திருவாளர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா – அரசியல்சட்டத்தின்படி பதவியில் நீடிக்க தகுதியற்றவர்கள் …

ananth-kumar

d-v-sadananda-gowda

மத்திய அமைச்சராக பதவியேற்கும் போது,
அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வேன்
என்று ஜனாதிபதியிடம் உறுதிமொழி அளித்து,
அதையே உரக்கப் படித்து, கையெழுத்தும் போட்டுக்
கொடுக்கும் ஒவ்வொரு நபரும் அரசியல் சட்டத்திற்கு
உடன்பட்டே எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.

மீறினால், அவர்கள் அமைச்சர் பதவியில் தொடர
அரசியல்சட்டத்தின்படியே – தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.

கர்நாடகா முதலமைச்சர் பங்களூருவில் கூட்டிய
அனைத்து கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு,
சுப்ரீம் கோர்ட் இட்ட உத்திரவை நிறைவேற்ற வேண்டாம் /
கூடாது என்று ஆலோசனை கூறிய, வற்புறுத்திய கணமே
திருவாளர்கள் அனந்தகுமாரும், சதானந்த கவுடாவும்
மத்திய அமைச்சர்களாக நீடிக்கும் தகுதியை இழந்து
விட்டவர்கள் ஆகிறார்கள்.

அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த செய்தியை,
தகுந்த ஆதாரங்களுடன், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்து, அவர்களை பதவிநீக்கம் செய்யக்கோரினால்
உடனே அவர்களின் “மாண்புமிகு” பறிக்கப்படும்.

பொதுநல நோக்குடன் யாராவது
இதைச் செய்ய முன் வந்தால் …..

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

திருவாளர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா – அரசியல்சட்டத்தின்படி பதவியில் நீடிக்க தகுதியற்றவர்கள் … க்கு 3 பதில்கள்

 1. selvarajan சொல்கிறார்:

  பதவியேற்பின் போது வாசிக்கிற — உறுதிமொழி என்பது கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு — ஒரு ” சம்பிரதாய ” நடவடிக்கை தானே .. ? அந்த உறுதிமொழிக்கு ஜீவன் என்று ஒன்று இருந்தால் இவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்வார்களா .. ? சுப்ரீம் கோர்ட்டில் இவர்களை பற்றி — இந்த செயலைப்பற்றி தாக்கல் செய்தால் — பதவி பறிபோகும் … ? அதிலும் ஏதாவது ஓட்டை இருந்தால் அதன் வழியே வெளியே வர — முயற்சிக்கும் — நரிக் கூட்டம் அல்லவா இவர்கள் … ? உச்ச நீதிமன்ற காவிரி தீர்ப்பே தப்பானது என்று கூக்குரல் இடுகின்கின்ற பதவி வெறிப் பிடித்த மத்திய அரசும் — அதையே கைக்கொள்ளும் கர்நாடக முதல்வரும் — ரொம்பத்தான் — உச்ச நீதிமன்றத்துக்கு — சட்டத்திற்கு மரியாதைக்கு கொடுத்து — தலை வணங்குகிறார்களோ … ? // காவிரி மேலாண்மை வாரியம்… உச்ச நீதிமன்ற உத்தரவே தப்பு! – சொல்கிறார் சித்தராமய்யா //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sidharamayya-blame-supreme-court-s-order-set-up-cmb-264285.html — மத்திய அரசின் அந்தபால்டியின் காரணமாக — என்ன திமிராக பேசுகிறார் – ராமைய்யா … ?

 2. r.sundararaman சொல்கிறார்:

  Vinaasakaale vibareetha buddhi .The misrule will come to an end and pray the gang never again comes to poer.

 3. mani சொல்கிறார்:

  தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை மோதி அவர்கள் மறந்துவிட்டாரா ?
  கர்நாடகத்தில் அடுத்து ஆட்சி பிஜேபி அமைக்க காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டை
  காவு கொடுத்துவிட்டார். தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு செல்லாக்காசு என்பதால்
  அப்படி செய்கிறார் என்றாலும் அவர் ஒரு நாட்டின் பிரதமர் என்பதை மறந்துவிட்டார் .
  விதவிதமான உடைகளை அணிந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து
  காலத்தை கழிக்கும் இவரை எப்படி 2019 வரை சகித்துக்கொள்வது.?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s