இந்திய ராணுவத்தின் துணிச்சலான முயற்சி…..

saluting-the-real-heroes

யூரியில் மறைமுக தாக்குதலில் ஈடுபட்டு,
18 இந்திய ராணுவ வீரர்களை
கொன்றவர்களை தண்டிக்கும் விதமாக,

நேற்றிரவு, இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவு,
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில்,
விமானப்படையின் உதவியோடு இறங்கி, தீவிரவாதிகளின்
ஏழு முகாம்களை அழித்து விட்டு வெற்றிகரமாகத் திரும்பி இருக்கிறது.

நமது ராணுவ வீரர்களின் இந்த துணிச்சலான, வெற்றிகரமான
முயற்சிகளுக்கு நமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும்
இந்த வலைத்தள வாசக நண்பர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டைக் காக்கும் பணியில் தங்கள் உயிரைப் பணயமாக வைத்து
செயலாற்றும் ராணுவ வீரர்களுக்கு நமது சல்யூட்….!

கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் இந்தியாவுடன்
மறைமுகப்போரில் இறங்கி, தீவிரவாத கும்பல்கள் அவ்வப்போது
எல்லை தாண்டி வர அனைத்து உதவிகளையும் அளித்து –
இங்கு தொடர்ந்து அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு
காரணமாக இருக்கிறது.

எத்தனையோ முறை எச்சரிக்கப்பட்டும், பாகிஸ்தான் தன்னுடைய
போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.

நேற்றிரவு இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட
surgical strike பாகிஸ்தான் ராணுவத்தால் எப்படி
எதிர்கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும். பதிலுக்கு பாகிஸ்தானும் காஷ்மீரிலோ அல்லது
வேறு எதாவது ஒரு இடத்தில் – பஞ்சாபிலோ, ராஜஸ்தானிலோ
எல்லையை தாண்டி வந்து, பதில் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்.

ஒருவேளை இந்த மோதல்கள்
இன்னும் சில மாதங்கள் தொடரவும் கூடும்…
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய விதத்தில்
காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள்
லட்சக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளார்கள்…

குளிர்காலம் துவங்குவதால், நீண்ட நாட்களுக்கு அதிக அளவிலான
வீரர்கள் எல்லையிலேயே முகாமிட்டிருக்க வேண்டிய தேவை
இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கான தேவைகளுக்காக,
உள்துறை அமைச்சகம் லட்சக்கணக்கான sleeping bags
மற்றும் boots -களை இருப்பில் தயாராக வைத்திருக்க
உத்திரவிட்டிருப்பதாகவும், 20,000 snow suits -களும்
பெறப்பட்டிருப்பதாகவும் இன்று வெளிவந்துள்ள ஒரு தகவல்
சொல்கிறது.

காஷ்மீர் எல்லையில் குளிர்காலம் மிகக் கொடுமையானது.
இரவு பகலாக அங்கே விழித்திருந்து, நமது நாட்டைக் காக்கும்
பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவும்
உற்சாகமும் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின்
கடமையும் ஆகும்.

அந்த வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் –
நலமுடன் வாழ நாம் வாழ்த்துவோம்… வேண்டுவோம்…

இது குறித்த அனைத்துவித நடவடிக்கைகளிலும்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின்
தலைமையிலான மத்திய அரசுக்கு நமது முழு ஆதரவும்,
ஒத்துழைப்பும் நிச்சயம் உண்டு.

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இந்திய ராணுவத்தின் துணிச்சலான முயற்சி…..

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  தாமதமானாலும் வரவேற்க தக்க நடவடிக்கை. பாக்கிஸ்தான் மீண்டும் வாலாட்டதவாறு பலத்த அடி கொடுக்கப்பட வேண்டும். நமது இராணுவத்திற்கு பாராட்டுகள். ஜெய்கிந்

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  சாரே ஜஹான்சே அச்சா ஹின்தூஸ்தான் ஹமாரா!
  மா துஜே ஸலாம்!
  சில சமயங்களில் கசப்பானதாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.
  சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் விலகியது, அதனால் மாநாடே கான்ஸல் ஆனது…
  மேலும் நம் ராணுவத்தின் இந்த செயல் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய விஷயம். தேவைபட்டால் உங்க வீட்டு விஷேஷத்தில் கலந்தகொண்டு பரிசும் கொடுப்போம்…
  தவிர்க்கமுடியாத பட்சத்தில் ராணுவ நடவடிக்கையும் எடுப்போம்…
  ஒரே நொடியில் 2.1 கோடி பேரை கொல்லமுடியும் என்று கொக்கரித்தவர்க்கு நாம் செயல்பட்ட முறையால் மூஞ்சியில் ஈயாடவில்லை.
  நாம் இனி ஜாக்கிரதையாகவும் அனைத்துவிதமான நடவடிக்கைகாகவும் தயார்நிலையில் இருக்கவேண்டியது முக்கியம்.
  அதைவிட முக்கியம் சரியான தருணத்தில் சரியான முடிவை நம் தலைவர்கள் எடுத்தே ஆகவேண்டும்

 3. gopalasamy சொல்கிறார்:

  The surgical strikes are to be continued then and there as per situation. We can not expect opposition leaders support in this matter for long time . Now itself we can see the cracks.

 4. selvarajan சொல்கிறார்:

  நிறைய பேருக்கு ” சர்ஜிகள் அட்டாக் ” என்றால் என்ன என்கிற சந்தேகம் இருக்கும் –அது குறி வைத்து குறிப்பிட்ட இலக்கை மட்டும் ராணுவத்தைக் கொண்டு தாக்குவது. அதுதான் சர்ஜிகல் அட்டாக் … அதுவும் பெரும்பாலும் விமானங்களை கொண்டு தாக்குவது — பொது மக்களுக்கோ — பெரிய அளவினால் மற்ற இடங்களுக்கோ எந்த சேதமும் ஏற்படா வண்ணம் தாக்குவது — கொத்து வெடி குண்டுளை போடாமல் — தாக்குவது — இவ்வித போரில் உலகிலேயே மாபெரும் கில்லாடி ” இஸ்ரேல் ” என்பது தான் உண்மை … பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுக்கு வைத்த — ஆப்பு இது …

  சும்மா பாவ்லாகாட்டி மிரட்டிக்கொண்டு — 60 நாட்களுக்கு மேல் காஷ்மீரில் இயல்பு நிலை இல்லாமல் செய்தவர்களின் — முழு கூடாரத்தையும் காலி செய்ய வேண்டும் என்பது தான் — அனைவரின் எதிர்பார்ப்பு … அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சீனா –அமேரிக்கா போன்ற 25 – நாட்டு தூதரகங்களுக்கும் இந்த தாக்குதல் செயதியை கூறியதை வரவேற்க வேண்டும் — இது ஒரு சிறந்த நடவடிக்கை — பாராட்டுக்கள் நம் அரசுக்கும் — ராணுவத்தினருக்கும் …. !!!

 5. selvarajan சொல்கிறார்:

  // காஷ்மீர் தனிநாடாக வேண்டும்! தமிழகத்தில் உலாவரும் காணொளிப் பிரசாரம்!? // http://www.dinamani.com/editorial-articles/special-stories/2016/sep/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2572956–1.html —- அய்யா …இந்த காணொளிப் பிரசாரத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் — நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய காஷ்மீரின் வரலாறு இந்த செய்தியில் உள்ளது — இவ்வாறான ” காணொலிப் பிரசாரத்தை ” தடை செய்யப் போவது — யார் … ?

 6. Lakshmi Mohan சொல்கிறார்:

  இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ?
  முப்படை சேர்ந்தால் முழுவதும் நாசம்..
  வம்படி ஒன்றே தொழிலெனக் கருதினால்
  தம்படி இடமும் தடமின்றி போகும்

  வீரங்கொள் புதல்வர் விளைந்த நன்னாடு
  மானங்கொள் வீரர் வாழும் பொன்னாடு
  கூற்றுவனுக்கே இரை ஆகிடுனும்
  குன்றுமணி அளவும் இழந்திட மாட்டோம்!

  இந்திரா என்ற காளி தெய்வம்
  இரக்கம் கொண்டே அன்று விட்டாள்..
  இனி வரும் நாளில் செய்வோம்
  என்றும் வருந்தும்படி நின்று அடிப்போம்..

  பசியைத் தொலைத்து பனியிடை உழலும்
  ருசியாம் வெற்றியைத் சுவைத்திடக் கூடும்
  எமது இந்திய ராணுவ வீரர்கள் என்றும்
  இதய மத்தியில் வாழும் தீரர்கள்!

  -இலக்குமி மோகன்

 7. Srini சொல்கிறார்:

  innum kooda konjam nalla parati irukalam….but we are at down south…ivvalau thaan kedachutu. its ok.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.