திரு.சித்தராமய்யா – இந்த நாடகம் எத்தனை நாளய்யா…?

high-power-central-team-in-bangalure

நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டால் உத்திரவிடப்பட்ட
காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு
பங்களூரு வந்து தன் பணியை துவக்கியபோது,
கர்நாடகா நீர்ப்பாசன அமைச்சர் திரு.எம்.பி.பாட்டீல்
அந்த குழுவினரின் முன்பாக – சில விவரங்களை
சொல்லி இருக்கிறார்.

———–
தற்போது அவர்கள் வசம் இருப்பது – 32.05 tmcft நீர்….
இன்னமும் மழை மூலம் எதிர்பார்ப்பது – 15.17 tmcft நீர்….
ஆக மொத்தம் அவர்களிடம் சேரக்கூடியது – 47.22 tmcft நீர்.

அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை அவர்களது தேவை –

குடிநீருக்காக மட்டுமே – 23.05 tmcft,
( total requirement for drinking water purposes in towns,
villages and cities, including Bengaluru and Mysuru,
till May next year )

ஏற்கெனவே பாசனம் துவங்கிவிட்ட
பயிர்களுக்கு தேவையான நீர் – 44.13 67.18 tmcft.

ஆக மொத்தம் தேவை – 67.18 67.18 tmcft.

சுமார் 67 டிஎம்சி தேவை என்கிற நிலையில்
அதிக பட்சம் 47 டிஎம்சி மட்டுமே இந்த சீசனில்
கிடைக்கும் என்பதால், கர்நாடகா 20 டிஎம்சி நீர்
பற்றாக்குறையில் இருக்கிறது. எனவே தமிழகத்திற்கு
இதற்கு மேல் (இந்த ஆண்டு முழுவதுமே )
– தண்ணீர் திறந்து விட இயலாது…!!!

————

அதையடுத்து இன்று திருவாளர் சித்தராமைய்யா
பங்களூருவில்
திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார் –

—————

கர்நாடகத்தில் உள்ள அணைகளில் 24 டிஎம்சி
தண்ணீர்தான் உள்ளது. இது எங்களது குடிநீர்த்
தேவைக்கு மட்டுமே போதுமானது. எனவே தமிழகத்திற்கு
தண்ணீர் திறந்து விட முடியாது.

காவிரியில் 24 டி.எம்.சி.க்கு குறைவாக நீர் இருப்பு
இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது.
சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டாலும் கூட திறக்க முடியாது.

இதனால் என்ன விளைவு ஏற்பட்டாலும் அதை சந்திக்கத்
தயாராக உள்ளோம். ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கூட
சந்திக்கத் தயார்.

( http://tamil.oneindia.com/news/india/karnataka-will-not-give-water-tamil-nadu-says-siddaramaiah-264664.html )

———————

இந்த நாடகங்கள் தொடர்வதை நம்மால்
தடுக்கவே முடியாது…

இவர்களாவது வாயைத்திறந்து சொல்கிறார்கள்….

மத்திய அரசு வாய்மூடி மவுனியாகவே, சொல்லாமலே,
இதே கோணத்தில் செயல்படுகிறது…

————————-

நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை –

நேற்றைய தினம், சுப்ரீம் கோர்ட் 3 நீதிபதிகள்
அடங்கிய உயர் அதிகாரம் பெற்ற ஒரு அமர்வை
காவிரி விவகாரத்தை விசாரிக்க அமைத்துள்ளது –

The new bench would comprise
justices Dipak Misra, Amitava Roy and
A.M. Khanwilkar and will take up all the issues
arising out of the Cauvery water dispute on 18 October.

ஒரே தினத்தில் நமக்கு விடிவு வந்து விடாது
என்றாலும், தொடர்ந்து நடக்கக்கூடிய இந்த
அமர்வின் விசாரணையின் இறுதியில் – நமக்கு
ஓரளவாவது நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்…

அரசியல்வாதிகள் ஆட்டம் போடலாம் …
ஆளுக்கொன்று பேசலாம்….

ஆனால், இயற்கையும், தெய்வமும்
நமக்கு உதவி செய்யும் என்று
நம்பிக்கையோடு காத்திருப்போம்….

(வேறு வழி ……? )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to திரு.சித்தராமய்யா – இந்த நாடகம் எத்தனை நாளய்யா…?

  1. selvarajan சொல்கிறார்:

    சுப்ரீம்கோர்ட் என்ன சொன்னாலும் கவலை இல்லை.. தண்ணீர் தர முடியாது – சித்தராமையா திமிர் பேச்சு ….அருமையாக கூறியிருக்கிறார் .. ? ஏனென்றால் மத்திய பா.ஜ. க . அரசின் கையாலாகாத போக்கால் — வந்த வினை … என்ன ஒரு முன்னோடியாக மற்ற மாநில அரசுகளும் ” உச்ச நீதிமன்ற உத்திரவுகளை ” மதிக்க தேவையில்லை என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறார் — சித்தராமையா — அப்படி தானே …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.