தமிழகத்தில் ஜனாதிபதி (பாஜக)ஆட்சியை கொண்டு வர சு.சுவாமி தீவிர முயற்சி…. திமுகவும் ஒத்துழைக்கிறது….!

dr-swamy

தமிழ் நாட்டில் சட்டமன்றத்தை 6 மாதங்களுக்கு
தற்காலிகமாக சஸ்பெண்டு செய்து விட்டு, ஜனாதிபதி
ஆட்சியை –

(அதாவது மறைமுகமாக பாஜக ஆட்சியை )

கொண்டு வர திருவாளர் சுப்ரமணியன் சுவாமி
வெகு தீவிரமாக முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.
இந்த முயற்சிக்கு திமுகவின் ஆதரவை அவர் பெற்று
விட்டதாகவும் தெரிகிறது.

karuna_

இன்று, வரிசையாக அவர் வெளியிடும் ட்விட்டர்
செய்திகள் அவரது இந்த முயற்சியை வெளிப்படையாகவே
தெரிவிக்கின்றன …

ss-2

ss-3

ss-1

ss-4

அப்போல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட – முதலமைச்சரின் தற்போதைய உடல்நிலை,
மற்றும் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றிய அறிக்கை கீழே –

(மருத்துவ அறிக்கை மீடியாவிற்கு கொடுக்கப்படும் முன்னரே
சு.சுவாமிக்கு கிடைத்திருக்கிறது…..
எய்ம்ஸ் மருத்துவர்களை அப்போல்லோவிற்கு யார்
அனுப்பினார்கள்…? மத்திய அரசா …?
அனுப்பும்படி யார் கேட்டார்கள் ..? )

appollo-1

apollo-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to தமிழகத்தில் ஜனாதிபதி (பாஜக)ஆட்சியை கொண்டு வர சு.சுவாமி தீவிர முயற்சி…. திமுகவும் ஒத்துழைக்கிறது….!

 1. B.V.Subramanian சொல்கிறார்:

  நீங்கள் முன்பே சொன்னது போல் இவர்கள்
  கழுகுகள் இல்லை
  பிணம் தின்னிக் கழுகுகள் .
  மக்களின் ஆதரவை நேரடியாக பெற முடியாதவர்கள்
  எப்படியாவது நாற்காலியை பிடிக்க வேண்டுமென்று
  அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  போராட்டம் பல இடங்களில் வெடிக்கும்.. சட்டம் ஒழங்கு மோசமாகும். எம்.ஜி.ஆர் காலத்தை போல திரும்பவும் தேர்தல் வரும்போது ப.ஜ.க& தி.மு.க இரண்டும் மண்ணை கவ்வும்.

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  s.swamy&D.M.K.”s very bad,unethical strategy

 4. R KARTHIK சொல்கிறார்:

  தெய்வம் நின்று கொல்லும்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இத்தகைய முயற்சிகளை முறியடிக்க,
  உடனடியாக ஒரு காரியம் செய்யப்பட வேண்டும்.
  தமிழக சட்டமன்ற அதிமுக குழுவின் கூட்டமும்,
  கேபினட் கூட்டமும் உடனடியாக கூட்டப்பட்டு,

  முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பெற்று,
  பணிகளைச் செய்யும் நிலை நிலை வரும் வரையில்,
  அவரது அரசு பொறுப்புகளை, மூத்த அமைச்சர்கள்
  யாராவது ( பெயரை முன் மொழிந்து, வழிமொழிந்து )
  கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்வார்கள் என்று
  ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

  இந்த தீர்மானம் (மொத்த அமைச்சர்களுமாய் சேர்ந்து போய்)
  ஆளுநரிடம் கொடுக்கப்பட்டு, இது அரசு உத்திரவாக
  ஆளுநரால் அறிவிக்கப்படச் செய்ய வேண்டும்.

  முதல்வர் ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லாததால்,
  அரசுப்பணிகள் பாதிக்கப்படுகின்றன அல்லது சட்டபூர்வ அந்தஸ்து
  இல்லாதவர்களால், அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்கிற
  குற்றச்சாட்டுக்களை இது உடைத்தெரியும்.

  மனசாட்சி இல்லாமல் ஆட்சி வெறி பிடித்து அலையும்
  திமுக மற்றும் பாஜக வினரை –
  நண்பர் கார்த்திக் சொன்னது போல் “தெய்வம் பார்த்துக் கொள்ளும்…”

  என்ன – மிஞ்சி மிஞ்சிப் போனால், இன்னும் ஒரு மாதம்…
  அதற்குள்ளாகவே முதலமைச்சர் பணியாற்றும் நிலைக்கு
  வந்து விடுவார்… அது வரையில், அவர் லீவு எடுத்துக் கொண்டிருப்பதாக
  ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். அரசுப்பணிகளில் இது சகஜம் தானே…?

  முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நோய்களின் பிடியிலிருந்து
  விடுபட்டு, நல்ல உடல்நலம் பெற்று,
  விரைவில்வீடு திரும்ப வேண்டுமென்று
  பிரார்த்தனை செய்யும் கோடிக்கணக்கான தமிழர்களின் குரல்
  இறைவனுக்கு நிச்சயம் கேட்கும்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • R KARTHIK சொல்கிறார்:

   Yes, if such thing happens his claim will be in soup.

  • LVISS சொல்கிறார்:

   AIADMK should have some one to run the govt till the C M recovers and returns to take over the administration —

  • Tamilian சொல்கிறார்:

   This should have been done when they knew that her illness is serious and needs longer hospitalisation. We can not run the government with out CM as per law through retired IAs officers. AIADMK has majority in the house and can name a substitute to fill the void. This is what Swamy is targeting. Legally he is right. Rahul has pre empted Mu Ka &co’s plans.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Dear Tamilian,

    Swamy is not Legally Right…
    President Rule cannot be imposed just like that –

    First, Governor is supposed to ask ADMK
    Assembly Floor Leader
    to convene a meeting of the Legislature wing
    of the ruling party and
    elect their new leader
    because of the physical incapacity of
    their present leader.

    -with best wishes,
    Kavirimainthan

 6. Surya சொல்கிறார்:

  One of the drawback with ADMK is they do not have a successor who can lead the party in her absence. More the ADMK chief is in hospital, all other parties will start celebrating.

  Is OPS the new (backup) CM if ADMK chief is in bed for next 3 months?

 7. mani சொல்கிறார்:

  சட்டத்தையே மதிக்காத சித்தராமையா ஆட்சியை நீக்கி ஜனாதிபதி
  ஆட்சி கர்நாடகத்தில் அமல் படுத்த கேட்காத இவருக்கு தமிழ்நாட்டில் குடியரசு ஆட்சி வரவேண்டுமாம். .

 8. Tamilian சொல்கிறார்:

  There is a constitutional problem. Governor has acted late.

 9. mani சொல்கிறார்:

  In assembly elections DMK thought it will win comfortably that is what most of the so called
  election specialists predicted. But despite that AIADMK got majority and formed the govt.
  DMK was disappointed.
  BJP too got a big zero. In the current situation both these parties are playing politics and want to
  capture power through backdoor. This is a shameful act and should be thwarted by the ruling
  party by keeping their flocks together. The mandate by the people of Tamilnadu is for full 5 years.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.