(பகுதி-2) காவிரியில் மத்திய அரசின் நிலை – சட்டம் என்ன சொல்கிறது ..?

.

.

மத்திய அரசு நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்
முன்பாக வைத்த புதிய வாதம் –

1) காவேரி ட்ரைபியூனல் கொடுத்திருப்பது வெறும்
பரிந்துரை (recommendation) தான். உத்திரவு அல்ல.
அதை ஏற்பதா, வேண்டாமா என்று தீர்மானிப்பது
முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை.

2) காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது
பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயம்.
அதில் தலையிட்டு, மத்திய அரசுக்கு
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உத்திரவிட
சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை.

இதில் முதலில், முதல் வாதத்தை பார்ப்போம் –

இந்த விஷயம் குறித்து
Inter – State River Water Disputes Act 1956
கீழ்க்கண்டவாறு கூறுகிறது –

——————————-

Power to make schemes
to implement decisions of tribunal

1. Without prejudice to the provisions of section 6,

the Central Government may, by notification in the
Official Gazette, frame a scheme or schemes whereby
provision may be made for all matters necessary to
give effect to the decision of a Tribunal.

2. A scheme framed under sub-section (1)
may provide for-

the establishment of any authority (whether described
as such or as a committee or other body) for the
implementation of the decision or directions of the Tribunal;

the composition, jurisdiction, powers and functions
of the authority, term of office and other conditions of
service of, the procedure to be follow-by,
and the manner of filling vacancies among,
the members of the authority;
the holding of a minimum number of meetings of
the authority every year, the quorum for such meetings
and the procedure thereat;

the appointment of any standing, ad hoc or other c
ommittees by the authority;
the employment of a Secretary and other staff by
the authority, the pay and allowances and other conditions
of service of such staff;

the constitution of a fund by the authority,
the amounts that may be credited to such fund and t
he expenses to which the fund may be applied;
the form and the manner in which accounts shall be
kept by the authority;

the submission of an annual report by the authority
of its activities.
the decisions of the authority which shall be
subject to review;
the constitution of a committee for making
such review and the procedure to be followed by
such committee; and
any other matter which may be necessary or
proper for the effective implementation of the decision
or directions of the Tribunal.

———————————————

முதல் விஷயம் – மத்திய அரசின் அரசிதழில்
(gazette notification of govt. of india ) ட்ரைபியூனல்
கொடுக்கும் தீர்ப்பை வெளியிட்ட தினத்திலிருந்தே –

அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்பது
சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு
அரசியல் சட்டம் போட்டிருக்கும் உத்திரவு.

( இதில் எதாவது மாற்றம் செய்ய வேண்டி
விண்ணப்பிப்பதாக இருந்தால் கூட, முதலில்
தீர்ப்பை நடைமுறையில் அமல்படுத்திய பிறகு தான்
மாற்றத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும்
என்பது சட்ட நிலை. )

The Central Government shall publish the decision of the
Tribunal in the Official Gazette and the decision shall be final
and binding on the parties to the dispute and shall be given
effect to by them.

” (2) The decision of the Tribunal, after its publication in the
Official Gazette by the Central Government under
sub- section (1), shall have the same force as an order or
decree of the Supreme Court.”.

இந்த உத்திரவு சுப்ரீம் கோர்ட்டில் இடப்படும் ஆணைக்கு
இணையானது என்பதால், இதனைப் பற்றிய எந்தவித
மறுபரிசீலனையும் செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கே
அதிகாரம் உண்டு.

எனவே, ஆண்டுக்கு இத்தனை டிஎம்சி தண்ணீர்
கொடுக்க வேண்டும் என்கிற உத்திரவை கர்நாடகாவோ,
மத்திய அரசோ மாற்றவே முடியாது.

அடுத்து இரண்டாவது வாதமான, பாராளுமன்றத்திற்கே
(அதாவது மத்திய அரசுக்கே) காவிரி மேலாண்மை வாரியம்
அமைப்பது சம்பந்தமான உரிமை உண்டு என்றும்
சுப்ரீம் கோர்ட் இதில் தலையிட்டு உத்திரவு போட
முடியாது என்கிற வாதத்திற்கு –
கீழ்க்கண்ட விதிகள் விளக்கம் அளிக்கின்றன –

1. Without prejudice to the provisions of section 6, the Central
Government may, by notification in the Official Gazette,
frame a scheme or schemes whereby provision may be made
for all matters necessary to give effect to the decision of
a Tribunal.

(2002-ல் திருத்தப்பட்ட நதிநீர் சட்ட திருத்த விதிகளின்படி,
இந்த விஷயம் பாராளுமன்றத்திற்கு போக வேண்டும்
என்கிற அவசியம் இல்லை.
மத்திய அரசு ஒரு gazette notification மூலம் இதனை
அறிவித்து விடலாம்.)

ட்ரைபியூனல் கொடுத்தது பரிந்துரை தான் –
உத்திரவு அல்ல என்கிற வாதத்தை சரியென்றே
வைத்துக் கொண்டாலும் கூட,

காவிரி ட்ரைபியூனலின் தீர்ப்பை அமல்படுத்தும்
வழிமுறைகளை மேலே rule 2-வில் சொல்லி இருக்கிற
விதிகளின் கீழ் – ஏற்கெனவே மத்திய அரசு
gazette notification மூலம் அறிவித்திருக்க வேண்டும்.

2007-ல் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் மீது எந்தவித
நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஒரு பக்கம்

என்றால், 2013-ல் சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்திரவின்
பேரில் gazette notification செய்த பிறகு கூட
அந்த தீர்ப்பை அமல்படுத்தும் வழிமுறைகளை
மத்திய அரசு இன்னமும் அறிவிக்காமல் இருப்பது ஏன்…?

ட்ரைபியூனல் சொன்ன மாதிரி இல்லாவிடினும்,
தானாகவேயாவது மத்திய அரசு ஒரு ஒழுங்குமுறை
நிர்வாக ஆணையத்தை நியமித்திருக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் நிச்சயமாக இந்த கேள்வியை
மத்திய அரசிடம் எழுப்பும் என்று எதிர்பார்க்கலாம்….

1) தீர்ப்பு அளிக்கப்பட்டு இவ்வளவு ஆண்டுகள்
ஆனபின்பும் கர்நாடகா தானாக இதுவரை அதனை
அமல்படுத்தவில்லை.

2) அதை அமல்படுத்த மத்திய அரசு இதுவரை
என்ன நடவடிக்கைகளை எடுத்தது..?

3) இனி என்ன செய்ய உத்தேசித்திருக்கிறது…?

மீண்டும், நீர் வரத்து, இருப்பு, பங்கீடு போன்றவைகளை
ஆராய்ச்சி செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.
தீர்ப்பை அமல்படுத்த ஒரு செயல் திட்டம் தேவை –
அதற்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது ?

இதையே சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தும் என்று
எதிர்பார்க்கலாம். மத்திய அரசின் விளக்கம் திருப்தியாக
இல்லையெனில், சுப்ரீம் கோர்ட்டே உரிய உத்திரவுகளை
பிறப்பிக்ககூடும்.

(தொடர்கிறது – பகுதி-3-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to (பகுதி-2) காவிரியில் மத்திய அரசின் நிலை – சட்டம் என்ன சொல்கிறது ..?

  1. gopalasamy சொல்கிறார்:

    I am fed up. What is the uses of talking about laws and rules, when no authority is ready to implement it ? Whether state units of BJP and Congress are ready to give any shock to their high command ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.