( பகுதி-3 ) சஹாபுதீன் – தூக்கு மரம் ஏறும் நாள் வருமா…?

ராஜீவ் ரஞ்சன் - கொலையுண்ட செய்தியாளர்

ராஜீவ் ரஞ்சன் – கொலையுண்ட
செய்தியாளர்

சுட்டுக் கொல்லப்பட்ட ராஜ்தேவ் ரஞ்சன் ‘ஹிந்துஸ்தான்’
என்கிற ஹிந்தி செய்தித்தாளின் சிவான் பகுதி தலைமைச்
செய்தியாளர்.

தொலைபேசியில் வந்த ஒரு அழைப்பினை தொடர்ந்து
இரவு 8 மணிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சிவானி
மார்க்கெட்டை ஒட்டிய பகுதியில் ( போலீஸ் ஸ்டேஷனுக்கு
அரை கிலோமீட்டர் அருகே ) போய்க்கொண்டிருந்தபோது,
அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு பைக் அவரை
மிக அருகில் நெருங்கி கடந்து சென்றது. பைக்’கில்
பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நபர் ராஜ்தேவ்வை குறிவைத்து
சுட்டான். ராஜ்தேவ் சரிந்து விழுந்ததை உறுதிசெய்துகொண்டே
பைக் பறந்து சென்றது.

ராஜ்தேவ் ரஞ்சனின் சாவுக்கு காரணமாக கூறப்படுவது,
சஹாபுதீனின் நீதிமன்ற வழக்குகளையும், அவனது
குற்றப்பின்னணியை பற்றியும் அவர் மிகத் தீவிரமாக
தனது பத்திரிகையில் எழுதி வந்தது தான்.

ராஜ்தேவ் ரஞ்சன் கொலை சம்பந்தமாக sharp shooter
என்று சொல்லப்பட்ட (சஹாபுதீனின் அடியாள் )
மொஹம்மது கைஃப் என்பவனை போலீஸ் தேடி வந்தது.

போலீசின் கையில் சிக்காமல் தலைமறைவாக
இருந்த அவன், சஹாபுதீன் ஜெயிலிலிருந்து ஜாமீனில்
விடுவிக்கப்பட்ட அன்று அவனை வரவேற்பதற்காக கூடிய
கும்பலில் இருந்தான் என்பது அந்த சமயத்தில்
எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களிலிருந்து
தெரிய வந்தது.

கொலைசெய்யப்பட்ட ராஜ்தேவ் ரஞ்சனின் மனைவியான
ஆஷா ரஞ்சன், இந்த வழக்கு பீஹார் போலீசால்
முன்னெடுத்துச் செல்லப்பட்டால், சஹாபுதீன் ஆட்களால்
தடங்கல்கள் உண்டாகும் என்பதால், சிபிஐ விசாரிக்க
வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவித
முன்னேற்றமும் இல்லாததால், கடந்தவாரம்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
அவர்களை நேரில் சந்தித்து தன் கோரிக்கையை
முன்வைத்தார்.

rajnath-singh-siwan-journalist-480

அதன் விளைவாக இரண்டு நாட்களுக்கு முன்னர்
சிபிஐ இந்த வழக்கை தன் வசம் எடுத்துக் கொண்டது.

தற்போது பீஹாரில், லாலு பிரசாத் யாதவ் (RJD)
நிதிஷ்குமார் (JDU ) மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி
ஆட்சி செய்து வருகிறது. தனது சிறைத்தண்டனை
காரணமாக லாலு தேர்தலில் நிற்கவோ, அமைச்சர்
பதவி வகிக்கவோ தகுதி இழந்தவர் என்பதால் –

nitish-kumar-lalu-prasad-yadav

நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்
கொடுத்திருக்கிறார். இருந்தாலும், தனது மகனை
துணை முதலமைச்சராக்கி, மறைமுகமாக லாலுவும்
அரசில் கோலோச்சி வருகிறார்.

இந்த நிலையில் –
11 வருட சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளியே
வந்தவுடன் – சஹாபுதீன் சொன்ன முதல் வார்த்தை –

” சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே நிதீஷ் குமார்
பீஹார் முதல்வரானார். கூட்டணி காரணமாக, அவர்
எனக்கு தலைவர் ஆகிவிட முடியாது. எனக்கு
ஒரே தலைவர் லாலுதான். அடுத்த தேர்தலுக்குப் பின்
மீண்டும் இங்கே அவரது ஆட்சி தான் ”

இது நிதிஷ்குமாரையும், அவரது கட்சியையும் கொதிப்படைய
செய்தாலும், கூட்டணி நிர்பந்தம் காரணமாக எதுவும்
செய்ய இயலாத நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சஹாபுதீனின் ஜாமீன் வழக்கை
பீஹார் அரசு சரியாக கையாளவில்லை என்று பெரும்
அளவில் விமரிசனங்கள் எழுந்தன….

தன் மூன்று மகன்களை சஹாபுதீனால் இழந்த சந்தா பாபு –
சஹாபுதீனின் ஜாமீன், தனக்கு விடுக்கப்பட்டுள்ள
மரண ஓலை என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டில்
ஜாமீனை ரத்து செய்ய வேண்டி ஒரு மனு

கொடுத்திருக்கிறார்… புகழ்பெற்ற வழக்குரைஞர்
பிரசாந்த் பூஷன் இந்த வழக்கை கையில் எடுத்துக்
கொண்டுள்ளார்.

இன்னொரு புறம், கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின்
மனைவி ஆஷா ரஞ்சனும், சஹாபுதீனின் ஜாமீனை
ரத்து செய்ய வேண்டுமென்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில்
மனுச் செய்திருக்கிறார்….

இத்தனை நிகழ்வுகளுக்குப் பிறகு, வேறு வழியில்லாத
நிதிஷ்குமாரின் பீஹார் அரசும், ஜாமீனை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய
முனைந்திருக்கிறது.

சுப்ரீம் கோர்ட், இந்த கோரிக்கைகளை, வருகின்ற
வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக
அறிவித்திருக்கிறது.

தற்போதைக்கு, சஹாபுதீன் பீஹாரில் சுதந்திரமாக
தன் அடியாட்கள் புடைசூழ வலம் வந்து கொண்டிருக்கிறான்…
அவனை காண்பவர் எல்லாம் பதறி ஒளிந்து கொள்கின்றனர்…

நிதிஷ்குமார் அரசின் கூட்டணி பலவீனம் –
லாலுவின் கட்சி பலம்,
ஆகியவையே சஹாபுதீனின் பின்புலமாக இருக்கிறது.
அதிகாரம் மறைமுகமாக அவன் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

8 நேரடியான கொலைகள்,
32 மறைமுகமாக கொலைகளில் சம்பந்தம்,
ஆக மொத்தம் சுமார் 50 கிரிமினல் வழக்குகள்
நிலுவையில் இருக்கின்ற நிலையில் –

சுப்ரீம் கோர்ட் எத்தகைய உத்திரவுகளை
பிறப்பிக்கப் போகிறது….?
இந்த வழக்குகள் எல்லாம் எப்போது
விசாரிக்கப்பட்டு, எப்போது தண்டனைகள் வழங்கப்படும்..?
சஹாபுதீன் தூக்கில் தொங்கும் நாள் வருமா….?
அல்லது பீஹார் அரசியல் அவனை காப்பாற்றி விடுமா…?

கிரிமினல்கள் வசம் அரசியல் சிக்கிக் கொண்டிருக்கிற
வரையில் நீதியும், நியாயமும், தர்மமும் இயல்பாக
செயல்படுவது நடக்கக்கூடிய காரியமா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ( பகுதி-3 ) சஹாபுதீன் – தூக்கு மரம் ஏறும் நாள் வருமா…?

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ரொம்ப சுலபமா உங்கள் (எங்கள்) ஆதங்கத்தை எழுதிட்டீங்க. ‘நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் நடக்கிற காரியமா? சில நல்லவர்களால் மட்டும் ‘நல்லது நடந்துவிட முடியுமா? சில சமயத்தில் கட்ஜு அவர்களின் அறிக்கைகளைப் படிக்கும்போது, இத்தகையவரா தலைமை நீதிபதியாக இருந்தார் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை (இதேபோன்று கே.ஜி.பாலகிருஷ்ணன், சிபி.ஐ முன்னாள் டைரக்டர் (குற்றவாளிகளை வீட்டில் சந்தித்தவர்)… இதுபோன்று நிறைய புல்லுருவிகள்)

 2. gopalasamy சொல்கிறார்:

  “Sahaabuddin is a social worker. He conducted so many Dalith marriages”. RJD MP.

  • Rajalakshmi சொல்கிறார்:

   SAHABUDIN IS A MURDERER NO DOUBT.BUT IS THIS NITHISH KUMAR BEHAVING LIKE A CM? YOU ARE ALSO SIMPLY PASSING BY THE FAILURE OF THIS POWER MONGERING POLITICAL LEADER SAYING TO GO BY THE ALLIANCE PRESSURE NITISH IS HELPLESS.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Rajalakshmi,

    எந்தவித சந்தேகமும் இல்லாமல் திருவாளர் நிதிஷ்குமாரும்
    ஒரு கைதேர்ந்த சுயநல அரசியல்வாதி தான்.

    ஆனால், நிதிஷ்குமாருக்கு, லாலுவைப் போல்,
    ரவுடிகளை ஆதரிக்கும் – வளர்த்து விடும் வழக்கம் இல்லை.

    தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
    என்பதற்காக, லாலுவின் மறைமுகமான பிளாக்மெயிலுக்கு
    அடிபணிகிறார் நிதிஷ்.

    லாலுவா – நிதிஷா என்று கேட்டால்,
    நிதிஷ் தேவலை என்று சொல்லலாம்….அவ்வளவே…!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 3. gopalasamy சொல்கிறார்:

  KMji, did not you expect Jungle Raj will start sooner or later after Lalu-Nitish won the elections?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.