காவிரி நீர் எது எதற்கு, எப்படி எப்படி போகிறது – தெரியாத தகவல்கள் சில…!!!

bariyarpur_canal

கபினி அணை நிரம்பினால், நேராக தமிழகத்திற்கு வந்து
தான் ஆக வேண்டும் – அதுவோ மழைக்காலங்களில்
சீக்கிரமாக நிரம்பி விடுகிறது… வழிந்தோடும் நீர்
தமிழ்நாட்டிற்கு போய் விடுகிறது…

இதைத்தடுக்க என்ன செய்யலாம்…?

கபினி அணைக்கு நீர் வருவது – அதற்கும் முன்னாலுள்ள
நாகு மற்றும் சாகர தொட்டகரே என்கிற
இரண்டு நீர்த்தேக்கங்களிலிருந்து –

இந்த நீர்த்தேக்கங்களில் 2000 குதிரைத்திறன் (horse power)
சக்தி கொண்ட 60 (அறுபது) ராட்சத நீர் இறைப்பு
இயந்திரங்களின் மூலம் 28 டிஎம்சி தண்ணீர் உறிஞ்சி
எடுக்கப்பட்டு, வேறு திசையிலுள்ள ஆற்றுப் படுகைக்கு
திருப்பி விடப்படுகிறது….

இதே நிலை தான் ஹேமாவதி அணையும் – தென் மேற்கு
மழைக்காலத்தில் – மிக சீக்கிரமாக நிரம்பி வழியத்துவங்கி
விடுகிறது….

இதிலிருந்து 14 அதிசக்தி வாய்ந்த உறிஞ்சும் இயந்திரங்கள்
மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு, திசை திருப்பப்பட்டு,
வெளியில் சொல்லாமல் –
45,756 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி செய்து
தரப்பட்டிருக்கிறது.

ஹேரங்கி அணையிலிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய
பாதையிலிருந்து நீர் எடுத்து, சுமார் 1.70 லட்சம் ஏக்கர்
நிலத்திற்கு பாசன வசதி செய்து தரப்படுகிறது.

மைசூரிலிருந்து வரும் காவிரியின் தடப்பாதையில்
உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள் காவிரிநீரை கணக்கெடுக்கும்
பணி துவங்கும் முன்னரே நிரப்பிக் கொள்ளப்படுகின்றன…

இந்த மாதிரி மறைமுகமான திட்டங்களின் மூலம்
காவிரி நீரை முற்றிலுமாக பயன்படுத்திக் கொண்ட பிறகு –

எங்கள் அணைகளிலேயே நீர் இல்லை என்றால் –
எப்படி இருக்கும்….? இருந்தால் தானே அதிசயம்…?

அணைகளில் நீர் சேராமல் பார்த்துக் கொள்வது தானே
அவர்களது புதிய பாலிசியே…!

அப்போது தானே –
வைத்துக் கொண்டா தர மறுக்கிறோம்….?
இருந்தால் தானே கொடுப்பதற்கு என்று என்று வாதம்
செய்வது சுலபம் ..?

ஏமாற்றுவதில் நிபுணத்துவம்….!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் –
ஒரே வழி – எல்லாவற்றிற்கும் நிரந்தரத் தீர்வு.

மீண்டும் மீண்டும் –
மீண்டும் மீண்டும் –
அழுத்தம் அங்கே தான் கொடுக்கப்பட வேண்டும்…

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

காவிரி நீர் எது எதற்கு, எப்படி எப்படி போகிறது – தெரியாத தகவல்கள் சில…!!! க்கு 3 பதில்கள்

 1. vijayan சொல்கிறார்:

  Short and sweet
  விஜயன்

 2. gopalasamy சொல்கிறார்:

  I think this is correct information.2000 HP pumps at 0.5 Barg pressure ( approximately) can discharge 30000 m3 /hr. Really huge. If possible can you support this with some photos or more information ?

 3. Tamilian சொல்கிறார்:

  Sir, Karnataka government had taken steps to save the water and use it. But TN government must bring all these facts to SC to get justice for TN farmers.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s