தங்களையும் அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டது தமிழக பாஜக….!

local-bjp

தமிழக பாஜகவைச் சேர்ந்த – முக்கிய தலைவர்களான,
திருமதி தமிழிசை, திருவாளர்கள் இல.கணேசன்,
பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, போன்றோர்
இன்று டெல்லி செல்கிறார்கள்.

நாளைய தினம் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,
பாஜக அகில இந்தியத் தலைவர் திரு.அமீத் ஷா
அவர்களை சந்தித்து –

தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க –
“காவேரி மேலாண்மை வாரியம்” அமைக்கப்பட
வேண்டும் என்று வற்புறுத்த இருப்பதாக திருமதி
தமிழிசை விமான நிலையத்தில் கூறி இருக்கிறார்.

இதன் மூலம், தங்களையும் அறியாமல் தமிழக பாஜக
தலைவர்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு
விட்டதாகவே தெரிகிறது.

———————-

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி
உத்திரவிட உச்சநீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது
முழுக்க முழுக்க பாராளுமன்றத்தின் உரிமைக்குள்
வரும் விஷயம்.

மேலும், காவிரி ட்ரைபியூனலின் ஆலோசனைகள்,
“பரிந்துரை” என்கிற அந்தஸ்தைத்தான் பெறும்.
அது தீர்ப்பு அல்ல. அது மத்திய அரசை கட்டுப்படுத்தாது.
அதை ஏற்பதும் ஏற்காததும் மத்திய அரசின் விருப்பத்தை
பொருத்தது.

– இது தான் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
எடுத்த நிலை….!

—————————

மத்திய அரசும், அதன் அமைச்சர்களும் ஏற்கெனவே
இது முழுக்க முழுக்க சட்டபூர்வமாக மத்திய அரசு
எடுத்துள்ள நிலை – என்று விளக்கம் கூறி விட்டார்கள்.

ஆனால் –

பாஜக தலைமை,
அடுத்து கர்நாடகாவில் வரவிருக்கும்
சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவான
சூழ்நிலையை உருவாக்கும் எண்ணத்தோடு
எடுத்த அரசியல் முடிவு இது –

கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான,
அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோர் கொடுத்த
ஆலோசனைகளின் விளைவு இது –

என்பது பாஜகவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டிற்கான வெளிப்படையான சில
காரணங்களும் உண்டு….

முன்பாக, கடந்த மாதம் 18-ந்தேதி,
முதலில் சுப்ரீம் கோர்ட் 2 வாரங்களுக்குள்ளாக
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என்று கூறியபோது,

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
மெனக்கெட்டு –

” இதில் நிறைய நடைமுறைகள் இருக்கின்றன.
இரண்டு வாரங்கள் என்பது மிகவும் குறுகிய காலம்;
எனவே, 4 வார அவகாசம் கொடுங்கள் ” –
என்று கேட்டு அதை 4 வாரங்களாக மாற்றி உத்திரவு
பெற்றுக் கொண்டார்.
இங்கே மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு
அதிகாரமில்லை என்கிற பேச்சையே எழுப்பவில்லை…

பின்னர், மீண்டும் கடந்த மாதம் 30-ந்தேதி, சுப்ரீம் கோர்ட்
தனது முந்தைய உத்திரவை மாற்றி, அக்டோபர் 4-க்குள்
மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று
உத்திரவிட்ட போதும், மத்திய அரசு மறுப்பு ஏதும்
கூறவில்லை.

மேலும், மத்திய அரசின் நீர் மேலாண்மை துறை
செயலாளர் திரு.சசி சேகர், செய்தியாளர்களிடம் பேசும்போது,
வாரியம் அமைப்பதற்கான பணிகள் ஏற்கெனவே
துவங்கி விட்டன என்று வேறு கூறினார்.

ஆனால், அக்டோபர் 1-ந்தேதி ( புரட்டாசி, சனி…!!! )
திருவாளர் தேவ கவுடா திடீரென்று உண்ணாவிரதத்தில்
உட்கார்ந்ததும், இதுவரை இந்த விஷயம் குறித்து
எங்குமே வாய் திறக்காத பிரதமர் மோடிஜி,

தேவ கவுடாவுக்கு போன் செய்து,
மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவான நிலையை
எடுக்கும் – எனவே உண்ணாவிரதம் வேண்டாம்
என்று சொல்ல, தேவ கவுடாவும் தனது
ஒரு வேளை உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அடுத்து, திங்களன்று 3- ந்தேதி தான் மத்திய அரசு
சுப்ரீம் கோர்ட்டில் தனது புகழ்பெற்ற “அந்தர் பல்டி”யை
அடித்து காட்டியது…

ஆக மொத்தம் இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான
முடிவே என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக
தெரிந்த விஷயம்… ஆனால், பாஜக மட்டும்,
தமிழக பாஜக மட்டும், இது மத்திய அரசின் சட்டபூர்வமான
நிலை என்று சமாளித்துக் கொண்டிருந்தது….

—————-

நாளை இவர்கள் டெல்லிக்கு போய் பாஜக அகில இந்திய
தலை அமீத் ஷாவை பார்த்து, தமிழகத்திற்கு உரிய
நியாயம் கிடைக்க காவேரி மேலாண்மை வாரியம்
அமைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்போகிறார்களாம்.

அப்படியானல், இந்த விஷயத்தில் முடிவெடுப்பது
அமீத் ஷா தானா…?
மோடிஜியோ – பாராளுமன்றமோ அல்லவா…?

அமீத் ஷா முடிவெடுக்கிறார் என்றால்,
அது அரசியல் முடிவு தானே…?
அரசாங்கத்தின் முடிவல்லவே….?

அது உண்மையிலேயே (மத்திய) அரசாங்கத்தின்
முடிவாக இருந்தால், இவர்கள் பார்க்க வேண்டியது
பிரதமர் மோடிஜியை தானே….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to தங்களையும் அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டது தமிழக பாஜக….!

 1. jksm raja சொல்கிறார்:

  ஐயா, தமிழ்நாட்டின் சாபக்கேடு. இந்தமாதிரி தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்பவர்கள் பின்னாலும் சுயநலக்கூட்டம் ஓன்று ஆதரவு தெரிவித்து நாங்கள் இந்தியர்கள் என்று உளறிக்கொண்டு இருப்பதுதான்

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! உண்மையை ஒப்புக்கொண்டவர்களின் பேச்சுகளும் இப்படித்தான் அவைகள் :– // மோடி துரோகம் செய்யலையாம்.. கர்நாடக காங்.தான் துரோகம் செஞ்சதாம்.. சொல்கிறார் தமிழிசை //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/not-modi-its-karnataka-congress-the-traitor-says-tamilisai-264449.html … இந்தசெய்தியில் :– // காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பிரதமர் தலையிட்டு தடுத்து விட்டார் என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான தகவலை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சட்ட ரீதியான சிக்கலை மத்திய வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார் என்பதும், இதில் பிரதமருக்கு பங்கில்லை என்பதும் உண்மை.// என்று தமிழ் இம்சை கூறியிருப்பதும் — அடுத்து — // ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலை தெரியுமா.. எச். ராஜா சொல்லும் “ஓ மை காட்” காரணம்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-s-clarification-centre-s-refusal-form-cmb-264553.html — இதில் // ஜல்லிக்கட்டு பிரச்னையில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. இன்று வரை சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. எனவே அதுபோன்ற நிலை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. //
  என்று எச் .ராஜா கூறுவதும் அருமையான கருத்துக்கள் ..? — இது போன்ற ” காமெடி பீசுகள் ” ஒன்றாக சேர்ந்து பா.ஜ. க. தலைவர் அமித் ஷாவை சந்திப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும் — ? தமிழக பா.ஜ .க. வினரையே சந்திக்க தயங்கும் பிரதமர் — தமிழக அ .தி.மு.க. அனைத்து எம்.பி.க்களையும் சந்திக்காமல் தவிர்த்த பிரதமர் — தமிழகத்திற்கு ” நல்லது ” செய்வார் என்று எப்போதும் — நம்புவோமாக … ?

 3. selvarajan சொல்கிறார்:

  // ஜெ.உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்-இனி செயற்கை சுவாசம் இல்லை: மாலினி பார்த்தசாரதி ட்வீட்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-making-good-progress-after-tracheostomy-says-ma-264652.html — முன்பு அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்று பதிவிட்டு இருந்தவர் — மீண்டும் ” நம்பிக்கையூட்டும் ” விதமாக இவ்வாறு பதிவிட்டு உள்ளது — நோக்க தக்கது … !!!

 4. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பாஜக அனேகமாக முழுவதும் நனைந்துவிட்டது. இனி முக்காடு போடத் தேவையில்லை. தமிழகத்தில் அது வளர வாய்ப்பும் இல்லை. இதுல ஒரு விஷயம் இருக்கிறது. காவிரியினால் பாதிப்பு டெல்டாப் பகுதி. இந்தப் பகுதியில் ஓரளவு திமுக முன்னணியிலும், அதிமுக அதற்கு அடுத்த நிலையிலும் இருக்கிறது. இதை விட்டால் கொஞ்சம் காங்கிரஸ் ஆதரவு உண்டு. பாஜகவுக்கு இந்த பெல்டில் வாய்ப்பு சுத்தமாக இருக்காது. அதனாலும் பாஜக இந்த நிலையை எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது (குளச்சல் துறைமுகம், கேரளா எதிர்த்தபோதும் ஆரம்பிக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு பாஜக வளர வாய்ப்பு உள்ளது)

 5. ravi சொல்கிறார்:

  அய்யாமார்களே , கொஞ்சம் தமிழ்நாடு தேர்தல் நிலவரத்தை கவனித்தால் போதும்.. மொத்த டெல்டா மாவட்ட சீட்டுகள் 20 கும் குறைவு தான் .. அதுவும் அடுத்த 10 வருடத்தில் குறைந்து விடும் .. கோவை , மதுரை, சென்னை,சேலம் ,ஈரோடு, திருப்பூர் இந்த நகர பகுதிகளில் யார் தெளிவாக அரசியல் செய்ய முடியுமோ அவர்களே அடுத்த 10 வருடங்களில் ஆட்சியை பிடிப்பார்கள் .. கூட்டி கழித்து பாருங்கள்.. யார் என்று தெரியும்..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.