தொட முடியாத உயரத்தில் சுவிட்ச் பாக்ஸ் ….. கடிக்க முடியாத ஒயர் –

.

.

வதந்தி “தீ”யை விட வேகமாக பரவக்கூடியது.

செய்தியை லேசில் நம்ப தயங்கும்
மக்கள் “வதந்தி”யை உடனே நம்பி விடுகிறார்கள்.
இது மனிதரின் இயல்பு…

இந்த அடிப்படை தத்துவத்தை கொண்டு
செய்திக்கு பதிலாக வதந்திகளை “சப்ளை” செய்து
இயங்குகிறது விகடன் என்னும் ஒரு
கேடு கெட்ட ஊடகம்.

கீழ்க்கண்ட படங்களை முதலில் பார்த்து விடுங்கள் –

vathanthi-1

vathanthi-2

ramkumar-jail-600-21-1474436957

நேற்று முன் தினம் முதல் முதலில் செய்தியை
வெளியிடும்போதே, பத்தடி உயரத்தில் இருந்த
ஸ்விட்ச் பாக்சை சராசரி உயரம் கூட இல்லாத
ஒரு மனிதர் எப்படி உடைத்திருக்க முடியும் என்றும் –

(தரையிலிருந்து தொடமுடியாத பத்தடி உயரமா இது…?)

மின் நிபுணர் ஒருவரின் கருத்தாக, வாயில் இழுத்து
கடிக்கும் அளவிற்கு உள்ளே ஒயர் எப்படி அவ்வளவு
நீளம் இருக்கும் ..? என்றும்,

(ஒயர் எவ்வளவு நீளம் என்பது படத்தில் தெரிகிறதே…)

அவ்வளவு தடினமான ஒயரை கட்டிங் ப்ளேயர்
வைத்து கட் பண்ணுவதே
கடினமாக இருக்கும்போது, வெறும் பற்களால்
எப்படி கடிக்க முடியும்..? என்றும்,

(இந்த ஒயரை பல்லால் கடிக்க முடியாதா…? )

கேள்விகளை எழுப்பியது வதந்திகளை பரப்பி
பிழைப்பு நடத்தும் இந்த ஊடகம்.

இன்று சில செய்தி தளங்களில் மேற்கண்ட
புகைப் படங்கள் வெளியானவுடன்,
தன் வதந்திகள் தகர்க்கப்படுவதை
உணர்ந்து அதை தவிர்க்க இப்போது
திசை மாற்றி எழுதுகிறது –

“இந்த ஸ்விட்ச் பாக்ஸ் டைல்ஸ் சுவரில்
பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸை
வாயால் கடித்து உடைப்பது என்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல.”

படிப்பவர்களை முட்டாள்கள் என்று நினைத்து
எப்படி எழுதுகிறார்கள் பாருங்கள்…

” ஸ்விட்ச் பாக்ஸை
வாயால் கடித்து உடைப்பது ”

என்ன அபத்தம். யார் சொன்னார்கள் வாயால்
கடித்து உடைத்தான் என்று…?

இன்றைய புதிய செய்தி மேலும் தொடர்கிறது இவ்வாறு –

“இந்த ஸ்விட்ச் பாக்ஸ் டைல்ஸ் சுவரில்
பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸை
வாயால் கடித்து உடைப்பது என்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல.

அவ்வாறு உடைக்க முயன்றிருந்தால், ராம்குமாரின்
வாயிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால்
ராம்குமாரின் வாயில் காயங்கள் இல்லை.

அதேபோல் மின்சாரம் உடலில் பாய்ந்தாலும்
அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார். அப்படி தூக்கி

வீசப்பட்டிருந்தாலும் அவருக்கு காயங்கள்
ஏற்பட்டிருக்கும். அதற்கான காயங்களும்
ராம்குமாரின் உடலில் இல்லை.

எனவே இந்த ஒயரை வாயில் கடித்து தற்கொலை
செய்து கொண்டார் என்பதில் உண்மை இருக்க
வாய்ப்பில்லை,”
எனவும் சொல்லப்படுகிறது.

அந்த கடைசி வார்த்தை “எனவும் சொல்லப்படுகிறது”
தான் வதந்திகளின் அஸ்திவாரம்.

வழக்கமாக எல்லா தளங்களிலும் செய்தியை
படிப்பவர்கள், விகடனின் தரத்தை உணர்வார்கள்.

ஆனால், விகடனின் செய்திகளை
மட்டும் படிப்பவர்கள்…?
படித்து உண்மை என்று நம்புபவர்கள்..?
அல்லது அதை உண்மையாக்க தீவிரமாக
முயற்சி செய்பவர்கள்…?

மனசாட்சியே இல்லாமல் செயல்படும்
இவர்களை யார் தண்டிக்கப் போகிறார்கள்…?

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

தொட முடியாத உயரத்தில் சுவிட்ச் பாக்ஸ் ….. கடிக்க முடியாத ஒயர் – க்கு 11 பதில்கள்

 1. நிமித்திகன் சொல்கிறார்:

  அவன் கடித்தானா? அல்லது கடிக்க வைக்கப்பட்டானா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் ஒரு குற்றவாளியை தியாகி ஆக்க முயல்வதைத்தான் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இதில் சாதி எங்கிருந்து முளைக்கிறது என்பதும் புரியவில்லை.

 2. மாறன் சொல்கிறார்:

  கொலைகாரனை வைத்து அரசியல் செய்யும்
  சுயநலவாத கும்பல். எரியும் கொள்ளியில் பிடுங்கிய வரை
  ஆதாயம் பார்ப்பவர்கள்.

 3. jksm raja சொல்கிறார்:

  ஐயா, இந்த வழக்கை பொறுத்தவரை எல்லா அரசியல் வியாதிகளும் ஆரம்பத்தில் இருந்தே எவ்வளவு குழப்பி ஆதாயம் பெற முடியுமோ அவ்வளவு குழப்பி விட்டார்கள். இதை ஆரம்பித்து வைத்த பெருமை பி ஜே பி நாய்களையே சேரும். சம்பந்தமே இல்லாமல் ஒரு முஸ்லீம் பெயரை சொல்லி அதன் மூலம் இந்துக்களிடம் நன்மதிப்பை பெறலாம் என அவர்கள் முயன்றதில் விளைவே எல்லாம்.

  ஒரு தலித் கைது சைய்யப்பட்டவுடன் இதில் நுழைந்த அயோக்கிய தலைவன் எப்பிடியாவது தலித்துகளை அரசுக்கு எதிராக திருப்பவேண்டும் என எல்லாவிதமான வேலைகளையும் செய்தான். பிராமணர்கள் எந்த காலத்திலும் அயோக்கிய தலைவனுக்கு வாக்கு செலுத்த போவது இல்லை. இந்த துவேஷத்தினால் அந்த பெண்ணை எந்த அளவிற்கு கேவல படுத்தமுடியுமோ அந்த அளவு கேவலப்படுத்துவதற்கான எல்லா வேலையையும் செய்துவிட்டான். ISIS தீவிரவாதியில் இருந்து இந்திய ராணுவரகசியத்தை கடத்திவிட்டாள் என்பதுவரை இன்னும் கர்ப்பமாக இருந்திருக்கிறாள், ரகசிய திருமணம் செய்து கொண்டாள் என்பது வரை அவள் ஒரு பாலியல் தொழிலாளி என்பதை தவிர மற்ற எல்லா வகையிலும் கேவலப்படுத்தப்பட்டாள். இதன் பின்னணியில் இருந்தது அயோக்கிய தலைவனே என நினைக்கிறேன்.

  இந்த வழக்கு தமிழ் நாட்டில் எவ்வளவு படித்த முட்டாள்களும் சுயநலவாதிகளும், சாதி வெறியர்களும் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது .ஒரு பயலும் ISIS தொடர்பு அல்லது ராணுவ ரகசியம் சம்பத்தப்பட்டதில் அவளுக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை காட்டி ராம்குமாரை வெகு எளிதாக வெளியே கொண்டுவரமுடியுமே என்று அவதூது பரப்புவர்களிடம் கேட்கவேயில்லை. அயோக்கிய தலைவனின் கையாள் தமிழச்சி என்ற சொறிநாயின் அக்கிரமத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது . அவள் நாலு பெயர்களை சொல்லி இவர்கள் தான் ஸ்வாதியின் கொலைகாரர்கள் என்று சொல்லிவிட்டால் உடனே போலீஸ் அவர்களை பிடித்து விசாரிக்கவேண்டும் என்று சோசியல் மீடியாவில் எல்லாரும் எழுத ஆரம்பித்து விட்டார்கள் ஒரு பயலும் ஆதாரத்தை போலீஸிடம் காட்டி அவர்களை கைது செய்ய சொல் என்று கேட்கவே இல்லை. என்னாலும் ஆயிரம் பெயர்களை தகப்பனாரின் பெயரோடு சொல்லமுடியும். அதற்க்காக நாலு பெயர்களை சொல்லி போலீஸ் அவர்களை விசாரிக்கவேண்டும் என்று சொல்ல முடியுமா என்ன. இந்த அளவிற்கு அயோக்கிய தலைவன் கனகச்சிதமாக அவதூது பரப்புவதில் வெற்றி பெற்று விட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.

  இன்னும் போலீஸ் ராம்குமார் உண்மையை வெளியே சொல்லாமல் இருப்பத்திற்க்காக அவன் கழுத்தை அறுத்து விட்டார்கள் என்று கூக்குரல்கள் வேறு. மரண பயத்தில் கழுத்தை போலீஸ் அறுக்கும் பொழுது ஏன் கத்தவில்லை என்றோ பேச முடியாவிட்டாலும் படித்தபையன் கையால் எழுதி உண்மையை சொல்லமுடியாதா என்ன என்றோ எவனுமே கேட்கவில்லை .இதில் ஒரு பெண், போலீஸ் அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து கழுத்தை அறுத்தார்கள் என்று விளக்கம் வேறு. கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடித்த கதை. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் போலீஸ் அவனை என்கவுண்டர் செய்திருந்தால் மிகவும் நல்ல பெயர் வாங்கி இருக்கும். அதை விட்டுவிட்டு அவன்மீது பொய் வழக்கு போட்டு கேட்ட பெயர் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றோ வேலைவெட்டி இல்லாதவனுக்கு அதிகாலையில் ரயில்வே ஸ்டேஷனில் என்ன வேலை என்றோ சென்னைக்கு ஏன் வந்தான். படிக்கவா அல்லது வேலை தேடியா. படிக்க என்றால் யாருடன் சேர்ந்து எங்கே படித்தான். வேலை செய்ய என்றால் யாரிடமாவது கடந்த 3 மாதத்தில் வேலை கேட்டதற்கான அல்லது வேலை பார்த்தத்துக்கான ஆதாரம் இருக்கிறதா என்றோ யாரையும் யோசிக்கவிடாமல் செய்ததில் அயோக்கிய தலைவனின் சமர்த்தியமே தனிதான் .

  இந்த வழக்கின் வதந்திகளை போலீஸ் கையாண்ட விதத்தையும், சசிகலா புஷ்பா விவகாரத்தை கையாண்ட விதத்தையும் வைத்து பார்க்கும் பொழுது அயோக்கிய தலைவனிடம் எலும்பு பொறுக்கும் உமர்மட்ட அரசு அதிகாரி ஒருவன் முக்கியமான நிகழ்ச்சிகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பில் இருப்பதாகவே படுகிறது. அவன் இந்த நிகழ்வுகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இல்லை என தெரிகிறது. இவைகள் எல்லாம் அவரின் கவனத்திற்கு வந்திருந்தால் புத்திசாலித்தனமாக கையாண்டிருப்பர் என நினைக்கிறேன்

 4. pkandaswamy சொல்கிறார்:

  நல்ல பதிவு. பாராட்டுகிறேன்.

 5. kokki சொல்கிறார்:

  இந்த போட்டோ திடீரென்று எப்படி பரவியது இது போலிஸ் அதிகாரபூர்வ போட்டோவா? அவன் கழுத்தே அறுத்தான் என்றும் ஒரு போட்டோ வெளியிடப்பட்டது அதுவும் அதிகாரபூர்வமாக விடப்பட்டதா இப்போது அவன் இறந்தும் விட்டான் அவன் பேசிய வீடியோ வைத்துள்ளார்களா? இல்லை அதுவும் இல்லை என்பார்களா ஏனென்றால் இது மாதிரியான விவகாரத்தில் விசாரணையின் வீடியோ பதிவு எடுக்கப்பட்டிருக்கும் இந்த சுவிட்ச் பாக்ஸ் உடைக்கப்பட ஜந்து நிமிடமாவது ஆகும் யாருமே கவனிக்கலையா? இல்லை அவன் ஸ்குரு டிரைவர் வைத்து கழற்றினான் என்பார்களா? அந்த அறையில் மட்டும் சிசிடிவி கேமரா இல்லை ரயில்வே ஸ்டேசனிலும் கேமரா இல்லை. சரியாக விசாரணை வரும்போது இந்த மரணம் நிகழ்கிறது மேலும் இந்த வழக்கு இவ்வளவு சந்தேகங்களை எழுப்ப காரணங்கள் நிறையவே உள்ளது அந்த பெண்ணின் பேஸ்புக் உடனடியாக முடக்கப்பட்டது. ஒருவன் மூன்றே மாதத்தில் கொலை செய்யும் அளவிற்கு காதல் வெறி கொள்வானா? சுவாதி பக்கம் நிற்பவர்கள் பொறுத்தவரை குற்றவாளி ஏதோ ஒரு வகையில் இறந்தே விட்டான் அவர்கள் இனி இது குறித்து ஆய்வு செய்ய தேவையில்லை
  இனி விவகாரம் ராம்குமாரின் பெற்றோருக்கும் காவல்துறைக்குமானது அதன் போக்கில் விடுங்கள். சந்தேகமே வரக்கூடாது கேள்வியே கேட்க கூடாது என்று நினைக்கலாமா? காவல்துறை விளக்கமளிக்கட்டுமே.

  • மாறன் சொல்கிறார்:

   இதில் ஜாதி சங்கம் ஏன் உள்ளே நுழைந்து
   ஆதாயம் தேடுகிறது ?.
   விசாரணையை அதன் போக்கில் விட்டு,
   வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது எல்லா
   சந்தேகங்களையும் எழுப்புவது தானே நியாயம் ?
   விசாரணை நடக்கும்போதே திசை திருப்ப இந்த
   ஜாதி சங்க தலைவர் அதி தீவிரமாக முயற்சித்தது ஏன் ?
   செத்துப்போன பெண்ணின் மீது கேவலமான வகையில்
   செய்திகளை பரப்புவது என்ன னியாயம் ?
   உண்மை கொலைகாரன் தப்பிக்க, ஒரு அப்பாவி முஸ்லிம்
   இளைஞனின் மீது குற்றம் சாட்டுவது எந்த வகையில் நேர்மை ?
   இது கொலை வழக்கா அல்லது அரசியலா ?
   விகடன் அடிப்படையே இல்லாமல் வதந்திகளை பரப்புவது
   என்ன ஆதாயம் கருதி ? கேடி பிரதர்ஸ் வழக்கைப்பற்றி
   இதில் செய்தி வந்ததா ? வதந்தி வந்ததா ?

 6. Subramaniam சொல்கிறார்:

  உமது பக்க சார்பு நிலை தான் தெரியுமே! இதே நிகழ்வு திமுகா ஆட்சியில் நடந்திருந்தால் நீர் எப்படி எழுதி இருப்பீர் என்பதும் தெரியும்! இதில் நீர் உம்மையே நேர்மையின் திலகம் என்று வரிந்துகொட்டிக்கொள்கிறீர்கள். இந்த சமூகத்துக்கு உண்மையில் ஆபத்தானவர்கள், உங்களைப் போன்ற பக்க சார்பு நியாயவாதிகள் தான். ஹிட்லரின் கோபல்ஸ் போல!

 7. karikalankaruthu சொல்கிறார்:

  அரிப்பதற்கு சொறிந்து கொள்ளத்தானே முப்புரி நூல் போட்டிருக்கிறோம். நன்றாக ஆசை தீர சொறிந்து கொள்ளுங்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் –
   Subramaniam,
   பெங்களூரு தமிழன், மற்றும்
   karikalankaruthu –

   ஆகியோருக்கு,

   அண்மைக்காலங்களில் நீங்கள் மூவருமே இந்த
   வலைத்தளத்தில் பின்னூட்டம் போடவோ,
   விவாதங்களில் கலந்துகொள்ளவோ செய்தது இல்லை.

   திடீரென்று இன்று இந்த இடுகைக்கு மட்டும் வந்து,
   தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி,
   வசை பாடியிருக்கிறீர்கள்.

   ஆக, இந்த இடுகையில் எழுதியுள்ள பொருள் மீதோ
   அல்லது பின்னூட்டம் எழுதிய நண்பர் jksm raja
   மீதோ தான் உங்கள் கோபம், ஆத்திரம் எல்லாம்.

   நான் இந்த இடுகையில் விவாதத்திற்கு
   எடுத்துக் கொண்டது விகடன் செய்தித்தளத்தின்
   உண்மைத்தன்மையைப் பற்றி –

   அதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் …?
   நீங்கள் விகடனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா…?
   கேடி பிரதர்சுக்காக பேசுகிறீர்களா…?
   ஜாதிக் கட்சிக்கு ஆதரவாகவா…?
   இல்லை திமுகவுக்காக பேசுகிறீர்களா ..?

   உங்கள் தரப்பில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ..?
   இவ்வளவு தரம் தாழ்ந்து எழுதுகிறீர்களே –
   மீண்டும் படிக்க, உங்களுக்கே வெட்கமாக இல்லை…?

   உண்மையில் – உங்களுக்கு என்னுடைய கருத்தில்
   மாறுபாடு இருந்தால் – உங்கள் தரப்பை எடுத்துச்சொல்லி
   இருக்க வேண்டும்.

   அல்லது அந்த இஸ்லாமிய நண்பர் jksm raja அவர்கள்
   கூறிய கருத்தில் மாறுபாடு இருந்தால் – அதைச்சொல்லி
   வாதம் செய்திருக்க வேண்டும்.

   அதில் எதையும் செய்ய வழியின்றி –
   மனம் போன போக்கில் என்னை ஏசுவதால்
   உங்கள் மனம் குளிர்ந்து விடும் என்றால்
   தாராளமாகச் செய்யுங்கள்….
   இதில் நான் எதையும் இழப்பதாக கருதவில்லை….

   இந்த தளத்தின் வாசக நண்பர்கள் அனைத்தையும்
   கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு
   தெரியும் – நான் நியாயத்தை எழுதுகிறேனா
   இல்லையா – எதைப்பற்றி எழுதும்போது நான் எத்தகைய
   தாக்குதல்களுக்கு உள்ளாகிறேன் என்றெல்லாம்.

   உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

   எனது இந்த வார்த்தை நண்பர் கரிகாலனுக்கு
   ஏமாற்றத்தை அளிக்கக்கூடும் –
   நான் பூணூல் அணிவது இல்லை…!

   அடுத்த தடவை வரும்போதாவது,
   நல்ல தமிழுடன் வாருங்கள் நண்பர்களே….

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. நிமித்திகன் சொல்கிறார்:

  நம்மில் அனவருமே ஏதோ ஒரு சார்பு நிலையில்தான் வாழ்கிறோம். நம்முடைய சார்பு நிலையில் இருக்கும் ஒருவர் தவறு செய்யும்போது, அவர் செய்திருக்க மாட்டார் என்றுதான் முதலில் சொல்லுவோம், தவறு நிரூபிக்கப் படும்போது, ஏதோ சூழ்நிலை தவறு செய்துவிட்டான் என்று நம்மைத் நாமே தேத்திக் கொள்ளுவோம். அது இயல்பு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர், அதீத சார்பு நிலைக் கொள்ளும்போதுதான் பிரச்சனை எழுகிறது. உண்மையை அறிய மனம் விரும்புவதில்லை. அறிந்தாலும், அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக சிந்தனை செல்கிறது. பொதுவாகவே எல்லா கருத்திற்கும் ஆதரவு நிலை என்று ஒன்று இருந்தால் எதிர்ப்பு நிலை என்று ஒன்று இருக்கும். இது இயல்பு. இந்த இயல்பில் உணர்வுபூர்வமாக சிந்திப்பவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் சுயநலக் கூட்டமும் நம்மிடம் உண்டு. அது அரசியல் சார்ந்தும் இருக்கிறது, சாதி சார்ந்தும் இருக்கிறது, மதம் சார்ந்தும் இருக்கிறது. சாதி அடையாளத்தை ஆயுதமாகக் கையிலெடுத்தால், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சாதி ஒழியாது. சாதிகளுக்கிடையே வெறுப்பும் குரோதமும்தான் உரம்போட்டு வளரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s