இன்னும் எத்தனை நாட்கள் இழுத்தடிக்க முடியும்…? ( சட்டம் என்ன சொல்கிறது பகுதி-3 ..)

cauvery-water

04/10/2016 அன்று சுப்ரீம் கோர்ட் முன்பாக மத்திய அரசு,
ஏற்கெனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
வேண்டுமென்று தொடுக்கப்பட்டுள்ள ஒரு வழக்கு
18/10/2016 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு
முன்பாக விசாரணைக்கு வரவிருப்பதால்,
2 ஜட்ஜ்களைக் கொண்ட இந்த அமர்வு இதை
விசாரிக்கக்கூடாது என்று வாதித்திருக்கிறது.

மத்திய அரசின் வாதத்தில் ஓரளவு நியாயம்
இருக்கிறது என்று ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்
வழக்கை 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.
4-ந்தேதிக்கு முன்பாக காவேரி மேலாண்மை வாரியம்
அமைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு தாங்கள்
இட்ட உத்திரவையும் தற்காலிகமாக நிறுத்தி
வைத்திருக்கின்றனர். ( ரத்து செய்யவில்லை…)

மத்திய அரசு துணிந்து விட்டது…
முழுக்க நனைந்தவருக்கு முக்காடு ஏதுக்கு என்பது போல,
இவ்வளவு நாட்கள் மவுனமாக செய்ததை இப்போது
வெளிப்படையாகவே செய்கிறது. மேலாண்மை
வாரியத்தை அமைக்க மறுக்கிறது.

மறுக்கட்டுமே…
ஆனால், சட்டப்படி, எதாவது ஒருவகை நிர்வாக அமைப்பை
அமைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது
மத்திய அரசு. அதனை எந்த பெயரில் வேண்டுமானாலும்
அமைக்கட்டுமே… நமக்கு வேண்டியது – தீர்ப்பை
அமல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு – அவ்வளவே..!

மத்திய அரசும், கர்நாடக அரசுமாக கூட்டு சேர்ந்து கொண்டு இந்த
விஷயத்தை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ
அவ்வளவு தூரம் இழுத்தடிக்கப் போகின்றன
என்பது தெளிவாகிறது.

பார்ப்போம் – இந்த நாடகம்
எத்தனை நாளைக்கு என்று…!
நமக்கும் வேளை வரும் – காத்திருப்போம்.

காவிரி நதிநீர் ஆணைய தீர்ப்பு ( Cauvery Water Disputes
Tribunal Award (CWDT) – என்கிற தமிழகத்தை
காக்கும் கவசம் இருக்கும் வரை நாம் பயப்படத் தேவை இல்லை.

கர்நாடகா காங்கிரஸ் அரசும், கவுடாக்களும்,
அனந்தகுமார்களும், ஏன் பாஜக பிரதமரும் முயன்றாலும்
கூட, நமக்கு தீங்கு நேராமல் நம்மைக் காக்கும்,
என்றும் காக்கப் போகும் கவசம் இந்த ஆணைய
தீர்ப்பு தான்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் – அவர்களின் சூழ்ச்சிகளால்
தாமதிக்கத்தான் முடியும் – தடுக்க முடியாது…!

2007-லேயே தரப்பட்டு விட்ட இந்த தீர்ப்பை,
அரசுப் பதிவில் வெளியிடாமல், ஒளித்துவைத்து,
2013 வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கண்ணாமூச்சி
ஆடியது மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
( ஆம் – திமுகவும் உள்ளடங்கிய கூட்டணி அரசு தான்…)

இன்றைக்கு தமிழக எம்.பி.க்களை ராஜினாமா
செய்யச்சொல்லும் திரு.மு.க.ஸ்டாலினும் அன்று
காங்கிரஸ் கட்சியின் சதிக்கு உடந்தையாகத் தானே
இருந்தார்…?

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, சட்டபூர்வமான
அணுகுமுறைகளாலும், தனது விடாமுயற்சியாலும்,
2013-ஆம் ஆண்டில், சுப்ரீம் கோர்ட்டிலிருந்து உத்திரவு
பெற்று, மத்திய அரசை இந்த தீர்ப்பினை gazette -ல்
பதிந்து வெளியிடச் செய்தார் தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள்.

கெசட்டில் வெளியான அன்றிலிருந்தே இந்த உத்திரவுகள்
அமலுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

கடைபிடிக்கிறார்களோ இல்லையோ –
உத்திரவு என்று ஒன்று நம் கையில் இருந்தால் தானே,
மேற்கொண்டு போராடி அமல்படுத்த வைக்க முடியும்…?

2013-ல் மத்திய அரசு வெளியிட்ட காவிரி நதிநீர்
ஆணையத்தின் தீர்ப்பு அடங்கிய கெசட்டின் நகல் கீழே
பதியப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு ஆண்டிற்கு
195 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்
என்றும், அது எந்தெந்த மாதங்களில் எந்தெந்த அளவில்
விடப்பட வேண்டுமென்றும், இதில் விவரமாக
சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

ஜூன் மாதத்தில் துவங்கும் நீர் ஆண்டில்,
ஒவ்வொரு மாதமும் 10 முறை அணையை திறந்து
நீர் விட வேண்டும் – அதாவது 3 நாட்களுக்கு ஒரு முறை
கர்நாடகா அணைகளில் இருக்கின்ற நீரை, தீர்ப்பாணையம்
அளித்திருக்கிற விகிதாச்சாரப்படி பிரித்தளிக்க வேண்டும்.

அதைச் செய்யாமல், கர்நாடகா மழைக்காலங்களில்
நீரை தங்கள் அணைகளில் சேமித்து வைத்துக்கொண்டு, தங்கள் விவசாய, பாசன, குடிநீர் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்துகொண்டு,
அதற்கு மேலும் அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டும், நீரை
திறந்து விடுவது என்று வழக்கம் வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த அட்டூழியங்களிலிருந்து உடனே விடிவு பெறக்கூடிய
வழி எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை.
இந்த ஆண்டு பாசனம் இனி முழுக்க முழுக்க இயற்கையின்
கருணையை பொறுத்தே இருக்கிறது.

இருந்தாலும் – மனம் தளராமல்,
மத்திய அரசை நம்பாமல் –

சட்டத்தின் துணை கொண்டு தொடர்ந்து போராடி
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய
அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

கீழே –
Govt. of India Gazette Notification –

gaz-1a

.

gaz-2a

.

gaz-3a

.

gaz-4a

.

gaz-5a

.

gaz-6a

.

gaz-7a

.

gaz-8a

.

gaz-9a

.

gaz-10a

.

gaz-11a

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

இன்னும் எத்தனை நாட்கள் இழுத்தடிக்க முடியும்…? ( சட்டம் என்ன சொல்கிறது பகுதி-3 ..) க்கு 6 பதில்கள்

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இன்றைய தினமணி ” தலையங்கத்தில் ” பல கேள்விகளை கேட்டுள்ள போதிலும் — அதில் குறிப்பாக — // காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய மத்திய அரசோ, கடந்த 10 ஆண்டுகளாகக் காலம் கடத்திவருகிறது.
  அதுமட்டுமல்ல, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் பரிந்துரை மட்டுமே. இதனை ஏற்பதும், ஏற்காததும் மத்திய அரசின் விருப்புரிமை சார்ந்தது” என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைவிட, நேரடியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடத் தேவையில்லை என்றே மத்திய அரசு சொல்லியிருக்கலாம். காவிரியில் தமிழ்நாட்டுக்கு பங்கு கிடையாது என்றும் கூறியிருக்கலாம். கர்நாடகம் எந்தெந்த வாதங்களை முன் வைக்கிறதோ அதே வாதங்களை மத்திய அரசும் முன்மொழியுமேயானால், இறையாண்மை என்பதற்கு என்னதான் அர்த்தம்? // என்ற கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார் …. ?http://www.dinamani.com/editorial/2016/oct/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2576075.html?pm=340 — அதுமட்டுமல்ல கர்நாடகத்தின் கூக்குரலான // “மன காவிரி’ என்கிற கர்நாடகம்,
  காவிரி நதியை சுருட்டி வைத்துக்கொள்ள முடியுமானால் அதையும் மத்திய அரசு அனுமதிக்கும். அப்படித்தான் மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது. // —-என்கிற வார்த்தைகள் உற்று நோக்க வைப்பதோடு — அவ்வாறு காவிரியை அவர்களின் மாநிலத்திற்குள்ளேயே ” அடக்கிக் கொண்டு ” விடுவார்களோ … ?
  முத்தாய்ப்பாக தலையங்கத்தின் முடிவு வரிகள் –செம சாட்டையடி : — // காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி வெறும் கானல்நீர்தான். நடைமுறைக்கு வரவே வராது. மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கும் மாபெரும் துரோகம் இது. காலத்தால் மறையாத வடுவாக இது தமிழர் மனங்களில் நீடித்திருக்கும். அப்படி நீடித்திருக்கும்வரை “இந்தியன்’ என்கிற பெருமிதத்துடன் தமிழன் இந்திய தேசத்துடன் ஒன்றமாட்டான்! // — என்பது உண்மையாகி விடுமோ … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை தான் செல்வராஜன்.

   நாம் இந்த வலைத்தளத்தில் சொல்லும்
   கருத்துக்களை இன்னும் வலிமையோடும்,
   பரவலாகச் சென்றடையும் விதத்திலும்
   சொல்கிறது தினமணி.

   நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. r.sundararaman சொல்கிறார்:

  Whenever justice is suppressed by selfish goons God will do his part and the total destruction of the betrayers of justice is going to be certain .Nature may erupt by any establish means and justice will prevail.

 3. Prabhu Tee சொல்கிறார்:

  இன்னும் எத்தனை நாட்கள் இழுத்தடிக்க முடியும்? – Apollo Hospital. Expecting a treatise from you on this subject since you like our honourable CM very much. Your perspective is much awaited. THanks.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிரபு,

   நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை…
   தயவு செய்து சொல்ல விரும்புவதை தெளிவாகச் சொல்லவும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Prabhu Tee சொல்கிறார்:

  Sir….would like to see your take on the health condition of our honourable CM and the sociopolitical ramifications of that….I feel things are dragged at this point…thats what I meant…Thank you sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s