காவிரி பற்றி சரியான புரிதலுக்கான சில விவரங்கள் …..

 

திருச்சி அருகே கம்பரசன்பேட்டையில்காவிரி மீதான தடுப்பணை -

திருச்சி அருகே கம்பரசன்பேட்டையில்காவிரி மீதான தடுப்பணை –

( காவிரியில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்பது
பழைய செய்தி… இப்போது நிறைய தடுப்பணைகள்
கட்டப்பட்டு வருகின்றன… சில ஏற்கெனவே கட்டி
முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்து விட்டன…
மேலே இருப்பது கம்பரசன்பேட்டை தடுப்பணையின்
புகைப்படம் – காவிரிமைந்தன் )

map

காவிரியில் என்னென்ன நடக்கிறது….
எங்கெங்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது…
இதில் யார் பயன்படுத்துகிறார்கள்…
யார் பாழ்படுத்துகிறார்கள்…

போன்ற விவரங்களை எல்லாம் தெளிவாகத்தரும்
திரு.நம்பிக்கைராஜ் என்கிற நண்பரின் முகநூல் பக்க
கட்டுரை – நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களின்
பின்னூட்டம் மூலம் கிடைக்கப்பெற்றது.

அதை பின்னூட்டமாக போட்டால், அத்தனை வாசக
நண்பர்களுக்கும் போய்ச்சேராது என்பதால் – இங்கே
மையத்தில் தனியாக பதிவிடுகிறேன்…
கூடவே தமிழகத்தில் உள்ள சிறிதும், பெரியதுமான
அணைகள் – அவை யார் யார் காலத்தில் கட்டப்பட்டது
போன்ற மற்ற விவரங்களை உள்ளடக்கிய நண்பர்
டுடேஅண்ட்மீ அவர்களின் இன்னொரு பின்னூட்டமும்
துணையாக சேர்ந்து கொள்கிறது…

வெறுமனே உணர்ச்சிகளைக் கிளப்பும் வார்த்தைகள்
மட்டும் போதாது… பயனுள்ள விஷயங்களும் நமது
நண்பர்களிடையே போய்ச்சேர வேண்டும் என்பதே
நமது நோக்கம். நண்பர் டுடேஅண்ட்மீ மற்றும்
நம்பிக்கைராஜ் ஆகியோருக்கு நமது சார்பில்
நன்றிகள் பலப்பல….!

-காவிரிமைந்தன்

——————————————————–

நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து
நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய்
கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க
விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும்
தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது
போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி
200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள
ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி
கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில்
கலந்துகொண்டுதான் இருந்தது. அப்போது காவிரி
டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான்
இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின்
நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட
பிறகுதான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி
டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர்
தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே
இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு
நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து
கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது. அந்த அணை
நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும்
ளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில்
ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (KRS அணையை
தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள்
கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை
என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை
சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா
என்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது
நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும்
சொந்தமானது. நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும்.
அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான
விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே
உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த
தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது.
ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர்
ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த
பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள்
பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா
தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி
கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான்
சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி,
குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர்
கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS,
கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும்
தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு
அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர்
அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும்
மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில
அமைப்பு இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை
கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி
போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு
தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா
சமவெளி.

சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா
என கேட்கலாம்.

ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள்
நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து
வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை
கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை
தடுத்து நிறுத்தி நீரை காவிரி, வெண்ணாறு, புது ஆறு,
கொள்ளிடம் நான்காக பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய
மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட
தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர்
தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.

நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடி
நீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில்
சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு
விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை
பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன்
என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.
உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய
அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை
மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை
கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில்
தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற
முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும்,
கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும்
பேசாதீர்கள்.

சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக
உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது
அரசியல் சண்டைக்காக நமது உரிமையை
ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை
போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல
லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும்
குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும்
முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார்
கொடுப்பது?

நன்றி- நம்பிக்கை ராஜ்

————————————————————————-

புட்சட்னி வீடியோவுக்கான மறுமொழி
நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களிடமிருந்து –

——
காமராசர் ஆட்சிக்கு பிறகு யாராவது அணை கட்டினார்களா?
என கேள்வி கேட்கும் ஒருவர்கூட உண்மையை
தெரிந்துகொள்ளவில்லை அல்லது தெரிந்துகொள்ள
முயற்சிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

நான் ஒன்றும் காமராசர் அணையே கட்டவில்லை என
சொல்லவில்லை. காமராசரும் அணைகளை கட்டினார்
அவருக்கு முன்பு ஆங்கிலேயர்களும் அணைகளை
கட்டினார்கள் , அவருக்கு பிறகும் தமிழகத்தில் நிறைய
அணைகள் கட்டப்பட்டன என்றுதான் சொல்கிறேன்.

தமிழகத்தில் பெரிதும், சிறிதுமாக மொத்தம் உள்ள
அணைகள் – 86

இதில் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டவை (நீர்
தேக்கங்கங்கள்) -3
கல்லணை & வீராணம் ஏரி – சோழர் காலம்
செம்பரம்பாக்கம் ஏரி – பல்லவர் காலம்

ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 6
( அதில் முக்கியமானவை முல்லை பெரியாறு, மேட்டூர்
ஸ்டேன்லி, பாபநாசம், பேச்சிப்பாறை)

காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள் – 10

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 26

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 36

இவை 2013க்கு முன்புவரை உள்ள தகவல்கள் மட்டுமே.
2013க்கு பிறகு உள்ள விபரங்கள் கிடைக்காததால்
அதை இதில் சேர்க்க முடியவில்லை.

ஒரு சில அணைகள் ஒரு ஆட்சியில் தொடங்கி
இன்னொரு ஆட்சியில் முடிக்கப்பட்டிருக்கும். அதை
முடிக்கும் ஆட்சியின் கணக்கில் சேர்த்திருக்கிறேன்.

2015ல் திறக்கப்பட்ட விஸ்வகுடி அணை (பெரம்பலூர்
மாவட்டம்) திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி அருகே
கட்டப்பட்ட 8 தடுப்பணைகளை இந்த பட்டியலில்
சேர்க்கவில்லை.

கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்பட்டவை அனைத்தும்
நடுத்தர மற்றும் சிறிய அணைகள்தான். ஆனால்
அணைகளே கட்டப்படவில்லை என சொல்லப்படும்
பொய்களை மறுதலிக்க கீழ்கண்ட விபரங்களை கொடுக்க
வேண்டியது அவசியமாகிறது.

——————-

k-1

k-2

 

 

k-3

 

 

k-4

kallanai-details

 

 

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to காவிரி பற்றி சரியான புரிதலுக்கான சில விவரங்கள் …..

 1. B,V.Subramanian சொல்கிறார்:

  உபயோகமான பல தகவல்களை ஒன்றிணைத்து
  தந்திருக்கிறீர்கள். நன்றி.

 2. மறவன் சொல்கிறார்:

  ஸ்டாலின் என்கிற அறிவாளியிடம் யாரவது எடுத்து சொல்லுங்க – இன்றைய பந்த் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப் படுவதை கண்டித்து… ஆனால் வழக்கம் போல கர்நாடக காங்கிரஸ் அரசை பற்றி ஒரு வார்த்தை குறை கூட சொல்லாமல் அதிமுக அரசை மட்டுமே குறை சொல்லி காலத்தை ஓட்டும் திமுக!

  அறிவாளி அன்னே, சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கடிதம் மட்டுமே எழுதும் உங்க அப்பா காவிரிக்காக கடிதம் கூட எழுத மாட்டாரா? ரயில் கட்டணம் ஏற்றினால் உடனே BJP அரசு அராஜகம் ன்னு எழுதும் கருணா தமிழர்கள் உடமைகளை சூறையாடியதை வேடிக்கை பார்த்த காங்கிரஸ் அரசை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டாரா?

  கடைசியாக, கோர்ட்டு சொல்லியே தண்ணீர் 2 நாள் கழிச்சி திறந்த கர்நாடக காங்கிரஸ் அரசு, இங்கே அணைத்து கட்சி கூட்டம் போட்டு பிரதமரை சந்திச்சா உடனே தண்ணி விட்டுடும் தமிழர்கள் அனைவரும் காப்பாற்ற படுவார்கள்… கலவரம் நடந்து 4 நாள் கழிச்சி, கர்நாடகாவுக்கு எதிரான போராட்டத்தில் கூட தமிழக அரசை மட்டுமே குறை சொல்லும் போலி கூட்டம்…

 3. selvarajan சொல்கிறார்:

  காவிரிப் பற்றி கடந்த சில தினங்களாக பல இடுக்கைகைகளை பதிவாக்கி நிறைய நண்பர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த திரு .கா.மை . அய்யாவுக்கு நன்றி ..
  2007 – ம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அதிமுக்கிய தீர்ப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தால் கூறப்பட்ட போது — தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர் கலைஞர் அவர்கள் — அதுமட்டுமின்றி மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முக்கியமான இலாக்காக்களை பெற்று மந்திரி சபையிலும் கோலோச்சிய கருணாநிதி — அந்த தீர்ப்பை ” அரசிதழில் ” வெளியிடவும் — மேலாண்மை வாரியம் அமைக்கவும் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு — தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பது — வேடிக்கையா … வேதனையா… ?
  தொடர் சட்டப் போராட்டம் நடத்தி நமது உரிமைகளை மீட்டு டெல்டா விவசாயிகள் நலனை நாடுகின்ற தற்போதைய முதல்வரை இழிவாக பேசியும் — கொடும்பாவியை எரித்தும் — போராட்டம் நடத்திய கன்னட வெறியர்களைப் பற்றி — ” ஒரு கண்டன அறிக்கையும் ” வெளியிடாத தி.மு.க. தலைமை உள்ளிட்ட மற்ற தமிழக கட்சியினரையும் — கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும் … ?என்னவோ ஜெயலலிதா தனக்காக எல்லாவற்றையும் செய்துக் கொண்டதைப் போல நினைத்து வெறுமனே உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டவர்களை — பாராட்டியே தீர வேண்டும் … ?
  கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் ஆட்சியைப்பற்றியும் அவர்களின் ” கையாலாகாத நிலையைப்பற்றியும் ஒருவார்த்தையும் கூற பயப்படும் தானைத் தலைவர் ஒருபக்கம் — இங்கே உள்ள ஆட்சியாளரை குறைக்கூறி சுற்றிவரும் மைந்தன் ஒருபக்கம் — ஏன் இந்தவெளிவேஷம் — அங்கேயுள்ள இவர்களின் ” சொத்துக்களை ” காப்பாற்றிக் கொள்ளத்தானே … ?
  ” அட்சய பாத்திரத்திரத்தை ” எப்போதும் கையில் ஏந்தியுள்ள அன்னை மணிமேகலை என்று கலைஞர் அவர்களால் வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரிடம் இதுபற்றி ஒரு வார்த்தைக்கூட போனில் பேசாத — பூச்சாண்டி தலைவரை என்னவென்று கூறுவது — ?
  தங்களின் இந்த இடுகையில் நண்பர்கள் ” நம்பிக்கைராஜ் — டுடே & மீ ” ஆகியோரின் விவரங்கள் இன்றைய தலைமுறையினருக்கு கொஞ்சமாவது சென்று சேர்ந்தால் உண்மை அவர்களுக்கு விளங்கும் — இந்த விவரங்கள் தமிழக கட்சி தலைவர்களுக்கு தெரிந்து இருந்தும் — தெரியாததுபோல் நடிக்கிறார்களா … ? மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்களா.?
  .தடுப்பணைகளை கட்டுங்கள் என்றும் — கடலில் ” வீணாக கலக்கும் ” நீரை சேமியுங்கள் என்றும் கூக்குரலிடுகின்ற தலைவர்கள் காவிரி பாயும் பகுதிகள் உப்பங்கழிகளாக மாற வழியாகி விடாதா ?
  அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்றும் — கும்பலாக சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்ற மற்ற கட்சிகளின் கூப்பாடு சரியானதா .. ? அதனால் என்ன பயன் .. ? இரண்டு தேசிய கட்சிகளின் ஆட்சி காலத்திலும் இதுவரை ” காவிரி மேலாண்மை வாரியம் ” அமைக்காமல் இழுத்தடிப்பது தெரிந்திருந்தும் — சந்திப்பதால் வாரியம் அமைக்கப்பட்டு விடுமா … ? நாங்களும் காவிரிக்காக போராடினோம் என்று பறைசாற்றி கொள்ள இவர்கள் முயலுவது — மக்களை ஏமாற்றி ஓட்டுகள் பெறத்தானே … ?மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றுதான் இதற்கெல்லாம் — ஒரே தீர்வு — அப்படித்தானே … ?

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா!!!!
  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசிற்கு அப்படி என்ன தயக்கம்.இன்றில்லாவிட்டால் நாளை நீதிமன்றம் உத்திரவிடும் போது அமைத்துதானே ஆகவேண்டும் .நீதிமன்றமும் உத்திரவிட ஏன் காலதாமதம் செய்கின்றது.புரியவில்லையே….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநிவாசமுருகேசன்,

   மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து
   உத்திரவிட்டால், கர்நாடகாவில் பாஜகவின் மேல்
   வெறுப்பு உண்டாகும்… காங்கிரஸ் அதை ஊதி விடும்.
   பாஜக அடுத்து ஆட்சியை பிடிப்பது கனவாகி விடும்.
   எனவே தவிர்க்கிறது.

   முன்பு, காங்கிரஸ் மத்தியில் இருந்தபோதும், இதே
   காரணத்திற்காகத்தான் செய்யாமல் இருந்தது.

   உச்சநீதிமன்றம் உத்திரவிடும்போது –
   “கோர்ட் ஆர்டர் -நாங்கள் என்ன செய்வது ” என்று
   சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.
   இது தான் மத்திய அரசு தன் பொறுப்பை
   தட்டிக்கழிப்பதற்கான காரணம்.

   நீதிமன்றம் காலதாமதம் – காரணம் ஒன்றும் கிடையாது.
   அதன் இயல்பே அதுதான். இந்த நாட்டின் தலைவிதி
   எல்லா அமைப்புகளிலும் காலதாமதம்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. தமிழன் சொல்கிறார்:

  காவிரி பாயும் பிரதேசத்தைப் பற்றின அருமையான இடுகை.

  பலவித மக்களைப் பாதிக்கும் பிரச்சனைக்கு (அதாவது இரண்டு அல்லது மூன்று குழுக்களிடையே, சாதிகளிடையே, மானிலங்களுக்கிடையே) அரசாங்கம் எப்போதும் தீர்ப்புக்கூற இயலாது. என்னுடைய மொழி உயர்ந்தது என்று பேசுவோர்கள், என்னுடைய சாதி உயர்ந்தது என்று கூறுபவர்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்னாடகா நிறைவேற்றவில்லையே என்று ஆதங்கப் படுபவர்கள், உச்ச நீதிமன்றம் சொன்ன ‘இடஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கும் மேல் போகக்கூடாது’ என்பதை ஏற்றுக்கொண்டார்களா? அல்லது, சட்டத்தின் மாட்சிமையை உணர்ந்து, சட்டத்தை மதித்தார்களா? (சட்ட எரிப்புப் போராட்டம் போன்றவை).

  காவிரிப் பிரச்சனைக்கு நீதிமன்றத் தீர்ப்பே வழி. அதுவும் நிறைவேறுவது கடினம். நிறைவேற்றுபவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதால். இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை நொந்துகொள்ளமுடியாது.

  இனம், மொழி என்ற விதத்தில் இந்தப் பிரச்சனையை அணுகினால், காவிரி நீர் நமக்கு எந்தக் காலத்திலும் முறையாக வந்துசேராது.

  ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும், அதிமுகவை விட்டால் யாரையும் குறை சொல்ல இயலாது. எல்லோருக்கும் தெரியும், அவர்களுக்கு, செல்வி, மற்றும் கர்னாடகாவில் உள்ள தங்களுடைய பிசினெஸுக்கு எந்தப் பாதிப்பும் வரவிடமாட்டார்கள். ஆனானப்பட்ட கருணானிதிக்கே அங்கு பண்ணைவீடு இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.