……..க்காக எதையும் செய்யும் மத்திய பாஜக அரசு ….!

.

.

2014 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தவறு
ஒன்றை செய்தார்கள்… அப்போதிருந்த காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசியம் போக வேண்டிய அரசு தான் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை. அதை வீழ்த்திய வரையில்
சரி தான்.

ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மீதிருந்த
வெறுப்பில், ஒரேயடியாக பாஜக பக்கம் சாய்ந்து,
தனி மெஜாரிடி பெரும் அளவிற்கு அதற்கு ஆதரவு
கொடுத்தது தான் மக்கள் செய்த தவறு. பாஜக விற்கு
தனியாக ஆட்சி அமைக்கும் வலிமையின்றி –
மத்தியில் மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் –
இன்றைக்கு நிகழும் பெரும்பாலான அசம்பாவிதங்களை
தவிர்த்திருக்கலாம்.

மத்தியில் தனியே ஆட்சியை ருசித்த பாஜக
பெருந்தலைகளுக்கு – தங்கள் எல்லையை விஸ்தரிக்க
வேண்டும் என்கிற தீராத, தணியாத ஆசை வந்து விட்டது.

சில மாநிலங்களில் மட்டும் காலூன்றியிருந்த
நிலை போய் இன்று இந்தியா முழுவதும்,
எதைச் செய்தாவது – எப்படி செய்தாவது –
என்ன விலை கொடுத்தாவது –
தங்களை வலுப்படுத்திக் கொள்ளவும்,
முடிந்தால் அந்தந்த மாநிலங்களில் ஆட்சியை
கைப்பற்றவும் தீவிரமாக இறங்கி விட்டது பாஜக.

மோடிஜி – தன்னை பிரதமராக நினைத்து செயல்படுவது –
வெளி நாட்டு தலைவர்கள் இந்தியா வரும்போது
மட்டும் தான்…..

மற்றபடி மாற்றி மாற்றி எதாவது மாநிலங்களில்
தேர்தல் வந்துகொண்டே இருக்கிறது. இவரும்
election mode க்கு போய் விடுகிறார்.
மேடையில் ஆக்ரோஷமாகப் பேசுவதும்,
அந்தந்த மாநில கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்தி,
அவமரியாதையாக பேசுவதும் வாடிக்கையாகி விட்டது.

அந்தந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்போது,
பிரதமர் அங்கு போய் மாநில அரசுக்கு எதிராக பிரச்சாரம்
செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய குறைந்த பட்ச
நாகரிகம் கூட கடைபிடிக்கப்படுவதில்லை…

ஒரு பக்கம் பிரதமர், வரிசையாக மத்திய அமைச்சர்கள் –
மற்றொரு பக்கம் பாஜக அகில இந்திய தலைவர் அமீத் ஷா,
கட்சியின் முக்கிய தலைவர்கள் –

இவை தவிர விசேஷ அஸ்திரங்களாக, ஆயுதங்களாக –
மக்களை இனவாரியாகவும், மதவாரியாகவும் பிரித்து
அணி சேர்க்கும் முயற்சிகள் – அறிவிப்புகள்….

பீஹார், டெல்லி, மேற்கு வங்காளம், தமிழ் நாடு, கேரளா
என்று வரிசையாக கடந்த இரண்டு ஆண்டுகள் மாநில
சட்டமன்ற தேர்தல்களின்போது இவர்கள் நடந்து கொண்ட
விதத்தை மக்கள் நன்றாகவே கவனித்தனர்….

இப்போது அடுத்து வரவிருக்கும் –
உத்திர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், கோவா
போன்ற மாநில தேர்தல்களுக்கான பாஜகவின் யுக்திகள்
துவங்கி விட்டன..

அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் தலித்துகளுக்கு
நிகழ்ந்த கொடுமைகளை தடுக்க இயலாதவர் பஞ்சாபில்
போய் நேற்று பேசுகிறார் – தலித்துகளுக்கு நிகழும்
கொடுமைகளை கண்டு இவர் தலை அவமானத்தினால்
தொங்குகிறதாம்…..

மத்தியில் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாக
தோன்றாத புதிய யுக்தி – உத்திர பிரதேச தேர்தல் வருகிறது
என்றவுடன் தோன்றி விட்டது –

உ.பிரதேசத்தில் மூன்று இடங்களில் – 225 கோடி ரூபாய்
செலவில் “ராமாயண மியூசியம்” அமைப்பது…..!!!
அதெப்படி சரியாக தேர்தலுக்கு 4 மாதங்கள் இருக்கும்போது
இந்த யோசனை தோன்றியிருக்க முடியும்….?

அவர்கள் கட்சி எம்.பி.யான வினாயக் கடியார் கூட
இதை ஏற்கவில்லை… ஏளனமாக இது வெறும் “லாலி பாப்”
அறிவிப்பு என்கிறார்….

தங்கள் கட்சி வெற்றி பெற இதுவரை மத்திய அரசின்
அங்கங்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த
பாஜக தலைமை இப்போது ராணுவத்தை கூட பயன்படுத்த
துவங்கியிருப்பது ஒரு ஆபத்தான அணுகுமுறை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம்
நிகழ்த்திய ஒரு அதிரடி பதில் தாக்குதலை –

தங்கள் ஆட்சியின் சாதனையாக, பிரதமரின் சாதனையாக,
“சர்ஜிகல் ஸ்டிரைக்” என்கிற சொற்றொடரை பயன்படுத்தி
விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்….

இவர்கள் அதிரடியாக வெளியிட்ட செய்தியைக் கண்டு
முதலில் நாம் அனைவருமே ஏமாந்து போனோம்….
பின்னர் தான் தெரிய வருகிறது –

இவர்கள் சொல்வது போல் இது முதல் தடவை அல்ல –

ஏற்கெனவே, மன்மோகன்சிங் அவர்களின் ஆட்சியின்போதே
மூன்று முறை இத்தகைய தாக்குதல்களை இந்திய ராணுவம்
நிகழ்த்தி இருக்கிறது என்று.

இந்திய ராணுவத்தினரின் மனோவலிமையை அதிகரிக்க,
அவர்களை கோழைத்தனமாக தாக்கிய பாகிஸ்தானிய
தீவிரவாதிகளை / ராணுவத்தினரை பதிலடி கொடுக்க
ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளை –

மன்மோகன் சிங் அவர்களின் அரசு –
தங்கள் சாதனையாக காட்டி கொச்சைப்படுத்த
விரும்பாதது –

இவர்களுக்கு –
“இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக”
என்று மார்தட்டிக் கொள்ள வழி வகுத்து விட்டது.
உடனே இதை பயன்படுத்திக்கொண்டு, உத்திர பிரதேசத்தில்
பெரிய பெரிய அளவில் பேனர்கள்….
கேட்டால் -ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் தொண்டர்கள்
ஆர்வக்கோளாறால் வைத்து விட்டார்கள் என்கிறார்கள்….

sur-strike-in-up

தொண்டர்களின் செயலுக்கு சமாதானம் சொல்லலாம்…
ஆனால் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பர்ரிகர் சொன்னது..?
எல்லை தாண்டிச்சென்று இந்திய ராணுவம் அதிரடி
நடவடிக்கையில் ஈடுபட்டது இதுவே முதல் தடவை
என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சொன்னார்.

shankar-swaraj-759

ஆனால், நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களின் –
வெளியுறவுத்துறை ஆலோசனைக்குழுவில் –
வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயசங்கர் அவர்கள்
உறுதியாக சொல்கிறார் – ” இது முதல் முறை அல்ல –
இந்திய ராணுவம் ஏற்கெனவே இது போல் தாக்குதல்
நிகழ்த்தி இருக்கிறது” என்று –

( The Army carried out “limited-calibre, target-specific,
counter-terrorist operations” across the Line of Control
in the past too – but this was the first time the government
went public with the September 29 surgical strikes
as part of a strategy, a parliamentary panel on external
affairs was told Tuesday. )

திருவாளர் பர்ரிகர் இதற்கு புதிதாக என்ன வியாக்கியானம்
கொடுக்கப் போகிறார்….என்பதை அறிய மக்கள்
ஆவலோடு காத்திருக்கிறார்கள்….!

குறுகிய சாதனைகளுக்காக, தேர்தல் வெற்றிகளுக்காக
பாஜக தலைமை எந்த அளவிற்கும் செல்லும்,
எவ்வளவு பொய்கள் வேண்டுமானாலும் சொல்லும்,
யார் முதுகில் வேண்டுமானாலும் குத்தும் என்பதை
ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் பார்த்துக் கொண்டு
தானே இருக்கிறோம்….

பார்ப்போம் – தேர்தல் நெருங்க நெருங்க, இவர்கள்
இன்னும் எந்த அளவிற்கெல்லாம் போகிறார்கள் என்று…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ……..க்காக எதையும் செய்யும் மத்திய பாஜக அரசு ….!

 1. LVISS சொல்கிறார்:

  Let all the parties take this issue this as the main plank and defeat BJP and its allies —
  This surgical strike will not bring an extra vote to BJP –This is the unfounded fear of the opposition that made them blew up the whole issue — Unfortunately the BJP also thinks that this will give them political mileage —By the time the elections come some other issue will take centre stage —

 2. Suresh Subramanian சொல்கிறார்:

  Mr.K.M.,

  Prime Minister yesterday went to Himachal Pradesh
  on official trip at govt. expenses – but made political
  speeches at bjp meeting:

  “Modi compares Army’s action along LoC to Israeli exploits”

  Indian forces have shown they are second to none, Prime Minister tells rally in Himachal.

  Prime Minister Narendra Modi on Tuesday saluted the Army for its recent surgical strikes along the Line of Control in Kashmir and said the action had won it worldwide accolades.

  He was addressing a party rally here after inaugurating three major hydel projects.

  xx xx xx

  The Prime Minister said BJP Chief Ministers Shanta Kumar and Prem Kumar Dhumal had done a lot for Himachal and credited them for their role in providing drinking water and initiating the road networking in the State. The current Congress Chief Minister Virbhadra Singh, he alleged, had his hands full in tackling the corruption cases against him.

  http://www.thehindu.com/news/national/pm-modi-likens-armys-surgical-strikes-to-israels-exploits/article9234625.ece

  ———————-

  Is it legally and morally correct
  for the pm to make election speeches at govt. expense..?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Suresh Subramanian,

   First, I would like to put your question
   before our Friend Mr.LVISS
   and seek his remarks on this….!!!

   -with best wishes,
   Kavirimainthan

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சுரேஷ் சுப்ரமணியன்,

   இந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷனால்,
   இன்னமும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்
   ( poll schedule ) அறிவிக்கப்படவில்லை
   என்பதால் –

   சட்டப்படி தவறு காண முடியாது…. 🙂 🙂

   ஆனால், நல்ல அரசியலுக்கான நடத்தை –
   இது அல்ல என்பது என் கருத்து.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. B.V.Subramanian சொல்கிறார்:

  கே.எம்.,

  இந்த செய்தி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

  திருமாவளவனுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்தார். அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்துப் பேசினேன். தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பி.வி.சுப்ரமணியன்,

   திரு.பொன்ரா அவர்களும் தன் பங்கிற்கு
   “விளக்கி” விட்டார்….
   இந்த செய்தியை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை
   என்று நினைக்கிறேன் –

   திருமா தனது தம்பி என்பதும்
   தாங்கள் இருவரும் தமிழர்கள் என்பதும்
   பாஜக அமைச்சருக்கு திடீரென்று இப்போது தான்
   தெரிந்திருக்கிறது.

   ஏன் இப்போது தான் தெரிந்திருக்கிறது என்று
   கேட்கிறீர்களா..?

   இப்போது தானே 3 தொகுதிகளுக்கும் தேர்தல்
   அறிவிக்கப்பட்டிருக்கிறது.
   ம.ந.கூட்டணி போட்டியிடாது என்று கன்வீனர்
   வைகோ அவர்களை கேட்காமலே
   அவருக்கு பதிலாக திருமாவே வேறு கூறி இருக்கிறார்…!!!
   ( “நல்ல சமயம் இது – நழுவ விடுவாயோ..? ”
   பாடல் கேட்டதில்லையா…? )

   பாஜக – பச்சை சுயநலவாதம் !!!
   அப்படியானால் திருமா …? என்கிறீர்களா…?
   பொறுத்திருந்து பார்ப்போமே…
   அதற்குள்ளாக வைகோ எதாவது கூறி விடாமல்
   இருக்க வேண்டும்….!

   —————–
   பின்னால் வந்த செய்தி –

   அரைமணிநேர சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இது நட்பு ரீதியிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார்.
   எங்களுடைய நட்பு 25 ஆண்டுகாலமாக தொடர்கிறது.
   தமிழன் என்ற முறையில் அண்ணன் தம்பிகளாக பழகி வந்தோம். இன்று சந்தித்து பேசினோம் என்று கூறினார்.

   ————————-

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார் — எந்த திட்டமாக இருந்தாலும் முதன் முதலில் ” எனது ஆட்சியில் – நான் கொண்டுவந்த திட்டம் ” என்று மார் தட்டுவதை இன்றளவும் வழக்கமாக வைத்திருக்கிறார் — அதே பாணியில் மத்திய ப.ஜ .க. அரசும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறது — அதுவும் இந்த ” சர்ஜிகல் ஸ்டிரைக் ” பற்றி ரொம்பவும் — அளந்து தள்ளுகிறார்கள் — இதற்கெல்லாம் பதிலடியாக : —

  // காங்கிரஸ் தலைமை பேச்சாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, “தீவிரவாதிகளால் நமது நாட்டுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது.” செப்டம்பர் 1, 2011, ஜூலை 28 , 2013 மற்றும் ஜனவரி 14, 2014 ” ஆகிய தினங்களில் நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். // — தேதி – மாதம் – வருடம் வாரியாக குறிப்பிட்டுள்ளதைக் கூட ஏற்பார்களா — என்பது சந்தேகமே … http://www.news2.in/2016/10/congress-releases-dates-of-cross-loc-attacks-during-upa-regime.html ….

  // தண்ணீர் திறக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் மீண்டும் அடம் பிடிக்கும் சித்தராமையா //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/cannot-release-water-tamil-nadu-says-karnataka-cm-siddaramaiah-265266.html —– மீண்டும் — மீண்டும் முருங்கை மரம் ஏறும் ” வேதாளம் ” போலவும் — விடாமல் துரத்தும் விக்கிரமாதித்தன் போலவும் — காவிரிப் பிரச்சனையில் — கர்நாடக முதல்வரும் — சட்டத்துறையும் — முயற்சிப்பதை பார்த்தால் — திண்டாடி — குழம்பி கிடக்கவேண்டியது தானா … ?

 5. ravi சொல்கிறார்:

  http://postcard.news/huge-embarrassment-for-congress-ex-dgmo-reveals-congress-lied-of-surgical-strikes/

  http://www.firstpost.com/india/earlier-strikes-werent-strikes-they-were-cross-border-ops-former-dgmo-refutes-chidambarams-claims-3036970.html

  காங்கிரஸ்காரர்களின் காமெடியை முன்னாள் ராணுவ அதிகாரி போட்டு உடைத்து விட்டார் .. எதற்கு இந்த பொழைப்பு ??

 6. ravi சொல்கிறார்:

  ஹார், டெல்லி, மேற்கு வங்காளம், தமிழ் நாடு, கேரளா
  என்று வரிசையாக கடந்த இரண்டு ஆண்டுகள் மாநில
  சட்டமன்ற தேர்தல்களின்போது இவர்கள் நடந்து கொண்ட
  விதத்தை மக்கள் நன்றாகவே கவனித்தனர்….///
  ஐயோ பாவம் , அதனால் தான் திமுக வுக்கு மக்கள் 90 சீட்டுகளை மக்கள் கொடுத்து விட்டார்கள் போல ..
  சும்மா காமெடி பண்ணாதீர்கள் சார்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.