ஏர்செல்-மேக்சிஸ் – மாறன் சகோதரர்கள் வழக்கின் தற்போதைய நிலை….?

aircell-maran-brothers

தங்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை இதர
2-ஜி வழக்குகளுடன் சேர்த்து 2-ஜி -வழக்குகளுக்கான
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக்கூடது என்று
மாறன் சகோதரர்கள் வாதம் செய்து வந்தனர்.

கடந்த வாரம் இந்த வழக்கு 2ஜி விசேஷ நீதிமன்றத்தின்
முன் தீர்ப்புக்கு வந்தது. இங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு
குறித்து, தமிழக செய்தித்தாள்களில், (வழக்கம்போல்)
விவரமாக செய்திகள் வரவில்லை.

எனவே, அது குறித்த
செய்திகள் கீழே –

மாறன் சகோதரர்களின் மீது சிபிஐ (Central Bureau of
Investigation ) மற்றும் அமலாக்கப்பிரிவு (Enforcement
Directorate) பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுக்களை
விசாரிக்க 2ஜி கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்பது
அவர்கள் தரப்பு வாதம்….

தங்கள் மீதான வழக்குகளை முடிந்த வரையில்
தாமதப்படுத்துவதே இதன் நோக்கம். மற்ற 2ஜி வழக்குகள்
மீதான தீர்ப்புகள் வரும் வரை தங்கள் வழக்கு விசாரணைக்கு
வராமல் பார்த்துக் கொள்ள எடுக்கப்படும் முயற்சி…

ஆனால், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அவர்கள்,
2010, டிசம்பர் 16-ல் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்திரவுகளை
எடுத்துக் காட்டி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கும் தனது
நீதிமன்றத்தால் தான் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை
42 பக்கங்கள் கொண்ட தனது விவரமான தீர்ப்பில்
எடுத்துக் கூறி விட்டார்.

சுப்ரீம் கோர்ட் தனது 2010, டிசம்பர் 16 தேதியிட்ட உத்தரவில்,
2001 முதல் 2008 வரை எழும் அனைத்து ஸ்பெக்ட்ரம், மற்றும்
லைசென்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகளும்,
அதற்காக நியமிக்கப்படவிருக்கும் 2ஜி ஸ்பெஷல் கோர்ட்டால்
விசாரிக்கப்படும் என்று விவரமாக தீர்ப்பளித்திருந்தது.
வெவ்வேறு நீதிமன்றங்களின் முன்பு வெவ்வேறு

காரணங்களை முன்வைத்து, வழக்கு விசாரனைகளை
சம்பந்தப்பட்டவர்கள் இழுத்தடிக்க அனுமதிக்கக்கூடாது
என்பது இதன் நோக்கம்.

இந்த உத்திரவின் தொடர்ச்சியாகவே 2ஜி ஸ்பெஷல் கோர்ட்
மார்ச் 2011-ல் நியமிக்கப்பட்டு, விசாரணை தொடர்ச்சியாக
நடந்து வருகிறது.

இந்த நீதிமன்றத்தின் முன்பாகத்தான் –
திரு.ஆ.ராஜா மற்றும் திருமதி கனிமொழி ஆகியோர்
சம்பந்தப்பட்ட வழக்கு கிட்டத்தட்ட இறுதி நிலையை
அடைந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட 17 நபர்களில்,

இன்னும் திருமதி கனிமொழி உட்பட 3 நபர்களின்
விசாரணை மட்டுமே பாக்கி இருக்கிறது. அது முடிவடைந்து
விட்டால் வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு விடும்.

அதன் பின்னர், மாறன் சகோதரர்களின் வழக்கு விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குற்றப்பத்திரிகைக்கு ஆதரவான சில ஆவணங்கள்
இன்னமும் பொருளாதார விவகார இலாகாவிலிருந்து
எதிர்பார்க்கப்படுவதால் தாமதம் ஏற்படுகின்றது.
( இங்கு முன்னாள் நிதியமைச்சரின் உதவியாளர்களின்
ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது….
இந்த விவகாரத்தில், திரு.ப.சி. அவர்களும் கேள்விக்கு
உள்ளாக்கப்படுகிறார்…. both agencies have not completed the
Foreign Investment Promotion Board (FIPB) violations in
Aircel-Maxis approval, involving former Finance Minister P
Chidambaram…. திரு.சு.சுவாமி கூட இதுகுறித்து
புகார் செய்திருந்தார்…! )

மாறன் சகோதரர்களின் மேற்படி ஏர்செல்-மேக்சிஸ்
வழக்கில் நீதிபதி ஓ.பி.ஷைனி அவர்களின் தீர்ப்பிலிருந்து
கடைசி பகுதிகளைப் படித்தால், நிலவரம் தெளிவாகப்
புரியும்.

தீர்ப்பிலிருந்து தொடர்புடைய பகுதிகள் மட்டும் கீழே –

(from – 2G Court Order dated Sept 17 2016 on Jurisdiction )

59. By emphasizing this distinction, the applicants have laboured hard to argue that only one case can be termed as part of 2G Scam.

However, if the entire material is read collectively in a constructive manner, things would become clear that all three cases cover different aspects and different time period as covered by the CAG report, which has been referred to by the Hon’ble Supreme Court in its order dated 16.12.2010.

The 2G Spectrum Case refers to a case which arose out of the events occurring on 10.01.2008 and on the subsequent dates leading to subsequent grant of UAS Licences and spectrum and payment of alleged bribe. The Additional Spectrum Case refers to additional spectrum granted to various existing licencees and
covered by para 4.10 of the CAG report, whereas Aircel Maxis Case
refers to licences in which processing of applications was unduly
delayed as mentioned in para 4.1 of CAG report and alleged bribe in the form of share purchase.

All three issues were dealt with by the CAG as the audit covered the entire period from 2003-04 to 2009-10. As such, this description of the cases by various names cannot be used for segregating any case from 2G Spectrum Scam.

This has been used only to differentiate the various cases by referring to the time period and the subject-matter relating to which alleged irregularities were committed. At the cost of repetition, the instant cases relate to alleged irregularities committed by delaying the processing of applications in violation of time frame prescribed by the guidelines,
which led to further events leading to the filing of the instant cases.

Accordingly, this submission is also without merit.
No loss to the exchequer

60. It is next submitted that in the instant cases, there is no allegation of loss to the exchequer and, as such, these cases do not fall within the scope of 2G Spectrum Scam, in which there was allegation of loss to the exchequer to the tune of Rs. 1.76 lac crore.
It is repeatedly submitted that when there is no loss
to the exchequer, the instant cases can by no stretch of imagination be covered by the 2G Spectrum Scam.

However, loss to exchequer is not an essential ingredient for a case under Section 7 read with Section 13 of PC act. Section 7 deals with taking of gratification other than legal remuneration in respect of an official act by a public servant. Section 13 deals with criminal misconduct by a public servant, in which he, by corrupt or illegal means, obtains for himself or for any person any valuable thing or pecuniary advantage or by abusing his position as a public servant obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage.

In the instant cases the allegations are that Sh. Dayanidhi
Maran, the then MOC&IT, in criminal conspiracy with other accused, abused his official position as a Minister and delayed the grant of licences to Siva group of companies and after forcing his exit quickly granted licences to these companies after their acquisition by Maxis Communications through its subsidiaries
and in consideration thereof obtained bribe in the form of share
subscription in the companies belonging to his family members.

The submission, as such, is without merit.

Private grievances of an individual:

61. It is further submitted that the instant case is based on failure of an on-going commercial transaction between two private individuals. It is submitted that the entire case is based on the grievances of private individual and these cases can in no way be designated as part of 2G Scam.

However, the submission has been noted to be rejected as the undue delay in granting of licences during the period 2004-2006 has also been adversely commented upon by the CAG and
a direction has also been issued by the Hon’ble Supreme Court to
investigate this part of the licencing regime also. Thus, there is no merit in the submission.

Monitoring of investigation by the Hon’ble Supreme Court:

62. It is the case of the applicants that monitoring of investigation of the instant cases by the Hon’ble Supreme Court does not make them to be part of 2G Scam. It is submitted that the monitoring was done by the Hon’ble Supreme Court as these cases were also unearthed during investigation of the 2G Scam, though these cases have no relation with the same. Per contra, it is the case of the prosecution that monitoring of
the case by the Hon’ble Supreme Court is the determining factor to find out if the case relates to 2G Scam or not.

However, in view of the fact that the subject matter of the case was fairly and squarely covered by the CAG report, as extracted above, which report was duly considered by the Hon’ble Supreme Court in its order dated 16.12.2010 while issuing the directions, the submission is of no avail. There is no manner of doubt that by the standard of subject-matter and periodicity of the alleged
crime, the cases fairly and squarely fall within the description/
designation of 2G Scam.

63. In view of the above discussion, there is no doubt that all these applications are devoid of even an iota of merit and are accordingly dismissed.

64. A copy of the order be placed on the files of both cases.
Announced in open Court (O. P. Saini)

today on September 17, 2016 Spl. Judge/CBI(04)/ PMLA
(2G Spectrum Cases)/ New Delhi

—————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஏர்செல்-மேக்சிஸ் – மாறன் சகோதரர்கள் வழக்கின் தற்போதைய நிலை….?

 1. selvarajan சொல்கிறார்:

  // தங்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை இதர
  2-ஜி வழக்குகளுடன் சேர்த்து 2-ஜி -வழக்குகளுக்கான
  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக்கூடது என்று
  மாறன் சகோதரர்கள் வாதம் செய்து வந்தனர்.

  கடந்த வாரம் இந்த வழக்கு 2ஜி விசேஷ நீதிமன்றத்தின்
  முன் தீர்ப்புக்கு வந்தது. இங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு
  குறித்து, தமிழக செய்தித்தாள்களில், (வழக்கம்போல்)
  விவரமாக செய்திகள் வரவில்லை //
  எப்படி செய்தித்தாள்களில் செய்தி வெளிவரும் … ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த செய்திக்கே ஒரு சில பத்திரிக்கைகளை வழக்கு போடுவேன் என்று தயாநிதி மிரட்டியதைப் பற்றி ஒரு விரிவான இடுக்கை வெளியிட்டு இருந்திர்கள் … அப்படியிருக்க இப்போது இங்குள்ள பத்திரிக்கைகள் செய்தி போடுவார்களா … ? அந்த இடுக்கை :— .// மாறன் சகோதரர்களும் மானநஷ்ட வழக்கும் …..
  Posted on ஜூலை 12, 2014 by vimarisanam – kavirimainthan // தற்போது படித்தால் ரொம்ப சுவாரஸ்யம் … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ஆக,

   ” மாறன் சகோதரர்களும் மானநஷ்ட வழக்கும் ”
   இடுகையை, இன்றைய மக்கள் பார்க்க –
   மீண்டும் ஒரு மறுபதிவு போடலாமே என்று தூண்டுகிறீர்கள்…. 🙂

   பொதுவாக, அரசியல் இடுகைகளுக்கு அற்ப ஆயுள் தான்.
   ஆனால், இது – நீங்கள் சொன்னது போல் இப்போதும்
   சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.

   சரி – போட்டால் போச்சு… இவ்வளவு செய்தாச்சு …
   இதையும் செய்து விடலாமே…!!!

   ஆனால், விளைவுகள் எதாவது வந்தால் …?
   ஏதோ – உங்களை நம்பித்தான் போடுகிறேன் … 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.