தாய்மொழியை இழக்கும் வேதனை ….!!!

.

.

அமெரிக்காவிலேயே பிறந்து, அந்தச் சூழ்நிலையிலேயே
வளர்ந்து, 17 வயது வரை ஆங்கிலத்திலேயே படித்த
ஒரு சின்னஞ்சிறிய பெண்ணுக்கு –
தன்னுடைய தாய்மொழியான தமிழின் மீது இருக்கும்
பற்றைப் பார்க்க மிகுந்த வியப்பும் மகிழ்வும் ஏற்படுகிறது.

” நான் என் தாய்மொழியான
தமிழில் பேசி –
மூன்று ஆண்டுகள் ஆகின்றன …..
தலைமுடியைப்போல எனது பூர்வீகமும்
உதிரத் தொடங்கி விட்டது.
அம்மா! எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப்
போகிறதோ என அஞ்சுகிறேன் ’’

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் ஒரு
தமிழ்க்குடும்பத்தில் – இந்த அளவிற்கு
தாய்மொழி உணர்வுடன் ஒரு பெண் குழந்தை
வளர்கிறது என்பது ஒரு வியப்பூட்டும்,
மகிழ்வூட்டும் செய்தி …..!

தாய்மொழியின் அருமையை, அருகாமையை,
அரவணைப்பை இழப்பதை உணர்ந்து தவித்து,
அதனை உணர்வுபூர்வமாக, மிகப்பொருத்தமான
பொதுவெளியில், அற்புதமாக வெளிப்படுத்திய ஒரு

தமிழ்ச்சிறுமியைப் பற்றிய ஒரு செய்தி இது –

———–

வெள்ளை மாளிகையை வென்றது தமிழ்!

ஞாயிறு, 11 செப் 2016

vellai-maaligaiyil-tamizh

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த கவிதை
நிகழ்ச்சியில் – தேசிய மாணவக் கவிஞர்களாக
இரண்டு இந்திய – அமெரிக்க இளைஞர்கள் உட்பட
ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களின் கவிதைகளைப் பாராட்டி ஒபாமாவின்
மனைவி மிஷேல் ஒபாமா கவுரவித்தார். இதில்,
தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளைஞர்கள்

கலந்துகொண்டு கவிதை வாசித்ததைக் கேட்டு, நிகழ்ச்சியில்
கலந்துகொண்ட அனைவரும் நெகிழ்ந்துள்ளனர்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான
கவிதைப் போட்டி நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு –
இந்திய – அமெரிக்க மாணவி தாய்மொழியான
தமிழை மறந்துவிட்டு, ஆங்கிலத்தை மாற்று மொழியாக
ஏற்றது மிகுந்த மனவலியைத் தருகிறது என வாசித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் (17) என்பவர்,
‘‘தலைமுடியைப்போல எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி
விட்டது. அம்மா! எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப்
போகிறதோ என அஞ்சுகிறேன்’’ –

என தமிழ்மொழி பேசுவது குறைந்துள்ளது என்பதை
சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். இது, அனைவரது மனதிலும்
மொழி அழிந்து கொண்டிருக்கும் வேதனையைத்
தூண்டுவது போல் இருந்ததால்,
அரங்கத்தில் சில மணித்துளிகள் மௌனம் நீடித்தது.
மிஷேல் ஒபாமாவும் அவரைப் பாராட்டி ‘மேடையில்
உள்ள அத்தனை பேரையும் கவர்ந்துவிட்டாய் மாயா’ எனப்
புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து மாயா கூறியதாவது:

“நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
ஆனால், பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம்,
பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு
பல கவிதைகளை எழுதியுள்ளேன். நான் எனது
தாய்மொழி தமிழை எப்படி இழந்தேன் என்ற
அனுபவத்தைத்தான் இந்நிகழ்ச்சியில் கவிதையாகக்
கூறினேன். தாய்மொழியை மறந்துவிட்டு, பிறமொழியை
மாற்றாக ஏற்றுக்கொள்வது என்பது
மிகுந்த வலி நிறைந்தது” என்று கூறியுள்ளார்.

இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த கோபால்ராமன் என்ற
இந்திய வம்சாவளி மாணவரின் கவிதையும்
பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வெள்ளை மாளிகையில் தமிழைப் புகழ்ந்து பேசியது
தமிழ் மக்கள் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

– செல்வி மாயா ஈஸ்வரனுக்கு நமது வலைத்தளத்தின்
சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தாய்மொழியை இழக்கும் வேதனை ….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  // தமிழில் நாலு வார்த்தை சேர்ந்தாற் போல பேசத் தெரியாத சுப்ரமணிய சுவாமிக்கு தமிழ் ரத்னா விருது! //
  Read more at: http://tamil.oneindia.com/news/international/subramanian-swamy-awarded-tamil-ratna-united-states-262487.html — அய்யா … ! ஒரு பத்திரிக்கை செய்தி மேலே …. ! // தாய்மொழியை இழக்கும் வேதனை ….!!! // தங்களின் இடுக்கை — செய்தியும் — இடுகையில் உள்ளதும் நடந்தது — ஒரே அமெரிக்கா நாட்டில் … !! ஊம் … தமிழுக்கு நல்லது நடந்தால் சரி … ?

 2. desinghjothi சொல்கிறார்:

  தாய்மொழியை மறந்துவிட்டு, பிறமொழியை
  மாற்றாக ஏற்றுக்கொள்வது என்பது
  மிகுந்த வலி நிறைந்தது! இங்கும் தமிழ் பேசும்
  மக்கள் ஆங்கிலத்திற்கு அளிக்கும் மரியாதையை தாய்மொழி
  தமிழுக்கு அளிக்க மறுத்து ஆங்கிலத்தில் பேசுவதே பெருமையெனத் தம்பட்டம் அடிப்பது வேதனைக்குரியதே!
  வாழ்க தமிழ்மொழி வானமளந்து
  வீழ்க தம்பட்டம் வீரியமிழந்து!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.