பாவம் பிரதமர் – அவரால் எவ்வளவு தான் முடியும்…?

modiji-in-u-p

இதை விட ஒருத்தரால் குனிய முடியுமா…?
பழைய பிரதமர்கள் யாராவது, ஏன் திரு. மன்மோகன் சிங்

இப்படியெல்லாம் குனிந்து, வளைந்து
எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா…?

ஒரு நாட்டின் பிரதமரை இப்படி எல்லாம் குனிய வைத்து
சிரமப்படுத்தும் பாஜகவை மன்னிக்கவே கூடாது.

– ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்
கொடுக்கும் விழாவாம், உத்திர பிரதேசம், வாரணாசியில்
நேற்று நடந்தது – சரி…

அதற்காக நாட்டின் பிரதமரையே அழைத்து கஷ்டப்படுத்த
வேண்டுமா…? அவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்..
எவ்வளவோ உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயண
நிகழ்ச்சிகள் இருக்கும்.. எல்லாவற்றையும் விட்டு விட்டு…..

ஓ – உத்திர பிரதேசத்தில் இன்னும் 3 மாதங்களில்
சட்டமன்ற தேர்தல் வருகிறது அல்லவா…

சரி வரட்டுமே அதனால் என்ன…?
சிலிண்டரை நின்று கொண்டே கொடுக்கக்கூடாதா…?
இருந்தாலும் இவ்வளவு பவ்வியம் காட்டும்படி
பாஜக அவரை கொடுமைப்படுத்துவது அக்கிரமம்….!!!

போன வாரம் இதே போல் தான் நடந்தது –
அதே உத்திர பிரதேசம் தான் – ஆனால் அது லக்னோ…
“ராம்லீலா” விழாவில் கலந்து கொண்டு
“ஜெய் ஸ்ரீராம்”, “ஜெய் ஸ்ரீராம்” என்று பலமுறை
பிரதமரை இரக்கம் சற்றுமின்றி கத்த விட்டார்கள்
பாஜக காரர்கள்.

அதற்கு 4 நாட்களுக்கு முன்னர்…?

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலென்ன…?
அங்கும் பிரதமர் தான் வரவேண்டுமா…
ஏதோ ஒரு கண்காட்சி – யார் திறந்து வைத்தாலென்ன …?
நீங்கள் வந்தால் தான் ஆச்சு என்று
தொந்திரவு பண்ணி பிரதமரை அழைத்து போனார்கள்…!!!
பாவம் பிரதமர்…!!

அதற்கு முந்திய வாரம் – திரும்பவும் இதே போல் தான்,
ஒரே நாளில் பஞ்சாபில், உத்தராகண்டில் –
இரண்டிரண்டு மீட்டிங்…
அங்கேயும் தேர்தல்கள் வருகின்றன தெரியும்…
ஆனால் பாவம் எல்லா இடத்திலேயும்
அவரையே கூப்பிட்டால் என்ன செய்வார் பிரதமர்…?

நல்ல வேளை – கோவா விற்கு தான்
தேர்தலுக்காக கூப்பிடவில்லை என்று நினைத்தால் –

அங்கே மிகப்பெரியதாக –
பிரிக்ஸ் மாநாடு, பிஸ்டெக் மாநாடு என்று
அமர்க்களப்படுத்தி விட்டார்கள்..
இரண்டே நாட்களில் ஏகப்பட்ட –
விதம் விதமாக, கலர் கலராக எவ்வளவு தான்
டிரஸ் மாற்றுவார் ஒருத்தர் –
அவரை ஏன் தான் இப்படி எல்லாம்
சிரமப்படுத்துகிறார்களோ தெரியவில்லை….

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள்
வரவிருக்கின்றன – உண்மை தான். ஆனால், அதற்காக
நாட்டின் பிரதமரை இப்படியா கஷ்டப்படுத்துவது –
கொடுமைக்கார பாஜக காரர்கள்…?

பாவம் பிரதமர்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to பாவம் பிரதமர் – அவரால் எவ்வளவு தான் முடியும்…?

 1. Srini சொல்கிறார்:

  Good one sir. Just laughing out loud while thinking ministers touching the tyres of TN politicians cars and doing danda namaskaram on the road. TN has to learn lot of things from north. 🙂

  Pranams
  Srini

 2. துன்பத்துக்குப்பின் வருவது இன்பமே என்று முன்கூட்டியே நன்றாக அறிந்தவர் நமது பிரதமர்.

 3. LVISS சொல்கிறார்:

  Varanasi is PM’s constituency — Moreover he has been doing this kind of multi travelling from state to state ever since he took over –He will be called for all kinds of functions and he will attend showing no signs of tiredness and unwillingness –Just for the record ,after the BJP was routed in Bihar in the recent election the govt sanctioned two railway projects there — So it is wrong to connect every action of the PM to elections –In any case such actions dont win any extra votes —

  http://www.business-standard.com/article/companies/ge-alstom-get-locomotive-factories-in-bihar-115111000060_1.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப LVISS,

   // Just for the record ,after the BJP was
   routed in Bihar in the recent election the govt
   sanctioned two railway projects there //

   நீங்கள் பாஜக / பிரதமரின் அனுதாபியாக இருக்கலாம்.
   ஆனால், அதற்காக இங்கு தவறான
   தகவல்களை தருவது உங்கள் மீதுள்ள மதிப்பினை
   குறைக்கும் என்பதை நீங்கள் உணற வேண்டும்.

   Bihar Assembly Elections –
   result was announced on 8 November 2015

   இந்த இரண்டு ரெயில்வே ப்ராஜெக்டுகளுக்குமான
   டெண்டர் வகையறா அனைத்தும்,
   அதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டு, டெண்டரும்
   திறக்கப்பட்டு, ஒப்புதல்களும் அளிக்கப்பட்டு விட்டன
   என்பதற்கான ஆதாரங்கள் கீழே –

   ————————-

   Diesel locomotive project, Marhowra

   Contract value: Rs 14,656 crore
   Awarded to: US-based GE, which beat Electro-Motive Diesel
   in the bidding process
   Bids: Opened on September 1, 2015.
   ( LoA awarded on November 9,2015 )

   ——————-

   Electric locomotive project, Madhepura

   Contract value: Rs 19,800 crore
   Awarded to: French transport company Alstom,
   which emerged as the lowest bidder, beating
   Bombardier and Siemens
   Bids: Opened on September 3, 2015.
   ( LoA awarded on November 9, 2015.)

   நீங்கள் இதற்கு விளக்கம் கூறும் முன்னர்,
   இன்னொரு முக்கியமான தகவலையும்
   இங்கு தந்து விடுகிறேன் –

   இரண்டு ப்ராஜெக்டுகளுமே, திரு.லாலு பிரசாத்
   ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, பீஹாரில்
   கொண்டு வர அவரால் முயற்சி எடுக்கப்பட்டவை –

   Both projects were announced by former railway minister
   Lalu Prasad – whose Rashtriya Janata Dal won big
   in Bihar – in 2007 but got mired in delays and controversies
   and could not take off.

   ————————–

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    many projects were announced earlier true ,but the bjp govt is taking effort to put them on track — what is the use of announcing projects — take railways for example -how many new projects were announced by this govt –they could have but did not – but they are trying to improve the existing system and not just announce new projects — what I am saying is that the govt may have differences with the opposition parties in power but they dont stop or delay project that can be given a life –i know that the projects were from Lalu period –the govt could have left the above projects in limbo because the party was rejected by the people -nobody would have noticed it or bothered about it –how and why did the present govt bother to tide over delays and controversies and try put it on track –because they think that it is beneficial to the country in the long run –that is where this govt differs from others —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     லாலு கொண்டு வந்தது என்பதை விட,
     கட்சியின் தேர்தல் நலன் தான்
     அப்போது முக்கியமாகப் பட்டது.
     அதனால் தான் தேர்தலுக்கு முன்னர் இதைக்கொண்டு வந்து,
     தமது சாதனையாக காட்ட முயன்றார்.

     ரிசல்ட் இப்படி இருக்கும் என்று அப்போது தெரியாதே…

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    // காவிரி பிரச்சனைக்காக சாகப் போவதாக மோடியை மிரட்டினேன்: தேவகவுடா பரபரப்பு தகவல் //
    Read more at: http://tamil.oneindia.com/news/india/deve-gowda-threats-pm-modi-on-cauvery-265671.html — என்ன ஒரு ——— செயல் … ? மிரட்டினால் பயப்படும் ” பிரதமர் ” — ஐயோ … பாவம் ….?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     இவர், அவரை -ஏமாற்றி விட்டதாக நினைத்து
     பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்…

     ஆனால், “அவர்” – “இவரை” தூக்கி முழுசாக சாப்பிட்டு விட்டது
     இவருக்கு தெரியவில்லை – பாவம்…. 🙂 🙂

     அந்த நாட்களில் வந்த சினிமா தலைப்புகளில் சில
     உங்களுக்கு ஞாபகத்திற்கு வரவில்லை….?

     “கில்லாடிக்கு கில்லாடி”
     “வல்லவனுக்கு வல்லவன்”
     “போக்கிரிக்கு போக்கிரி ”
     “விடாக்கண்டன், கொடாக்கண்டன் ” 🙂 🙂

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. LVISS சொல்கிறார்:

  Mr KM , one more thing –the Pm is saying /doing namaste which means ‘ i bow to the God in you /the spirit within me salutes the spirit within you –so what is wrong in bowing before another person and greeting him/her –this is also called anjali mudra —
  when we visited the UN during my recent trip to the US a foreigner at the entrance greeted us with the word namaste slightly bowing his head —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   நீங்கள் ஒரு hardcore bjp activist -ஐயும் விட அதிகமாகவே
   வக்காலத்து வாங்குவது எனக்கு அதிசயமாகவே இருக்கிறது.

   ஆமாம் – அந்த
   // i bow to the God in you /the spirit within me
   salutes the spirit within you //

   ஏன் எப்போதும் வெளிப்பட மாட்டேனென்கிறது…?

   தேர்தல் காலங்களில் மட்டும், அதுவும் முக்கியமாக
   ஓட்டர்களை பார்க்கும்போது மட்டும் தான்
   அந்த “இஸ்பிரிட்” வெளிவருமா…?

   மற்ற நபர்களை பார்க்கும்போதோ,
   தேர்தல் இல்லாத மாநிலங்களுக்கு செல்லும்போதோ –
   மோடி சார் இதை செய்கிறாரா என்று கொஞ்சம்
   கவனியுங்களேன்… அப்போதெல்லாம்
   அந்த “அஞ்சலி” எங்கே போய் விடுகிறாள்….?

   // when we visited the UN during my recent trip to the US
   a foreigner at the entrance greeted us with the word namaste
   slightly bowing his head //

   So – இதுவும் மோடிஜி effect என்று பெருமைப்படுகிறீர்களா…?

   – அடுத்த தடவை நீங்கள் ஜப்பானுக்கு போனால்
   கவனியுங்கள்… பார்க்கும் ஒவ்வொருவரும் இதைத்தான்
   செய்வார்கள்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Nesan சொல்கிறார்:

  யோவ் காவிரி மைந்தன் நீர் யாருக்கு வேணா சொம்படி, வேணாங்கலை. ஆனா உமக்கு பிரதமரையும், பாஜகவையும் பிடிக்கலைன்னா அதுக்காக அவரின் எல்லா செயல்களையும் நக்கல் அடிக்கறது உம்ம வயசுக்கு அழகல்ல.

 6. selvarajan சொல்கிறார்:

  ஒரு செய்தி :—- // 2 + 2 என்ன என்று கேட்டால்.. பிராமணர்களை கேவலமாக விமர்சித்த கட்ஜு! //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/katju-teases-brahmins-modi-265522.html — இந்த செய்தியில் : — திரு கட்ஜு அவர்கள் கூறியுள்ள // மோடி ஒரு பிராடு குஜராத்திகள் குறித்து கட்ஜு கூறுகையில், குஜராத்திகள் தண்டாவி்ல் ஸ்மார்ட். அதில் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு அவர்களுக்கு. ஆனால் பிரிட்டிஷ் ஏஜென்டுகள் ஜின்னா, காந்தி, இருவரும் சேர்ந்து பிளவுபடுத்தினார்கள் நாட்டை. இப்போது இந்த பிராடு நரேந்திர மோடி தண்டாவுடன் திரிகிறார் என்று கடுமையாக எழுதியுள்ளார் கட்ஜு.// இதற்கு இதுவரை யாருமே ஒரு மறுப்போ — கண்டனமோ தெரிவிக்கவில்லை போல தெரிகிறது —- அடுத்து விகடனில் ஒரு செய்தி : —

  Posted Date : 17:12 (25/10/2016) Last updated : 17:52 (25/10/2016)
  // ‘தமிழ்நாட்டில் நாம் நினைத்திருந்தால்…! // ‘ -அமித் ஷாவிடம் மனம் திறந்த மோடி // …… http://www.vikatan.com/news/tamilnadu/70510-prime-minister-modi-interacts-with-amit-sha-about-tn-political-situation.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=5998 — திரு மோடிஜியின் உள் மனம் பேசியிருப்பதாக கொள்ளலாமா … ?

  அய்யா … தாங்கள் அளித்துள்ள பட்டியல்களை — கட்சியினரின் வற்புறுத்தல்களையும் பார்த்தால் — உண்மையில் ” நமது பிரதமர் ” பாவம்தான் — ! இருந்தாலும் தேர்தல்களின் போது ரொம்ப வளைவதும் …. வாக்குறுதிகளையும் — கணிசமான வளர்ச்சிப்பணிகளுக்கான தொகையையும் வாரி வழங்கி — அந்த மாநில மக்களை திக்கு- முக்காட வைப்பதும் — மோடிஜி பற்றி தாங்கள் முன்னொரு இடுகையில் பதிவிட்டு இருந்த செய்தியும் — பின்னூட்டங்களும் நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்துகிறது — அந்த இடுக்கை :— // சிவாஜிக்கே பெரும் சவாலாக இருந்திருப்பார்…..!!! //
  Posted on ஓகஸ்ட் 18, 2015 by vimarisanam – kavirimainthan — எது நடந்தாலும் ” நல்லதாக ” இருந்தால் — இந்திய மக்கள் ” பாக்கியவான்கள் ” .. தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   மோடிஜியும், அமீத் ஷாஜி’யும் பேசியதை
   விகடன் திருமாவேலஞ்சி ஒட்டுக் கேட்டது
   நல்ல கற்பனை….!

   இதையெல்லாம் மக்கள் நம்புகிறார்கள்
   என்று விகடன் நினைத்துக் கொண்டிருப்பது
   அவர்களின் அறிவீனத்தையே காட்டுகிறது.

   மக்கள் ஒரு பொழுதுபோக்காக நினைத்து தான்
   இவற்றை எல்லாம் படிக்கிறார்கள்…
   அவர்களும் தினம் தினம் புதிது புதிதாக யோசித்து யோசித்து
   கதைகளை கண்டுபிடிக்கிறார்கள்…

   ————–

   கட்ஜூ பாதி சு.சுவாமி….
   விளம்பரப் பைத்தியம்…

   யாராவது பதில் சொன்னால் –
   இன்னமும் வேகமாகத் தாக்குவார்…
   அந்த பயத்தில் தான் அவரைக்கண்டாலே
   எல்லாரும் ஒதுங்குகிறார்கள்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. ravi சொல்கிறார்:

  // ‘தமிழ்நாட்டில் நாம் நினைத்திருந்தால்…! // ‘ -அமித் ஷாவிடம் மனம் திறந்த மோடி // …… http://www.vikatan.com/news/tamilnadu/70510-prime-minister-modi-interacts-with-amit-sha-about-tn-political-situation.art?
  இந்த ரெண்டு பெரும் பேசும் போது , விகடன் நிருபர் நடுவில் உட்கார்ந்து கொண்டு கேட்டார் போல .. முடியல !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.