திரு.ஸ்டாலின் ஏசி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டது உண்மையா ..?

large_whatsapp-image-2016-10-17-at-122821-pm-1238

இன்று மாலை வெளிவந்திருக்கும்
ஒரு செய்தியிலிருந்து சில பகுதிகள் –

——————————————————————-

( http://www.newsfast.in/news/stalin-in-ac-marriage-hall )

இன்று திமுக சார்பில் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து
சென்னையில் மூன்று இடங்களில் ரயில் மறியல்
நடத்தப்பட்டது.

பெரம்பூரில் சேகர்பாபு பொறுப்பில் நடந்த மறியலில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுடன்
மு.க.ஸ்டாலின் ஊர்வலமாக ரயில் மறியல் செய்ய வந்தார்.

பின்னர் பேரம்பூர் ரயில் நிலையத்தில் தடையை தாண்டி
மு.க.ஸ்டாலின் , சேகர்பாபு, ரவிச்சந்திரன், ரங்கநாதன்,
பூங்கோதை ஆலடி அருணா , கிரிராஜன் உள்ளிட்டோருடன்
கைதானார்.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் பல
மண்டபங்களில் அடைத்தனர். மு.க.ஸ்டாலின் மற்றும்
தொண்டர்களை ஓட்டேரியில் உள்ள ஒரு சொகுசு
மண்டபத்தில் வைத்தனர். இந்த மண்டபம் முழ்தும்
ஏசி வசதி செய்யப்பட்டதாகும்.

ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் சாதாரணமாக சமூக
நலக்கூடத்தில் , பெரிய மைதானத்தில் போலீசார் அடைத்து
வைப்பார்கள். தனியார் மண்டபத்தில் பெரும்பாலும்
அடைக்கமாட்டார்கள். அப்படியே அடைத்தாலும் ஏசி வசதி
உள்ள மண்டபத்தை போலீசார் பிடிக்க மாட்டார்கள்.

அப்படி இருக்கும் போது இது எப்படி புது முறையாக
இருக்கிறதே என்று விசாரித்தபோது கடந்த முறை
எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட போது தளபதியை
சாதாரண சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். அதனால் ஏசி
வசதி இல்லாமல் தளபதி தவித்து போய்விட்டார்.

அதனால் இந்த முறை போலீசாரிடம் திமுக மாவட்டம்
பேசியதாகவும், கைது செய்தால் ஏசி மண்டபத்தில் வைக்க
வேண்டும் அதற்கு உண்டான வாடகையை தருவதாக
தெரிவித்ததாகவும் அதன் பேரில் போலீசார் ஏசி மண்டபத்தை
பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

——————————————————————-

திரு.ஸ்டாலின் அவர்கள் ஏசி ஹாலில்
தங்க வைக்கப்பட்டது உண்மையா என்றும்
அதற்கான வாடகையை கொடுத்தது யார்
என்றும் இது குறித்த மேல் விவரங்கள் அறிந்தவர்கள்
யாராவது தெரிவிக்க முடியுமா…?

தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்
என்று கேட்கிறீர்களா…?

வேறெதற்கு – பாராட்டு தெரிவிப்பதற்குத் தான்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to திரு.ஸ்டாலின் ஏசி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டது உண்மையா ..?

 1. HF சொல்கிறார்:

  அவர்கள் போராடதானே செய்தார்கள் அவர்களை ஏன் கொச்சை படுத்துகின்றாய் பார்ப்பினியா அடிமை? குளிர் சாதன வசதி என்பது இன்னைறைய காலகட்டத்தில் நடுத்தர வர்கத்திணருக்கே இன்றியமையாது. போரடதவர்களை பற்றி பேசுயா?
  ஜிப்ஸ்சு

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அது என்ன “ஜிப்ஸ்சு”…?

   ஓ – அது தான் உங்கள் பெயரா…?

   அய்யா ஜிப்ஸ்சு அவர்களே,

   அவசரப்பட்டு விட்டீர்களே.

   இன்றைய போராட்டத்தில் 91 வயது கம்யூனிஸ்ட் தலைவர்
   தோழர் நல்லகண்ணு அவர்கள் கூட கலந்து கொண்டு
   கைது செய்யப்பட்டார்…
   பாவம் – பொது விஷயத்துக்காக போராடிய
   அவருக்கும் எதாவது வசதி செய்து தந்தீர்களா என்று
   தெரிந்து கொள்ளத்தான் மேல்விவரங்கள் கேட்டேன்…

   திமுகவில் நீங்கள் தான் முக்கியஸ்தர் என்று தெரிகிறது.
   அப்படியானால் நீங்களே சொல்லி விடுங்களேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • அரசியல் சாக்கடை சொல்கிறார்:

    நல்லகன்னு ஐயாவுக்கு குளிர் சாதனம் வசதி தேவை ஏற்படவில்லை என்று நினைக்கிறேன் டொமேடோ.

    மத்திய மாநில ஆளுங்கட்சிய பற்றிய விமர்சனம் எழுதுங்கயா,
    நான் எந்த கட்சி மற்றும் இயக்கத்தை சார்ந்தவன்.

    அரசியல் ஒரு சாக்கடை என்று நம்பும் ஒரு சாமானியன்.

  • knvijayan. சொல்கிறார்:

   திராவிட கட்சிகளிலிதெல்லாம் சகஜம்,1957 -ம் வருடம் விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாதுரை சிறையில் அடைக்கப்பட்டார்,சிறையில் இருந்து 2-ம் நாளில் வெளியே வந்துவிட்டார்,காரணம் அவருடைய தொத்தாவிற்கு உடல்நலம் சரியில்லையென்று எழுதிக்கொடுத்துவிட்டு.(தொத்தா என்றால் என்ன உறவு.}

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அந்தோனி,

   விமரிசனம் என்பது ஒரு குறிப்பிட்ட நபரின் அல்லது
   நிறுவனத்தின் அல்லது அரசின் – கொள்கை முடிவுகளை
   அல்லது செயல்பாடுகளைப் பற்றி பாராட்டியோ அல்லது
   கண்டித்தோ கருத்து சொல்வது.

   ஆனால், வதந்தி என்பது எந்தவித அடிப்படை
   ஆதாரமும் இல்லாமல், ஒரு பொய்யை, சுய ஆதாயம்
   கருதி, அல்லது விரோதம் காரணமாக செய்தியாக பரப்புவது.

   ஆபாசம் இல்லாத விமரிசனம், கருத்து வெளியிடும் உரிமையாக பாதுகாப்பு பெறுகிறது.
   (The right to freedom in Article 19 of the Constitution of India
   guarantees the Freedom of speech and expression..)

   ஆனால், இந்த உரிமை கீழ்க்கண்ட வரையறைகளுக்கு
   உட்பட்டது –

   I. security of the State,
   II. friendly relations with foreign States,

   III. public order,
   IV. decency and morality,

   V. contempt of court,
   VI. defamation,

   VII. incitement to an offence, and
   VIII. sovereignty and integrity of India.

   வேண்டுமென்றே, விளைவுகளைப் பற்றி
   கவலைப்படாமல், வதந்திகளைப் பரப்புவதை
   சட்டம் ஏற்கவில்லை. மக்களிடையே பெருத்த
   செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஒருவர் இறந்து விட்டார்
   என்றோ, அவருக்கு வேறு ஏதோ பாதிப்பு ஏற்பட்டு விட்டது
   என்றோ, உண்மைபோல் வதந்தியை பரப்பினால் –
   அதனால் ஏற்படக்கூடிய கலவரங்களுக்கும்,
   உயிர், பொருள் – இழப்புகளுக்கும் அந்த வதந்தியை
   பரப்புபவர் காரணம் ஆகிறார்.

   எனவே, இத்தகையோர் மீது நடவடிக்கைகள் எடுக்க
   சட்டப்படி மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது.

   உரிமைகளை பயன்படுத்த விரும்புவோர்,
   அதற்குண்டான கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்
   என்று இந்த நாட்டின் சட்டம் எதிர்பார்க்கிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Antony சொல்கிறார்:

    Thank you KM,
    Then in what aspects that guy is threatening TN government? Isn’t he a retired judge?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப அந்தோனி,

     திருவாளர் கட்ஜூ, பாதி சுப்ரமணியன் சுவாமி….!
     (சு.சு.விடம் உள்ள விஷம் இவரிடம் இல்லை….
     இது வெறும் விளம்பர விருப்பம் மட்டுமே…)

     எதையாவது வித்தியாசமாக சொல்லிக்கொண்டே
     இருக்க வேண்டும்… மீடியா வெளிச்சம் தன் மீது
     பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
     அவ்வளவே.

     இவர் போன்றவர்கள் இல்லையென்றால் – அரசியல்
     மிகவும் சீரியஸாகி விடும் அல்லவா…?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 2. nadunilaivoter சொல்கிறார்:

  Mr. Kaviri Mainthan, What you need actually from an opossition leader? Can you wrtie anything about Jeya? Try something healthy articles which may useful for the society. I know we cannot expect this from a trumpet of Paarpanan..but think twice before writing & posting on Tamilmanam.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பெயரில்லாத நண்பருக்கு,

   சமூகத்துக்கு, அதுவும் முக்கியமாக
   உங்களைப் போன்றவர்களுக்கு
   அவசியம் தேவைப்படுவதை தான் இங்கு எழுதுகிறேன்.
   இதையெல்லாம் படித்தாலாவது தெளியுமோ
   என்கிற நம்பிக்கையில்….

   //think twice before writing & posting on Tamilmanam.//

   இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் –
   ஆலோசனையாகவா அல்லது மிரட்டலாகவா…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  பாவம் தோழர் நல்லக்கண்ணு — அவரால் எல்லாவித சீதோஷண நிலைகளையும் தாங்கி கொள்ளும் வயதில் உள்ளார் — ஆனால் தவப்புதல்வனோ – தாங்கும் சக்தியற்று இருப்பதால் — ஏ .சி. ஹால் கொடுத்தார்களோ என்னவோ — பணம் இருந்தால் எதையும் அடையமுடியும் — சட்டத்தையும் வளைக்க .? முடியும் — அப்படித்தானே …. ?

  விகடனில் ஒரு செயதி : —
  // ராஜாத்தி அம்மாவுக்கு ‘நோ’ சொன்ன சசிகலா புஷ்பா! -தோல்வியில் முடிந்த டெல்லி பேச்சுவார்த்தை // http://www.vikatan.com/news/tamilnadu/69801-sasikala-pushpa-denied-dmk-chief-spouse-rajathi-ammal-demands.art?artfrm=news_most_read —- எப்படியெல்லாம் நேரில் பார்த்ததைப் போல எழுதுகிறார்கள் — அய்யா … ! நீங்கள் மேலே நண்பர் அந்தோணியின் பின்னூட்டத்திற்கு அளித்துள்ள மறுமொழியில் — கூறியுள்ள சட்டங்கள் — இதுபோன்ற ” பத்திரிக்கைகளை ” கட்டுப்படுத்தாதா …? // ஆபாசம் இல்லாத விமரிசனம், கருத்து வெளியிடும் உரிமையாக பாதுகாப்பு பெறுகிறது.// இதைக் கைக்கொண்டு — ” நாசுக்காக ” இதைப்போன்ற செயதிகளை பரப்பி — மக்களிடம் — ஒரு கட்சிக்குள் பிரிவினை — அல்லது வெறுப்புகளை கட்சியினரிடம் ஏற்படுத்த சட்டம் இடம் கொடுப்பதால் தான் – அதை ” ஒரு இருட்டறையென்றும் — ஓட்டகைள் நிறைந்தது என்றும் ” — கூறுகிறார்களோ ….. ?

 4. B.V.Subramanian சொல்கிறார்:

  தளபதி தங்கிய ஏ.சீ.கல்யாண மண்டபத்துக்கு
  ஒரு நாள் வாடகை 7 லட்சம் ரூபாயாம்.

  கொடுத்தது யாருன்னு சொன்னா தேவலை –
  திமுக அறக்கட்டளையா – அதையும் சொன்னா தாவலை.

 5. தமிழன் சொல்கிறார்:

  ஹை… போராட்டம் நல்லா இருக்கே. (டிபன் பாக்ஸைக் கையில் எடுத்துக்கொண்டு, தொண்டர்களுடன் நமக்கு நாமமேவில் உணவு விடுதியில் எளிமையாக சாப்பிட்ட காட்சி ஞாபகம் இருக்கா? பட்டுப் புடவை உடுத்திய ஏழை விவசாயப் பெருங்குடிகளுடன், ஷூவுடன் வயலில் கொடுத்த போஸ் ஞாபகம் இருக்கா?)

  போராடம் என்றால் ரயில் மறியல் ஏன் செய்யவேண்டும்? சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் (இதில் ஆபத்து உள்ளது. கர்’நாடகா மாதிரி, மாற்றுக்கட்சி அரசியல்வாதி, equal or above his level, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று தமிழ்’நாட்டில் கேட்கமாட்டார்கள். அப்புறம் மறைவில் ஒதுங்கி சாப்பிட்டுவிட்டுப் பின் பந்தலுக்கு வரவேண்டியிருக்கும்) போன்ற போராட்டம் நடத்தலாமே. அல்லது திமுக எம்பிக்களை உடனே ராஜினாமா செய்யவைக்கலாமே. அல்லது, கர்’நாடகாவில் செய்துள்ள முதலீட்டை வாபஸ் பெறலாமே. அல்லது கர்’நாடகாவில் திமுக உறவினர்களுக்கு உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு தமிழ்’நாட்டின் நலன் தழைக்கப் பாடுபடலாமே.

  அப்பா, 1/2 மணி உண்ணாவிரதம். தனயன், வாட்ஸ்’அப் மெஸேஜ் பார்ப்பதற்காக ஏசி மண்டபத்தில் தங்க போலி ரயில் மறியல். பலே பலே. அடுத்து கனிமொழி, ஒபாமாவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பவேண்டியதுதான் பாக்கி.

 6. today.and.me சொல்கிறார்:

  ஏசி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டது உண்மைதான், என்பதையும்
  ————-
  1. ஆனால் தூங்கவைக்கப்படவில்லை என்பதையும்

  2. கையோடு கொண்டுபோயிருந்த கட்டுகளை வைத்து டேபிளுக்கு டேபிள் சீட்டு விளையாடியும்

  3. அங்கிருந்த ஆண்/பெண் தொண்டர்களைக் கொண்டு பாட்டுக்கள் பாடி ஆடி அந்தாக்ஷரி விளையாடியும்

  4. களைப்படைந்தபோதெல்லாம் மதியம் மட்டன் பிரியாணியும், சிக்கன் 65-ம் வழங்கி மாலையில் டீயுடன் மதியம் மீந்த சிக்கன் 65-ம் அருந்தி களைப்பைப் போக்கிக்கொண்டு மீண்டும் நம்பர்2 மற்றும் நம்பர் 3 வழியாக மாலைவரை தொடர்போராட்டம் நடத்தினார்கள் என்பதையும்

  5. 7லட்சம் மேலான தொகையைக் கொடுத்து மண்டப வாடகைமுதல் இதற்கெல்லாம் வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தவர் அதிமுகவிலிருந்து திமுகவுக்குச்சென்று தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர், பெயரைச் சொல்லலாம்தான், ஆனால் அவரது கட்சியிலேயே இன்னமும் அவர் தலைமையாலும் மற்ற தொண்டர்களாலும் அவர்செய்த சேவைக்கு முறையாகப் பாராட்டப்படவில்லை என்பதால் முறைப்படி அறிவிப்பு வரும்வரை அதைத் தவிர்க்கிறேன் என்பதையும்

  தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ——-
  கூடவே
  இதெல்லாம் பொய் என்றும்
  ஏன் அதிமுகவைப் பற்றி ஒன்றும் சொல்லுவதில்லை என்று கேட்டு கொதிக்கப்போகும் சாம்பாருகளுக்கு நான் சொல்லிக்கொள்வது,

  கொஞ்சமாவது
  குடும்பத்துக்கே அடிமைகளாயிருப்பதை விட்டு
  வெளியேற யோசியுங்கள்.
  ம்.. யோசித்தால் ஏன் இன்னமும் இங்கே வந்து சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்…

 7. today.and.me சொல்கிறார்:

  இந்த ஆதாரங்களெல்லாம்
  அவர்கள் ஏசி மண்டபத்துக்குள் போராடிக்கொண்டிருந்தபோதே
  வெளியே வந்துவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொண்டு
  😀 😀

 8. today.and.me சொல்கிறார்:

  இந்த ஆதாரங்களெல்லாம்
  அவர்கள் ஏசி மண்டபத்துக்குள் போராடிக்கொண்டிருந்தபோதே
  வெளியே வந்துவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொண்டு
  😀 😀

  ..https://www.facebook.com/Mayavarathaan/videos/10209474870542337..

  ..https://www.facebook.com/Mayavarathaan/videos/10209474870582338..

  ..https://www.facebook.com/Mayavarathaan/videos/10209474584415184..

  என்ன காரணத்தினாலோ இணைப்புகள் சரியாக வெளியாகவில்லை…
  முன்னாலும் பின்னாலும உள்ள இரு புள்ளிகளை நீக்கிவிட்டு ப்ரௌசரில் பார்க்கலாம்.

 9. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமைஜி

  இவ்வளவு கேள்விகேட்டு பாராட்டவிழையும் நீங்கள்
  கூடவே
  காவிரி தமிழகத்தில் பாய ஆரம்பிக்கும் மாவட்டத்தில்
  திமுக தலைமை ஏன் போராட்டத்தை வேண்டாம் என்றதையும்
  டெல்டா மாவட்டத்தில் தேர்தல் வருவதைக் கணக்கில்கொண்டே போராட்டம் என்ற தளபதியின் கணக்கீட்டையும் பாராட்டவேண்டாமா?

  https://fbcdn-photos-c-a.akamaihd.net/hphotos-ak-xlt1/v/t1.0-0/p296x100/14680581_10209480382440131_3931879752567371830_n.jpg?oh=65d494804d5bd30dd41e976619879c90&oe=58633C0A&__gda__=1487075682_5b566a16637cb3d24349343f869e9d13

  அப்படியே

  இதுநாள் வரை திமுக தலைவர் மு கருணாநிதி
  தமது கட்சியில் இந்தப்போராட்டத்தைப் பற்றி ஏதாவது அறிக்கை கிறிக்கை என்று வாயைத்திறந்திருக்கிறாரா?

  அப்படித்திருவாயைத் திறந்துவிட்டால் அது கனிமொழிக்கும் அழகிரிக்கும் பாதகமாகிவிடுமே என்று அஞ்சி அமைதியாயிருக்கிறாரா?

  அல்லது அவர் சுயமாக அறிக்கைவிடும் நிலையிலேயே இல்லையா என்பதெல்லாம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தீர்களென்றால் உங்கள் நடுநிலைத்தன்மையை சந்தேகித்திருக்கமாட்டேன்.

  இப்போது சிறிது ஐயம் வருகிறதே 🙂 🙂

  காவிரிமைந்தன் என்ற பெயரில் எழுதுவது தாங்கள்தானா
  என்ற ஐயம் சென்றவாரம் நான் தஞ்சைக்குச் சென்றபோது எழுந்தது
  இப்போது உறுதியாகிவிடும் போல உள்ளதே.
  😀 😀 😀

  https://scontent-mrs1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14642255_1717467221911065_5745475852272606416_n.jpg?oh=fffe13314d80d49d3045f19acb7335e0&oe=586330F2

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப டுடேஅண்ட்மீ,

   திடீரென்று “சுனாமி” மாதிரி வந்து,
   எல்லாவற்றையும் கொட்டி
   அதிர்ச்சியை உண்டு பண்ணி விட்டீர்களே …. 🙂 🙂

   உங்கள் அனைத்து தகவல்களுக்கும் நன்றி.

   உங்கள் பின்னூட்டம் காரணமாக –
   நான் உடனடியாக ஒரு அறிவிப்பு செய்தாக
   வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்….
   அடுத்த இடுகையை பார்க்கவும்… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.