காவேரி போராட்டமா – கொள்ளையர்களின் திருவிழாவா…?

16-1474006680-bengaluru-police-found-criminals-hand-work-behind-cauveri-riots1

கர்நாடகாவில் புகழ்பெற்ற ‘விஜய் கர்நாடகா’
என்னும் நாளிதழ் – காவேரி தீர்ப்பு
வெளியான அன்று பங்களூருவில் நிகழ்த்தப்பட்ட
போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, சில ரவுடி /
கொள்ளை கும்பல்கள் எப்படி கொள்ளை அடித்தன
என்கிற தகவலை தகுந்த ஆதாரங்களுடன்
வெளியிட்டுள்ளது.

பங்களூருவில் சென்ற வாரம் காவேரி தீர்ப்பையொட்டி
ஏற்பட்ட கலவரங்களில் குறைவான
நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் வன்முறைகள்
ஏற்பட என்ன காரணம் என்று பங்களூரு போலீசார்
பல CCTV காமிராக்களின் பதிவுகளை
ஆய்வு செய்திருக்கிறார்கள்… அதில்,

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் குறைவாகவே
இருந்திருக்கிறது. சில அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை
நடத்தியதோடு சரி. ஆனால் பல கட்சித் தொண்டர்களிடம்
இருந்த காவிரி தொடர்பான உணர்வெழுச்சியை ஒரு கும்பல்
புத்திசாலித்தனமாக வன்முறை கொள்ளையாக
மாற்றியிருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறது….

உண்மையில், எரிந்துகொண்டிருந்த வாகனங்களை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களின்
எண்ணிக்கை தான் அதிகமாக இருந்திருக்கிறது.

தனித்தனியே சில கும்பல்கள் கத்தி, கம்பு, அரிவாள்
உள்ளிட்ட ஆயுதங்களோடு பெங்களூரு நகர
கடைத்தெருவுக்குள் சுற்றிவருகிற காட்சிகள்
பதிவாகியிருக்கின்றன.

16-1474006660-bengaluru-police-found-criminals-hand-work-behind-cauveri-riots3

போராட்டம் நடத்துகிறவர்களுக்கு
ஆயுதங்கள் எதற்கு என்ற கேள்வியோடு ஆராய்ந்த
போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சியான செய்திகள்
தெரிய வந்திருக்கிறது

தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் தெருவுக்கு
வந்த வன்முறை கொள்ளைக் கும்பல் தங்களுக்கிடையிலான
வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும் வசூலிக்கவும் இந்த காவிரி
உணர்வை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

பல நோக்கங்களைக்கொண்ட கும்பல் ஒன்று, ஒரு கடையின்
உரிமையாளர் முன்னிலையில் அவரது ஆட்டோவை தீ
வைத்து எரித்துள்ளது. மிரண்டுபோய் நின்ற உரிமையாளரிடம்
மேலும் கடைகளை எரிக்காமல் இருக்க இரண்டு லட்ச ரூபாய்
பேரம் பேசியுள்ளது அந்தக் கும்பல். இரண்டு லட்சத்தை
பெற்றுக்கொண்ட கும்பல் அமைதியாக, கடையை எரிக்காமல்
வெளியேறுகிறது.

karnataka-kollai-2

இதே போல், கிரிநகர் பகுதியில் உள்ள ஏ.வி.மசாலா ஃபுட்ஸ்
பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குள் புகுந்த கும்பல்
மூடைமூடையாக அங்கிருந்த மசாலாக்களை அள்ளிச்
சென்றிருக்கிறது.

பல இடங்களில் வழிமறிக்கப்பட்ட பல மக்களிடமிருந்து
பணமும் நகைகளும் கடிகாரங்களும்கூட இத்தகைய
கும்பல்களால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக CCTV-க்களில் பதிவான சில
காட்சிகளும் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளன…

புலன் விசாரணை முடிவடைந்து, முழு உண்மைகளும்
வெளிவரும்போது,( வெளிவந்தால்….! ) ஒரு அரசியல் போராட்டத்தை சுயநலமிகளும், சமூக விரோதிகளும்
எப்படி கொள்ளையர் திருவிழாவாக
மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தெரிய வரும்.

அரசியல் காரணங்களுக்காக நிகழும் போராட்டங்கள்
சில சமயங்களில் எப்படி எல்லாம் பயன்படுத்திக்
கொள்ளப்படுகின்றன என்பதைக் குறித்து நமது
சாதாரண பொதுமக்கள் தெரிந்துகொள்ள இருக்க
இது ஒரு பாடமாக இருக்கட்டும்…
(அரசியல்வாதிகளுக்கு என்ன ” இதெல்லாம் ”
புதிய விஷயமா இல்லை தெரியாத விஷயமா…!!! ).

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

காவேரி போராட்டமா – கொள்ளையர்களின் திருவிழாவா…? க்கு ஒரு பதில்

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு மட்டுமா கொண்டாட்டம், சமூகவிரோதிகளுக்கும்தான்!

    எரியிற வீட்டில் புடுங்கியதெல்லாம் லாபமே!

    நாய் வித்த காசு குறைக்கவாபோது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s