சு.சுவாமி v/s ஒவாஸி – இரண்டு வில்லன்களின் விவாதம்….

swamy-and-his-dog

திருவாளர்கள் சுப்ரமணியன் சுவாமி மற்றும் ஒவாசி
ஆகியோரிடையே சூடாகவும், நகைச்சுவையாகவும்
நிகழ்ந்த ஒரு விவாதம் …..

swamy-owaissi-2

இந்தியா டுடே நிறுவனத்தால் 3 – 4 நாட்களுக்கு
முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது….

தொலைக்காட்சியில் அதனை காணத்
தவறியவர்களுக்காகவும்,
இந்த இரண்டு சுயநலவாதிகளின் நாடகங்களை
நண்பர்கள் நிதானமாகப் பார்த்து – அவர்களை -புரிந்து
கொள்ள ஒரு வசதி ஏற்படுத்தித்தரவும், அந்த நிகழ்ச்சியை
இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

துவக்கத்தில் கிளம்பும் சூட்டைப்பார்த்து யாரும்
அசந்து விட வேண்டாம்….போகப்போக full comedy தான்.
இவர்கள் எப்போது வில்லன் வேடம் போடுகிறார்கள் –
எப்போது காமெடியன்கள் ஆகிறார்கள் என்பதை
கணிப்பது தான் சற்று சிரமம். நாடு நிம்மதியாகவும்
அமைதியாகவும் இருந்து விடக்கூடாதே என்று
அரும்பாடு பட்டு உழைக்கும் இரண்டு extremists…!

(கிட்டத்தட்ட) ஹிந்தியில் நடந்த இந்த விவாதத்தில்
இரண்டு பேருமே நன்றாகவே நாடகமாடினார்கள்….
இதில் நிகழும் இந்து-முஸ்லிம் மத சம்பந்தமான
சச்சரவுகளை நான் முற்றிலுமாக வெறுக்கிறேன்…

இரண்டு மதத்தினரிடையே வெறுப்பையும்,
கோபத்தையும் உண்டு பண்ணும் எந்த பேச்சையும்,
கருத்தையும் நான் என்றும் ஏற்க மாட்டேன்.
( நண்பர்களின் பின்னூட்டங்களிலும் அதனை குறித்த
விவாதங்களை தவிர்க்க வேண்டுகிறேன்.)

இந்த நாடகத்தில், மத சம்பந்தமான சர்ச்சைகளை
வெட்டியெறிய எனக்கு வழி ஏதும் தெரிந்திருந்தால்
செய்திருப்பேன்…
( வீடியோக்களில் வேண்டாத இடங்களை
வெட்டி விடும் ( editing ) சுலபமான வழி – இதனை
படிக்கும் நண்பர்கள் யாருக்காவது, தெரிந்திருந்தால்,
தயவுசெய்து எனக்கு தெரிவிக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன்.)

மற்றபடி, இந்த நாடகத்தில் நிறைய அரசியலும்
பேசப்பட்டது…. மொழி புரியாதவர்களுக்காக
பேசப்பட்ட விஷயங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு கீழே –

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி தனது
பேச்சினிடையில் கூறிய சில கருத்துக்கள் –

திரு.அருண் ஜெட்லியை விட என்னால்,
சிறந்த முறையில்
நிதி அமைச்சராகப் பணி புரிய முடியும்…
நான் பொருளாதாரம் படித்தவன்…
ஜெட்லி வக்கீலுக்கு தான் படித்திருக்கிறார்…!!!

திரு.ராஜ்நாத் சிங்குடன் எனக்கு போட்டியில்லை…
அவர் எனது நீண்டகால நண்பர்…
உள்துறையை மிகச்சிறப்பாக நிர்வகிக்கிறார்…

காஷ்மீர் அரசை டிஸ்மிஸ் செய்து, நிர்வாகத்தை
மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்…
அங்கு ராணுவத்திடம் முழு அதிகாரத்தையும்
ஒப்படைக்க வேண்டும்.

பாகிஸ்தானிடம் பேச்சு வார்த்தை நடத்தி பயனில்லை.
பாகிஸ்தான 4 துண்டுகளாக்க வேண்டும். முதலில்
பலூசிஸ்தானை பிரித்து, பாகிஸ்தானை துண்டாக்கினால்
தான் அது வழிக்கு வரும்…

அமெரிக்கா பலூசிஸ்தான் விஷயத்தில் இந்திய
நிலைப்பாட்டை ஏற்கவில்லையே என்கிறார்கள்.
அமெரிக்கா ஒரு குரங்கு மாதிரி – எப்போது
வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
பல்டி அடிக்கும். நாம் செய்து முடித்து
விட்டால் – பிறகு தானாகவே அதை ஆதரிக்கும்.

நான் சொல்வதை பாஜக ஏற்பதில்லையே என்று
கேட்கிறார்கள். கட்சி எப்போதும் தாமதமாகவே
என் அறிவுரையை ஏற்கும்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு –
நான் இப்போது சொல்வதையெல்லாம்
கட்சி செய்யும்…!!!

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், (ராஹூல் கன்வால்..)
இடையில் ஒரு மாதத்திற்கு மேலாக –
சு.சுவாமி, மீடியா பக்கமே வராமல் இருந்தது ஏன்..?
என்று கிண்டலாக கேட்டார்….

( மோடிஜி ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்
பற்றி ஆதரவான கருத்து கூறிய பிறகு கொஞ்ச நாட்கள்
சு.சுவாமி அமைதி காத்தார்…….! )

சு.சுவாமியின் பேச்சு பாஜக தலைமையினால்
கட்டுப்படுத்தப்பட்டதா ?
என்கிற கேள்விக்கு அவர் சொன்ன பதில் –

” என்னை கட்டுப்படுத்தக்கூடிய யாரும் –
இனிமேல் பிறந்து வந்தால் தான் உண்டு…!!! ”

Subramanian Swamy vs Asaduddin Owaisi Full Dabate
at Mind Rocks 2016 by India Today


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சு.சுவாமி v/s ஒவாஸி – இரண்டு வில்லன்களின் விவாதம்….

  1. மாறன் சொல்கிறார்:

    su.su.vai vida naai nanraaga pose kodukkirathu 🙂

  2. selvarajan சொல்கிறார்:

    // சு.சுவாமி v/s ஒவாஸி – இரண்டு வில்லன்களின் விவாதம்….// இது இடுக்கை —- // கருணாநிதி-ஸ்டாலின் மோதல் “உச்சகட்டம்”… கதிகலங்கும் திமுக நிர்வாகிகள் // http://tamil.oneindia.com/news/tamilnadu/power-struggle-dmk-with-karunanidhi-stalin/slider-pf210839-263212.html — இது செய்தி — முன்னது ” விவாதம் ” — அடுத்தது ” மோதல் ” — இரண்டுமே … ?

  3. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

    மற்றதை விடுங்கள் பொருத்தமான படத்தை தேர்ந்தெடுத்து போட்டு இருக்கிறீர்கள் …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.