ஒரு “சி” ரகசியம்….!!!

.

.

மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் அமைச்சர்
ஒருவர் மீதும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
மீதும் தன்னை ஏமாற்றி தன் சொத்துக்களை
அபகரித்துக் கொண்டதாக திருப்பூரைச் சேர்ந்த
வணிகர் ஒருவர் – செப்டம்பர் 19, 2016 அன்று

புதுதில்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார்
கொடுத்துள்ளார்.

என்ன காரணமோ தெரியவில்லை – இந்த
விவரங்கள் இதுவரை தமிழக செய்தித்தாள்கள்
எதிலும் வெளிவந்ததாக தெரியவில்லை.

புகாரில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்
சுருக்கமாக கீழே –

மனுதாரர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து,
திருப்பூரில் ஒரு ஓட்டல் கட்டுவதற்காக இரண்டரை கோடி
ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார். ஓட்டலை
கட்டி முடிப்பதில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக,
அவரால் உரிய நேரத்தில் தவணைகளை திருப்பிச்செலுத்த
இயலவில்லை.

எனவே கடன் திரும்ப வராத நிலையில் ஓட்டலை
முடங்கிய சொத்தாக (NON PERFORMING ASSET – NPA)
வங்கி அறிவித்து, ஏல அறிவிப்பையும் செய்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து கடன் வாங்கியவர், சென்னை
உயர்நீதி மன்றத்தையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தையும்
(DEBT RECOVERY TRIBUNAL) அணுகி, 64 லட்சம்
ரூபாய் பணத்தை வங்கியில் கட்டி, ஏலத்தைத் தடுக்க
முயன்றிருக்கிறார்.

64 லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்ட வங்கி
ஏலத்தை ரத்து செய்து விடுவதாக உறுதி கூறியதாம்.

ஆனாலும், மீண்டும் அந்த ஏலம் வேறு வகையில்
செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. பத்து கோடி ரூபாய்
மதிப்புள்ள சொத்து நான்கு கோடி ரூபாய்க்கு ஏலத்தில்
அவசர அவசரமாக கிரயம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

ஏலத்தில் அந்த சொத்தை 4 கோடி ரூபாய்க்கு
வாங்கியவர், அந்நாள் மத்திய நிதியமைச்சரின்
மைத்துனி ( அதாவது, மனைவியின் சகோதரி ) என்று
புகார்தாரர் கூறுகிறார். வாங்கியவரின் சார்பாக,
சட்ட ஆலோசனைகளை தந்து அவருக்கு
வழக்குரைஞராக செயல்பட்டவர், அவரது சகோதரியும்
மத்திய அமைச்சரின் மனைவியும் ஆவார் என்றும்
புகார்தாரர் கூறுகிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு அந்த முன்னாள்
மத்திய நிதியமைச்சரே, தனது மைத்துனியால்
திருப்பூரில் வாங்கப்பட்ட அந்த ஓட்டலை
திறந்தும் வைத்தாராம்.

மனுதாரர், தனது சொத்து, சட்டத்தை துஷ்பிரயோகம்
செய்து, முறையற்ற விதத்தில், அதிகாரத்தில்
உள்ளவர்களால் அபகரித்துக் கொள்ளப்பட்டது என்று
புகார் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கக்கோரி இருக்கிறார்.

தனது புகாருடன் அதற்குத் துணையாக, பல
ஆவணங்களையும் அவர் இணைத்திருக்கிறார்.

அவற்றில் இரண்டு மட்டும் கீழே தரப்பட்டுள்ளது;
அவரது புகார் மனு மிகவும் நீண்டதாக இருப்பதால்,
தனியே அடுத்த பகுதியில் தரப்படுகிறது.

இது தனிப்பட்ட ஒரு நபரின் புகார் என்பதால்,
இது எந்த அளவு உண்மை, எந்த அளவு
மிகைப்படுத்தப்பட்டது என்பது குறித்தெல்லாம் நமக்கு
தெரியாது.

இருந்தாலும், இது மறைமுகமான ஒரு
அதிகார துஷ்பிரயோகம் குறித்த செய்தி என்பதாலும் -பொதுவெளியில் வந்து விட்டமையாலும்,
இதுவரை மறுக்கப்படாததாலும்
இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன்
மறுப்பு தெரிவித்தால், அதையும் இங்கே பகிர்ந்து கொள்ள
நாம் தயாராக இருக்கிறோம்.

reply-to-kathirvel

news-report-on-hotel-inauguration

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s