2006 -க்கும் 2016 -க்கும் – விசாரணையில் உள்ள வித்தியாசங்கள்….!!!

ஆற்காடை மறந்து போனவர்களுக்காக - கலைஞரின் இடதில் இருப்பவர் தான் கலைஞரின் வலது கரமாக அந்நாட்களில் செயல்பட்ட ஆற்காட்டார்

ஆற்காடை மறந்து போனவர்களுக்காக –
கலைஞரின் இடதில் இருப்பவர் தான்
கலைஞரின் வலது கரமாக அந்நாட்களில் செயல்பட்ட ஆற்காட்டார்

நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கைப் பற்றி
விவாதிக்கலாமா…? “எந்த நிலையில்..?” என்கிற
கேள்விக்கு கிடைக்கும் பதில் இதனை தீர்மானிக்கும்…

கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பு வந்து விட்டது.
மேல் முறையீட்டிற்கு போயிருக்கிறது. எனவே,
மேல் கோர்ட்டில் விசாரணை நிலுவையில் இருக்கும்போது,

அதில் விசாரித்து ஆராயப்பட வேண்டிய விஷயத்தைப் பற்றி
பொது மேடையில் விவாதிப்பது, வழக்கு விசாரணைக்கு
வரும்போது, அந்த விசாரணைக்குகூடுதல் பலம் சேர்க்கும்;
எனவே விவாதிப்பதில் எந்த தவறும் இல்லை….
என்பது என் கருத்து. அதனை, தவறு என்று நீதிமன்றம்
கூறினால், சிரமேற்கொண்டு ஏற்போம்.

விஷயம் – தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து
தேர்தல்களைப் பற்றியது தான்.

திமுகவினர், கீழ்மட்டத்தில் ஆர்வமாக இருந்தாலும் கூட
திமுக தலைமைக்கு தேர்தலை சந்திப்பதில் தயக்கம்
இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

எதைச்சொல்லியாவது, எந்த காரணத்தை முன்வைத்தாவது,
தேர்தலை ஒத்திப்போடுவதையே திமுக தலைமை
விரும்புகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, துவக்கத்தில் அவர்கள் மிக
ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் தற்போது முதல்வர்
உடல்நலம் குன்றி இருக்கும்போது அவர்களும் தேர்தலில்
ஆர்வமின்றி இருக்கிறார்கள்.

ஜூனியர் விகடனில் 2006 பஞ்சாயத்து தேர்தலில்
நிகழ்ந்தவை பற்றி ஒரு விவரமான கட்டுரை வந்திருக்கிறது.
அதில் ( அபூர்வமாக ) திமுக தரப்பில் நிகழ்த்தப்பட்ட
அட்டூழியங்களை எல்லாம் விவரமாக விவரித்திருக்கிறார்கள்.

அப்போது நிகழ்ந்த வழக்கில் –
சம்பந்தப்பட்ட நீதிபதிகளைப்பற்றி,
அந்நாள் திமுக முன்னணி அமைச்சர்
திருவாளர் ஆற்காடு வீராசாமி உதிர்த்த வார்த்தைகளையும்,

அவருக்கு ஆதரவாக திமுக தலைவரும்
அப்போதைய முதல்வருமான கலைஞர் கருணாநிதி
எடுத்த அருவருப்பான நிலைகளையும் முற்றிலுமாக
மறந்து விட்ட இன்றைய வாசக நண்பர்களுக்கு ஒரு
நல்ல நினைவூட்டலாக இந்த கட்டுரை அமைந்திருக்கிறது….

முதலில் கட்டுரையை படிப்போமே –

panchayat-1a

panchayat-2a

panchayat-3a

panchayat-3b

சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக,கீழ் கோர்ட் தீர்ப்பில்
சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.

1) திமுக சார்பில் எந்த கோரிக்கைக்காக வழக்கு
போடப்பட்டதோ, அந்த கோரிக்கை அதே கோர்ட்டால்
நிராகரிக்கப்பட்டு விட்டது.

2) கோரிக்கையில் எழுப்பப்படாத –
நீதிமன்றத்தின் முன்வைக்கப்படாத –
ஒரு விஷயத்தை, நீதிமன்றம் தானாகவே விவாதத்திற்கு
எடுத்துக் கொண்டு, அதன் மீது தீர்ப்பும் சொல்லி விட்டது.

3) வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத,
மன்றத்தில் வெறும் பார்வையாளராகவே அமர்ந்திருந்த
ஒரு வக்கீல் ( திரு.ஜோதி ) –

இடையே புகுந்து, வழக்கில்
எழுப்பப்படாத ஒரு கருத்தைப் பற்றிய விவாதத்தில்
ஈடுபட்டு, அதன் விளைவாக நீதிபதி தேர்தல்களை
ஒத்திவைக்கக்கூடிய முடிவினை எடுப்பதற்கு
காரணமாகிறார்….!!!

திரைப்படத்துறையில் சில வித்தியாசமான
நடைமுறைகளை பார்க்கலாம்….
சில திரைப்படங்களில் க்ளைமாக்சை முதலில்
தீர்மானித்து விடுவார்கள். பின்னர் அதற்கு தகுந்தாற்போல்
திரைக்கதையை எழுதுவார்கள். அந்த க்ளைமாகஸுக்கு
தகுந்தாற்போல், திரைக்கதையை நகர்த்திக் கொண்டு
செல்வார்கள்….

இங்கு திமுகவைச் சேர்ந்த வக்கீல் ஜோதி –
( இந்த குறிப்பிட்ட வழக்கில் அவர் யார் சார்பிலும் வாதாட
நியமிக்கப்படவில்லை…அப்படி இருக்கையில் அவர் எப்படி
அந்த வழக்கில் தானாகவே புகுந்து வாதாடினார்…?
யார் சார்பிலும் வக்காலத்து நாமா அளிக்கப்படாத
அவரை விவாதத்தில் நுழைய நீதிமன்றம் எப்படி
அனுமதித்தது..?

ஒருவேளை நீங்களோ, நானோ – அங்கே பார்வையாளராக
சென்றிருந்து, வழக்கின் குறுக்கே புகுந்து
” சார்., நான் ஒன்று சொல்லட்டுமா..?”
என்று கேட்டால் என்ன நடக்கும்…?

வழக்கில் எழுப்பபடாத –
வழக்கிற்கு அடிப்படையாக அமையாத –
ஒரு விஷயத்தை ( issue ) அவர் எழுப்பவும்,
அதை விவாதத்திற்கு உள்ளாக்கவும், இறுதியில்,
அதையே முக்கிய காரணமாக காட்டி தேர்தலுக்கு தடை
விதிக்கப்பட்டதும் ஒரு சூழல் உருவானது எப்படி …?

உயர்நீதிமன்றத்தில், மீண்டும் இந்த வழக்கு
மேல்முறையீட்டில் வரும்போது – இந்த விஷயங்கள்
எல்லாம் ஆராயப்படும் என்று நம்புவோம்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 2006 -க்கும் 2016 -க்கும் – விசாரணையில் உள்ள வித்தியாசங்கள்….!!!

 1. Balachandar சொல்கிறார்:

  Sir,
  Looks like you have studied this in detail.
  1, You have recalled similar situation in the past and DMK reaction for the same with document evidence.
  2. Even in the current situation, you have shared an Info (regarding Lawer Jothi).

  I see that you are doing this often in a lot of articles where do you get all such information from ?. Thanks for sharing.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாலசந்தர்,

   “source” ஐ சொல்லலாம் என்று தோன்றுகிற
   இடுகைகளில் எல்லாம் – அடிப்படை ஆதாரம் எது
   என்பதை அந்தந்த இடுகைகளிலேயே சொல்லி விடுகிறேனே…

   மேற்படி செய்திகள் ஜூனியர் விகடனில்
   வந்தவை என்று மேலே இடுகையிலேயே
   சொல்லி இருக்கிறேனே.

   சொல்வது பொருத்தமாக இருக்காது
   அல்லது அவசியம் இல்லை
   அல்லது வேறு சில பிரச்சினைகளை உண்டாக்கும்,
   அல்லது தகுதியற்றவர்களுக்கு அது
   விளம்பரம் தந்து விடும் –
   என்கிற நிலைகளில் – சொல்வதை தவிர்த்து விடுகிறேன்.

   ஆனால், நிச்சயமாக – அடிப்படையாக
   ஆதாரம் எதுவும் இல்லாத செய்திகள்
   எதையும் நான் எழுதுவதில்லை.
   செய்திகள் வேறு – எனது கருத்துக்கள் வேறு.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா!!!கீழ் கண்ட பதிவு எனது முகநூலில் வந்தது இது குறித்து உண்மை தன்மை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
  நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு…
  நரேந்திரமோடி அதிரடி!

  மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

  இது தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள தேசிய நீர் கட்டமைப்பு மசோதாவில், ஆறு, நதிகள் பாயும் மாநிலங்கள், நீரை சுமூகமாக பங்கீட்டு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  ஒரு நதி எந்தெந்த மாநிலங்கள் வழியாக பாய்கிறதோ, அந்த மாநிலங்கள் அனைத்திற்கும் அந்த நதி நீரில் சம உரிமை உண்டு என்றும், அதனை பொது சொத்தாக கருத வேண்டும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையை நிர்வகிக்கவும், ஆற்று படுகைகளில் மேம்பாட்டிற்காகவும் தனியாக நதிநீர் படுகை ஆணையம் அமைக்கவும் மசோதா வழி செய்கிறது.

  நீர் வரத்து, இருப்பு, பங்கீடு தொடர்பான தகவல்களை ஒளிவுமறைவின்றி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேல் பகுதியில் உள்ள மாநிலம், நதிகள் பாயும் வழியில் ஏதாவது திட்டத்தை நிறைவேற்ற விரும்பினால், அதுபற்றி கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலத்துடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

  மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின், இந்த தேசிய நீர் கட்டமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. காவிரி நீர் பிரச்னையில் தமிழகம், கர்நாடகம் இடையே பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
  Source:News7

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.