என் விருப்பம் – 5 (இசை மேதை ஜி.ராமனாதன் …)

g-ramanathan

என் ஊர்ப்பக்கம்…. பிக்ஷாண்டார் கோயிலைச் சேர்ந்தவர்
இசைமேதை ஜி.ராமனாதன். முறையாக கர்நாடக சங்கீதம்
கற்கவில்லை. அத்தனையும் கேள்வி ஞானம் தான்.
ஆனால், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே
பல அற்புதமான திரைப்படப்பாடல்களை அளித்து
அழியாப்புகழ் கொண்டவர்….

இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.வி, கே.வி.மஹாதேவன் ஆகியோரின் முன்னோடி….
1940-ல் துவங்கி 50 களின் இறுதிவரை தமிழ்த்திரையுலகில்

புகழ்க்கொடி நாட்டியவர். 1963-ல் மறைந்து விட்ட இவரை
என் வயதுக்காரர்கள் இப்போதும் மறக்க மாட்டார்கள்.

இன்றைய இளைஞர்களும், அவரைத் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக –
அவரது நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து –
வித்தியாசமான காம்பினேஷன்களுடன் கூடிய சில
பாடல்கள் கீழே – இன்றைய என் விருப்பமாக….

வடிவேலும் மயிலும் துணை (அம்பிகாபதி)

நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் (மதுரை வீரன்)

நான் பெற்ற செல்வம்

வசந்தமுல்லை போலே வந்து (சாரங்கதரா )

நல்லது சொல்லிடுவேன் – இதைப்பாடி நடித்திருப்பது
இசைமேதை ஜி.ராமனாதன் அவர்களே தான்….!!!
(ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ..)

தீர்த்தக் கரையினிலே – பாரதியாரின் இந்த பாடலை
பாடியவர் டி.எம்.எஸ். அவர்கள்….
வெளியில் அதிகம் தெரியாத விஷயம் –
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள்
பாடுவதற்காக பதிவுசெய்யப்பட்ட இந்த பாடல் –
படத்தில் இடம் பெறவில்லை……!!!

வாராய் நீ வாராய் – மந்திரிகுமாரி

சோறு மணக்கும் சோநாடாம் – அம்பிகாபதி

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

என் விருப்பம் – 5 (இசை மேதை ஜி.ராமனாதன் …) க்கு 16 பதில்கள்

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  மிகவும் அற்புதமான பாடல்கள்

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! அருமையான பாடல்களை கொடுத்ததற்கு நன்றி …. !! முன்பு ஒரு இடுகையில் ” ஆரோகணம் – அவரோகணம் ” பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் — இவைஇரண்டும் ஏழு ஸ்வரங்களிலும் முழமையாக வருகின்ற போது ” சம்பூர்ண ராகம் ” என்று அழைக்கப்படுகிறது — இதைஅருமையாக ” சாருகேசி ராகத்தில் ” கையாண்ட திரு ஜி . ராமநாதன் அவர்களின் இசையில் திரு தியாகராஜ பாகவதர் பாடிய மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் மிகவும் பிரசித்தம் — இந்தப் பாடல் ” சாருகேசி ராகத்தில் ” இசையமைக்கப்பட்டது — இதைக் கேட்ட செம்மங்குடியே நேரில் சென்று பாராட்டினார் என்பது வரலாறு — சாருகேசி– திரு . ஜி. ராமநாதனுக்கு பிரியமான ராகமாகவே இருந்தது என்பது குறிப்பிட தகுந்தது — இவருக்கு பின் இந்த சாருகேசியை அதிகம் பயன்படுத்தி இசையமைத்தவர் — நமது இசைஞானி இளைய ராஜா தான் என்பது குறிப்பிட தக்கது …. கே . வி. மகாதேவனும் நல்ல பாடல்களை இந்த ராகத்தில் இசையமைத்து இருக்கிறார் —

  இளையராஜா இசையில் சில பாடல்கள் :– உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வைச்ச கிளி – படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி — ஆடல் கலையே தேவன் தந்தது – படம் ராகவேந்திரா — பெத்த மனசு பித்ததிலும் – படம் என்ன பெத்த ராசா — நாடு பார்த்ததுண்டா – படம்: காமராஜர் — சின்ன பொண்ணு சேலை – படம் :அறுவடை நாள் — தற்போது நல்ல பாடல்கள் வருவது கொஞ்சம் — கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறதோ …. ?

 3. kaarikan சொல்கிறார்:

  —-இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர்எம்.எஸ்.வி, கே.வி.மஹாதேவன் ஆகியோரின் முன்னோடி….—-

  யார் பேரை முதல்ல சொல்லணும்னே தெரியாத உங்க கிட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும்? நீங்கல்லாம் ஜி ராமநாதன் பத்தி ஏன் எழுதணும்?

 4. B.V.Subramanian சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இந்த மாதிரி ஜென்மங்களுக்கு இப்படியெல்லாம்
  பதில் சொன்னால் உறைக்காது.

 5. B.V.Subramanian சொல்கிறார்:

  அவரது எதிர்பார்ப்பே வேறு.

 6. D. Chandramouli சொல்கிறார்:

  Most of the songs by GR were based on Carnatic ragas, very soothing and melodious. The rendering of the songs by TMS was excellent, not to speak of Sivaji’s majestic acting like in Ambigapathy. Wonderful combination. The songs from 50s and 60s were certainly a treat to the ears. Hmm, that golden era is gone forever. .

 7. ramanans சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்

  இப்பதிவு என் மனதைக் கவர்ந்தது. மிக்க நன்றி.

  ஜி.ராமநாதனின் நூற்றாண்டு சில ஆண்டுகளுக்கு முன்புதான் கடந்து போனது. திரைத்துறையில் யாரும் பெரிதாகக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது உறவினர்கள் பலர் திரைத்துறையில் நாடகம், இயக்கம், இசை என்று முன்னணியில் உள்ளனர். திரைத்துறையினர், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை

  கீழே நான் குறிப்பிட்டிருக்கும்ஜி .ராமநாதனின் இந்தப் பாடல் நம் உள்ளத்தை உருக்கக் கூடியது. அவரே பாடியது. இசை : கே.வி, மகாதேவன் என்பது முக்கியமான ஆச்சரியம். தயாரிப்பும் கே.வி.எம். தான். தான் பாடாமல் ஜி.ஆரைப் பாட வைத்திருக்கிறார். அதுவும் ஒரு குதிரை பாடுவதைப் போல. அப்படிப் பாட ஜி.ராமநாதனுக்கு எந்த அளவுக்குப் பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும். அதுவும் சக இசையமைப்பாளரின் படத்தில்! எனக்கு வியப்பாகவே உள்ளது. அதெல்லாம் ஒரு பொற்காலம் தான் என்று நினைக்கிறேன்.

  இதோ பாடலுக்கான சுட்டி : https://www.youtube.com/watch?v=W11xIDVp9Xw

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.ரமணன்,

   வருக வருக ….
   நீண்ட நாட்களாயிற்று – உங்களைப் பார்த்து…!

   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
   ஜி.ராமநாதன் அவர்களின் உறவினர்கள் என்றதும்
   உடனே நினைவிற்கு வருவது, திரு.எஸ்.வி.சேகர்,
   திரு.மோகன் வைத்யா ஆகியோரின் பெயர்களே….

   கொண்டாட மறந்து தான் போய் விட்டார்கள்.
   அதனாலென்ன – நம்மைப் போன்ற எத்தனையோ பேர்
   அவரை நினைத்துக் கொண்டே தானே இருக்கிறோம்.
   நான் வாரம் ஒருதடவையாவது, அவரது பாடல்கள்
   எதாவதொன்றை நிச்சயம் கேட்பது வழக்கம்.

   நீங்கள் கூறியிருக்கும் “எஜமான் பெற்ற செல்வமே”
   பாடலைக் கூட இந்த இடுகையில் சேர்க்க நினைத்தேன்.
   ஆனால், பின்னர் ஆ.த.வா.அபூர்வ சிந்தாமணியில்
   ஜி.ராமநாதன் அவர்களின் தோற்றத்தை பார்த்ததும்,
   அதுவே சிறந்த தேர்வாக இருக்குமென்று நினைத்தேன்.

   திரு.கே.வி.மஹாதேவன் அவர்களின் master piece ஆக
   நான் நினைப்பது “சங்கராபரணம்” தான்….
   அப்பப்பா – அதற்கு இணையாக எதுவும் இன்னமும்
   வரவில்லை. சங்கர சாஸ்திரி, எஸ்.பி.பி., கே.வி.எம்.
   – அற்புதமான காம்பினேஷன்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • ramanans சொல்கிறார்:

    வணக்கம் சார்

    இங்கே தான் இருக்கிறேன். உங்கள் இடுகையை அவ்வப்போது வாசித்துத் தான் கொண்டிருக்கிறேன். அரசியல் பதிவுகளில் காரமும் சூடும் அதிகமாகவே உள்ளது. இன்றைய நிலைமையும் அப்படித்தான் உள்ளது.

    இதில் யாரை நொந்து என்ன செய்வது?! நான் இறைவனை நொந்து கொள்கிறேன். நிலைமை மாறி எல்லாரும் இல்லாவிட்டாலும் பெரும்பாலனவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக, சமூக ஆர்வமும், தேசபக்தியும் உடையவர்களாக மாற இறைவன் அருள் புரியட்டும்.

    நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள் இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் எல்லாம் நல்லபடியாக மாறும் என்ற நம்பிகையுடன்
    ரமணன்

    நன்றி. உடல் நலம் பேணுக. வணக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s