கலைஞரின் அடுத்த அம்பு – திருமதி சசிகலா புஷ்பா ….!!!

.

.

“இடைக்கால முதல்வர்” நியமிக்கப்பட வேண்டும் –

அல்லது “துணை முதல்வர்” நியமிக்கப்பட வேண்டும் –

குறைந்த பட்சம் அடுத்த பொறுப்பில் இருக்கும் அமைச்சர்
யாரென்பதாவது அறிவிக்கப்பட வேண்டும் –

93 வயதிலும் அவரது அடங்காத ஆர்வத்தையும்,
அரியணை மீதுள்ள ஆசையையும் ஆச்சரியமாகவே
பார்க்கத் தோன்றுகிறது.

டிமாண்ட் வைத்துக் கொண்டே போனார் கலைஞர்-
திரு ஸ்டாலின் மூலமாக…!!! எந்த கோரிக்கையையும்
யாரும் கவனிக்கவே இல்லையென்றால் என்ன செய்வார்..?

பாவம் … கேட்போர் யாரும் இல்லை –
காங்கிரஸ் திருநாவுக்கரசு முறைத்துக் கொண்டு நிற்கிறார்.
வைகோ எதிர்தரப்பிலிருந்து போட்டுத் தள்ளுகிறார்…

முதல்வரின் உடல்நிலையைக் குறித்த,
பல வித சந்தேகங்களை எழுப்பி –
ஆன மட்டும் கலகம் விளைவிக்கப் பார்த்தனர்….

கேட்டோ, கேட்காமலோ – டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும்
வந்து உறுதி செய்து விட்டுப் போய் விட்டனர் –
எனவே அந்த யோசனையும் கைகூடவில்லை.

திருவாளர் சுப்பிரமணியன் சுவாமியாவது கை கொடுப்பார்
என்று நினைத்தார்…( சு.சுவாமியின் சட்டமன்ற கலைப்பு
யோசனைக்கு, இந்த நிமிடம் வரை கலைஞர் எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. )

இடையில், அதிமுக அமைச்சர்களில் ஓரிருவரின் பலவீனத்தை
பயன்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்க முயற்சிகள் நடந்தன…
அதுவும் பலிக்கவில்லை.

இப்போது கடைசியாக நம்பியிருப்பது – திமுக எம்.பி.,
திருச்சி சிவா அவர்களின் உயிர் நண்பியான
திருமதி சசிகலா புஷ்பா அவர்களை….

3e4b4b8f-47ba-4634-9a96-ce2bb9f88128

ஆம் – என் கட்சித்தலைவி (முதல்வர்) என்னை
அவரது வீட்டில் வைத்து கன்னத்தில் அறைந்தார் –

என் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு,
ஒரு அறையில் அடைத்து வைத்து,
என் குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தடுத்தனர் –

என்றெல்லாம் பாராளுமன்றத்தில் புகார் சொன்ன
அதே சசிகலா புஷ்பாவைத் தான்..

எப்படி…? அவரது பேட்டியை பாருங்களேன்…!

சன் மற்றும் கலைஞர் டிவியின் சார்பில்
இன்று காலை டெல்லியில் திருமதி சசிகலா புஷ்பா
அவர்களின் வீட்டில் ஒரு செய்தியாளர்களின் பேட்டி
ஏற்பாடு செய்யப்பட்டது….
(பேட்டியின் இறுதியில் மேடத்தின் சார்பாக “கவர்”
கொடுக்கப்பட்டிருக்கிறது… உள்ளே என்ன இருந்தது,
எவ்வளவு இருந்தது என்பது, இரண்டொரு நாட்களில் –
பங்கேற்ற செய்தியாளர்களில் யாராவது போட்டுக்
கொடுக்கும்போது தெரிய வரும்…)

கேள்வி, பதில்களை தயாரித்துக் கொடுத்தார் சன்
செய்திகளின் ராமகிருஷ்ணன். சுமார் முக்கால்
மணி நேரத்திற்கு நடைபெற்ற நிகழ்வை இதற்குள்ளாகவே
சன் செய்திகள் 3 தடவையும், கலைஞர் செய்திகள்
2 தடவையும் ஒளிபரப்பி விட்டன….!!!

அப்படி சசிகலா புஷ்பாவை வைத்துக் கொண்டு
என்ன செய்து விட முடியும் என்கிறீர்களா…?
( அதே பழைய மனோகரா திரைக்கதையை
நினைவூட்டுகிறது… கலைஞரால் அந்த ஸ்டைலிலிருந்து
வெளியே வர முடியாது… பாவம், ஸ்டாலினுக்கு
இந்த ” கலை ” எல்லாம் வரவே வராது…! )

திருமதி சசிகலா புஷ்பா பேட்டியில் உதிர்த்தவை –

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்திருக்கும் “நோய்”
தானே வந்ததா அல்லது அவருடன் இருப்பவர்களால்
வரவழைக்கப்பட்டதா…?

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்கள்
யாருக்குமே தெரியவில்லை. ராகுல் காந்தி, ஸ்டாலின்
போன்றவர்களுக்கும் கூட தெரிவிக்கப்படவில்லை.
இதில் அப்படி என்ன ரகசியம்…?

இவர்கள் (?) யார் முதல்வர் ஜெயலலிதாவின்
உடல்நிலை குறித்த தகவல்களை மறைப்பதற்கு ?

இவர்களை நிச்சயம் அதிமுக தொண்டர்கள்
துரத்தத்தான் போகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல் நலம்
சரியில்லாமல் போனதன் பின்னணியில் சதி இருக்கலாம்
என்று நான் சந்தேகிக்கிறேன். இதற்கு என்ன காரணம்
என்பது பற்றி சிபிஐ விசாரணை தேவை.
நானே மத்திய அரசுக்கு இது குறித்து புகார் கொடுப்பேன்.

அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
இதுவரை பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.
கூடிய விரைவில், அதிமுக தொண்டர்கள்
அப்பல்லோ மருத்துவமனைக்குள் நுழைந்து
சசிகலாவையும் அவரது உறவினர்களையும்
அடித்து துரத்தத்தான் போகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து சசிகலா மற்றும் உறவினர்களை
அடித்து துரத்த அதிமுகவினர் முன்வர வேண்டும்…!!!

அதிமுகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்
உடனடியாக வெளி வர வேண்டும். கட்சியை காப்பாற்ற
அவர்கள் முன் வர வேண்டும். ஏற்கெனவே,
என்னிடம் சில தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் அதிருப்தியை கூறுகிறார்கள்.

இனியாவது அவர்கள் தைரியமாக, வெளிப்படையாக
வெளியே வந்து பேச வேண்டும்.

—————

“கரிகாலன்” மீண்டும் குறி வைத்திருக்கிறார்…

கலகம் பிறக்குமா…?
கட்சி உடையுமா…?
அரியணை கிடைக்குமா…?

” கரிகாலன் வைத்த குறி தப்பாது ”
– என்பது அவரே முன்பு எழுதியிருக்கும் வசனம்….!!!

இப்போது எப்படியோ…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to கலைஞரின் அடுத்த அம்பு – திருமதி சசிகலா புஷ்பா ….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! // கலைஞரின் அடுத்த அம்பு – திருமதி சசிகலா புஷ்பா ….!!! // இவர்விட்டுப் பார்க்காத அம்புகளா .. ? திருமதி .? சசிகலா புஷ்பா வெல்லாம் சும்மா சாதாரண முனை மகிழுங்கிப்போன அம்பு …. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. நீங்கள் இந்தஇடுகையை ஒரு முக்கிய நல்லநாளில் தான் வெளியிட்டு உள்ளீர்கள் …. ஏனென்றால் …

  இதே ” அக்ட் 10 — 1972 ” ஒரு அருமையான நாள் — தமிழக மக்களுக்கு …. ! ஆனால் தி.மு.க.வுக்கும் — கலைஞர் அவர்களுக்கும் கேடு பிடித்த தினம் — இதே நாளில் அன்று தான் திரு எம்.ஜி.ஆர் . அவர்களை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றினார் கலைஞர் — அதே புத்தி — அதே கெட்டஎண்ணம் 44 ஆண்டுகளுக்கு பிறகும் அவருக்கு இருக்கிறது என்பது தான் அவருடைய சிறப்பு … வேறு எதை எதிர்பார்க்க முடியும் அவரிடம் …

  அன்று இருந்த அதே பதவி வெறி — இந்த தள்ளாத { எதையும் தள்ளாத } வயதிலும் இருப்பது அவருக்கே உரித்தான – ஆசை — // ” கரிகாலன் வைத்த குறி தப்பாது ”
  – என்பது அவரே முன்பு எழுதியிருக்கும் வசனம்….!!! // 1972 – ல் அவர் வைத்த குறி ” எப்படி தப்பி அவரையே பூமராங் ” போல தாக்கி புலம்ப வைத்ததோ — அதைப்போலவே மீண்டும் நடக்கும் — உயிர் இருக்குவரை புலம்பியே — விம்மியே — வெதும்பியே — இருக்க வேண்டும் என்று இருந்தால் யாரால் — மாற்ற முடியும் … ?

  • B.V.Subramanian சொல்கிறார்:

   உண்மை தான். ஆனால், இவர் தான் அவதிப்படுவதோடு,
   மற்றவர்கள் நிம்ம்தியையும் குலைக்கிறாரே ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   கலைஞரின் வயிற்றெரிச்சலின் இன்றைய வெளிப்பாடு –

   திமுக தலைவர் கலைஞர்
   உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம்:

   ————–

   ”நான் உனக்கு மடல் எழுதி இரண்டு மூன்று நாட்கள்
   ஆகிவிட்டன! தமிழக அரசு என்ற ஒன்று செயல்பட்டால் தானே, அதிலே உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதிட முடியும்.

   செயல்படாமல் விட்டு விட்டால், பிறகு எதைப் பற்றி எழுதுவார்கள் என்று நினைத்து, தமிழக அரசை செயல்படவிடாமலே அப்படியே போட்டு விட்டார்கள்.”

   ————–

   – ஆக இவர் எழுதினால், அது தமிழக அரசை குறை சொல்வதற்காகவே இருக்கும் என்று ஒப்புக்கொண்டு விட்டார்.

   93 வயதான, 11 முறை எம்.எல்.ஏ.வான, தமிழகத்தின்
   அதிமூத்த தலைவரான இவரையும் சேர்த்து
   தமிழக சட்டமன்றத்தை ஆறு மாதங்களுக்கு
   சஸ்பெண்ட் செய்து விட ஆலோசனை கூறிய
   திருவாளர் சுப்பிரமணிய சுவாமியைப் பற்றியும்,
   அவரது அரிய ஆலோசனையைப் பற்றியும்
   கூட இவர் கவலையே படவில்லை…
   ஒரு வார்த்தை கூட கூறவில்லை –

   இப்போது அவரே விளக்கி விட்டார் –
   தமிழக அரசு எதாவது தப்பு செய்யும் என்று
   காத்திருந்து 3 நாட்களை
   வேஸ்ட் பண்ணி விட்டாராம்….. 🙂 🙂

   நீங்கள் சொல்வது போல் –
   ” இருக்கும்வரை புலம்பியே — விம்மியே — வெதும்பியே —
   இருக்க வேண்டும் என்று இருந்தால்
   யாரால் — மாற்ற முடியும் … ?”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. A.K. Srinivasan சொல்கிறார்:

  Useless interview. The comments received from Thiru. Selvarajan are very much appreciable. He is
  giving the details with proof, against the postings of Thiru K.M. I like his comments.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநிவாசன்,

   நண்பர் செல்வராஜனின் பின்னூட்டங்கள் –
   உங்களுக்கு மட்டும் தானா பிடிக்கிறது… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. drkgp சொல்கிறார்:

  Dear KMji,

  I humbly request you not to give space to characters like this one.
  Just by showing light on these perverted beings we lengthen their political existence.
  The print and electronic media here have their own reasons for creating
  a mountain out of THIS moth hill . Social media should ignore such pathological
  specimens. Of course it is your blog and your choice is final.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக drkgp,

   நீண்ட நாட்கள் ஆயின – உங்களைப் பார்த்து…!

   நீங்கள் சொல்வது போல், இந்த மாதிரி பிறவிகளுக்கு நாம்
   முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
   என்னுடைய கருத்தும் அதே தான்.

   அதே சமயத்தில், அதன் பின்னணியில், இவர்களைப் போன்றவர்களை
   யார் promote செய்கிறார்கள், அவர்களின் உள்நோக்கம் என்ன
   என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே
   இந்த இடுகை எழுதப்பட்டது.

   தங்கள் கருத்துக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  // மேட்டூர் அணைக்குள் இறங்கி ஆய்வு செய்த காவிரி வல்லுநர் குழு ! பவானி சாகரையும் பார்வையிட்டது!! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-minister-meets-cauvery-technical-team-264654.html — இந்த செய்தியில் :– // இன்று காலை இக்குழுவினரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கான காவிரி நீர் தேவை குறித்த மனுவை காவிரி குழுவிடம் அவர் கொடுத்தார். தமிழக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய இந்த குழுவினர் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை இக்குழு ஆய்வு செய்தது. // என்று உள்ளது — ஆனால் திரு கலைஞர் அவர்கள் வழக்கம் போல அவரது வேலையை காட்டுகிறார் அது இன்றைய செய்தி : — // தமிழக பிரச்சினைகள் குறித்து அரசின் நிலை பற்றி மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் – கருணாநிதி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/m-karunanidhi-statement-issues-about-tamil-nadu-state-govern-264723.html — இதில் அவர் கூறுவதற்கும் மேலே உள்ள செய்திக்கும் தொடர்பு இல்லாதது போல // காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட மத்திய உயர் மட்டக் குழு, தாங்களாகவே மேட்டூர், பவானி அணைகளுக்குச் சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் சார்பில் அவர்களை வரவேற்று, அழைத்துச் சென்று, நம்முடைய நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறதா? அந்தக் குழுவினரை அழைத்துச் சென்று தமிழகத்திலே உள்ள பல்வேறு விவசாயச் சங்கத்தினரைச் சந்திக்க வைத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்க வைத்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் மாநிலத்தில் ஒரு செயல்படும் அரசு வேண்டும்.// —– என்று விடாப்பிடியாக தன் பல்லவியை பாடுவது — ஏற்புடையதா .. ? ஊடக செய்திகளை இவர் பார்ப்பதில்லையா …. ? இந்தக் குழு சென்ற அனைத்து பகுதிகளிலும் ” பல விவசாய சங்கத்தினர் ” – சந்தித்து தங்களது மனுக்களையும் — கோரிக்கைகளையும் கொடுத்தது இவருக்கு தெரியாதா … ? ஏன் எந்த கபட நாடகம் போடுகிறார் … ? ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்றா … ? ஒரு மூத்த — தேர்ந்த அரசியல்வாதியின் பொய்யும் — புரட்டும் என்னும் எத்தனை நாளைக்கோ … ?

 5. Doha Tamilan சொல்கிறார்:

  //இடையில், அதிமுக அமைச்சர்களில் ஓரிருவரின் பலவீனத்தை
  பயன்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்க முயற்சிகள் நடந்தன…
  அதுவும் பலிக்கவில்லை.// Why blood?…same blood….!!
  Thanakku Vanthaa raththam..aduththavanukku vanthaa thakkaali chutney….
  What a contradiction Mr. KM..!!

  //இப்போது கடைசியாக நம்பியிருப்பது – திமுக எம்.பி.,
  திருச்சி சிவா அவர்களின் உயிர் நண்பியான
  திருமதி சசிகலா புஷ்பா அவர்களை….//

  Is it same like Jeya & Sasi..?

  • B.V.Subramanian சொல்கிறார்:

   செல்வராஜன் அவர்களே,

   // ஒரு மூத்த — தேர்ந்த அரசியல்வாதியின் பொய்யும் —
   புரட்டும் என்னும் எத்தனை நாளைக்கோ … ?//

   தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க
   Doha Tamilan போன்றவர்கள் (மேலே பின்னூட்டம் )
   இருக்கும் வரை – இந்த பொய்யும் புரட்டும் இருக்கத்தான் செய்யும்.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சசிகலா புஷ்பா கலைஞரின் அம்பு என்று
  சொன்னதை கலைஞரே இன்று நிரூபித்து விட்டார் –

  கலைஞர் அறிக்கை –

  ‘ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்’ என்று
  முதல்வரே கோப்பில் கையெழுத்திட்டாரா?’
  – கருணாநிதி

  முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப்
  போட்டு காரியங்கள் நடப்பதாக – அ.தி.மு.க. வின்
  சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம் வரை
  உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே
  குற்றஞ்சாட்டியிருக்கிறாரே…!!!
  – கருணாநிதி

  கலைஞருக்கு ஆத்திரமும், அவசரமும் தாங்கவில்லை –
  இவ்வளவு சீக்கிரம் உண்மையை போட்டுடைத்து
  விட்டாரே ….!!!

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • selvarajan சொல்கிறார்:

   அய்யா … ! சசிகலா புஷ்பா அவர்களுக்கும் — கலைஞர் அவர்களுக்கும் உள்ள தொடர்பும் — போலி கையெழுத்துப் பற்றியும் : — // போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்…சசிகலா புஷ்பா மீது நமது எம்.ஜி.ஆர் தாக்கு! //
   Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-daily-slams-sasikala-pushpa-264810.html — படித்துப் பாருங்கள் … !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.