Make in India – ஆனால் சிமெண்டை பாகிஸ்தானிடமிருந்து வாங்கு…. இது மோடிஜி அரசின் வெளியில் சொல்லாத தத்துவமா…?

falcon-cement-image

அண்மையில் ஒரு புகார் …
நாகர்கோவில்-சுசீந்திரம் அருகே கோடிக்கணக்கான
ரூபாய் திட்டத்தில் போடப்பட்டு வரும்
தேசிய நெடுஞ்சாலையில் –

பாகிஸ்தானில் படைக்கப்பட்ட “ஃபால்கன்” ( Falcon )
சிமெண்டைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று….

இதில் வேதனை என்னவென்றால், பாஜக உள்ளூர்
எம்.பியும்., மத்திய தரைவழி ( சாலை ) போக்குவரத்து
அமைச்சருமான திரு.பொன்.ரா. அவர்கள் மிகுந்த முயற்சி
எடுத்துக் கொண்டு இறங்கிய திட்டத்திலேயே
இந்த நிலை …

“மேக் இன் இண்டியா” – உலக நாடுகளே, உங்களுக்கு
வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்…

இந்தியாவில் உற்பத்தி செய்ய வாருங்கள் என்று
உலக நாடுகளுக்கு பாஜக மத்திய அரசு மூலம்
மோடிஜி மிகுந்த விளம்பரங்களோடு வேண்டுகோள் விடுத்துக்
கொண்டிருக்கிறார்…

அதே சமயம், அவரது அரசு நிறைவேற்றும் சாலை
திட்டங்களில் – பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்ட ஃபால்கன் சிமெண்ட் தான்
பயன்படுத்தப்படுகிறது.

pakistan-cement

ஏன் இந்த நிலை …?
இந்தியாவில் சிமெண்ட் ஆலைகளுக்கு பஞ்சமா ..?
இந்தியர்களுக்கு சிமெண்ட் உற்பத்தி செய்யும்
தொழில் நுணுக்கம் தெரியாதா…?
இங்கு இடமில்லையா….?
வேலை செய்ய தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்களா..?

இந்தியாவில் உள்ள சிமெண்ட் ஆலைகளின்
உற்பத்தித்திறனில் 70 சதவீதமே பயன்படுத்திக் கொள்ளப்
படுகிறது என்றும் இன்று இருக்கும் ஆலைகளிலேயே
உற்பத்தியை அதிகரிக்க இன்னும் 30 சதவீதம் இடம்
இருக்கிறது என்றும் சிமெண்ட் ஆலைகள் கூறுகின்றன.

ஒருவேளை உள்நாட்டு ஆலைகளால் தேவைகளை
நிறைவேற்ற முடியவில்லை என்றால் கூட, புதிய சிமெண்ட்
ஆலைகளை இந்தியாவில் துவக்குவது தானே சரியான தீர்வாக
இருக்கும்..? அப்போது தானே, இங்கே புதிய
முதலீடுகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இடமிருக்கும்…?

இந்திய சிமெண்டை பயன்படுத்தாமல் –
பாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து
பயன்படுத்த காரணம் என்ன என்று சம்பந்தப்பட்ட
காண்டிராக்டர்களிடம் விசாரித்தபோது சொல்லப்பட்ட
காரணம் –

” எந்த வித தடைகளும் இல்லாமல்
எவ்வளவு வேண்டுமானாலும் இறக்குமதி செய்ய முடிகிறது…
இந்திய சிமெண்டை விட, பாகிஸ்தான் சிமெண்ட் விலை
குறைவாக இருக்கிறது…! தூத்துக்குடியை சேர்ந்த பாஜக
பிரமுகர் ஒருவர் தான் இந்த இறக்குமதி பணியை
மேற்கொள்கிறார்….!!! ”

தூத்துக்குடி வழியாக கண்டெயினர்களில் வரும் பாகிஸ்தானின் ஃபால்கன் சிமெண்ட் மூட்டைகள்.....

தூத்துக்குடி வழியாக
கண்டெயினர்களில்
வரும் பாகிஸ்தானின்
ஃபால்கன் சிமெண்ட் மூட்டைகள்…..

அதெப்படி இந்திய சிமெண்டை விட விலை குறைவாக
இருக்கிறது என்று ஆராய்ந்தால், இன்னும் அதிர்ச்சி….

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
சிமெண்ட் மூட்டைகளுக்கான, சுங்க வரியை மத்திய அரசு
ரத்து செய்திருக்கிறது. எந்தவித வரியும் இன்றி,
எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, இறக்குமதி
செய்யப்படுவதால் பாகிஸ்தானிய சிமெண்ட் இந்திய
சிமெண்டை விட விலை குறைவாக இருக்கிறது…!

பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை அனுப்பி
இந்தியாவின் ராணுவ நிலைகளை தாக்குகிறது…
ராணுவ வீரர்களையும், சிவிலியன்களையும் கொல்கிறது –
ஆனால், விலை மலிவு என்று சொல்லி,
நாம் அந்நாட்டிலிருந்து இன்னமும்
சிமெண்ட் இறக்குமதி செய்து ரோடு போடுகிறோம்…

” வந்தே மாதரம் என்போம் –
எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்”

” பாரதி சொன்ன நாட்டுப்பற்று மக்களுக்கு
மட்டும் தான் தேவை…
அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அல்ல…”
– என்பது இவர்களின் புதிய சித்தாந்தம் போலும் …..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to Make in India – ஆனால் சிமெண்டை பாகிஸ்தானிடமிருந்து வாங்கு…. இது மோடிஜி அரசின் வெளியில் சொல்லாத தத்துவமா…?

 1. LVISS சொல்கிறார்:

  If I am not wrong ,Pakistan at present enjoys the Most Preferred Nation status –This could be the reason why it could be imported cheaply — There is a demnd to withdraw this status which I understand has to be done through WTO–In the meantime imports from Pakistan can be stopped —

 2. R Karthik சொல்கிறார்:

  One of my friend justified saying falcon has factory at baluchistan!!!

  • பெங்களூரு தமிழன் சொல்கிறார்:

   ஒரு வேளை அவர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்குமோ

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக்,

   ஒரு விதத்தில் உங்கள் நண்பர் சொல்வதும் சரி தான்…
   பலுசிஸ்தானில் ATTOCK என்கிற இடத்தில் தான்
   இந்த சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது.
   ஆனால்…..
   பலுசிஸ்தான் பாகிஸ்தானில் தானே இருக்கிறது…?
   (இதைத்தவிர, பஹ்ரெயினிலிருந்தும் இந்த கம்பெனி
   செயல்படுகிறது…)
   இருந்தாலும், இந்த விதத்தில் எல்லாம் சிமெண்ட்
   இறக்குமதியை நியாயப்படுத்த முடியாது அல்லவா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  Mr Subramanian Swamy has urged the Modi govt to ban the import of cement from Pakistan
  Incidentally the cement company is based in Bahrain

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.LVISS,

   I have already replied to another friend
   in this column about this.
   Though this company is based in Bahrain,
   it has got another Unit in ATTOCK (Pakistan )
   from where India is importing Falcon cement.

   -with best wishes,
   Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.