ஸ்டாலின் அவர்களும், ஆரோகணம், அவரோகணமும்….!!!

mks

திருவாளர் ஸ்டாலின் அவர்கள் முதலில் சொன்னது –

1) காவிரி பிரச்சினையில் தமிழக அரசு
அனைத்துக் கட்சி
கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்….

அடுத்து சொன்னது –

2) இன்னும் இரண்டொரு நாட்களில் ஆளும்கட்சியான
அதிமுக இதைச் செய்யவில்லையென்றால் –
எதிர்க்கட்சியான திமுகவே முன்னின்று செய்யும்…..

கொஞ்சம் கழித்து சொன்னது –

3) நாங்கள் சர்வ கட்சி கூட்டம் கூப்பிட்டால் –
அதிமுகவும், பாஜகவும் வராது…

( பா.ம.க.மட்டும் வருமா ..?
ம.தி.மு.க. வருமா…?
வி.சி.க. வருமா….?
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வருமா…?
விஜய்காந்த் வருவாரா…?
நேற்றைய திருநாவுக்கரசரின் பேச்சைப் பார்த்தால் –
காங்கிரஸ் வருமா…? )

இன்னும் கொஞ்சம் கழித்து சொன்னது –

4) ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் சேர்ந்து
டெல்லி சென்று பிரதமரையும், தேவைப்பட்டால்
ஜனாதிபதியையும் கூட சந்திப்போம்…

கடைசியாகச் சொல்லி இருப்பது –

5) இன்னும் சில நாட்களில் திமுக எம்.பி.க்கள்
பிரதமரை நேரில் சந்திப்பார்கள்….

ஏழு ஸ்வரங்களில் இன்னமும் இரண்டு
பாக்கி இருக்கின்றன….

பின் குறிப்பு –

எனக்கு இசையை ரசிக்கத் தான் தெரியும்…
இசை இலக்கணம் அதிகமாகத் தெரியாது.
இருந்தாலும் எனக்குத் தெரிந்ததிலிருந்து கொஞ்சம்…

————-

கர்நாடக இசையில் ஆரோகணம் அவரோகணம்
என்று இரண்டு சொல்வார்கள்.
அப்படி என்றால் என்ன என்கிறீர்களா?

தமிழ் திரைப்படங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்.
கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட படங்களில் எல்லாம்

ஹீரோவும், ஹீரோயினும்
அல்லது ஹீரோவும் காமெடி வில்லனும் –
போட்டி பாடல் பாடும் போது –

ஆரம்பத்தில் இந்த ச, ரி, க, ம, ப, த, நி, ச… என்று
படிப்படியாக ஏற்றியபடியே ஒரு முறை பாடுவார்கள்.

அப்புறம் சா, நி, த, ப, ம, க, ரி, ச…
என்று இறக்கிப்பாடுவார்கள்.

அவைதான் ஆரோகணம் அவரோகணம் .
முதல் சுற்றில் ஏற்றிப் பாடுவது ஆரோகணம்.
இரண்டாவது சுற்றில் இறக்கிப்பாடுவது அவரோகணம்.

ஆரோகணம், அவரோகணம் இரண்டும் கலந்து தான்
எந்த ஒரு பாடலையும் அமைக்க முடியும்.
அதாவது ஏற்ற இறக்கத்துடன்.
ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பாடுவது மிகவும் சிரமம்…

ஆரோகணம் மட்டும் எடுத்துக் கொண்டு
அதை ஒரு சவால் மாதிரி இசையமைத்தவர்கள்
நம் காலத்தில் -இரண்டு பேர்.

ஒருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்….
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும்
“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்”
பாடல் அப்படி ஒரு வித்தியாசமான பாடல்.

இன்னொருவர் இசைஞானி இளையராஜா அவர்கள்…
“சிந்து பைரவி” படத்தில்
“கலைவாணியே உனைத்தானே,
அழைத்தேன், உயிர்த்தீயை” என்று சிவகுமார்
குடியிலிருந்து மீண்டு இசைமேடைக்கு வரும் சமயத்தில் பாடுவதாக அமைத்திருப்பார்.

இவை இரண்டுமே ஆரோகணத்தை மட்டுமே
எடுத்துக் கொண்டு பாடியதற்கு உதாரணங்கள்…

ஆனால், அவரோகணத்துக்கு உதாரணம் – ?

திரு.ஸ்டாலின் முயற்சிக்கிறாரென்று தோன்றுகிறது…

வெற்றி பெற இன்னமும்
இரண்டு ஸ்வரங்கள் பாக்கி இருக்கின்றன…!!!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

ஸ்டாலின் அவர்களும், ஆரோகணம், அவரோகணமும்….!!! க்கு 5 பதில்கள்

 1. Doha Tamilan சொல்கிறார்:

  // காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்….// Mr. KM won’t talk about that…
  We have a lots of medias who write always against the one who point out the mistakes of Government or Jeya. If DMK is an authorized opposition party in this Assembly which was given by the same public who gave CM post to Jeya then let them do their job…What a kind of peoples you are!!!

 2. B.V.Subramanian சொல்கிறார்:

  Doha Tamilan

  மேலே கட்டுரையில் உள்ள அவரோகணத்தைப்பற்றி
  உங்களுடைய கருத்துக்களை கூறுவதை விட்டு விட்டு,
  வேறு எங்கோ ஏன் பாய்கிறீர்கள் ?
  தமிழ்நாட்டு மக்கள் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு
  ஜெ.அவர்களுக்கு ஆட்சி நடத்துவதற்கான அதிகாரத்தை
  கொடுத்திருக்கிறார்கள். அதை ஜீரணிக்க முடியாமல்
  நாள்தோறும் தந்தையும் மகனும் புலம்பிக்கொண்டே
  இருப்பதுஏன். ?
  சுப்பிரமணி சுவாமி செப்பினாரே சட்டமன்றத்தை
  சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று. எதிர்க்கட்சி என்று
  பீற்றிக்கொள்ளும் ஸ்டாலினும், அவர் தந்தையும்
  அதை கண்டிக்காதது ஏன் ? குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்க அந்த யோசனை
  தங்களுக்கு உதவும் என்று தானே ?
  முதலில் சுப்பிரமணி பற்றி அப்பாவும் பிள்ளையும்
  ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்டுவிட்டு பிறகு
  தக்காளி சட்டினிக்கு வரலாம்.

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! திருவாளர் ஸ்டாலின் அவர்கள் — அ .தி.மு.க. எம்.பி –க்கள் அனைவரும் ” கூண்டோடு ராஜினாமா ” செய்ய வேண்டும் என்றும் — தி.மு.க. எம்.பி.– க்கள் பற்றி ” மூச்சு ” காட்டாததும் — எந்த கணத்தில் வரும் என்பதும் ——

  திரு பட்டுக்கோட்டையார் எழுதிய ” குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது
  கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா – தம்பி
  தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா … ” { யாருக்கு — என்ன மருந்து சொல்லுவது … ? } —– என்கிற பாடலில் நீங்க குறிப்பிட்ட ஏதாவது இருக்கிறதா .. இல்லையா … ?

 4. mani சொல்கிறார்:

  Both father and son are desperate to capture power at any cost. that is why they are going on
  issuing statements day after day . but their agenda and that of subramaniasamy is not
  going to succeed as people of tamilnadu and the party AIADMK is solidly behind their chief minister
  who is ailing and hope that she recovers from this temporary setback.

 5. D. Chandramouli சொல்கிறார்:

  KM, thanks for explaining about Arohanam and Avarohanam, in a very simple way and with examples from MSV and IR.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s