பாஜகவும், அதன் தலைமையும் நாசமாகப் போகட்டும்…

.

.

ஏழரை கோடி தமிழர்கள் இன்று வயிறெரிந்து
சாபமிடுகிறார்கள் – இது நாள் வரை காவேரி மேலாண்மை
வாரியம் அமைக்கப்படாததற்கு காரணம், சுப்ரீம் கோர்ட்
அனுமதி கொடுக்காதது தான் என்று போலி காரணம்
கூறி வந்த பாஜக மத்திய அரசு,

இன்று காலை – உச்சநீதிமன்றத்தில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்திரவிட

சுப்ரீம் கோர்ட்டுக்கே அதிகாரம் இல்லை என்றும்,
வாரியம் அமைப்பதும், அமைக்காமல்
இருப்பதும் பாராளுமன்றத்தின் (அதாவது மத்திய பாஜக
அரசின்) விருப்பம் / உரிமை என்றும் சொல்லி தன்

அசிங்கமான சுயரூபத்தை வெளிப்படுத்திக் காட்டி விட்டது.

காவிரி தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு –

அறிவுரை/ஆலோசனை
அளவுக்கு தான் மதிப்புடையது. அதை ஏற்றுக் கொள்ள
வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு கிடையாது
என்று இன்று சுப்ரீம் கோர்ட்டில் கூறுகிறது பாஜக அரசு.

நீதி எக்கேடு கெட்டுப் போனால் என்ன ?
நியாயம் எங்கே இருந்தால் என்ன ?
அடுத்து வரும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில்
ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும்
என்கிற ஒரே நோக்கத்தில்- பதவி, அதிகார வெறியில்

அனைத்து சட்டங்களையும் தூக்கி எரிகின்ற –
உச்சநீதி மன்ற உத்திரவுகளையும் கால்களில்
போட்டு மிதிக்கின்ற கர்நாடகா அரசையும்
மிஞ்சும் விதத்தில் –

மத்திய அரசுக்கு உத்திரவிட சுப்ரீம் கோர்ட்டுக்கு
அதிகாரம் இல்லை என்று வாதிட்டிருக்கிறது.

மிகப்பெரிய ஒரு கலவரத்திற்கு மோடிஜி-பாஜக-சர்க்கார்
வித்திட்டிருக்கிறது. இது எங்கு கொண்டு போய்
விடும் என்பதை உணர்ந்தே, துணிந்து செய்யும் பாஜகவும்,
அதன் தலைமையும் நாசமாகப் போகட்டும்.

இந்த நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்
சக்தியாக பாஜக உருவாகிக் கொண்டிருக்கிறது.
இன்றைய இந்த நிலைக்கு காரணமாக இருப்பவர்களை
இயற்கை / இறை நிச்சயம் தண்டிக்கும்.

ananth-kumar

d-v-sadananda-gowda

uma-bharti-bjp

siddaramaiya

modi-gowda_

தமிழக விவசாயிகளின் வயிற்றில், வாழ்வில் –
நெருப்பை அள்ளிக் கொட்டும் இவர்கள்,
தெரிந்தே, வேண்டுமென்றே கலவரத்தை தூண்டும்
இவர்கள் – இறுதியில் எதைக் கொண்டு போவார்கள்…?
இத்தனை கோடி தமிழ் மக்களின் வயிற்றெரிச்சலை,
அதன் விளைவுகளை – மட்டும் தானே ….?

பின் குறிப்பு –
இதில் சட்டபூர்வமான நிலை என்ன
என்கிற விவரங்களை
அடுத்த இடுகையில் பார்ப்போம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to பாஜகவும், அதன் தலைமையும் நாசமாகப் போகட்டும்…

 1. Surya சொல்கிறார்:

  Politicians are always look at the vote bank ad their #1 priority. Sick of all of them!!!

 2. B.V.Subramanian சொல்கிறார்:

  பாஜக தன்னை மிக மோசமான சுயநலவாத கூட்டம் என்று
  மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
  ஊமைக் கோட்டான் என்பார்கள் – அது போல் பேசாமலே
  இருந்து முதுகில் கத்தியால் குத்தி விட்டார் குஜராத்காரர்.
  சுப்ரீம் கோர்ட் சொல்லாத வரையில் மத்திய அரசு எப்படி தலையிட
  முடியும் என்று இத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள்
  இன்று இது முற்றிலும் எங்கள் ஏரியா.இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட
  முடியாது என்கிறார்கள். செருப்படி பட்டால் தான் இவர்களுக்கு
  புத்தி வரும்.இனியும் இங்கே யாராவது பிஜேபீ என்று சொல்லிக் கொண்டு
  கிளம்பினால் மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்.

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  தமிழனுக்கு என்றால் எதுவும் செய்ய முடியாது. இங்கு இருக்கும் பி.ஜ.பி காரன் காங்கிரஸ் தண்ணீர் தரவில்லை என கூச்சல் போடுவான், ஆட்சியை கலைக்க சொல்லுவான்.

  இது வேறு பதிவு குறித்து: நீங்கள் இந்திய இராணுவத்தையும், திரு மோடி அவர்களையும் பாராட்டி விட்டீர்கள். ஆனாலும் ஒரு சந்தேகம், நமது எல்லைகோடு பதான்கோட் தாக்குதலுக்கு பிறகும் பலவீனமாகவா இருக்கிறதா ?

 4. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பாஜகவின் முகம் ‘தேசிய நலன்’ என்பதுபோல் இருந்ததனால்தான் அவர்களுக்கு காங்கிரஸைவிட மதிப்பு இருந்தது. அதைக் கெடுத்துக்கொள்வதற்காக இப்போது மத்திய அரசு இத்தகைய நிலையை எடுத்துள்ளது. நாளைக்கு, பாகிஸ்தான் அரசு தனிப்பட்ட முறையில் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுத்தால் (அல்லது சைனாவோ), எல்லைப்புறக் கோட்டை மாற்றவும் தயங்கமாட்டார்கள் போல் தெரிகிறது.

  இதற்குச் சரியான தீர்வு, நதி நீரையும், வளங்களையும் மத்திய அரசு கையகப்படுத்தி, தனிப்பட்ட ஆணையங்களின் கைகளில் ஒப்படைப்பதாகும். இது கனிம வளங்களுக்கும் பொருந்தும். (உதாரணமாக, ஒடிசாவிலிருந்து நிலக்கரி வளங்களை எடுத்து, அதனால் ஒடிசாவுக்கு 60-70 சதவிகிதத்துக்கு மேல் பயன் பெறாமல் செய்வது தவறு. இதுபோன்றே நெய்வேலி நிலக்கரி, மின்சாரமும்).

 5. ravi சொல்கிறார்:

  சாபங்களுக்கு சக்தி இருந்தால் , உலகம் தலைகீழாக மாறி இருக்கும் … ஆனந்தகுமார், கவுடா, மணல் கொள்ளை ஆறுமுகசாமி , வைகுண்டராஜன் .. சொல்வதற்கு ஒன்றும் இல்லை ..

 6. gopalasamy சொல்கிறார்:

  I never imagined that Modi would stoop to this low level . BJP and Congress will never support Tamilnadu’s cause.

 7. selvarajan சொல்கிறார்:

  வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை கூற ஒரு புராணமே இருக்கிறது — அதன் பெயர் ” துலா புராணம் ” என்பதாகும் — இவ்வாறெல்லாம்சிறப்பு பெற்ற காவிரியை தமிழ்நாட்டில் பாய்ந்தோட அனுமதிக்க தயங்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை — அனைவரும் உணர வேண்டும் …
  // கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள்….. தமிழிசை- ஹெச்.ராஜா பகிரங்க மோதல்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-comments-against-tn-cauvery-dispute-264252.html இந்த இருவரின் போக்கு — தமிழக பா.ஜ.க. வின் உச்சக் கட்ட நடிப்பு போல தோன்ற வில்லையா … அதைவிட மத்திய மந்திரிகளான —ஆனந்தகுமார், சதானந்த கௌவுடா கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்…. உமா பாரதியும் இதற்கு ஓத்தூதல் — இவைகள் அனைத்துமே மோடிக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்பதே — நிதர்சனம் — கர்னாடக காங்கிரஸ் அரசும் — மத்தியில் ஆளும் பா.ஜ .க. அரசும் கூட்டாக ” சதி செய்து விட்டார்கள் என்பதுதான் உண்மை — தமிழனுக்கு துரோகம் …. !!!

 8. selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ! // என் விருப்பம் [ 4 ] … // என்கிற இடுக்கை மறைந்து போனது எதனாலோ …. ?

 9. Karthik சொல்கிறார்:

  Dharmathin vaazhvadhanai soodhu kavvum,
  dharmam marubadiyum vellum
  marumathai nammaley ulangam karkum,
  vazhi thedi vidhi intha seygai seythaan
  karumatthai maenmelum kaanbom indru,
  kattundom poruthiruppom, kaalam maarum
  dharmathai appodhu vella kaanbom,
  dhanu undu gaandeevam athan per endran

  Manam thalara vendam…Nalla ennam ulla nammaku nalla theerpu kandipaa ullathu… nalla malai peithu namathu vivasayam inimel sellikum…yar thayavu illamal mahilchi pongum…

 10. mani சொல்கிறார்:

  In the local body elections if any members from BJP, congress or dmk come and seek for votes
  just drive them out of your house saying that we will not vote for parties which has not helped
  tamils cause. They can cheat you but you have your triumph card that is your precious vote.
  Dont waste it by voting BJP (A TRAITOR FOR TAMIL CAUSES), or cong whose govt in karnataka
  does not release our due share of water ,nor DMK FOR ALLYING WITH CONGRESS.

  • ravi சொல்கிறார்:

   Good Joke,, DMK and congress have won almost 100 seats in assembly.. infact dmk has won the maximum seats in delta districts.. its money and muscle and caste arithmetic which will work. DMK’s biggest land grabbers have won as MLA’s with huge margins..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.