இனி காவிரி பிரச்சினை தீர்ந்து விடும் – கனிமொழியும், ஸ்டாலினும் – தனித்தனியே ஏற்பாடு…..!!!

.

முதல் செய்தி –

திருவாளர் ஸ்டாலின் அவர்கள் கோட்டைக்கு
சென்று, நிதியமைச்சர் திரு.பன்னீர்செல்வம் அவர்களை
திடீரென்று சந்தித்து பேசினார் –

stalin_ofc_3044498f

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின்,
“நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தமிழகத்தை சேர்ந்த
பல்வேறு விவசாய அமைப்புகளை அழைத்து காவிரி
விவகாரம் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி,

அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்,
இன்று நிதியமைச்சர் அவர்களை சந்தித்து, அந்த கூட்டத்தில்
பங்கேற்ற விவசாய சங்க நிர்வாகிகளின் கையெழுத்துகள்
அடங்கிய தீர்மானத்தின் நகலை வழங்கினேன்.

முதலாவதாக,
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இரண்டாவதாக,
தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை
கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும்.

மூன்றாவதாக,
தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்துக்
கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் என

அத்தனைபேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று
பிரதமரை சந்தித்து, அவர்களுக்கு அழுத்தம் தர வேண்டும்

-என்கிற மூன்று தீர்மானங்களை வலியுறுத்தி,
நேற்றைக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை

நிதியமைச்சரிடத்திலே வழங்கியிருக்கிறோம்.
அவர் ( பிரதமரை சந்திக்க…? )
ஆவன செய்வாரென்று நம்புகிறோம்…!

————

அண்ணன் ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில்
அனைத்து விவசாயிகள் சங்கத்தை கூப்பிட்டு கூட்டம்
போட்டதும்,

கோட்டைக்கு சென்று நிதியமைச்சரிடம் பெட்டிஷன்
கொடுத்ததும் –

தங்கைக்கும்,
தந்தைக்கும் –
எப்படி தெரியும்….?

எனவே, தந்தையும் கட்சியின் தலைவருமான
கலைஞரின் உத்திரவுப்படி, தங்கை கனிமொழி
காலையில் கிளம்பி, டெல்லிபோய் விட்டார் –
ஜனாதிபதியை சந்தித்துப் பேச.

அந்த செய்தி கீழே –

kanimozhi_10134

திருமதி கனிமொழியின் தலைமையில் (?),

திமுக எம்.பி.க்கள்-
டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர்
இன்று மாலை ஜனாதிபதியை நேரில் சந்தித்து,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து
வலியுறுத்த இருக்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில்,

எம்.பி.கள் குடியரசுத்தலைவரை சந்திக்க இருப்பதாக
கனிமொழி எம்.பி சென்னை விமானநிலையத்தில்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

———————

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும்
வழக்கு வருகிற திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில்
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு வந்தால்
தான் என்ன…?

மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது முற்றிலும்
பாராளுமன்றத்தின் உரிமைக்கு உட்பட்டது – அதில்
சுப்ரீம்கோர்ட் கூட தலையிட முடியாது என்று
மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டிலேயே தெரிவித்தால்
தான் என்ன …?

பத்து வருடங்களுக்கு மேலாக –
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமதி
கனிமொழி அவரிகளுக்கு –

இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவியில்
இருப்பவர் என்ன செய்ய முடியும்,
எதில் தலையிட முடியும்
அவரது அதிகார வரம்பு என்ன – என்பதெல்லாம்
தெரியாதா என்ன …?

தந்தை சொல்லி விட்டார் –
அண்ணன் போய் பிரதமரை பார்ப்பதற்கு முன்னதாக –
நீ போய் ஜனாதிபதியையே
பார்த்து விடு என்று…

மகள் கிளம்பி வந்து விட்டார்….
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு –
அரசியல் சட்டம் என்ன சொன்னாலென்ன..?
தனது அதிகாரங்கள் எதுவாக இருந்தாலென்ன…?

கலைஞர் மகள் சொன்னால் போதாதா – என்ன ?
காவிரி பிரச்சினையை உடனே தீர்த்து விடுவார் ….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இனி காவிரி பிரச்சினை தீர்ந்து விடும் – கனிமொழியும், ஸ்டாலினும் – தனித்தனியே ஏற்பாடு…..!!!

 1. selvarajan சொல்கிறார்:

  // காவிரிக்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டி என்ன பயன் கிடைக்கும்? சீறும் தமிழிசை சவுந்தரராஜன் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-opposes-dmk-s-move-all-party-meet-on-cauvery-265011.html // இந்த பக்கம் இந்த அம்மணி இப்படி சொல்லுது … அந்த பக்கம் அந்த ” வானளாவிய ” புகழ் பெற்ற பாப்பா ஜனாதிபதியை பார்க்கப் போகுது …. நடுவுல அண்ணன்பிரதமரை சந்திக்க இருக்கிறார் … திங்கள் கிழமை [ 17- 10- 2016 ] ” துலா காவிரி புண்ணிய ஸ்நானம் ” வருது … கர்நாடகாவில் // காவிரியில் நீதி கிடைக்கவில்லையாம்… மைல் கற்களில் இந்தியை அழித்து கன்னட அமைப்பினர் போராட்டம் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/anti-hindi-agitation-karnataka-over-cauvery-issue-264965.html – என்று செய்தி வருது … ரொம்பவும் அக்கறையானவர்களை போல காவிரிக்கு ” தண்ணீர் ” காட்ட நினைக்கும் இவர்களின் செயல்களை நிறுத்தி … குட்டையை குழப்பாமல் இருந்தால் அதுவே பெரும் பாக்கியம் — தமிழகத்திற்கும் — காவிரித் தாய்க்கும் — அப்படி தானே …?

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! விகடனில் பொறியாளர் வீரப்பன் அவர்களின் பேட்டியை பிரசுரத்திருக்கிறார்கள் அது :— //
  Posted Date : 16:08 (15/10/2016) Last updated : 17:42 (15/10/2016)
  காவிரி மேலாண்மை வாரியம்… மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! // http://www.vikatan.com/news/coverstory/69709-central-government-cheating-tamilnadu-in-cauvery-management-board-issue.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=5797 பொறியாளர் சொன்னால் என்ன .. ? தமிழக மக்கள் எப்படி போனால் என்ன .. ? முன்பு தூங்கிவிட்டு தற்போது அக்கறையோடு அரசியல்வாதிகள் — பத்திரிக்கைகள் காவிரி பிரச்சனையில் ஆர்வம் காட்டுவது போல பாவ்லா செய்தால் என்ன … ?

  நீங்கள் இடுகையில் கடைசியில் குறிப்பிட்டுள்ளது போல் // மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு –
  அரசியல் சட்டம் என்ன சொன்னாலென்ன..?
  தனது அதிகாரங்கள் எதுவாக இருந்தாலென்ன…?

  கலைஞர் மகள் சொன்னால் போதாதா – என்ன ?
  காவிரி பிரச்சினையை உடனே தீர்த்து விடுவார் ….!!! // தீர்த்து விடுவாரா … ?

 3. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்த நிகழ்வு (கனிமொழி தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தது) காவிரி சம்பந்தமானது இல்லை. இது தற்போதைய நிலையில் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட செக். (ஸ்டாலின் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருப்பார். அவர் கையில் அதிகாரம் வரும்போது தெரியும் கனிமொழி கதி) முதலில் ஸ்டாலின், விவசாய ரெப்ரெசென்டேடிவ்களுடன் பிரதமரைச் சந்திப்பதாகச் சொன்னது நினைவிருக்கலாம். அதனால்தான், அப்பா, உடனே மகளை பிரணாப்பைச் சந்திக்கச் சொன்னது. காவிரிக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

  ஒருவேளை கருணானிதி இன்னும் 5 வருடங்கள் இருப்பாரேயானால், அப்போது, ‘நமது பொருளாளர் ஸ்டாலின் அவர்கள் விவசாயப் பிரதினிதிகளோடு இங்கு உண்ணாவிரதம் இருந்ததும், ரயில் மோதும் என்றெல்லாம் உயிரைப் பற்றி நினையாமல் தண்டவாளத்தின் குறுக்கே ‘நின்று காவிரிப் பிரச்சனை தீரவேண்டுமானால் தன் உயிரையே தரத் தயார் என்று சொல்லும் விதமாக ரயில் மறியல் போராட்டம் நடத்தியதும், கழக ஆணைக்கு இணங்கி, தில்லியில், நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமாக (இங்கு சாமர்த்தியமாக எண்ணிக்கையைத் தவிர்த்துவிடுவார். யாருக்கு 5 வருடங்களுக்கு முன்னால் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள், அதில் எத்தனைபேர் இந்த ஜனாதிபதி சந்திப்பின்போது கழட்டிவிடப்பட்டார்கள் என்பது ஞாபகம் இருக்கும்?) திமுக எம்பி கவிஞர் கனிமொழி அவர்கள் தலைமையில் கழகத்தின் முயற்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பிரணாப் அவர்களைச் சந்தித்து வற்புறுத்தியதும், அந்த அழுத்தங்களின் காரணமாக காவிரித் தண்ணீர் பிரச்சனை தீர்ந்ததும் இங்குள்ள ஆட்சியாளர்கள் மறைத்தாலும், பார்ப்பனப் பத்திரிகைகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்கின்ற நம்மை மறக்கடிக்க நினைத்தாலும், தமிழக மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள் மறந்திருக்க மாட்டார்கள்’ என்று பேசுவார். அதையும், அதே மேடையில் இருக்கும் அல்லக்கைகள் (வேறு யார்? கிவி, திவ….) வழிமொழிந்து பாராட்டுரை நல்குவார்கள். காவிரி, மழை அதிகமாகப் பெய்தான் தஞ்சையை வந்தடையும்.. இல்லாட்டா மீண்டும் போராட்டம்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   //இந்த நிகழ்வு (கனிமொழி தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தது) காவிரி சம்பந்தமானது இல்லை. இது தற்போதைய நிலையில் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட செக். //

   அதே தான் என் கருத்தும்.
   கடந்த சில நாட்களாகவே, கலைஞர், தளபதியை
   கட்டுப்படுத்த முயல்வது நன்றாகவே தெரிகிறது….

   ஆனால், திருவாளர் ஸ்டாலினும் பிழைக்கத் தெரிந்தவர் தான் –
   நாணல் மாதிரி… தேவைப்படும்போது குனிந்து, வளைந்து –
   பின் சட்டென்று நிமிர்ந்து விடுவார்….

   “அவரையை விதைத்தால், துவரையா முளைக்கும்”….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.