கலைஞர் – இப்போதும் போகலாமே… !!! யார் தடுத்தது….?

bus-fire_1

cauvery-tn-protests

tamil_news_large_160505520160912200036_318_219

wr_20160912194054-2

gallerye_234632667_1604514

இன்று கலைஞர் எழுதியுள்ள கேள்வி-பதில்
அறிக்கையிலிருந்து ஒரு பகுதி –

—————

1983ஆம் ஆண்டு! இப்பொழுது உள்ளது போன்ற ஒரு
நெருக்கடியான நிலை. டெல்டா பகுதிகளில் பாசனத்திற்குப்
போதிய நீரின்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தமிழக முதல் அமைச்சராக நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும்,
எதிர்க்கட்சித் தலைவராக நானும் இருந்த நேரம்!

அப்போது ஜனவரி மாதம் 18ஆம் தேதி, கர்நாடக மாநில
முதல் அமைச்சராக திரு. ராமகிருஷ்ண ஹெக்டே
அவர்கள் இருந்தபோது, நானே நேரடியாக அவருடைய
அலுவலகத்திற்கே சென்றேன். அப்போது அங்கே

அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நான் வந்திருக்கின்ற செய்தி கேட்டு, ஹெக்டே அவர்கள்
தனது அறைக்கு வந்தார்.

அந்த அறையில் கர்நாடக முதலமைச்சர் ஹெக்டே
அவர்களைச் சந்தித்து, காவிரி நீர் ஒப்பந்தம் குறித்த
பிரச்சினைகளை மாநில அரசுகளின் முதல் அமைச்சர்கள்
கலந்து பேசி முடிவெடுப்பது என்பது ஒரு புறமிருந்தாலும்,

தமிழ்நாட்டில் காய்ந்து கருகிக் கொண்டிருக்கும்
சம்பா – தாளடிப் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக
தேவையான தண்ணீர் தர வேண்டுமென்று கர்நாடக
முதல் அமைச்சரை நான் நட்பு ரீதியாகக்
கேட்டுக் கொண்டேன்.

அதற்கு அவர் “நீங்களே நேரில் வந்து கேட்டிருக்கிறீர்கள்;
முடிந்ததைச் செய்கிறேன்” என்று சொன்னார்;
அவ்வாறே செய்தார்.

அப்போது எனக்கு வயது 59; தமிழக எதிர்க் கட்சித்
தலைவராக இருந்தாலும், நமக்கென்ன என்று
இருந்து விடாமல் நேரில் சென்று கேட்க முடிந்தது!

——————————–

இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லையே…
6-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பினை
ஏற்கத் தயாரான உடல், மன நிலையுடன் தானே
இருக்கிறார்… தினமும்,
சுருசுருப்பாக
படு-புத்திசாலித்தனமான
அறிக்கைகள் விடுகிறார்…
அவருக்கென்ன குறைச்சல்…?

போய் கர்நாடகா முதலமைச்சரை பார்த்து
அவர்களது மனித நேயச் செயல்களுக்கு நன்றி கூறிவிட்டு,
அப்படியே எரிந்து எலும்புக்கூடுகளாக ஆங்காங்கே
நிற்கும் தமிழக பஸ், லாரி, கார்களையும் பார்வையிட்டு
விட்டு, முடிந்தால் இன்னும் கொஞ்சம் காவிரி நீரையும் பெற்று வரலாமே…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to கலைஞர் – இப்போதும் போகலாமே… !!! யார் தடுத்தது….?

 1. தமிழ் மகன் சொல்கிறார்:

  <>

  ஆக, இப்பொழுதும் அவரால் மட்டுமே இதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

  வாழ்த்துக்கள்..

  தமிழ் மகன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழ்மகன்,

   கலைஞரைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்….
   “பட்டுக் கொள்ளுங்கள் ” …. !!!

   ஆனால் இடுகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு
   நீங்கள் பதில் சொல்லவில்லையே…..

   ” கலைஞர் – இப்போதும் போகலாமே… !!! யார் தடுத்தது….? ”

   – ஏன் புலம்பிக்கொண்டிருக்க வேண்டும்…?

  • B,V.Subramanian சொல்கிறார்:

   தமிழ்மகன்,

   இப்போது மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறதே
   “காவிரி நீர்” – அதை கொண்டு வந்தது யார் ?
   உங்கள் கலைஞரா ?

 2. gopalasamy சொல்கிறார்:

  Mr. தமிழ் மகன், I am of the opinion that Kalaignar already solved the problem in 1974 itself. Now there is absolutely no problem.

 3. பெங்களூரு தமிழன் சொல்கிறார்:

  கலைஞரால் இப்போதும் போக முடியும் ஆனால் ஆட்சியில் இருப்பது அவரது நண்பர் அல்லவே

  • Raghavendra சொல்கிறார்:

   கலைஞரால் இப்போதும் போக முடியும் ;

   அவரது மகள் செல்வியின் வீட்டிற்கு மட்டும்;
   அதுவும் ‘ஜெய் கர்நாடகா’ என்று முழக்கமிட்டால் மட்டுமே.

 4. Prince Ennares சொல்கிறார்:

  முதல்வர் என்றொருவர் இருக்கிறாரே… அவர் போயஸ் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருப்பாரா?

 5. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பின் ஐயா அவர்களுக்கு,

  தங்களின் இடுகையைப் பார்த்தேன் , படித்தேன் ; ரசித்தேன் ..
  எந்த ஒரு நிகழ்விலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதே கலைஞரின் வாடிக்கையாகி போனது.
  மாலை கழுத்திலே விழுவதற்காக எந்த வேடமும் ஏற்கத் தயாராக
  இருப்பவர்தான் நம் கலைஞர்..
  இவரை மீறி அரசியல் செய்வது என்பது எளிதல்ல…
  தமிழகத்திற்கு வரவேண்டிய எத்தனையோ நல்ல திட்டங்களை (நவோதயா) மறுத்த பெருமை அவருக்கு உண்டு.
  கர்நாடகம் ஹேமாவதி அணை கட்டும்போது அனுமதித்து விட்டு பின்னர் கூப்பாடு போட்டது..
  இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு பக்க பலமாக இருந்து விட்டு இப்போது கதை சொல்வது எல்லாமே அவருக்கு கை வந்த கலை.
  என்ன செய்வது ..தமிழகம் பெற்ற தவப்பயனை எண்ணி மகிழ வேண்டியதுதான்…

  இலக்குமி மோகன்

 6. sdksainath சொல்கிறார்:

  I don’t a follower of any party
  But I think u continuously post informations against DMK only
  But I don’t support that his actions are right as Lakshmi Mohan said
  But this is not the correct qualifications of a writer like u

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் sdksainath,

   நீங்கள் எந்த கட்சியும் இல்லை என்கிறீர்கள். மகிழ்ச்சி…!

   ஆனாலும், கலைஞரை விமரிசனம் செய்யாதீர்கள்
   என்று என்னிடம் சொல்லுகிறீர்கள்…..

   சரி… உங்களுக்கு என்ன வயது இருக்கும்…?
   எத்தனை வருடங்களாக கலைஞரை நீங்கள்
   அறிவீர்கள்…?

   இன்று நாம் எதிர்கொள்ளும் காவிரி பிரச்சினைக்கு
   அவரும் ஒரு முக்கிய காரணம் என்பது உங்களுக்கு
   தெரியுமா…?

   சரி அதையெல்லாம் விடுங்கள் –

   இந்த இடுகையில் நான் அப்படி என்ன சொல்லி விட்டேன்..?

   “நான் அதைச் செய்தேன் -இதைச்செய்தேன் –
   எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோதே
   காவிரி நீரை பெற்று வந்தேன் ” என்று
   சொல்கிறார்… இப்போது அவர் இதைச் சொல்ல
   காரணமென்ன…?

   உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்…

   எனக்குத் தெரிந்ததை வைத்து தான்
   “இப்போதும் போகலாமே –
   போய் நீரை பெற்று வரலாமே –
   உங்களை யார் தடுத்தது ..?” என்று கேட்டிருக்கிறேன்.

   இதிலென்ன தவறைக் கண்டீர்கள்..?

   (இதற்கு அவசியம் பதில் எழுதுவீர்களென்று நம்புகிறேன்.)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • sdksainath சொல்கிறார்:

    Thanks for trusting me that I replied to ur comment
    I don’t mention that I have number of years experience on analysing the activities of DMK leader
    I just said why u always post against DMK only and not on other parties
    Even JJ don’t do any actions against this critical situation and u don’t post anything about this
    And I strongly mention in previous comment that I also agree with ur idea
    So pls don’t misunderstand me and try to understand what I’m coming to say
    That’s all
    😊😊😊

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப sdksainath,

     // Even JJ don’t do any actions against this critical situation //

     தவறான மதிப்பீடு…
     தொடர்ந்து செய்திகளை கவனித்து வருபவர் தானே நீங்கள்…?
     அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் / அல்லது மறந்து எழுதுவது ஏன்…?

     கடந்த சில நாட்களாக தொடர்ந்து காவிரியில்
     15,000 /12,000 டிஎம்சி. தண்ணீர் வருவதற்கு
     யாருடைய முயற்சி காரணம் என்று நினைக்கிறீர்கள்…?

     தினம் தினம் “தனக்கு தானே – கேள்வி-பதில்- அறிக்கை
     வெளியிட்டுக் கொண்டிருப்பது தான் “செயல் திறன்” என்று
     நினைக்கிறீர்களா…?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • sdksainath சொல்கிறார்:

      R u a supporter of ADMK

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      sdksainath,

      1) நான் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளரோ,
      உறுப்பினரோ இல்லை….
      தீர்ந்ததா உங்கள் சந்தேகம்….?

      2) நான் உங்களிடம் கேட்ட கேள்விக்கு நீங்கள்
      இன்னமும் விளக்கம் கூறவில்லையே….!

      வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 7. sdksainath சொல்கிறார்:

  I criticized JJ about she don’t do any actions against the protests by kannadians against tamilians
  The same situation arises in 1972
  Once a reporter mentioned JJ as she is a kannadian but she refused and strongly mentioned that she is a tamilian
  Even when the kannadians threatened her to accept her as kannadian or else she will be stabbed she refused and stands in her voice
  But now, she os the voice for whole tamilnadu. So she should arrange a meeting with CM of counterstate and take necessary actions
  But to my knowledge she didn’t take any steps till now
  I’m asking for y u criticise DMK only and I think u r never going to answer my questions bcoz u again and again questioning me

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   sdksainath,

   நீங்கள் விவரம் தெரியாமல் கேட்கிறீர்கள் என்று
   நினைத்து இவ்வளவு நேரமும் உங்களுக்கு
   விளக்கங்கள் அளித்து வந்தேன்.

   இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கும்
   உங்களுக்கு என் பதில்கள் தேவைப்படாது.

   நன்றி.
   எங்கிருந்தாலும் வாழ்க.

   -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.