உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கேள்வி – அபத்தத்தின் உச்சம்….!

sc

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யலாமா? மத்திய அரசு கேள்வி

———
இன்று மாலை வெளியான தினமணி செய்தி இது –
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை
நமது கேள்விகள்….)
———

புது தில்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா? என மத்திய
அரசு தலைமை வழக்குரைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து 3 மாநிலங்கள் தாக்கல்
செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு
ஏற்பதா என்பது குறித்து வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது.

அப்போது, இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்
பிரச்னையை நாடாளுமன்றம் மூலம் தான் தீர்க்க வேண்டும்
என அரசியல் சாசனம் கூறுகிறது என்று மத்திய அரசு
வாதத்தை முன் வைத்தது.

————————-
( அந்த அரசியல் சாசன பிரிவின்படி தான் பாராளுமன்றம்
மாநிலங்களுக்கிடையே ஏற்படும் நதிநீர் பங்கீடு குறித்த
சர்ச்சைகளை தீர்த்து வைக்க Interstate River Water Disputes Act, 1956 என்கிற சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டத்தை
உருவாக்கியதன் மூலம், பாராளுமன்றம், தனது
அரசியல் சாசனப்படியான அதிகாரத்தை நிறைவேற்றும்
பொறுப்பையும், உரிமையையும் இந்த சட்டத்திற்கு
அளிக்கிறது –

The Interstate River Water Disputes Act, 1956 (IRWD Act) is an Act of the Parliament of India enacted under Article 262 of Constitution of India

on the eve of reorganization of states on linguistic basis to resolve the water disputes that would arise in the use, control and distribution of an interstate river or river valley…..

எனவே இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்
எந்த தீர்ப்பாயமும், அரசியல் சாசனத்தின் கீழ்
உருவாக்கப்பட்ட அமைப்பே…. இந்த சட்டத்தின் கீழ்
உருவாக்கப்பட்ட அமைப்பை, மத்திய அரசே நினைத்தாலும்
செல்லாக்காசு ஆக்க முடியாது…)

———————-

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு
இணையானது என்றும் மத்திய அரசு கூறியது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியுமா? என்றும்
மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார்.

—————————————————-

( இது குறித்து மத்திய அரசுக்கு சில கேள்விகள் –

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்
தீர்ப்புக்கு இணையானது என்று இப்போது நீதிமன்றத்தில்
சொல்லும் மத்திய அரசு –

அந்த நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை
இன்னமும் நிறைவேற்ற முற்படாதது ஏன்…?

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என்று நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை ஒன்பது ஆண்டுகள்
கடந்த பின்னரும் மத்திய அரசு நிறைவேற்றாமல்
இருந்தது ஏன்..?

நடுவர் மன்ற தீர்ப்பை, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது
என்று மத்திய அரசு கருதுமேயானால் –

இரண்டு நீதிபதிகள்
கொண்ட அமர்வில், இந்த மாத துவக்கத்தில் –

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என்று நடுவர் மன்றம் அளித்த பரிந்துரையை
ஏற்பதும் ஏற்காததும் மத்திய அரசின் விருப்பம் என்று
வாதித்தது எப்படி….?

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று
சொல்லும் உரிமை மத்திய அரசுக்கு உண்டா…?

காவிரி மேலாண்மை வாரியம் எப்படி அமைய வேண்டும்
என்பது குறித்து நடுவர் மன்றம் விவரமாக கூறியும்,
இது குறித்து பாராளுமன்றம் தான் முடிவெடுக்கும் உரிமை
படைத்தது என்று வாதிட்டது எப்படி….? )

——————————————-

அரசியல் லாபம் கருதி முன்வைக்கப்படும்
ஆணவம் நிறைந்த, முட்டாள்தனமான வாதங்கள் –
உச்சநீதிமன்றத்தில் இறுதியாக உடைத்தெரியப்படும்
என்று நம்புவோம்…. வேண்டுவோம்.

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கேள்வி – அபத்தத்தின் உச்சம்….! க்கு ஒரு பதில்

  1. selvarajan சொல்கிறார்:

    காவிரி விவகாரத்தில் — மத்திய அரசின் நிலைப்பாடும் — கர்னாடக காங்கிரஸ் அரசின் விடாப்பிடியும் — எதிர்வரும் அம்மாநில தேர்தலை முன்னிட்டு தானே … ? ரேஸில் யார் ஜெயிக்க போகிறோம் என்கிற போட்டியினால் நடக்கும் விநோதங்கள் தான் இவைகள் — இன்னும் என்னென்னவோ ” உளறல்களை ” கேட்க வேண்டிய நிர்பந்தத்தில் நீதி துறையும் — மக்களும் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது தானா …. ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s