துக்ளக் “சோ” கூறுகிறார் – மோடி பிரச்சினையிலிருந்து நழுவுகிறார்…

.

.

இன்று வெளியாகியுள்ள ” துக்ளக் ” வார இதழின்
தலையங்கத்தில், ஆசிரியர் சோ அவர்கள்
காவிரி பிரச்சினையில் மோடி தன் பொறுப்பிலிருந்து
நழுவுகிறார் என்று வெளிப்படையாகவே குறை
கூறி இருக்கிறார்….

பாஜக பிரதமர் மோடிஜியை அபூர்வமாக ஆசிரியர் சோ’வே
விமரிசிக்கும் ஒரு நிலை….!

துக்ளக் தலையங்கம் கீழே –

kav-cho-1-001

kav-cho-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to துக்ளக் “சோ” கூறுகிறார் – மோடி பிரச்சினையிலிருந்து நழுவுகிறார்…

 1. தமிழன் சொல்கிறார்:

  துக்ளக் சொல்லுவது சரிதான். எந்தக் கட்சி தன்னைப் படுகுழியில் தள்ளிக்கொள்ளத் தயாராக இருக்கும்? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதைச் செய்த கட்சி என்றைக்குமே கர்’நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. சந்தேகம் இருந்தால், கர்னாடக பா.ஜ.க தலைவர்கள் என்ன நிலைப்பாட்டினை இப்போது எடுக்கின்றனர் என்று பார்த்தாலே தெரியும். அதனால்தான் கர்னாடக முதலமைச்சர் சீதாராமையா நினைத்தால்கூட காவிரிப் பிரச்சனை தீராது. இதுக்கு ஒரே வழி, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்து, தானே முன்னின்று அதற்குரிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, பிரச்சனையை மானில அரசுகளிடமிருந்து பறிப்பதுதான். இதில், கட்சியை யாரும் குறைசொல்ல முடியாது. மோடிஜி அவர்கள், பிரதம மந்திரி என்ற தலைவர் பொறுப்பைவிட கட்சித் தலைவர் என்ற பொறுப்பிலேயே செயல்படுகிறார். அவரும் இன்னொரு அரசியல்வாதியே.

  தாமிரவருணி, வைகை, பாலாறு – இவை அனைத்திலும் மணலைக் கொள்ளை அடித்து, தண்ணீர் வரத்தைப் பாழ்படுத்திவிட்டோம். கோவை, திருப்பூரில் சாயப்பட்டறைகளையும் மற்ற தொழில்களையும் வளர்க்கிறோம் என்ற பெயரில் நீர்’நிலைகளை அழித்துவிட்டோம். இருக்கிற சொத்தையே பாதுகாக்கத் தமிழகத்துக்குத் துப்பில்லை. இதுல காவேரிக்காகப் போராடுகிறோம்.. ஆச்சரியம்தான்.

  • மாறன் சொல்கிறார்:

   காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவது
   எப்படி என்று போராடிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் நமது
   பலவீனங்களை சுட்டிக்காட்டுவது சரி அல்ல.
   அது வேறு இது வேறு.

   • ravi சொல்கிறார்:

    அய்யா மாறன், நீங்கள் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் , பல கால்வாய்களுக்கு நீர் போகாது, காரணம் மணல் கொள்ளை .. இந்த நிலையிலும் , நாம் மணல் அள்ளுவதை நிறுத்தவில்லை .. அது வேறு , இது வேறு என்று சொல்லாதீர்கள் .. கேரளா , கர்நாடகா இவ்வளவு பிரச்சனை செய்தும் நாம் மணல் அள்ளி
    அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தவில்லை .கரூரில் வந்து பாருங்கள்..

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ரவி,

     நீங்கள் அடிக்கடி இதைப்பற்றி எழுதுவதிலிருந்தே
     உங்கள் ஊர் பிரச்சினையின் தீவிரம் புரிகிறது.

     ஆனால், உள்ளூர் அமைப்புகள் எல்லாம் என்ன செய்கின்றன…?
     எல்லாரும் ஒன்று கூடி, இதை எதிர்த்தால் என்ன …?
     யாராவது தீவிரமாக முயற்சி எடுத்தார்களா…?
     யாரும் ஆர்வம் காட்டவில்லையா…?
     அல்லது பணம் அதையும் அடக்கி விட்டதா..?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • ravi சொல்கிறார்:

      ஆறில் தண்ணீர் வரும் போது , தண்ணீர் போக வழி ஏற்படுத்தி , மணல் அள்ளுவது இங்கே .. பொக்லைன் , லாரி வைத்து பகிரங்கமாக மணல் அள்ளுவது இங்கேதான் .. தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் கூத்து ..கோர்ட்டு என்று அலைந்தாலும், இந்த இடத்தை மூடி விட்டு , வேறு ஒரு இடத்தில ஆரம்பிக்கிறார்கள் ..

      பணம், அதிகாரம், உள்ளூர் அரசியல் ,மிரட்டல், அடிதடி இத்தனையும் மீறி சில விஷயங்கள் நடக்கின்றன . அவ்வளவு தான்.. இதை விட மோசம் திருப்பூர் , மதுரை , நெல்லை பிரச்சனைகள் .. நிலைமை கைமீறி போய் பல நாட்கள் ஆகி விட்டன …

      இதில் அம்மா, அய்யா இரண்டும் ஒன்று தான் ..

 2. B.V.Subramanian சொல்கிறார்:

  It is very rare that Mr.Cho critises Mr.Modi.

  It is true that instead of setting an example as a Statesman,
  Mr.Modi exhibits himself as a petty Party Chief whose interest
  is only winning the elections.

 3. selvarajan சொல்கிறார்:

  //காவிரி மேலாண்மை வாரியம்… சுப்ரீம் கோர்ட் சாட்டையடி… இனியாவது மவுனம் கலைக்குமா மோடி அரசு? //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-asks-centre-constitute-cauvery-management-board-soon-263263.html —– இடுகையில் இந்த வரிகள் :– // பாஜக பிரதமர் மோடிஜியை அபூர்வமாக ஆசிரியர் சோ’வே
  விமரிசிக்கும் ஒரு நிலை….! —— // செய்தியில் இந்த வரிகள் “சுப்ரீம் கோர்ட் சாட்டையடி…” செய்தியின் உள்ளே //மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு விரைவாக அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. // — ஆனாலும் மத்திய அரசு அவ்வளவு சீக்கிரத்தில் அமைத்து விடுமா …? சட்டத்தின் ஓட்டைகளை தேடும் — அல்லது எதிர்வரும் – ” கர்நாடகா தேர்தல் முடிவு வரை ” — இழுத்தடிக்குமா …. ? மோடிஜிக்கே வெளிச்சம் … ?

 4. selvarajan சொல்கிறார்:

  // காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/constiute-cauvery-management-board-soon-sc-tells-centre-263258.html —– நேற்று கூடிய குழு தினமும் 3000 க.அடி . வீதம் திறக்க உத்திரவிட்டதை விட தினமும் 6000 . க.அடி . வீதம் நீரை திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதோடு நில்லாமல் ” மத்திய அரசு ” நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது — இனி கர்நாடகாவின் நிலை ..? — அடுத்த செய்தி … // அவசரமாக கூடுகிறது கர்நாடக கேபினட்.. அணையை மூடி விட்டு ஆட்சியைத் துறக்க சித்தராமையா முடிவு? //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/karnataka-cm-siddaramaiah-calls-urgent-cabinet-meet-on-wednesday-263275.html —- அணையை மூடி விட முடியுமா … ? மத்திய அரசு தன் பொறுப்பில் அணைகளை எடுத்து — உச்ச நீதிமன்ற உத்திரவை நிறைவேற்றுமா … ? உடனே வாரியத்தை அமைத்து விடுமா … ? முடிவு — ???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சித்தராமையா நாடகம் ஆடுகிறார்….
   இதெல்லாம் சும்மா –
   இப்போது அடுத்த சீன் –
   சொந்த கன்னட மக்களை ஏமாற்றும் சீன்…!

   மரியாதையாகவே தண்ணீரை திறந்து விடுவார்…
   மிஞ்சி மிஞ்சி போனால், இன்னொரு ரிவிஷன் பெடிஷன் போடுவார்…
   அவ்வளவே…

   சுப்ரீம் கோர்ட் மூலம் இந்த பிரச்சினையை
   ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்த
   இறைவனுக்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

   அடுத்தபடியாக –

   தொலைக்காட்சி பேட்டிகளை, விவாதங்களை எல்லாம்
   பார்த்திருப்பீர்கள்…
   என்ன கேவலமான அரசியல்வாதிகள்..

   சர்வ கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் –
   தீர்மானம் போட வேண்டும் –
   பிரதமரை அனைவருமாகச் சேர்ந்து போய்
   மனு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சல்லிக்காசுக்கு
   பயனற்ற விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்கள்..
   இதுவரை எத்தனை தடவை பிரதமருக்கு பெட்டிஷன்
   போயிருக்கிறது – எதாவது நடந்ததா…?

   கடைசி வரை அமைதியாக இருந்து – பதிலேதும் சொல்லாமல்,
   செயலில் செய்து காட்டி விட்டார்.

   தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு
   நமது உளமார்ந்த பாராட்டுகளையும் , வாழ்த்துகளையும்
   இந்த தளத்தின் மூலம் தெரிவித்துக் கொள்வோம்..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. gopalasamy சொல்கிறார்:

  Now there is test for P.M ; S,C ordered to appoint Kaveri management board within four weeks. We will wait and see.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நிறைய formalities இருக்கின்றன.
   4 வாரங்களில் முடியாமல் இன்னும் சில நாட்கள்
   தவணை கேட்கக் கூடும். ஆனால், இனியும் இதை
   தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல்
   அமைத்து விடுவார்கள் என்றே நம்புவோம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. ravi சொல்கிறார்:

  சோ , மோடியை மட்டுமா விமரிசிக்காமல் இருக்கிறார். அம்மா, சின்னம்மா பற்றி வாயே திறக்க மாட்டார் ..
  அவருக்கான காலம் முடிந்து பல வருடங்கள் ஆகி விட்டது ..

 7. selvarajan சொல்கிறார்:

  // ‘பாதையின் விளிம்பில் பரவிடும் வெளிச்சம்’: காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி மகிழ்ச்சி // தினமணி செய்தி:— http://www.dinamani.com/tamilnadu/2016/sep/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2568463.html?pm=home — மகிழ்ச்சி அடையும் தலைவர் … ? இதே செய்தியில் — அவருடைய மாறாத குணத்தையும் காட்டினால் தானே அவர் ஒரு அரசியல் ” சாணக்கியர் ” என்பதற்காக கூறுவது // காவிரிப் பிரச்சினையிலே தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதற்கும் எந்தப் பதிலும் இல்லை.

  சம்பாப் பயிரை முழுமையாகக் காப்பாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை அதிமுக அரசு மேற்கொள்ள விருக்கிறது என்பது ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெளிவுபடுத்தப் பட்டால் தான், நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் விவசாயிகள் சாகுபடிப் பணிகளைச் செய்திட இயலும் என்பதை உணர வேண்டும். இதற்கும் பதில் இல்லாமல் போனால், பாதிப்பு விவசாயிகளுக்குத் தான். // — அவரது உள்ளத்துக்குள் என்ன நடந்துக் கொண்டு இருக்கும் …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உள்ளம் அல்ல – வயிறு ..,.
   கப கப என்று எரிந்து கொண்டிருக்கும்…!

   இப்போது நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தது…?
   இவராலா..?
   அல்லது இவர் கூவிக் கொண்டிருந்தாரே –
   “சர்வகட்சி கூட்டம்”, தீர்மானம், பந்த்,
   பிரதமருக்கு பெட்டிஷன் ஆகியவற்றாலா ?

   இவர் ஆண்டது போதும் – என்று தானே
   மக்கள் அடுத்தவர் கையில்
   அதிகாரத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்…?

   இன்னும் ஏன் தினமும் புலம்பல்..?

   இவர் புலம்ப புலம்ப
   இவரது மரியாதை இறங்கிக்கொண்டே போகிறது.

   இயற்கையின் கருணையால், இந்த வருடம் நல்ல மழை
   பெய்யுமென்று நம்புவோம். ( அந்த மழை கர்நாடக மக்களுக்கும்
   சேர்த்தே பெய்யட்டும் என்று வேண்டுவோம்..அவர்களும்
   மகிழ்ச்சியோடு இருக்கட்டும் )
   உற்சாகத்தோடு, நம்பிக்கையோடு -செயலில் இறங்குவோம்…

   நிச்சயம் தமிழக விவசாயிகளுக்கு நல்ல
   எதிர்காலம் உண்டு.

   தேவை நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் தான்..

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.