரனாகவும், அதிமுகக்காரனாகவும், பாமகக்காரனாகவும் பிரிந்துதான் நிற்கிறான்.//
  http://www.nisaptham.com/2016/09/blog-post_12.html?m=1

 3. gopalasamy சொல்கிறார்:

  “கர்நாடக அரசு பரிவோடு நடந்தால் எளிதாகும் தீர்வு!”. NO. If Karnataka govt obeys tribunal and S.C , solution will be simple.

 4. gopalasamy சொல்கிறார்:

  “உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து,
  காவிரி நதியில் அமைந்துள்ள அணைகளின்
  கட்டுப்பாட்டை அதனிடம் ஒப்படைப்பதே சரியான –
  நிரந்தர தீர்வாக இருக்கும்….” This is the only solution. Politicians can not decide about sharing of water and they should not have control of it.

 5. Ashokkumar Srinivasan சொல்கிறார்:

  தமிழர்கள் பொறுமை காப்பதே நல்லது.அதுநமக்கான நன்மைக்கு வழிவகுக்கும். நீதிமன்றம் நமது பொறுமைக்கான பலனைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது தமிழகத்தில் இன்னும் பல நீர்த்தேக்கங்களை உருவாக்கி இங்கே கிடைக்கும் மழைநீரை சிக்கனமாக உபயோகித்தால் நல்ல விவசாயம் செய்யலாம்.

 6. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  இதை செய்து விட்டால் கர்நாடாகாவின் ஓட்டுவங்கி என்ன ஆவது…

  எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதோ –
  மேலும் கொழுந்து விட்டு எரிய காரணமாக இருப்பதோ –
  இரண்டுமே இன்றைய தினத்தில் மத்திய பாஜக அரசின்
  கரங்களில் தான் இருக்கிறது.

  உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து,
  காவிரி நதியில் அமைந்துள்ள அணைகளின்
  கட்டுப்பாட்டை அதனிடம் ஒப்படைப்பதே சரியான –
  நிரந்தர தீர்வாக இருக்கும்..

 7. Seshan சொல்கிறார்:

  Dear Sir

  strange info

  as per the Karnataka govt …reference except KRS dam, all other dams are having the similar level of last year.

  it looks strange.pl check their govt web link http://dmc.kar.nic.in/RL.pdf

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.