கொஞ்சம் அறிவு, கொஞ்சம் நரித்தனம், நிறைய அகம்பாவம் – எல்லாம் கலந்த கலவை …!!!

israel-map

tamilnadu

அண்மையில் இரண்டு தடவை தமிழ்நாட்டிற்கு
வந்திருந்தார்; சென்னையில் ஒரு முறையும், கோவையில்
ஒரு முறையும்… இரண்டு இடங்களிலும் சொன்னார் –
“கர்நாடகாவிடம் முட்டாள்தனமாக நீருக்கு சண்டை
போடுவதை விட்டு விட்டு, தமிழ்நாடு கடல்(உப்பு)நீரை
நல்ல நீராக மாற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”
என்றார்.

நம் தமிழக அரசியல்வாதிகள் ஒருவர் கூட –
– I repeat – ஒருவர் கூட – அதை எதிர்த்து
கேள்வி கேட்கவில்லை; குறைகூறவில்லை….
( சு.சுவாமியை கண்டாலே நம் அரசியல்வாதிகள்
நடுங்கி ஓடுவது ஏன் என்று யோசியுங்கள்…!!! )

யாரும் எதிர்க்கவில்லை என்பது அவருக்கு இன்னும்
கொழுப்பை ஏற்றி இருக்கிறது. நேற்று அவரது
தளத்தின் மூலம் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ss-on-desalineation

” காவிரி வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்,
தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கும்
ஒரு உத்திரவை போட வேண்டுமாம் – இரண்டு
ஆண்டுகளுக்குள்ளாக, கடல்நீரை நல்ல நீராக
மாற்றும் திட்டங்களை நிறைவேற்றி, இரண்டு
மாநிலங்களும் தங்கள் நீர் பற்றாக்குறையை
தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்….! ”

எதற்கெடுத்தாலும் இஸ்ரேலை உதாரணம் காட்டும் –
இந்த அறிவுக் கொழுந்து –

அவர் நியமித்துள்ள இரண்டு
தனியார் துப்பறியும் ஏஜென்சிக்களின் மூலம் அரசியல்
தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் ரகசியங்களை
தெரிந்து வைத்துக் கொண்டு,

சிலரை கோர்ட் வழக்கில் சிக்கவைத்து
பயமுருத்துவதிலும், வேறு பலரை அதைக் காட்டியே
ப்ளாக்மெயில் பண்ணுவதிலும் expert ஆக இருக்கலாம்.

கற்பழிப்பு சாமியார் ஆசாராம் மற்றும் சிமெண்ட் சீனு
போன்றோர் தானே இவரது க்ளையண்டுகள்….
அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தானே…?
தமிழ்நாட்டின் தேவைகள், பிரச்சினைகளை பற்றி
இவருக்கு என்ன தெரியும்…?

மீண்டும் மீண்டும் இஸ்ரேல் நாட்டை உதாரணம்
சொல்கிறார்…. எனவே,
இதை படிப்பவர்களின் வசதிக்காக –
இஸ்ரேலுடன் ஒப்பிட்டு இங்கு சில தகவல்களை
தர விரும்புகிறேன்.

இஸ்ரேல் நாட்டின் மொத்த ஜனத்தொகையே –
சுமார் – 85 லட்சம் தான்.
தமிழ்நாட்டின் ஜனத்தொகை சுமார் – 790 லட்சம்…!!!
(அதாவது 7 கோடியே 90 லட்சம்)

இஸ்ரேலின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்
( தானியங்களும், பருப்பு வகைகளும் )
தேவையில் சுமார் 80 சதவீதம் வெளி நாடுகளிலிருந்து
தான் இறக்குமதி செய்யப்படுகிறது…. சில வகைப்பழங்களும்
சிறிய அளவிலான மற்ற விளைபொருட்களின் விவசாயமும்
மட்டும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, சொட்டு
நீர்ப்பாசனமாக செய்யப்படுகிறது…

இஸ்ரேலின் பரப்பளவு சுமார் – 22,000 ச.கி.மீ.
ஆனால் தமிழ்நாட்டின் பரப்பளவு – 1,30.060 ச.கி.மீ.
இஸ்ரேலின் பரப்பளவில் பாதிக்கு மேல் பாலைவன பூமி.

இஸ்ரேல் கடல்நீரை நல்ல நீராக மாற்றுவது
பெரும்பாலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ளவே.
( வெகு சிறிய அளவில், மறுசுழற்சி நீர் -விவசாயத்திற்கும்
பயன்படுத்தப்படுகிறது. )

கடல் நீரை குடிநீராக்குவது மிகவும் காசு செலவழியும்
விஷயம். முதலாவதாக அத்தனை பணத்தை அதில்
முதலீடு செய்ய இங்கே வசதி இல்லை.

இரண்டாவது, அப்படி உற்பத்தி செய்யப்படும் நீர்
விலைஉயர்ந்ததாக இருக்கும். காசு கொடுத்து வாங்கி

லட்சக்கணக்கான டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தி
நமது விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியுமா…?
அல்லது அதில் பலன் தான் காண முடியுமா..?

தமிழ்நாட்டில் ஆற்று நீர் மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி
ஓடி, கடலில் (வங்காள விரிகுடா) கலக்கிறது.
பூமியும் அதே வாட்டத்தில் தான் சரிவாக இருக்கிறது.

இங்கே கிழக்கே – கடலிலிருந்து நீரெடுத்து – உயரமாக
மேற்கே கொண்டு சென்று விவசாயம் செய்வது
நடக்கக்கூடிய காரியமா…?

கடல்நீரை – அதன் அருகிலுள்ள இடங்களில்
வேண்டுமானால் பயன்படுத்தலாம். ஆனால்,
தஞ்சை, திருச்சி, கரூர் என்று 200 கிலோமீட்டர்
தொலைவுக்கெல்லாம் கொண்டு போக முடியுமா…?

இஸ்ரேலின் உழைக்கும் வர்க்கத்தில் 3.7 % பேர் தான்
விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில், ஏறத்தாழ 40 சதவீதம் பேர்
விவசாயத் தொழிலையே சார்ந்திருக்கிறார்கள்.
ஏறத்தாழ 45 லட்சம் ஏக்கர் நிலத்தில் இங்கு பாசனம்
செய்யப்படுகிறது.

இத்தனை பேரின் தேவைகளையும், கடல்நீரை
நல்ல நீராக மாற்றி பயன்படுத்துவதன் மூலம்
நிறைவேற்றிக்கொள்ள முடியுமா…?

அவர் என்ன வேண்டுமானாலும்
உளறிக் கொட்டி விட்டு போக
தமிழகம் அனுமதிக்கலாமா…?
அவர் நினைப்பில் தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள்…
நாமும் அதை உறுதி செய்ய விடலாமா…?

இங்கே அரசியல்வாதிகளுக்குத்தான்
அவரை கண்டாலே பயம்…
பத்திரிக்கையாளர்களுக்கு என்ன பயம்….?

அடுத்த முறை அவர் தமிழ்நாட்டில் செய்தியாளர்களை
சந்திக்கும்போதாவது – நமது துடிப்பான செய்தியாளர்கள்
இந்த விவரங்கள் குறித்தெல்லாம் எதாவது கேள்விகளை
எழுப்புவார்கள் என்று நம்பலாமா…?

 

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

கொஞ்சம் அறிவு, கொஞ்சம் நரித்தனம், நிறைய அகம்பாவம் – எல்லாம் கலந்த கலவை …!!! க்கு 2 பதில்கள்

  1. selvarajan சொல்கிறார்:

    அய்யா.. ! வெறும் வாய் சொல்லை சொல்வதற்கு சு.சுவாமிக்கு வலிக்கவா போகிறது …? இவரிடம் யாரும் காவிரி தண்ணீரைப் பற்றியோ — கர்நாடகாவின் துரோகம் பற்றியோ கேட்காமலேயே ஒரு வெட்டி கருத்தை கூறுவதைவிட வேறு ஏதாவது ஒரு வேலையை பார்க்கலாம் … கடல் நீரை குடிநீராக்குவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் போல கூறுகிறார் —
    இந்த கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் என்ற கருத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் வணிகம் மற்றும் செலவு என்பதை உப்பு நீக்கும் தொழில்நுட்பம் போன்று நாமும் சிலவற்றை வடிகட்டிப்பார்த்தால் உள்ளே பதுங்கி கொண்டு – பயமுறுத்தும் பல நச்சு உப்புகள் நம்மை நிலைகுலையச் செய்யும் என்பதே உண்மை நிலை …..
    கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மிகவும் செலவு பிடிக்கும் என்பதும் — . மிகவும் தண்ணீர் நெருக்கடியுள்ள, போதிய மழை இல்லாமல், ஏரிகள் , ஆறுகள், குளங்கள் என அடிப்படை வழியற்ற ” பாலைவன நாடுகள் ” மட்டுமே இம்முறையை தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வருகின்றன ….
    அதுமட்டுமல்ல இவ்வாறான திட்டத்திற்கு — அதிகப் படியான மின்சாரம் போன்ற எரி ஆற்றல் தேவைப்படும் — மின்சார பற்றா குறையுள்ள தற்காலத்தில் இதற்கும் மின்சாரம் சென்றால் — மேலும் அவதிக்கு உள்ளாவது – மக்களே … மேலும் பிரித்து எடுக்கப்படும் நச்சுப் பொருள் மீண்டும் கடலுக்கு செல்லும் போது — கடல்வாழ் உயிரினங்களும் — அரிய அமைப்புகளும் அழிவுக்கு உள்ளாகும் …
    தற்போது இதில் புதிய பயன்பாட்டு அறிவியல் தொழில்நுட்பமான ‘நானோ தொழில்நுட்பமும்’ புகுத்தப்படவுள்ளது …. அதன் படி பார்த்தாலும் — கடல் நீரிலிருந்து உப்பு மற்றும் பல்வேறு பொருட்களை வெளியேற்றுவதற்கு “டி ஸலைனேஷன்” (Desalination) என்ற முறை தற்போது பயன்படுத்தி வருகிறது. அதிக செலவு ஏற்படும் வகையிலான இந்த முறை தான் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள ஏராளமான நாடுகள் பயன்படுத்துகின்றன. புதிய முறையான நானோ தொழில் நுட்பப்படி பிரித்த்தெடுத்தாலும் — ” செலவு ஒன்றே ” ….
    எந்த வகையிலும் — நன்மை தராத இந்தத்திட்டத்தை மாற்று வழிக்காக இதுவே சரியான தீர்வு என்று மக்கள் முன் தொடர்ந்து சு.சுவாமி போன்றவர்களால் பதிவு செய்யப்படுகின்றன…… இவர்களின் தன்னல செய்கையாலும் — வரும் கேடுகளை உணராத செயல்திறத்தாலும் நாம் பல்லாயிரக்கணக்கான நீர்நிலைகளை அழித்துவிட்டோம்…… மழைதரும் காட்டினைக் கூறுபோட்டுச் சுற்றுலா இடமாக்கிவிட்டோம்….. நீருக்கான அந்தக் கால அடிப்படையை வீணாக்கி அதைப்பற்றி மக்களையும் புரிந்துகொள்ள வைக்காமல்,.. நீர் நிலைகளை மாசுபடுத்தி குப்பைக் கொட்டும் இடமாக மாற்றி விட்டதோடு நில்லாமல் — நீர் பற்றாக்குறையை போக்க மேலும் — மென்மேலும் சிக்கலையே தீர்வாக வைக்கும் போக்கு தீங்கானது…. என்பதை உணர வேண்டும் …
    // நமது துடிப்பான செய்தியாளர்கள்
    இந்த விவரங்கள் குறித்தெல்லாம் எதாவது கேள்விகளை
    எழுப்புவார்கள் என்று நம்பலாமா…? // … நம்பலாமா … ?? —-
    சு.சுவாமிக்கு // கொஞ்சம் அறிவு, கொஞ்சம் நரித்தனம், நிறைய அகம்பாவம் – எல்லாம் கலந்த கலவை …!!! // இந்த மூன்றில் அதிகப்படியாக மேலோங்கி நிற்பது — நரித்தனம் தானே … ?

  2. kanagaraj FIGHT club சொல்கிறார்:

    israelidamirunthu onrai mattume katrukolla mudiyum.aduthavar nilathai aemaatri pudunkuvathu.
    athayam s.swamy karnataka virku solli thanthal tamilakaththayum karnatakavudan inaithu intha prachinaiku mutru pulli vaithu viduvar…………..:)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s