காவிரியில் மத்திய அரசின் ” பல்டி ” – சட்டம் என்ன சொல்கிறது ..? (பகுதி-1)

supreme_court_2219033f

காவிரியில் மத்திய அரசின் ” பல்டி ” –
சட்டம் என்ன சொல்கிறது ..? (பகுதி-1)

மத்திய அரசு மிகுந்த புத்திசாலித்தனமாக நடந்து
கொள்வதாக நினைத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைக்கும்படி தனக்கு உத்திரவு இட சுப்ரீம் கோர்ட்டிற்கு
அதிகாரம் கிடையாது என்று திடீரென்று,
தலைகீழாக ( U turn…! ) வாதிட ஆரம்பித்திருக்கிறது.

( ஒரு கார்பரேஷன் கவுன்சிலரை கூட
தேர்ந்தெடுத்து உதவாத தமிழ்நாட்டுக்கு ஏன் உதவ
வேண்டும்… !!! கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்படுவதாக
காட்டிக் கொண்டால், தன் செல்வாக்க்கை பெருக்கி,
வரவிருக்கும் கர்நாடகா தேர்தலில் ஆட்சியை பிடிக்க
பாஜக திட்டம் போடுகிறது என்கிற விஷயம்
வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே….)

இன்று மதியம் 2 மணிக்கு மேல் இந்த வழக்கு
சுப்ரீம் கோர்ட் முன்பு விசாரணைக்கு வருகிறது.
விசாரணை துவங்கும் முன்பாகவே, நமது வாசக
நண்பர்கள், இது குறித்த சட்ட விவரங்களை தெரிந்து
கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த
இடுகையை எழுத முற்படுகிறேன்.

இது இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக நீடிக்கக்கூடும்.
ஆனால், மதியம் வழக்கு துவங்குவதற்கு
முன்பாக அனைத்து பகுதிகளையும் எழுதி பதிப்பித்து
விட முயற்சி செய்கிறேன்….

——————————————

The Interstate River Water Disputes Act, 1956 (IRWD Act)
என்கிற சட்டம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
மாநிலங்களுக்கிடையே, ஓடும் நதிகள் சம்பந்தப்பட்ட
பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பொருட்டு,

அரசியல் சட்ட விதி -262 ன் கீழ் இந்திய பாராளுமன்றத்தால்
பிறப்பிக்கப்பட்ட ஒரு சட்டம்.

அரசியல் சட்ட விதி 262 சொல்வதாவது –

Article 262 of the Constitution of India –

– Adjudication of disputes relating to waters of inter State
rivers or river valleys –

(1) Parliament may by law provide for the adjudication of
any dispute or complaint with respect to the use,
distribution or control of the waters of, or in,
any inter State river or river valley

இந்த அரசியல் சட்டவிதியின்படி உருவாக்கப்பட்ட
சட்டம் தான் –

The Interstate River Water Disputes Act, 1956 (IRWD Act)
(பின்னர், 2002-ல் இந்த சட்டத்திற்கு
சில திருத்தங்களும் செய்யப்பட்டன.)

இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் –
கர்நாடகா, தமிழ்நாடு,கேரளா, மற்றும் புதுச்சேரி
மாநிலங்களிடையே காவிரி நீரை பயன்படுத்துவது
குறித்த விவகாரங்களை விவரமாக விசாரித்து,
ஆராய்ந்து, தீர்ப்பளிக்க மத்திய அரசால்,
காவிரி நதிநீர் நடுவர் ஆணையம் -1990- ஆம் ஆண்டு
( The Cauvery Water Disputes Tribunal ) அமைக்கப்பட்டது.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய –
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின்
குறிப்புகள் கீழே –

————-

Cauvery Water Disputes

Progress in Adjudication of the Dispute before the CWDT

The Cauvery Water Disputes Tribunal (CWDT) was constituted
by the Government of India on 2nd June 1990 to adjudicate the
water dispute regarding inter-state river Cauvery and the river
valley thereof.

The Tribunal had also passed an Interim Order in June, 1991
and further Clarificatory Orders on the Interim Order in April, 1992 and December, 1995.

The Cauvery Water Disputes Tribunal has submitted its reports
and decision under Section 5 (2) of Inter-State River Water
Disputes Act, 1956 to Government on 5th February, 2007.

The party states and the Central Govt. have sought clarification
and guidelines under Section 5(3) of the Act. The terms of
the tribunal has been extended upto 2.11.08 as per provisions of

ISRWD Act, 1956. Further, the party states have also filled
SLPs in the Hon’ble Supreme Court against Cauvery tribunals
report and Hon’ble Supreme Court has granted leave.
The matter was last heard by Hon’ble Supreme Court on 29.7.08
and the Hon’ble court passed the order that the matter maybe
listed before a three Judge bench in Nov, 2008.

——————

இப்படி அமைக்கப்பட்ட காவேரி நதிநீர் ஆணையம்
தனது இறுதித் தீர்ப்பை 5th February, 2007 அன்று
மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த கட்ட
நடைமுறையான அரசு அறிவிப்பில் ( gazette notification)
அதிகாரபூர்வமாகவ் வெளியிடப்படாததால்,
மேலும் விவகாரம் நீடித்துக்கொண்டே போனது….

கர்நாடகா அரசு, மத்திய அரசால், அரசிதழில்
வெளியிடப்படாத வரை தீர்ப்பு அமலுக்கு வரவில்லை
என்றே சொல்லி வந்தது.

காங்கிரஸ், திமுக கூட்டணி தான் மத்தியில் ஆட்சியில்
இருந்தது. இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு விடிவு
வரவில்லை.

மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு,
ஜெயலலிதா அரசு சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்து
ஒரு வழக்கை தொடர்ந்து, ஆணையத்தின் தீர்ப்பை
மத்திய அரசு கெசட் பதிவாக வெளியிட வேண்டுமென்று
ஒரு ஆணையை பிறப்பித்தது.
அதன் பிறகே மத்திய அரசு, வேறு வழியின்றி,
2013-ஆம் ஆண்டில், ( ஆறு ஆண்டு கால தாமதத்திற்கு
பிறகு ) கெசட் பதிவை வெளியிட்டது.

இது விஷயத்தில் Inter-State River Water
Disputes Act, 1956 என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?

——————-

Publication of Decision of Tribunal

The Central Government shall publish the decision of the
Tribunal in the Official Gazette and the decision shall be final
and binding on the parties to the dispute and shall be given
effect to by them.

The decision of the Tribunal, after its publication in the
Official Gazette by the Central Government under
sub-section (1) , shall have the same force as an order or
decree of the Supreme Court.

——————————–

அதாவது, ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு,
மத்திய அரசின், அரசு பதிவிதழில் ( gazette notification )
பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை
Inter-State River Water Disputes Act வலியுறுத்துகிறது.

அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட
நாளிலிருந்து, அந்த தீர்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து
மாநிலங்களையும் கட்டுப்படுத்தும்.

அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து –

அந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் அளிக்கும் ஒரு
ஆணைக்கு சமமான ஒரு அந்தஸ்து -மதிப்பு –
உருவாகும். அதாவது தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின்
தீர்ப்புக்கு இணையான மதிப்பை பெறுகிறது.

( சுப்ரீம் கோர்ட்டிற்கு குறைவான அதிகாரம் உடைய
எந்த அமைப்பும் அதில் கையை வைக்க முடியாது.
மத்திய அரசே நினைத்தாலும் கூட,
கவுடாக்களோ, அனந்தகுமார்களோ,
தலைகீழாக நின்றாலும் கூட மாற்ற முடியாது…..!!!
கொடுக்கப்பட்ட தீர்ப்பு / பங்கீடு மாற்ற முடியாதது…!

இவர்களால் முடிந்தது – இழுத்தடிக்கலாம் –
அடுத்த தேர்தல் வரை இழுத்தடிக்கலாம்….
அதைத்தான் முயற்சிக்கிறார்கள். )

முதலில் சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 18ந்தேதி,
4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை ஆணையம்
அமைக்கப்பட வேண்டுமென்று உத்திரவு போட்டது.
மத்திய அரசு, கோர்ட்டில் இதை ஏற்றுக் கொண்டது.

மத்திய நீர் மேலாண்மை வாரியத்தின் செயலாளர்
திரு சசி சேகர் அவர்கள், செய்தி நிறுவனங்களிடையே
மேலாண்மை வாரியம் அமைக்கின்ற பணியை
மத்திய அரசு துவக்கி விட்டது என்றும் கூறினார்.

பின்னர், கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் விடாமல்
பிரச்சினை செய்தபோது, சுப்ரீம் கோர்ட் பிரச்சினையை
தீர்க்க ஒரே வழியாக, 4 நாட்களுக்குள்ளாக காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்திரவிட்டது.

பின்னர் – 30ந்தேதி தான் மத்திய அரசு போட்டது
உல்டா பல்டி. முன்னாள் பிரதமர் தேவே கவுடா அவர்கள்
புரட்டாசி சனிக்கிழமை ஒரு வேளை உபவாசம்
(உண்ணா விரதம்…? ) இருந்ததும்,
இன்னாள் பிரதமர் அவருடன் தொலையிலிருந்து பேசி
-கவலை வேண்டாம் – மத்திய அரசு கர்நாடகாவுக்கு
சாதகமாகவே செயல்படும் என்று சொன்னதும் நிகழ்ந்தன.

மத்திய அரசின் இந்த புதிய முயற்சி பலிக்குமா…?

எனக்கு தெரிகின்ற வரை, எத்தனை தான் திறமையாக
பல்டி அடித்தாலும், மூக்கு உடையக்கூடுமே
தவிர, சுப்ரீம் கோர்ட் தன் நிலையில் உறுதியாக
இருக்குமென்று தான் தோன்றுகிறது.

சட்ட நிலை நமக்கு இதில் எவ்வாறு உதவும்…?
இது குறித்த சட்ட விதிகள் என்ன சொல்கின்றன…?

——————————————————————-
( அடுத்து பகுதி-2-ல் தொடர்கிறேனே…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to காவிரியில் மத்திய அரசின் ” பல்டி ” – சட்டம் என்ன சொல்கிறது ..? (பகுதி-1)

 1. Surya சொல்கிறார்:

  You hit the nail. The central govt will try to delay this issue by an year stating all possible reasons until next year for the election.

  The water will be released this year, as already enough stunt done by the KN congress govt in front of people. The only question is, can Supreme court hold the Central govt’s neck and get the formation done faster. Somehow the politicians are smarter to propagate the Supreme court is nothing, whether it is related to Cauvery water verdict or BCCI Lodha’s recommendation!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சாயம் வெளுக்கிறது –
   பாஜக + ஜனதா தள் கூட்டு சதியை
   விளக்குகிறது இந்த செய்தி –

   ( http://tamil.oneindia.com/news/india/the-karnataka-house-thanks-narendra-modi-deva-gowda-264235.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk )

   அருமையான பல்டி..
   பிரதமர் மோடிக்கு கட்சி வேறுபாடின்றி
   நன்றி சொன்ன கர்நாடக சட்டசபை
   By: Veera Kumar Published: Monday,
   October 3, 2016, 12:28 [IST] பெங்களூர்:

   காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக
   அமைக்க முடியாது என சுப்ரீம்கோர்ட்டில் மத்திய
   அரசின் அட்வகேட் ஜெனரல் கூறியிருக்கும் நிலையில், கர்நாடக சட்டசபையில் பிரதமர் மோடிக்கும், காவிரிக்காக உண்ணா விரதம் இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

   காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க கர்நாடக
   ஒருநாள் அவசர சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபை கூடியதும், எழுந்த எதிர்க்கட்சி தலைவர்
   ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக), கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது.

   காவிரி மேலாண்மை வாரியத்தை துரித கதியில்
   அமைக்க முடியாது என மத்திய அரசின் அட்வகேட்
   ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
   கர்நாடகாவின் தலை மீது தொங்கிக் கொண்டிருந்த
   கத்தி தற்காலிகமாக அகன்றுள்ளது. இதற்காக பிரதமர்
   நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
   என்றார்.

   அப்போது மதசார்பற்ற ஜனதாதள உறுப்பினர் தத்தா
   எழுந்து, மத்திய அரசு இரு நாட்களில் தனது முடிவை மாற்றிக்கொள்ள ஏதோ ஒரு அழுத்தம் போயிருக்க வேண்டுமல்லவா.. அந்த அழுத்தத்தை கொடுத்தது தேவகவுடாவின் உண்ணாவிரதம்தான் என்றார்.

   – பிரதமர் மோடியின் தலையீடு இன்றி அட்வகேட்
   ஜெனரல் இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய முடியாது என்பதை உணர்கிறோம். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

   தேவகவுடாவையும் ம.ஜ.த கட்சிக்குள் ஒடுக்க வேண்டாம். அவர் கர்நாடகாவின் சொத்து. அவருக்கும் நன்றி” என்றார்.

   இதை அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேஜையை
   தட்டி வரவேற்றனர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா பேசுகையில், கர்நாடக அரசும் உரிய நெருக்கடிகளை கொடுத்தது. இதற்கு மத்திய அரசு ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியே என்றார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.