இந்த மாதிரி மந்திரிகள் ( தான் ) மோடிஜிக்கு தேவையா…?

05bgsadananda_1744263e

தினத்தந்தி பேட்டியிலிருந்து ஒரு பகுதி –

——————–

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த
பா.ஜ.க. மத்திய மந்திரி
சதானந்த கவுடா பேட்டி அளிக்கையில்,

“ சுப்ரீம் கோர்ட்டில் இருந்து இதுபோன்ற தீர்ப்பை கர்நாடக
மக்கள் எதிர்பார்க்கவில்லை.

காவிரி நீர்பிடிப்பு பகுதிக்கு சுப்ரீம் கோர்ட்டு குழுவை
அனுப்பும் என்றும் அவர்களிடமிருந்து தகவல்களை
பெற்ற பின்னர் முடிவுக்குவரும் என்றும் எண்ணினோம்.

ஆனால் அது நடைபெறவில்லை.
இதுபோன்ற நிலையில் மக்கள் உணர்ச்சிவசப்படுவது
இயல்பானது. ”

( ஆனாலும், மக்கள் அமைதிகாக்க வேண்டும்
என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன்…. )

————————–

ஆக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இப்படி தீர்ப்பளிக்குமென்று
தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தாங்கள் எதிர்பார்த்த
தீர்ப்பை வழங்காமல் ஏமாற்றியது சுப்ரீம் கோர்ட்டின்
தவறு தான், கலவரங்கள் உருவானது அதனால் தான்
என்று பழியை நீதிமன்றத்தின் மீது போடும் ஒரு பாஜக
மத்திய அமைச்சர்…!

இதற்கு முன்பாகவும், கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர்
கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட
பாஜக மத்திய மந்திரி திருவாளர் அனந்தகுமாரும் – என்ன ஆனாலும் சரி, தமிழகத்திற்கு
தண்ணீரை திறந்து விடக்கூடாது என்று பேசி,

ananthakumar

காவிரி விஷயத்தில் –
கர்நாடகா மக்களை தூண்டி விடுவதில் இந்த
இரண்டு மத்திய மந்திரிகளுமே முக்கிய பங்கு
வகித்தார்கள் / வகிக்கிறார்கள்…

மத்திய மந்திரிகள் ஒரு மாநிலத்திற்கு சாதகமாக

வெளிப்படையாக ஒருசார்பாக நிலையெடுப்பதும்,
பேசுவதும் நாட்டுக்கு நல்லதா…?

இவர்களைப் போன்றவர்கள் மோடிஜிக்கு
அவசியம் தேவையா…?

அல்லது – ஒரு வேளை இத்தகையவர்கள் தான்
கர்நாடகாவில் அடுத்து பாஜக ஆட்சியைப் பிடிக்க
உதவ முடியும் என்பதால், இந்த மந்திரிகள் இப்படித்தான்
பேச வேண்டும் என்று பாஜகவே விரும்புகிறதா…?

——————————————————–

பின் சேர்க்கை – (மதியம் 2.25 மணி )

காலையில் நான் இந்த இடுகையை எழுதிய பிறகு

நண்பகலில் தொலைக்காட்சியில் திருவாளர் சதானந்த
கவுடா அவர்கள், இன்று பங்களூருவில் திருவாய் திறந்து
கூறியது வெளிவந்திருக்கிறது –

” கர்நாடகத்தைச் சேர்ந்த எவரும் வன்முறையில்
ஈடுபடவில்லை. மாறாக தமிழ்நாட்டில் தான்
கன்னடர் மீது திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்து
விடப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த கன்னடர்கள்
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். எனவே,
கலவரத்திற்கு காரணம் முழுக்க முழுக்க தமிழர்களே…”

இடுகையில் மேலே குறிப்பிட்டது போல்,
தினத்தந்தி பேட்டியில், சுப்ரீம் கோர்ட் தாங்கள்
எதிர்பார்த்த தீர்ப்பை வழங்காமல் ஏமாற்றியது
தான் கலவரங்கள் உருவாக காரணம் என்று கூறிய
மத்திய குணங்கெட்ட, தரங்கெட்ட மந்திரி –

தான் முதலில் பேட்டியில் கூறியதை முற்றிலும் மறைத்து
புதிய காரணத்தை கண்டுபிடித்து கூறுகிறார்…

இவரை என்ன செய்ய வேண்டும் என்பதை பிரதமரே
தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால், பாஜக வை
என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ் மக்கள்
தீர்மானித்துக் கொள்வார்கள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இந்த மாதிரி மந்திரிகள் ( தான் ) மோடிஜிக்கு தேவையா…?

 1. தமிழன் சொல்கிறார்:

  காமை சார்,

  அவர்கள் முதலில் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்மையாக இருக்கவேண்டாமா? தமிழர் தலைவர்களிடம் மட்டும் எதறகும் ஒத்தகருத்து (மக்களைச் சுரண்டுவதைத் தவிர) இருந்ததில்லை. நியாயமோ நியாயமில்லையோ, நாமும் (தமிழக அரசியல் தலைவர்கள) சட்டத்தை எரித்திருக்கிறோம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதியாமல் நமக்கென சட்டமியற்றிக்கொண்டிருக்கிறோம். இப்போது கர்நாடகத்தைக் குறைகூறும் அருகதை யாருக்கு இருக்கிறது? கேரளத்தைப் பாதிக்கும் விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட அனைவரும் கேரளா பக்கம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நின்றனர். நியாயம் பெரும்பாலும் காணாமல்போன இக்காலத்தில் கர்நாடகாவைக் குறை சொல்ல யாருக்கும் யோக்கியதை இருப்பதுபோல் தெரியவில்லை. இதில் ஒரே ஒரு தவறு சில தமிழக மக்கள் (பெங்களூரில் வாழும்) பாதிக்கப்படுவதுதான். திக போன்றவர்கள் சேட்டுக்களைத் தாக்கியதற்கும், முல்லைப்பெரியார் பிரச்சனையில் மலையாளிகளைத் தாக்கியதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்காத தம் தலைவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த சில சமூக எதிரிகளை எதிர்ப்பது நகைப்பிற்குரியது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   அரசியல்வாதிகளுக்கு குறை கூறும் தகுதி இருக்கிறதோ –
   இல்லையோ …
   எனக்கு, உங்களுக்கு, பொது மக்களுக்கு நிச்சயம்
   அந்த தகுதி உண்டு. அந்த தகுதியின் அடிப்படையில்
   இந்த இடுகையை எழுத எனக்கு உரிமை உண்டு
   என்பதையாவது ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  மதியம் தொலைக்காட்சி செய்தியில் மத்திய பாஜக மந்திரி
  திருவாளர் சதானந்த கவுடா பேசியதை காட்டினார்கள்….

  அதைத் தொடர்ந்து மேற்கண்ட இடுகையில்
  பிற்சேர்க்கையாக கொஞ்சம் எழுதி இருக்கிறேன்.
  ஏற்கெனவே, இடுகையை படித்தவர்கள் – இப்போது
  பிற்சேர்க்கையையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  டாக்டர் ராமதாஸ் அவர்கள் இன்று மதியம்
  வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து
  சில பகுதிகள் –

  காவிரி சிக்கலை மையமாக வைத்து கன்னட
  வெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்களுக்கு
  எதிரான வன்முறை மற்றும் கலவரம் கட்டுப்படுத்தப்பட
  வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்
  நிலையில், தமிழர்கள் மீது அவதூறு பரப்பி மீண்டும்
  கலவரத்தை தூண்ட மத்திய அமைச்சர் சதானந்த
  கவுடா முயற்சி செய்கிறார்.

  அமைதிக்கு எதிரான அவரது நடவடிக்கைகள்
  கண்டிக்கத்தக்கவை.
  பெங்களூருவில் திங்கட்கிழமை
  காலை முதல் கன்னட வெறியர்கள் அரங்கேற்றிய
  வன்முறை மாலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
  தமிழர்களுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட
  பேருந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சரக்குந்துகளும்
  தீயிட்டு எரிக்கப்பட்டன.

  மேலும் பல நிறுவனங்களும் சூறையாடப்பட்டன.
  இந்த வன்முறை மற்றும் கலவரத்தை ஒட்டுமொத்த உலகமும்
  கண்டித்துள்ள நிலையில், கர்நாடகத்தைச்
  சேர்ந்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட
  அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடா மட்டும் இவற்றை நியாயப்படுத்தியிருக்கிறார்.

  இமயமலையை சோற்றில் மறைப்பதா? பெங்களூருவில்ஊ
  டகங்களுக்கு நேர்காணல் அளித்த அவர், ‘‘கர்நாடகத்தைச்
  சேர்ந்த எவரும் வன்முறையில் ஈடுபடவில்லை. மாறாக
  தமிழ்நாட்டில் தான் கன்னடர்
  மீது திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
  அதனால் ஆத்திரமடைந்த கன்னடர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்”என கூறியுள்ளார்.

  முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைப்பதை
  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒட்டுமொத்த
  இமயமலையையே சோற்றில் மறைப்பதற்கு
  சதானந்த கவுடா முயன்றிருக்கிறார். ஆத்திரமூட்டிய
  கர்நாடகா காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திலிருந்து
  எந்த ஒரு சூழலிலும் ஆத்திரமூட்டும் செயல்கள்
  கட்டவிழ்த்து விடப்படவில்லை.

  மாறாக கர்நாடகத்தில் தான் பெயர் தெரியாத
  அமைப்புகளின் நிர்வாகிகள் தொடங்கி, அமைச்சர்கள்
  வரை ஆத்திர மூட்டும் வகையிலும், வன்முறையைத்
  தூண்டும் வகையிலும் பேசி வந்தனர்.

  தமிழகத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம்
  காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று
  கடந்த 5-ஆம் தேதி உச்சநீதி மன்றம் ஆணையிட்டதுமே
  தமிழருக்கு எதிரான வன் முறைகளை கன்னட வெறியர்கள்
  கட்டவிழ்த்து விட்டனர். 9ஆம் தேதி நடைபெற்ற
  முழு அடைப்பின் போது தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
  ஆனாலும், தமிழகத்தில் தமிழர்கள் அமைதிகாத்தனர்.
  கன்னடர் நடத்தும் வணிக நிறுவனங்களுக்கும்,
  அவர்கள் வாழும் பகுதிகளுக்கும்
  தமிழக காவல்துறை பாதுகாப்பு அளித்தது.
  தீர்ப்பு வந்த உடனேயே… காவிரியில் வினாடிக்கு
  15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்
  என்ற தீர்ப்பை மாற்றக் கோரி கர்நாடகம் தாக்கல்
  செய்த மனுவை 12ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம்,
  கர்நாடக அரசைக் கண்டித்ததுடன், தமிழகத்திற்கு
  கூடுதல் நீரை திறந்து விட ஆணையிட்டது.

  அதற்கு அடுத்த நிமிடமே கர்நாடகத்தில் தமிழர்களுக்கு
  எதிரான வன்முறைகள் காட்டுத் தீ போல பரவின.
  இதற்கு தமிழர்களின் ஆத்திரமூட்டல் காரணமல்ல.
  மாறாக, தமிழர்களுக்கு எதிராக வன்முறையை
  கட்டவிழ்த்து விட வேண்டும்; அதன்மூலம்
  அரசியல் லாபம் தேட வேண்டும் என்று
  திட்டமிட்டிருந்த கன்னட அமைப்புகள் உச்சநீதிமன்றத்
  தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டன. இதற்கு
  ஆயிரக்கணக்கான ஆதாரங்களை என்னால்
  காட்ட முடியும்.

  பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த
  நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பேருந்துகளை
  எரிக்க வன்முறையாளர்கள் கும்பலாக சென்றதை
  காவலர்கள் தடுக்காதது ஏன்?

  பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்ட இடத்திற்கு
  அருகிலேயே தீயவிப்பு நிலையம் இருக்கும் போதிலும்,
  தீயை அவிக்க தீயவிப்பு வாகனங்கள்
  அனுப்பப்படாதது ஏன்?

  600 ரவுடிகளை விடுதலை செய்தது ஏன்?
  நெடுஞ்சாலைகளில் தமிழக வாகனங்களின்
  ஓட்டுனர்களை சிலர் ஆடைகளை கவிழ்ந்து
  அவமானப்படுத்திய போது அதை காவல்துறை
  தடுக்காதது ஏன்?

  காவிரி சிக்கல் தீவிர மடையும் நேரத்தில்
  600 போக்கிலிகளை விடுதலை செய்தது ஏன்?
  என கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

  மொத்தத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற
  வன்முறைகள் அனைத்தும் அரசியல் லாபம் தேடுவதற்காக
  திட்டமிட்டு நடத்தப்பட்டவை தான். உண்மை
  அவ்வாறு இருக்கும் போது தமிழர்கள் தான்
  வன்முறைக்கு காரணம் என்று மத்திய அமைச்சர்
  கூறுவது கன்னடர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி –

  மீண்டும் வன்முறை வெறியாட்டத்தை
  நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே ஆகும்.

  -வாட்டாள் நாகராஜின் மறு உருவம் சதானந்த
  கவுடா மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர்;
  அதற்கு முன் கர்நாடக முதல்-அமைச்சராக பதவி
  வகித்தவர். அப்படிப்பட்டவருக்கு எந்த ஒரு
  பிரச்சினையையும் பொறுப்புடன் கையாளத்
  தெரிந்திருக்க வேண்டும். அதை விடுத்து
  வாட்டாள் நாகராஜின் மறு உருவம் போல பேசுவது
  பேரதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், கர்நாடகத்தில்
  பதற்றத்தை தணிக்கும் நோக்குடன் அங்குள்ள
  மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று பிரதமர்
  நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
  முதல்-அமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டோர்
  வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில்
  சதானந்த கவுடா இப்படி பேசியிருப்பதை
  மன்னிக்க முடியாது.

  இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும்
  வகையிலும், வன்முறையை தூண்டும்
  வகையிலும் கருத்து தெரிவித்த சதானந்த
  கவுடாவை பிரதமர் மோடி கண்டிப்பதுடன்
  அமைச்சரவையிலிருந்தும் நீக்க வேண்டும்.

  ( http://tamil.oneindia.com/news/tamilnadu/dr-ramadoss-condemns-sadananda-gowda/slider-pf210223-262736.html )

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  பிரதமர் யாரையும் கண்டிக்க போவதில்லை, வெறும் அறிக்கை மட்டுமே வரும். இங்கு ஒருத்தர், தமிழாக மக்கள் கன்னடர்களை தாக்கியது கேவலம் என்பது போல. அனைத்திற்கும் காரணம் தமிழன் என்று முடியும். பதவி ஆசை யாரை விட்டது. மக்களுக்கான மன்னர்கள் மரித்து வெகு காலம் ஆகிவிட்டது.

 5. gopalasamy சொல்கிறார்:

  An Irony. 2.7 lakhs litres of water is used by Fire Fighting people to quench “Burning Bengaluru”.
  C.M told one drop of water will not be given to T.N.

 6. gopalasamy சொல்கிறார்:

  KMji, have you seen Karnataka C.M’s appeal through news papers. Poisonous one.

 7. today.and.me சொல்கிறார்:

  புட்சட்னி வீடியோவுக்கான மறுமொழி
  .—————–

  காமராசர் ஆட்சிக்கு பிறகு யாராவது அணை கட்டினார்களா?
  என கேள்வி கேட்கும் ஒருவர்கூட உண்மையை தெரிந்துகொள்ளவில்லை அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

  நான் ஒன்றும் காமராசர் அணையே கட்டவில்லை என சொல்லவில்லை. காமராசரும் அணைகளை கட்டினார் அவருக்கு முன்பு ஆங்கிலேயர்களும் அணைகளை கட்டினார்கள் , அவருக்கு பிறகும் தமிழகத்தில் நிறைய அணைகள் கட்டப்பட்டன என்றுதான் சொல்கிறேன்.

  தமிழகத்தில் பெரிதும், சிறிதுமாக மொத்தம் உள்ள அணைகள் – 86

  இதில் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டவை (நீர் தேக்கங்கங்கள்) -3
  கல்லணை & வீராணம் ஏரி – சோழர் காலம்
  செம்பரம்பாக்கம் ஏரி – பல்லவர் காலம்

  ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 6 ( அதில் முக்கியமானவை முல்லை பெரியாறு, மேட்டூர் ஸ்டேன்லி, பாபநாசம், பேச்சிப்பாறை)

  காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள் – 10

  திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 26

  அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 36

  இவை 2013க்கு முன்புவரை உள்ள தகவல்கள் மட்டுமே. 2013க்கு பிறகு உள்ள விபரங்கள் கிடைக்காததால் அதை இதில் சேர்க்க முடியவில்லை.

  ஒரு சில அணைகள் ஒரு ஆட்சியில் தொடங்கி இன்னொரு ஆட்சியில் முடிக்கப்பட்டிருக்கும். அதை முடிக்கும் ஆட்சியின் கணக்கில் சேர்த்திருக்கிறேன்.

  2015ல் திறக்கப்பட்ட விஸ்வகுடி அணை (பெரம்பலூர் மாவட்டம்) திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி அருகே கட்டப்பட்ட 8 தடுப்பணைகளை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

  கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்பட்டவை அனைத்தும் நடுத்தர மற்றும் சிறிய அணைகள்தான். ஆனால் அணைகளே கட்டப்படவில்லை என சொல்லப்படும் பொய்களை மறுதலிக்க கீழ்கண்ட விபரங்களை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

  ——————-
  https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14291740_1273876655978292_2910796387230158122_n.jpg?oh=5e5b92f7701dc369734c6b94bad98449&oe=586FE083

  https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/14184445_1273876799311611_838435056041873362_n.jpg?oh=a213c4b6d770e3a393fab3e96aa27148&oe=5838CD18&__gda__=1480411506_0437ce8a82f79419224e86551d366bf1

  https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14203271_1273877022644922_3713174612697184135_n.jpg?oh=bc6bb43a854460ad2d744dd8b36dd97a&oe=5880C697

  https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14199780_1273877159311575_2269940858989196018_n.jpg?oh=9cc7318f8ceb13dbf342977930e182a3&oe=583D11D0

  ————————–

 8. today.and.me சொல்கிறார்:

  இன்னும் ஒன்று.

 9. today.and.me சொல்கிறார்:

  https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14222358_1273357956030162_5578978216857749011_n.jpg?oh=86a6fe32fddcc1a7bdf20992fc23bd43&oe=587DCE21

  நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.

  அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
  ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது. அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
  ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
  அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.

  KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது. அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)

  நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.

  அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
  நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

  புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

  சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது. கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

  அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

  நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

  அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

  கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான். ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
  இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.

  சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.

  ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி நீரை காவிரி, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் நான்காக பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

  காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
  அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.

  நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

  ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

  டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும். உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

  காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

  இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.

  சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

  நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

  முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

  நன்றி- நம்பிக்கை ராஜ்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   நீங்கள் தந்துள்ள விவரங்கள் மிகவும் பயனுள்ளவை.
   உங்கள் ஆர்வத்திற்கும், உழைப்புக்கும் என் மனமார்ந்த
   நன்றிகள்.

   இந்த விவரங்கள் பின்னூட்டத்தில் இருப்பதை விட,
   எல்லா விவரங்களையும் ஒன்று சேர்த்து –
   நடுப்பக்கத்தில், தனி இடுகையாக வந்தால் –
   அதிக எண்ணிக்கையிலான வாசக நண்பர்களை
   சென்றடையும் என்பதால் – தனியே இடுகையாகவும்
   பதிவிட்டிருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.