ராகுல் வெடியின் விளைவு – பிரதமர் நாளை சென்னை விஜயம் ….!!!

rahul-gandhi-in-chennai_650x400_51475826685

கவர்னர் மூலம் அறிக்கை பெற்றது…
அதை உறுதிசெய்யும் விதமாக
All India Institute of Medical Science மருத்துவர்களை
அனுப்பி மேற்கொண்டு விவரங்களை சேகரித்தது,
திருவாளர் சுப்பிரமணியன் சுவாமியை
அறிக்கை விட வைத்து, ஆழம் பார்த்தது –
திமுகவின் ஒப்புதலை பெற்றது –

இத்தனையையும் செய்து முடித்தவர்கள்
எதிர்பார்க்கவே இல்லை – திடீரென்று
ராகுல் காந்தி களத்தில் புகுவாரென்று –
இப்படி ஆனை வெடியை
வெடித்து விட்டுப் போவாரென்று….!!!

முதல்வரை சந்திக்க முடியாது – வராந்தாவோடு
திரும்ப வேண்டியிருக்கும் என்று தெரிந்தும் –

ராகுல் காந்தி டெல்லியிலிருந்து தனி விமானத்தில்
திடீரென்று சென்னை வந்து, நேராக அப்போலோவிற்கு
சென்றது பாஜக தலைமையில் அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது.

பற்றாக்குறைக்கு அப்போல்லோ வாயிலில்,
செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி –

” ஜெயலலிதாஜிக்கு நானும்,
காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா
அவர்களும், முழு ஆதரவும் தருவோம் ”

என்று சொன்னது விஷயத்தை முற்றிலுமாக
திசை திருப்பி விட்டது.

ஏற்படுத்தப்பட்டு விட்ட இழப்புகளை சரி செய்ய
பிரதமர் நாளை சென்னை வருகிறாராம் –

அப்போல்லோ ஹாஸ்பிடல் வராந்தா வரை
வந்து செல்வதற்காக….!!!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

ராகுல் வெடியின் விளைவு – பிரதமர் நாளை சென்னை விஜயம் ….!!! க்கு 10 பதில்கள்

  1. selvarajan சொல்கிறார்:

    // ஜெயலலிதா.. எய்ம்ஸ் குழுவை வைத்து என்ன நடக்கிறது என்று வேவு பார்த்தது மோடி அரசு… காங். புகார் //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/congress-blames-modi-govt-spying-jayalalitha-264582.html … — அடுத்து — // ஜெ. உடல்நிலை பாதிப்பை பயன்படுத்தி காவிரியில் அரசியல் செய்த மத்திய அரசு: மாலன் குற்றச்சாட்டு //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/writer-malan-slams-centre-on-jayalalithaa-health-issue/slider-pf212474-264593.html …. இந்தஇரண்டு செய்திகளும் — நியூஸ் 18 தமிழ் என்கிற சானலில் நடந்த விவாதத்தின் போது திரு சுதர்சன நாச்சியப்பனும் — திரு மாலன் அவர்களும் வைத்த முக்கிய கருத்துகள் — ராகுல் காந்தியின் வருகைப்பற்றியும் விவாதம் நடந்தது — அப்போது // மோடி என்னவெல்லாம் சிந்திப்பாரோ யாரை மாற்ற வேண்டும் என்று விரும்புவாரோ, அதை சாமி மூலமாக வெளிப்படுத்துவார். கடந்த இரண்டரை வருடமாக இதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.// என்று திரு நாச்சியப்பன் கூறியதற்கும் — சு. சுவாமியின் தற்போதைய டிவிட்டர் — மற்றும் உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதமும் — சான்றாக உள்ளது என்பது தெள்ளத் தெளிவு … அப்படித் தானே …. ? அய்யா … !

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      நேற்றைய டிவி விவாதங்களை நான் பார்த்தேன்…

      திரு.சுதர்சன நாச்சியப்பன், கிட்டத்தட்ட அவர்கள் மனநிலையை
      சரியாகவே பிரதிபலித்துப் பேசினார். சு.சு.வின் ஆலோசனையை
      மத்திய பாஜக அரசு ஏற்று நடைமுறப்படுத்த முனைந்தால்,

      காங்கிரஸ் தலைமை –
      தமிழக அதிமுக அரசின் உதவிக்கு வரும் என்பதே திரு.ராகுல் காந்தியின்
      வரவு தெரிவிக்கும் உண்மை.

      ராகுல் காந்தி கூறிய காங்கிரசின் நிலை
      பாஜக தலைமையை பாதித்திருக்கிறது என்பது,
      அதன் பின்னர் நடந்த
      பின்வாங்கல்களில் பிரதிபலிக்கிறது.

      திரு.மாலன் கூறியதும் முற்றிலும் உண்மையே.
      நம்முடைய கட்டுரைகளில் நாம் கூட இந்த கருத்தைத்தானே
      கூறிக்கொண்டிருந்தோம்….

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. ravi சொல்கிறார்:

    அஜீஸ்
    //இந்திய பேடி (ஸாரி… ஸாரி… மோடி) பிரதமர்//
    தேவையே இல்லாத கருத்து .. எதிர் தரப்பு , இன்னமும் கீழ்த்தரமாக இறங்கி தாக்கும்..
    மோடியின் பலம் , இத்தகைய அபத்த கருத்துக்கள் தான்.. உண்மையான பிரச்சனைகளை பேசாமல் சும்மா சொந்த மத கசப்பில் பேசும் பேச்சுக்கள் , மோடியின்/பிஜேபி யின் பலத்தை அதிகரிக்க மட்டுமே செய்யும்.. உங்கள் விருப்பம் அதுதான் என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ??

    மணல் , கிரானைட் கொள்ளையர்களுடன் கூட்டு களவாணித்தனம் செய்தவர்களையும்,எதிர்த்து கேட்டவர்களை லாரி ஏற்றி கொன்றதையும் எப்படி சொல்லலாம் ??? அந்த களவாணிகள் வீசி எரித்த பணத்தை வாங்கி கொண்டு வோட்டு போட்ட தமிழ்நாட்டு மாக்கள் ( மன்னிக்கவும் மக்கள் கூட்டத்தை ) என்ன சொல்லலாம் ..

  3. ravi சொல்கிறார்:

    //அப்போல்லோ ஹாஸ்பிடல் வராந்தா வரை வந்து செல்வதற்காக….!!!// டெல்லியை பகைத்துக்கொண்டு ரெட்டி தொழில் செய்ய முடியுமா ??

  4. jksm raja சொல்கிறார்:

    ஐயா , அரசியல் காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் , காங்கிரஸ் தமிழ் நாட்டிற்கு எத்தனையோ துரோகங்கள் செய்திருந்தாலும் தனிப்பட்டமுறையில் ராகுல் காந்தி தான் ஒரு நல்ல குடும்ப பின்னணியை கொண்டவன் என்பதனை நிரூபித்திருக்கிறார்

  5. LVISS சொல்கிறார்:

    The PM rarely reacts to what Rahul Ganchi says or does –I will be surprised if the PM visits Chennai just to go back —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      திரு.எல்விஸ்,

      பிரதமர் தனது பயணத்தை “தசரா” வரை
      தள்ளிப்போட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

      அவர் ( நமது கூடத்தான் ) அதிர்ஷ்டம், அவர் வரும்போது
      பார்க்கக்கூடிய அளவிற்கு முதல்வரின் உடல்நிலை
      முன்னேறி இருக்கட்டுமே….!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  6. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    கா.மை சார்.. இது வெறும் பாஜவுக்காக ராகுல்ஜி வந்த விசிட் அல்ல. இது தங்களை ஒதுக்கும் (அல்லது கொஞ்சம் அவமரியாதையாக நடத்தும் ஸ்டாலின்) திமுகவுக்கான செக். இது உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சீட் பகிர்வின்போது நடந்த விஷயம். அதுவும், கருணானிதியைச் சந்திக்கவேண்டும் என்று எந்த ஒரு பிரஷரும், அல்லது வாய்ப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக யாருக்குமே தகவல் தராமல், சென்னை அடைந்தபின் தமிழக காங்கிரஸ் தலைமைக்குச் செய்தி அனுப்பியதன் காரணமே அது. இதுவரை ராகுல்ஜி கருணானிதியைச் சந்தித்ததில்லை. (ஸ்டாலினுடன் போன தேர்தலில் திட்டமிட்ட பரப்புரை நடந்தமாதிரித் தோன்றவில்லை)

    ஜெவுக்குப் பிறகு, அதிமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

    இதன்மூலம், காங்கிரசுக்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடைப்பதோடு, பாராளுமன்றத் தேர்தல்வரை, 50 எம்.பிக்களின் ஆதரவும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

  7. gopalasamy சொல்கிறார்:

    Why nobody is talking about Karunanidhi’s delicate spine surgery at the private Shri Ramachandra Medical Centre (SRMC) hospital in Feb 2009. I think he was in hospital for more than one month. Again in May 2009, he was admitted in Apollo hospital for a week. At that time nobody created a scene like this.

  8. Raghuraman சொல்கிறார்:

    Dear KM sir.,

    Why all the political leaders visit Apollo despite they know that will not be allowed to go inside?

    //அப்போல்லோ ஹாஸ்பிடல் வராந்தா வரை வந்து செல்வதற்காக….!!!//

    Is it just a protocol or any plans to inform others that they could not see her ? By the process, they may add value to the claim that there is a need for some alternate.

    Is AIADMK falling to their collective plot?

    initially only one voice raised, now slowly Stalin, Thiruma, ‘Hindu’ Ram also started. Others will also join. I don’t think all these so called leaders just like that forget that JJ had silenced them in assembly election.

    To my knowledge, TN politics did not witnessed any maturity across party lines for the past few decades. All of them are looking for a chance to grab post.

    Regards

    Raghuraman

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s