மாறன் சகோதரர்களும், மான நஷ்ட வழக்கும்….!!!

.

.
முன் குறிப்பு –
இந்த இடுகையில் கூறப்படும் மான நஷ்ட வழக்கு
குறித்த செய்தி வெளிவந்தது ஜூலை 2014-ல். ஆனால்,
இன்று வரை இந்த வழக்கு அடுத்த நிலைக்கு கொண்டு
செல்லப்பட்டதாக தகவல் இல்லை…!!!

இப்படி ஒரு இடுகை ஏற்கெனவே இந்த தளத்தில்
இருப்பதை நண்பர் செல்வராஜன் தனது
பின்னூட்டத்தின் மூலம் நினைவுபடுத்திய பிறகு தான்
நான் மீண்டும் பார்த்தேன். (வயது – ஞாபக சக்தி
அவ்வளவு தான்…) அரசியல் குறித்து எழுதப்படும் அனேக
இடுகைகளுக்கு நீண்ட ஆயுள் இருப்பதில்லை.
ஆனால், இது இப்போதும் சுவையாக இருப்பது போல்
தோன்றுவதால் மறுபதிவு செய்கிறேன்…. நண்பர்
செல்வராஜனுக்கு என் நன்றிகள்…!!!

இதனால், எனக்கு – பின்விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால்,
அவர் நிச்சயம் உதவிக்கு வருவாரென்ற நம்பிக்கையுடன்
மறுபதிவு செய்கிறேன்….. 🙂 🙂

————————————————–

 

kalaignar_orbit

முதலில் செய்தித்தளங்களில் வெளிவந்துள்ள
ஒரு செய்தியிலிருந்து –

————–

சென்னை: குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் தி நியூ இந்தியன்
எக்ஸ்பிரஸ், மாலை முரசு ஆகிய பத்திரிகைகள் மீது
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவதூறு
வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த அவதூறு வழக்கில் தயாநிதி மாறன்
சார்பில்
கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மாலை முரசு மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன.

தன் மீது மத்திய புலனாய்வுத் துறையினரால்
பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ரூ.1 கோடியே 20
லட்சம் இழப்பு என்று குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டு,

முழுக்க முழுக்க தவறானது, ஆதாரம் அற்றது என்பதை சட்ட
ரீதியாக நிரூபிப்பேன் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள இந்த பத்திரிகைகள்,
தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தைச்
சார்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும், எவராலும்
தொடர்பு கொள்ள
இயலவில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாகவும் வேண்டுமென்றே இட்டுக்கட்டி, அவரது பெயருக்கும், அவரது குடும்பத்தினர் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு பொய்யான அவதூறு
செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தன.

மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளில் வழக்கு
பற்றி எதுவுமே எழுதாமல், சமூகத்திலும், நியாயமாக
சிந்திப்பவர்கள் மத்தியிலும் தயாநிதி மாறன் மீதும், அவரது
குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும்
வகையில்

அவதூறு சேற்றை வாரி வீசியிருக்கிறார்கள்.

இது போன்ற விஷமப் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு
வரும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை சார்ந்த
ஜுன்ஜுன்வாலா மற்றும் எடிட்டர் சுதர்சன், மாலை
முரசு நாளிதழின் ஆசிரியர் செல்வம் மற்றும் குமுதம்
ரிப்போர்ட்டர் ஆசிரியர் கோசல்ராம், வெளியீட்டாளர்
பா.வரதராஜன் ஆகியோர் மீது தயாநிதி மாறன்
கிரிமினல் அவதூறு வழக்கினை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட
சைதாப்பேட்டை

23ம் பெருநகர குற்றவியல் நீதிபதி,
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் வருகிற
 
ஜூலை 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி
சம்மன் அனுப்ப 
உத்தரவிட்டுள்ளார்.

———————

முதலிலேயே ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன் –
என்னை அடித்துப் போட்டாலும் 5 பைசா கூட தேறாது.

 எனவே, யாராவது தனக்கு ஏற்கெனவே
“மானம்” இருந்தது 
என்றும்
என் எழுத்தினால் “அது” போய் விட்டது என்றும்
வழக்குப் போட்டால் – “மானநஷ்ட ஈடு”
என்றெல்லாம் 
கொடுக்க எனக்கு
வக்கில்லை.

மேலும் – ‘நியாயமாகச் சிந்திப்பவர்கள்
மத்தியில் மாறன் குடும்பத்தினரைப் பற்றி
அவதூறுச் சேற்றை அள்ளி வீசவும்’ – நான்
தயாரில்லை…

எனவே, என் நோக்கம் யாரையும் அவதூறு செய்வது
இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்தி
விடுகிறேன்.

——————

நான் மாறன் சகோதரர்களின் பக்கம் தான்…..!!……..ஏன் …?

மாறன் அவர்களின் புகார் முற்றிலும் நியாயமானது
தானே ….?

பாராளுமன்றத்திலும், செய்தி ஊடகங்களிலும் பல
தடவை, அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும்,
அவர் மீது எத்தகைய வழக்கும் பல ஆண்டுகள்
வரை
பதியப்படவே இல்லை என்பதும்,

அவர் தொடர்ந்து அதே தொலை தொடர்பு
அமைச்சராகவே நீடித்து வந்தார்
என்பதும் அவரது
வாதத்தை உறுதி செய்கின்றன அல்லவா …?

பின்னர், பல தரப்பிலிருந்தும் வந்த அழுத்தம்
காரணமாக, கடைசியில் வழக்கு பதிவு
செய்யப்பட்டாலும், அவருக்கு பாதகமாகவோ

அல்லது
அவரைக் குற்றம் சாட்டும் வகையிலோ
எந்த செய்தியும் புலனாய்வு நிறுவனங்களால்
அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை
என்பதும் அவரது வாதத்தை உறுதி செய்கின்றன அல்லவா …?

பல ஆண்டுகள் அவர்களது தந்தை மத்திய
அமைச்சராக 
பலத்த அதிகாரங்களோடு
இருந்தது அவர்களது குற்றமாகுமா …?

பல ஆண்டுகள் அவரது தாத்தா மாநில
முதலமைச்சராக இருந்ததும், ஆளும் கட்சியின் தலைவராக
இருந்ததும்
இந்த குற்றச்சாட்டிற்கு எந்தவிதத்தில் சம்பந்தப்படும்….?

மத்தியில் ஆண்ட மைனாரிட்டி கூட்டணியின்
தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக
அவரது 
தாத்தா இருந்தாலென்ன …?

அதற்காக
இவர் ஊழல் பண்ணிவிட முடியுமா ….?
பண்ணினால் கண்டுகொள்ளாமல் இருந்து
விடுவார்களா …?

மத்திய கூட்டணியில் 9 ஆண்டுகள் செல்வாக்குடன்
விளங்கிய கட்சியின் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவி வகித்தால், அதைப்பயன்படுத்தி ஊழல் புரிந்தார் என்று சகட்டு மேனிக்கு சொல்லி விடுவதா …?

யாராவது நிரூபிக்க முடியுமா …?
“ஆவணங்கள் தொலைந்து போயின” என்று
சாக்குபோக்கு சொல்லாமல் யாராலாவது ஆதாரம்
காட்ட முடியுமா ?

தந்தையின் மத்திய அமைச்சர் பதவியையும்,
தாத்தாவின் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி
எவராவது இந்த அளவுக்கு முன்னுக்கு வந்து விட முடியுமா …?


அப்படி முன்னுக்கு வந்ததாக எவரையாவது
உதாரணம் 
காட்ட முடியுமா …?

ஒத்தை ரூபா பணம் இல்லாமல்,
முழுக்க முழுக்க “சுய உழைப்பு”
ஒன்றையே முதலீடாகப் போட்டு, இத்தனை
சிறிய வயதில், வாழ்க்கையில் முன்னேறியவர்களை,

பல்லாயிரம் கோடி சம்பாதித்து
விட்டார்கள் என்று கண்டபடி குற்றம்
சாட்டுவது என்ன நியாயம் …?

ஊழலுக்கும் சகோதரர்களுக்கும் எவ்வளவு தூரம்
என்பது குற்றம் சாட்டுபவர்கள் யாருக்காவது தெரியுமா ..?

அடையாறு போட் க்ளப்புக்கும் சன் டிவி
அலுவலகத்துக்கும் எவ்வளவு தூரம் என்றாவது இவர்கள்
யாருக்காவது தெரியுமா …? 

விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாக
இட்டுக்கட்டி கூறியவர்களுக்கு – இவர்கள்
பின்னணியைப்பற்றி என்ன தெரியும் ….?

strong>இவர்களிடம் எவ்வளவு விமானங்கள் இருக்கின்றன என்று யாருக்காவது தெரியுமா …?

எவராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று
எழுதி இருக்கிறார்களே.. யாராவது முயற்சி செய்தார்களா ..?
அவர்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்
…..
வெளியிலே, வாசலிலே போகிறவர்கள் – இவர்களிடம் தொடர்பு  விலாசத்தை கொடுத்து விட்டா செல்ல முடியும் …?

தொடர்ந்து வருடக்கணக்கில் பாராளுமன்றத்திலும்,
மீடியாவிலும் புகார் கூறப்பட்டதே,
அதற்கு பயந்து
இவர்கள் ஓடியதுண்டா ?

பல ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு பதிவு
செய்யப்பட்டு  
விசாரணை
துவங்கியதே,
அப்போது பயந்து ஓடியதுண்டா…?

சென்னை வரை புலனாய்வுக்குழு வந்து
விசாரணை
நடவடிக்கைகள் தொடர்ந்தனவே அப்போது
பயந்து ஓடியதுண்டா..?

அவர்களை கைது செய்யப்போகிறார்கள் என்று
தகவல் எதாவது வெளிவந்ததா …?
அப்படி எதாவது உத்தேசம் இருந்தால் –
அது அவர்களுக்குத் தெரியாமல் போய் விடுமா …?

பின் வெளிநாட்டுக்கு ஓட வேண்டிய
அவசியம் இப்போது எப்படி வரும் ..?
அது கூட தெரியாமல் இவர்கள் ஏன் அப்படி எழுதினார்கள்…?

ஒரு வேளை கைது செய்வதாக எதாவது
உத்தேசமிருந்து, அப்படி எதாவது தகவல் வெளிவந்தாலும்
கூட
வெளிநாட்டுக்கு
ஓட வேண்டிய அவசியமென்ன …?-
கைதிலிருந்து விடுவித்துக் கொள்ள,
தவிர்த்துக்கொள்ள 
எவ்வளவோ வழிகள்
உள்ளன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்

தெரியாதா …?

பணம் என்றால் என்ன ?
பணத்தின் சக்தி என்ன ?
“பணம் பாதாளம் வரை பாயும்” என்றால் என்ன அர்த்தம் என்பது பற்றி எல்லாம் குறை கூறும்
குறுமதி
படைத்தவர்களுக்கு தெரியுமா ….?

எழுத்து சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டு,
அசட்டுத்தனமாக எதையாவது எழுதினால் –

இப்படி அவதூறு வழக்கை சந்திக்க வேண்டியது தான்
என்பதை வெளிப்படையாக

கற்றுக் கொடுக்கும் சகோதரர்கள் உண்மையில் –
பாராட்டப்பட வேண்டியவர்கள் தானே … ???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மாறன் சகோதரர்களும், மான நஷ்ட வழக்கும்….!!!

 1. சேகர் சொல்கிறார்:

  மானம் உள்ளவங்க தான் மான நஷ்ட வழக்கு போடுவாங்க. அது இல்லாதவங்க பூச்சாண்டி காட்டுவாங்க..

 2. NS RAMAN சொல்கிறார்:

  Nice style of writing. I think your are influenced by MK’s daily statements.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அய்யோ – இல்லவே இல்லை.
   கலைஞரின் கேள்வியும் நானே -பதிலும் நானே அறிக்கைகளை பார்த்து
   நொந்து போயிருப்பவன் அல்லவா நான்….

   மிக நீண்ட காலமாக ஆசிரியர் சோ அவர்களின் எழுத்துக்களை
   வாசித்து வருவதால், அதனால் ஈர்க்கப்பட்டதால் –
   சோ அவர்களின் influence என் எழுத்துக்களில் இருக்கலாம்….!!!
   அவ்வளவே…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  // இதனால், எனக்கு – பின்விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால்,
  அவர் நிச்சயம் உதவிக்கு வருவாரென்ற நம்பிக்கையுடன்
  மறுபதிவு செய்கிறேன்….. 🙂 🙂// நம்பிக்கைதான் வாழ்க்கை … ! அய்யா …! ” எழுத்தையும் — எழுதும் ஆற்றலையும் கடவுளால் பெற்று — எழுத்தால் சிந்திப்பது — தங்களுக்கும் — படிக்கும் எங்களுக்கும் — ஒரு சுகானுபவம் “…. தொடருங்கள் … !!!
  முல்லைப்பெரியாறு — காவிரி போன்ற பிரச்சனைகளில் முனைப்புடன் செயல்பட்டு — தமிழர்களின் உரிமையை நிலைநாட்டியவரும் — ஒரு சாமானியனின் — செலவு மற்றும் — பிள்ளைகளின் படிப்புக்கு தேவையான அனைத்தையும் அரசின் மூலம் வழங்கி — அவனது பளுவை கொஞ்சமேனும் குறைத்தவரும் — இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த — முனைப்புடன் செயல் படுபவரும் — மின்சார தட்டுப்பாட்டை சீர் செய்தவரும் — நமது முதல்வர் அவர்கள் — ” பூரண நலம் பெற்று ” பணியயை தொடர பிரார்த்தனை செய்து வாழ்த்துவோம் ….!!!
  அடுத்து ஒரு செய்தி : — //தமிழகத்திற்கு எதிராக.. கர்நாடக குழுவுடன் உமாபாரதியிடம் மனு கொடுத்த திருச்சி நிர்மலா சீதாராமன்!
  Read more at: http://tamil.oneindia.com/news/india/nirmala-seetharaman-meets-umabharathi-demand-not-give-cauvery-263546.html — இவரது செயல் // பாஜகவின் பச்சோந்தித்தனத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.// என்று கூறுவது சரிதானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   சந்தேகமே இல்லாமல் – திருமதி நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல –
   ஒவ்வொரு பாஜக அரசியல்வாதியும்,
   ஒவ்வொரு காங்கிரஸ் அரசியல்வாதியும் இதே வேடம் தான்.

   மாநிலத்திற்கு ஒரு கொள்கை –
   மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு கொள்கை..
   மத்தியில் வேறு கொள்கை..
   ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு கொள்கை –
   எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதற்கு நேரெதிரான கொள்கை…

   இவர்களெல்லாம் மக்கள் சேவை செய்யவா வருகிறார்கள்…
   சுய சேவை – சுயகுடும்ப சேவை – சுயகட்சி சேவை…

   -இதுவரை இவர்களை புரிந்து கொள்ளாதவர்களுக்கு,
   இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

   முதல்வர் விரைவில் உடல்நலம் பெற நாமும் பிரார்த்திப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    இதில் திமுக, அதிமுக இரண்டும் உண்டா இல்லையா .. ஆட்சிக்கு வந்தவுடன் மணல் கொள்ளையை நிறுத்துவேன் என்று சொல்லிவிட்டு மணல் கொள்ளை ஆட்களுடன் கூட்டணி போட்டு கொள்வது !!

 4. selvarajan சொல்கிறார்:

  தற்போதைய முக்கிய செய்தியாக ” மாலைமுரசு ” தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் — அது : ஏர்செல் மேக்சிஸ் வழக்கு — மலேசியா தொழிலதிபர்கள் — திரு அனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்சல் ஆகியோருக்கு ” பிடிவாரண்ட் ” பிறப்பித்து டெல்லி சி. பி.ஐ நீதிமன்றம் உத்திரவு .. .. ! அவர்களுக்கு மட்டும் போதுமா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இவர்கள் வெளிநாட்டு பிரமுகர்கள் என்பதாலும்,
   சம்மனையே வாங்காமல் தவிர்ப்பதாலும் இந்த “தனி” ஏற்பாடு.

   மற்றவர்களும் விரைவில் உரிய முறையில்
   “கவனிக்க”படுவார்கள் என்று நம்புவோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.