ஒரு Black mailer பயமுறுத்துகிறார்…

ss-with-dog

நேற்றைய தினம் தொடர்ச்சியாக ட்விட்டரில்
பின்னணி காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்த
சு.சு. இன்று மத்திய உள்துறை அமைச்சர்
திரு.ராஜ்நாத்சிங் அவர்களுக்கு தான் எழுதிய
கடிதத்தை மீடியாவுக்கு அனுப்பி –
தமிழகத்தை பயமுறுத்தப் பார்க்கிறார்…..

கடிதம் கீழே –

s-s-letter-on-president-rule

பின் குறிப்பு – தமிழகத்தில் சட்டமன்றத்தை
சஸ்பெண்டு செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை
அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்கிற
சு.சு.வின் அறிக்கைகளுக்கு –

89 உறுப்பினர்களை சட்டமன்றத்தில்
கொண்டுள்ள திமுக –
இன்னமும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல்,

தந்தை கருணாநிதியும்
தனயன் ஸ்டாலினும்
மௌனமாக இருப்பது ஏன்…?

அவர்களுக்கு இதில் உடன்பாடு உண்டு என்பதால் தானே…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ஒரு Black mailer பயமுறுத்துகிறார்…

 1. BalakrishnanK சொல்கிறார்:

  1, AIADMK should have selected an intermediate alternative in view of CM’s health issues.

  2. But they are not doing it. Hence Swamy’s suggestion holds good

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களே
   கர்நாடக அரசும் மத்திய அரசும் உச்சநீதிமன்ற உத்தரவுகளையே மதிக்காமல் இருந்துகொண்டிருக்கும் போது முதலில் கலைக்கப்பட வேண்டியது இந்த அரசுகளே!
   அதை விட்டுவிட்டு //Swamy’s suggestion holds good// என்று கூறுவது சிரிப்பா இருக்கு!

   • Tamilian சொல்கிறார்:

    Swamy”s letter is correct. When CM is not running the government, extra constitutional elements intrude to rule which should be stopped. Suspension of assembly and imposition of president’s rule is one option. Or they should appoint a deputy CM and CM’s portfolio must be distributed.Governor can advise now. Dont mix Karnataka’s Cauvery here. S C will handle it.,

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     அய்யா தமிழன்,

     எந்த விதத்திலும் சு.சுவாமியின் கடிதம் ” கரெக்ட்” ஆக முடியாது.

     எடுத்த எடுப்பில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர அவர்
     உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பது எப்படி சரி ஆகும்…?

     முதலமைச்சர் குணமாகி, தன் அரசுப் பணிகளை செய்ய முடிகிற
     நிலை ஏற்படும் வரை, அவரது பொறுப்புகளை வேறு யாராவது
     நிர்வகிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று
     சு.சுவாமி சொல்லி இருந்தால் மட்டுமே அது “கரெக்ட்” ஆக இருக்கும்.

     இப்போது அவர் சொல்லி இருப்பது – அவரது “திமிர் காரணமாக “. பொறுப்பின்றி எதையும் உளறுவது அவருக்கு வாடிக்கையாகி விட்டது.
     விவசாயத்திற்கு நீர் வேண்டுமென்று போராடுபவர்களை பார்த்து,
     கடல்நீரை நல்ல நீராக்கி பயன்படுத்து என்று சொல்லும்
     அளவிற்கு திமிரெடுத்த ஒரு ஆசாமிக்கு நீங்கள் பரிந்து பேசுவது
     ஆச்சரியமாக இருக்கிறது.

     சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவுகளை தொடர்ந்து நிராகரித்த
     கர்நாடகா அரசைப்பற்றி ஏன் அவர் குறை கூறவில்லை…?

     அதே செயலை தமிழ்நாடு செய்திருந்தால் சும்மா இருந்திருப்பாரா…?

     உங்களைப் போல் அவர் எதைச்செய்தாலும் ஆதரிக்க
     சிலர் இருப்பதால் தான் அவர் திமிரெடுத்து
     உளறிக்கொண்டே இருக்கிறார்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. natchander சொல்கிறார்:

  a perfect press release…
  let our C M be on medical leave
  the governor should instruct the chief secretary …or guide the tamil nadu govt ..its functioning…. particularly precautionarymeasures regarding heavy rain…. etc

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இந்த கெட்ட எண்ணம் கொண்ட பிறவி உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 3 – வதாக கூறியுள்ள AFSPA Armed Forces (Special Powers) Acts என்பதை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் — சென்னையிலும் அமல்படுத்த வேண்டும் என்பது … அவரது குயுக்தியான — கொடூரமான மனப் போக்கை நன்கு விளக்குகிறது …
  யாருடைய கூட்டத்துக்கு வால்பிடிக்க என்ன ஒரு பயங்கரமான சக்தி வாய்ந்த ஆபத்தான சட்டத்தை தமிழக மக்கள் மீது திணிக்க நினைக்கும் இவர்களுக்கு என்ன தீமை செய்தார்கள் எம் மக்கள் …. ?
  இந்த சட்டம் என்ன வெறும் ஒரு ஊரடங்கு தடை உத்திரவு போன்றதா … ? யாரை வேண்டுமானாலும் — எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்யவும் — விசாரிக்கவும் — வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் — தேவைப் பட்டால் கண்டதும் சுட்டு தள்ளவும் — முடியும் என்பதை கவனிக்க வேண்டும் …
  தற்போது தமிழகத்தில் என்ன கலவரங்கள் தலை தூக்கி ஆடுகிறதா … ? நிர்வாகம் சீர் குலைந்து விட்டதா ..? அமைதி இல்லாமல் இருக்கிறதா .. ? எதனால் இந்த ” கொடூர சட்டத்தை ” தமிழக மக்கள் மீது ஏவுவதற்கு — இந்த வியாபாரி ஆசைப் படுகிறார் … ? இவருக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டு இழிவான வேலைகளுக்கு யோசனை கூறும் அந்த மனித ரத்தத்தைக் குடிக்க துடிக்கும் — மனிதர்கள் — யார் … யார் … ?
  ஜெயலலிதா என்கிற ஒருவர் உடல் நலமில்லாமல் போனதால் — இவர்களின் துள்ளல் அதிமாகி விட்டதா …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   AFSPA Armed Forces (Special Powers) Acts -ஐ தமிழகத்தில்
   அமல்படுத்த வேண்டுமென்று சு.சுவாமி கூறியதை –

   சட்டமன்றத்தை 6 மாதங்களுக்கு முடக்கி வைக்க
   (சஸ்பெண்டு செய்ய ) வேண்டுமென்கிற
   ஆலோசனையை கூட

   நீங்கள் தான் எதிர்க்கிறீர்கள்.

   தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
   எதிர்க்கவில்லையே…!

   சட்டமன்றத்தின் அதிமூத்த தலைவர் அவரையே
   ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று
   சொல்லப்படுவதை இன்னமும் எதிர்க்கவில்லையே…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. sakthivel சொல்கிறார்:

  K.M Sir, as you are a experienced and knowledgeable retired Govt.officer, you can list out the alternatives for this situation to run the govt.machinery without any troubles and smooth functioning.
  by M.SAKTHIVEL

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சக்திவேல்,

   நான் முந்தைய பின்னூட்டத்தில்
   இதைப்பற்றி எழுதி இருக்கிறேன்..

   நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
   முக்கிய பகுதியை மீண்டும் கீழே தருகிறேன் –


   இத்தகைய முயற்சிகளை முறியடிக்க,
   உடனடியாக ஒரு காரியம் செய்யப்பட வேண்டும்.
   தமிழக சட்டமன்ற அதிமுக குழுவின் கூட்டமும்,
   கேபினட் கூட்டமும் உடனடியாக கூட்டப்பட்டு,

   முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பெற்று,
   பணிகளைச் செய்யும் நிலை நிலை வரும் வரையில்,
   அவரது அரசு பொறுப்புகளை, மூத்த அமைச்சர்கள்
   யாராவது ( பெயரை முன் மொழிந்து, வழிமொழிந்து )
   கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்வார்கள் என்று
   ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

   இந்த தீர்மானம் (மொத்த அமைச்சர்களுமாய் சேர்ந்து போய்)
   ஆளுநரிடம் கொடுக்கப்பட்டு, இது அரசு உத்திரவாக
   ஆளுநரால் அறிவிக்கப்படச் செய்ய வேண்டும்.

   முதல்வர் ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லாததால்,
   அரசுப்பணிகள் பாதிக்கப்படுகின்றன அல்லது சட்டபூர்வ அந்தஸ்து
   இல்லாதவர்களால், அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்கிற
   குற்றச்சாட்டுக்களை இது உடைத்தெரியும்.

   ————-

   சு.சுவாமியின் சூழ்ச்சிகளை முறியடிக்க,
   அதிமுக முக்கியஸ்தர்கள் இந்த முடிவினை
   விரைவில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    //அதிமுக முக்கியஸ்தர்கள் இந்த முடிவினை விரைவில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்// இதை எல்லாம் மன்னார்குடி கூட்டம் செய்ய அனுமதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போல ??

 5. lingam சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் BJP ஆட்சிக்கு வர முடியாது ,மத கலவரம் உண்டு பன்னி பார்த்தும் முடியவில்லை

 6. man சொல்கிறார்:

  BJP succeeded in Karnataka by not forming Cauvery Water Management Board and by betraying tamilnadu people it ensured
  its votes in the coming Karnataka assembly elections. But its plan in Tamilnadu through Subramaniam samy should BE thwarted by ruling party and any plans by the DMK TO COME
  BACK TO POWER BY BACK DOOR SHOULD BE NIPPED IN BUD. Aiadmk should act fast.

 7. Tamilian சொல்கிறார்:

  My fear is about horse trading by DMK. also extra constitutional elements ruling the peope.BJP can’t do any back door entry.

  • Tamilian சொல்கிறார்:

   K M sir ,Till Mr Swamy released his letter calling for suspension of assembly and temporary imposition president’s rule under constitution no one spoke about the absence of CM in running the government.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அய்யா தமிழன்,

    நீங்கள் கலைஞர் “செய்தி” தொலைக்காட்சி பார்ப்பதே இல்லையா…?

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அய்யா தமிழன்,

   பிஜேபியின் சு.சுவாமி இந்த கடிதம் மூலம்
   சொல்லி இருக்கும் யோசனை தான் ” horse trading by DMK “-க்கு உதவும்.
   ஆகையால் தான் கலைஞரும் இதை ஆதரிக்கிறார்.
   (செய்தி அறிக்கை வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன….
   எதற்கெடுத்தாலும் கேள்வி-பதில் வெளியிடுபவர் இதைக்குறித்து
   வாயே திறக்காமல் இருப்பதற்கு என்ன பொருள்…?

   // BJP can’t do any back door entry // கவர்னர் ஆட்சி என்றால்
   வேறு என்ன என்று நினைக்கிறீர்கள்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Tamilian சொல்கிறார்:

    அரசமைப்பு சட்டம் கூறுவது பெரும்பான்மை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பவர முதலமைச்சராக நியமனம் செய்ய படுவார்கள் . அவர் தனது அமைச்சர்களை தேர்ந்து எடுத்து பொறுப்புக்களை அளிக்கிறார். அவர் செயல் படும் நிலையில் இல்லை எனும் பொது அங்கே யார் எனும் கேள்விக்கு பதில் வேண்டும். இப்போது நிலை அதுவே.

 8. Tamilian சொல்கிறார்:

  I do not entirely agree with what Swamy has suggested. But it is constitutionally very relevent. In the absence of CM in state affairs for now, extra constitutional forces are likely to play a role. That is not what people voted for. So a satisfactory arrangement should be worked out with Cm’s powers getting temporarily distributed let us pray for CM getting back to good health.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.