தடுமாறும் திருமா ஒன்று செய்யலாம் ….

%e0%ae%ae-%e0%ae%a8-%e0%ae%95%e0%af%82-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d

திமுக கூட்டவிருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் –
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்கப்
போவதில்லை என்று வைகோ அறிவித்திருந்தார்.

ஆனால், தான் அந்த கருத்தை கூறவில்லை என்றும்
கூட்டத்தில் பெரும்பாலானோர் கூறியதன் பேரில்
அந்த முடிவு அறிவிக்கப்பட்டது என்றும் கூறினார் திருமா.

பின்னர், தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு,
மீண்டும் ம.ந.கூட்டணி தலைவர்களிடம்
-திமுக கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்கிற
முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்
கொள்ளப்போவதாகவும், திருமா கூறி இருக்கிறார்…

அதன் பின்னர் பேசிய வைகோ,
“திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம்,
தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது போல,
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல
உள்ளது. 10 ஆண்டு காலம் மத்திய அரசில் அதிகாரத்தில்
இருந்த போது காவிரி நதிநீருக்காக கவலைப்படவில்லை.

காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு திமுக துரோகம்
இழைத்தது.

இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் என்ற பெயரில்
நயவஞ்சக செயலில் ஈடுபடுகிறது. தேமுதிக, மதிமுக,
விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
பலரை கட்சியில் இணைக்கப் போவதாக கூறிவிட்டு,
கூடவே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுவதா?

இது ஏமாற்று வேலை. இதில் மக்கள் நலக்கூட்டணியினர்
பங்கேற்பது உசிதமில்லை. இதையேதான் நேற்று இரவு
திருமாவளவனும் கூறினார்.
ஆனால் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப்
போவதாக இப்போது கூறியது பற்றி எனக்கு தெரியாது
என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.

எனவே, ம.ந.கூட்டணியின் மற்ற தலைவர்கள்
திருமாவின் யோசனைக்கு ஏற்பு தெரிவிக்க வாய்ப்பில்லை
என்றே தெரிகிறது.

திருமாவின் தடுமாற்றம் புரிகிறது….
எப்படியாவது, திமுக அணியில் மீண்டும்
சேர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்
என்னும் அவரது நோக்கமும் புரிகிறது.

ஆனால், திருமா ஒரு பெரிய ரிஸ்க்கை எடுக்கிறார்….
திருமாவை இந்த கூட்டத்தில் சேர்த்துக் கொள்வதோடு
ஸ்டாலின் கை கழுவி விடுவார்…

திருமாவை திமுக அணியில் சேர்த்துக் கொண்டால்-
கொங்கு மண்டலத்தில் தங்களது ஓட்டு வங்கி கடுமையாக
பாதிக்கப்படும் என்பது ஸ்டாலின் அவர்களின்
உறுதியான கருத்து.

திமுக கூட்டணியைத் தவிர, மற்ற கட்சிகளும்
கலந்து கொள்கின்றன என்கிற தோற்றத்தை ஏற்படுத்தவே
இந்த கூட்டத்திற்கு வி.சி.க.வை அழைத்திருக்கிறது திமுக.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக அணியில்
சேரும் முயற்சியை தொடர வேண்டும் –
அதே சமயம் எதிர்காலத்தில், தான் திமுகவால்
மீண்டும் நிராகரிக்கப்படும்போது, தன்னுடைய இமேஜ்
பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்றால்,
திருமா புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்யலாம்.

ஏற்கெனவே, ஜனாதிபதியை சந்தித்து ம.ந.கூட்டணி
சார்பாக காவிரி சம்பந்தமாக மனு கொடுத்தாகி விட்டது.

இப்போது ஸ்டாலின் தலைமையில் பிரதமரை சந்தித்து
மனு கொடுப்பது என்று நாளைய கூட்டத்தில் திமுக முன்
மொழியும்.

அதே சமயம், கூடவே –
திருமாவும் ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம்…..

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தான்
ஆட்சியில் இருக்கிறது… எனவே, காங்கிரஸ் தலைவர்
திருமதி சோனியா காந்தி அவர்களையும்
இதே குழுவினர் நேரில் சந்தித்து –

காவிரியில் நீர் திறந்து விடவும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும்,
திருமதி சோனியா காந்தி அவர்கள் உதவவேண்டும் என்றும்,
இந்த விஷயத்தில் ஒத்துழைக்கும்படி
கர்நாடகா முதலமைச்சருக்கு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள்
ஆலோசனை கூற வேண்டுமென்றும்
ஒரு தீர்மானத்தை முன் மொழியலாம்…

தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் –
திருமா கலந்து கொண்டதில் ஒரு அர்த்தம் இருக்கும்….

யோசனை நிராகரிக்கப்பட்டால் –
இழக்க அவருக்கு ஒன்றுமில்லை….
ஆனால், அவர் கலந்து கொண்டதற்கு
ஒரு அர்த்தம் உருவாகும்…
அதே சமயம் திமுகவின் நிலைப்பாடும் வெளிப்படுத்தப்படும்…

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

தடுமாறும் திருமா ஒன்று செய்யலாம் …. க்கு 2 பதில்கள்

  1. gopalasamy சொல்கிறார்:

    Ridiculous suggestion. Thiruma is begging to join DMK Congress alliance. He never bothered about Caveri Issue when he was MP. He will never do anything to hurt his chances to join the alliance.

  2. ravi சொல்கிறார்:

    அவரும் பாவம் எவ்வளவு நாள் தான் பதவி இல்லாமல் இருப்பது .. கட்சி நடத்த வேண்டாமா ??

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.