திருட்டுப்பயல்களை காப்பாற்ற ஒரு சட்டமா..? நமக்கு எதற்கு….?

sc

உச்சநீதிமன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) ஒரு வழக்கு.
அதுவும் பொது நல வழக்கு… நேற்று முன் தினம்
விசாரணைக்கு வந்திருக்கிறது.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் – 500 கோடி
ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கி திரும்ப கொடுக்காத
பெரும்புள்ளிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட
வேண்டும் என்பது வழக்காளரின் கோரிக்கை…

தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் அவர்களின் அமர்வு
முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. 57 பேர்
கொண்ட ஒரு பட்டியலை “சீல் இட்ட கவரில்” வைத்து
ரிசர்வ் வங்கி கோர்ட்டில் ஒப்படைத்தது. அதாவது –
அது ரகசியமான விஷயமாம்…! நீதிபதி மட்டுமே பார்க்க
பட்டியலை கொடுத்திருக்கிறது.

இந்த 57 மாபெரும் கொள்ளைக்காரர்களிடமிருந்து மட்டுமே
வர வேண்டிய மொத்த கடன் தொகை –

மூர்ச்சை அடைந்து விடாதீர்கள் – 85,000 கோடி – அதாவது
எண்பத்தைந்து ஆயிரம் கோடி ரூபாய்கள்…….!!!!!!!!!!!!!!!!!!!!!

( இது 500 கோடிக்கு மேல் உள்ளவர்களின் பட்டியல்
மட்டுமே… 500 கோடிக்கு கீழே உள்ள வராத
கடங்காரர்களையும் சேர்த்தால், திரும்ப வராத கடன்
தொகை ஒரு லட்சம் கோடியை தாண்டுமாம்…!!!)

இந்த கடங்காரர்களின் பட்டியலை இதுவரை நீங்கள்
ஏன் வெளிப்படுத்தவில்லை என்று கேட்ட கோர்ட்டுக்கு –
ரிசர்வ் வங்கியின் வழக்குரைஞர் சொல்லி இருக்கிறார் –

” ஏமாற்ற வேண்டும் என்பது இவர்களின் நோக்கமல்ல…
அவர்களின் இயலாமை தான் காரணம்…. மேலும் அவர்களின்
விவரங்களை வெளியிட சட்டம் இடம் கொடுக்கவில்லை…
( “Names of defaulters cannot be made public
under the statutory law ” )

இந்த பதிலைக் கேட்டால் நம் நிலையை நினைத்து
அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. வீடு வாங்க
என்று 5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கியவர்களின்
பெயர்களையும், பெண்களாயிற்றே என்று கூட பார்க்காமல்

புகைப்படங்களையும், பத்திரிகைகளில் விளம்பரங்களாக
வெளியிடும் வங்கிகளின் சார்பாகத்தான் இந்த வக்காலத்து
முன்வைக்கப்படுகிறது.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திரும்ப கொடுக்காமல்
ஏமாற்றுபவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ
வெளியிடக்கூடாது என்று எந்த சட்டம் கட்டுப்படுத்துகிறது..?

ஒரு வேளை அப்படி ஒரு சட்டம் இருந்தால் அது –
கோடிக்கணக்கில் ஏமாற்றுபவர்களை மட்டும் தான்
பாதுகாக்குமா…? வீட்டுக்கடனை உரிய நேரத்தில் திரும்ப
கொடுக்க தவறும் பெண்களை அந்த சட்டம் பாதுகாக்காதா…?

ஒரு வேளை அப்படி ஒரு சட்டம் இருந்தால் –
அதைத் தூக்கி எறிவதற்கு இதைவிட சிறந்த நேரம்
உண்டா….?

உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கி வழக்குரைஞரிடம்
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ( Right to
Information Act ) இந்த பெரும் கடங்காரர்களின் பட்டியலை
பொது தளத்தில் வெளியிட வேண்டி இருக்கும் என்றும் –

வங்கிகள் இந்த நாட்டு மக்களின் நலத்திற்காக
உழைக்க வேண்டுமே தவிர வங்கிகளின் நலத்திற்காக
அல்ல என்றும் கூறி இருக்கிறது.

வழக்கை அக்டோபர் 28-க்கு ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம்,
அதற்குள்ளாக ரிசர்வ் வங்கி தனது நிலையை தெளிவாக
தெரிவிக்க வேண்டுமென்று உத்திரவிட்டிருக்கிறது.

இந்த கொள்ளைக்காரர்களால் எப்படி இவ்வளவு பணம்
கடனாகப் பெற முடிந்தது…? தவணைகளை திரும்பச்
செலுத்தாமலே மேலும், மேலும் OVER DRAFT வாங்கவும்
மீண்டும் மீண்டும் புதிது புதிதாக கடன்களை வாங்கவும்
இவர்களால் எப்படி முடிந்தது…?

இதில் வங்கிகளின் உயர் அதிகாரிகளின் பங்கு என்ன..?

அரசியல்வாதிகளின் பங்கு என்ன…?

ஊரை ஏமாற்றும் மிகப்பெரிய கூட்டம் ஒன்று
இத்தகைய கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

பெரிய பெரிய தொழிலதிபர்களும்,
அரசியல்வாதிகளும்,
வங்கிகளின் உயர் அதிகாரிகளும் அடங்கிய கும்பல் அது…

ரகசியக்கூட்டணி வைத்து நாட்டைச் சுரண்டும்
இவர்களின் கொட்டங்களை நீதிமன்றங்களால்
மட்டும் தான் அடக்க முடியும்….
சுப்ரீம் கோர்ட் இதை தொடர்ந்து கவனிக்கும்
(will continue to monitor ) என்று நம்புவோம்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to திருட்டுப்பயல்களை காப்பாற்ற ஒரு சட்டமா..? நமக்கு எதற்கு….?

 1. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஊரை ஏமாற்றும் மிகப்பெரிய கூட்டம் ஒன்று
  இத்தகைய கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இதில் வங்கிகளின் உயர் அதிகாரிகளின் பங்கு என்ன..?அரசியல்வாதிகளின் பங்கு என்ன…?பெரிய பெரிய தொழிலதிபர்களும்,அரசியல்வாதிகளும்,
  வங்கிகளின் உயர் அதிகாரிகளும் அடங்கிய
  ரகசியக்கூட்டணி நாட்டைச் சுரண்டுகிறது
  இவர்களின் கொட்டங்களை நீதிமன்றங்களால்
  மட்டும் தான் அடக்க முடியும்….
  சுப்ரீம் கோர்ட் இதை தொடர்ந்து கவனிக்கும்
  என்று நம்பலாமா…

 2. Ramani Sankar சொல்கிறார்:

  Whether it is BJP or congress, they are always for the big corporates. Previously Mr. Chidambaram, the then finance minister also has argued in the same manner protecting the big borrowers.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரமணிசங்கர்,

   இரண்டு கட்சிகளுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை…

   பெரு முதலாளிகள் பிழைக்கும் வழி தெரிந்தவர்கள்.
   எந்தக்கட்சியாக இருந்தால் என்ன…?
   அனுசரித்துப் போனால் –
   இவர்களுக்கும் லாபம், அவர்களுக்கும் வரவு.

   காங்கிரஸ் ஆட்சியில் “அந்த” அம்பானி என்றால்,
   பாஜக ஆட்சியில் ” இந்த “அம்பானி….

   இதே கதை தான் எல்லா கம்பெனிகளிலும் –
   எல்லா கட்சிகளிலும்…!
   பொதுஜனம் தான் இளிச்சவாயர்கள்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இந்த கடங்காரர்களின் பட்டியலை புகைப்படத்துடன் வெளியிட்டாலும் அதன் விளைவு என்னவாக இருந்து விடப்போகிறது … ? பட்டியலில் உள்ளவர்கள் ” வெட்கி தலை குனிந்து — வேதனைப்பட்டு — நாக்கை பிடுங்கிக்கொண்டு நாண்டு விட ” போகிறார்களா … ? அப்படியே வழக்கு என்று வந்தாலும் — வாய்தா — வாய்தா — வாய்தா என்று கேட்பதும் — அவர்களும் வாரி – வாரி வழங்குவதும் தானே .. நடக்கும் … ! முன்பு ” விக்கிலீக்ஸ் ” வெளியிட்ட சொத்து பட்டியலில் உள்ள பல கொள்ளையர்கள் — இன்றும் ஜாலியாக — இல்லையா … ? தேர்தலிலும் — அரசிலும் பங்கேற்காமல் இருந்து விட்டார்களா … ? மக்கள் அவர்களை வெறுத்து ” ஊரை விட்டு ஒதுக்கி ” வைத்து விட்டார்களா … ? — எப்பவாவது ஒரு விடிவு பிறக்கும் என்கிற ஆசை தான் —- நமக்கு …?

  அடுத்து ஒரு ” ஆச்சர்ய ” செய்தி : — // இது ஒரு மிராகிள்.. ஜெயலலிதா நலமாகிவிட்டார்.. விரைவில் வீடு திரும்புவார்: சு.சுவாமி தகவல் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/now-swamy-says-jayalalithaa-will-be-discharged-soon-265752.html — நமக்கு கூட சு. சுவாமி பற்றி ஒரு ” மிராகிள் ” தானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இந்த சு.சுவாமியிடம் ஒரு குணம் பார்த்தீர்களா…
   கொஞ்சம் கூட சூடு, சொரணையே இல்லை…
   ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டுமென்று
   பரிந்துரை செய்த அதே ஆசாமி தான் இவர்…

   இப்போது அதை சுத்தமாக துடைத்தெரிந்து விட்டு
   இங்கு செய்தி தருகிறார்…
   இந்த விஷயத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்…?
   அவர் என்ன செய்தித்தளமா நடத்துகிறார்…?
   ஏதோ லேடஸ்ட் செய்தி தருகிறவர் போல் ட்விட்டுகிறார்…

   இவர் காமெடியனா, வில்லனா என்பது தெளிவாகாததால் –
   ஹீரோவாக சிலர் நினைத்து .
   இவர் பின்னாலும் பலர் அலைவதால் வருகிற வினை இது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. NSM Shahul Hameed சொல்கிறார்:

  ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்
  மோசம்போன காசுக்கெல்லாம் சட்டங்களே வேணாமாம்!
  ……………
  “எலேய்! எங்கடா போறே?”

  “என்ற வூட்டுக்காச வெச்சுக்கிட்டு நீ என்னடா மீன் வாங்கித் திங்கிறது?” …”எடுத்துவைடா காசை! படுவா!.. உரிச்சுப்புடுவேன்!”

  “என்னங்க முதலாளி, கடைத்தெருல வெச்சுக்கிட்டு, இப்படி மானத்தை வாங்கறீங்க? நாலு பேரு நம்மளையே பார்க்கிறாங்க பாருங்க!”

  “பார்க்கட்டுண்டா! அவ்வளவு ரோசம் இருந்தா கொடுக்க வேண்டிய அம்பத்தஞ்சு ரூபாய இப்படிக் கொடுத்துட்டு நடையக் கட்டுறது!”

  “வரட்டும் முதலாளி!, பணம் பேங்குல கெடக்கு, தீபாவளி கழிச்சு எடுத்தாறேன்!”

  “ பேங்குன்னா பணம் கிடக்கத்தாண்டா செய்யும், உன்னோட பணம் பேங்குல இருக்கா? வெறுவாக்கெட்ட பயலே!, தீபாளிக்கு அடுத்த நாளு பணத்தக் கொண்டாரலே, படுவா பொங்கலுக்கு நீ இருக்க மாட்டே!”

  இந்த டயலாக் கற்பனைதான், ஆனால் இதனை விடவும் கடுமையாக நடு ரோட்டில் மானத்தை இழக்கும் அன்றாடம் காய்ச்சிகள் அலையும் நாட்டில்; வங்கிகள் கல்விக் கடன் பெற்றவர்களின் பெயர்களை புகைப்படத்துடன் ஃபிளக்ஸ் போர்டில் வங்கி வாசலில் வைத்துக் கடை நடத்தும் நாட்டில்தான் சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவாதம் நடந்திருக்கிறது!.

  பெரும் பண முதலைகளுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் சார்பில், அரசின் ( ரிசர்வ் வங்கியின் ) பதிலைப் படித்தால் நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.

 5. selvarajan சொல்கிறார்:

  // காவிரி நடுவர்மன்ற உத்தரவே இறுதியானது.. அப்பீலுக்கு அனுமதியில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/centre-files-written-submission-supreme-court-over-cauvery-case-265771.html —- இந்த செய்தியில் // உச்சநீதிமன்றத்திற்கு ஈடான அதிகாரம் கொண்டது நடுவர் மன்றம் என்று கூறியுள்ள மத்திய அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடர முடியாது. அதேபோல நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.// …. அய்யா … ! இது போல குறிப்பிட்டுள்ளது ” விநோதமா … இல்லை விதண்டாவாதமா … ? ” அப்போ நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துவார்களா … ? அரசிதழில் வெளியிட்ட பின்னும் காலம் தாழ்த்தியது ஏன் … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இது விநோதமும் இல்லை..
   விதண்டாவாதமும் இல்லை…

   இது கர்நாடகா எலெக்ஷன் சூட்சும வாதம்…
   நீங்கள் கேட்கும் கேள்வியை தமிழகம்
   இன்னொரு வழக்கு போட்டுத்தான் கேட்க முடியும்…

   அதற்குள் கர்நாடகா எலெக்ஷன் வந்து போய் விடும்…!!!

   பிறகு எப்படி முடிவு வந்தாலும் / எடுத்தாலும்
   பாதகம் இல்லை தானே….?

   கொம்பன் கள் … 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. வணக்கம் ஐயா
  இதையெல்லாம் படிக்கும் பொழுது மக்கள் மீதுதான் எனக்கு வெறுப்பு வருகின்றது நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருந்தும் அதை அறியாத மக்கள் தொகைதான் இந்தியாவில் அதிகம்.

  நாடு அழிவுக்கு வந்தால்தான் விமோசனம் பிறக்கும் என்றால் அழியட்டும் அதில் நானும், எனது குடும்பமும் இருக்கலாம் அது வேறு விடயம்.
  .
  ஒரு நாட்டில் 100 முட்டாள்கள் இருப்பதைவிட 5 அறிவாளிகள் போதும்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கில்லர்ஜி,

   இப்படி யோசித்துப் பாருங்கள் – சரி வருமா..?

   “அந்த 5 அறிவாளிகள்” கையில் தான் ஆட்சி
   இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறது… 🙂

   அதன் விளைவுகளை தான் நாம் இப்போது
   அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்..

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.