பாஜக C.M. எங்கேயாவது தப்பு பண்ணுவாரா…? பண்ணினா தான் …………………… மாட்டுவாரா…?

big_304579_1389289077

யென்ன பெரிய தப்பு…?
சர்க்கார் நிலம் தான் …. சரி –

ஆனா, அப்ப(ன்) சி.எம்.ஆக இருந்தாலும், பிள்ளைகள்
சும்மாவா நிலத்தை எடுத்துண்டாங்க
காசு கொடுத்து தானே சர்க்கார் நிலத்தை வாங்கினாங்க.?

என்ன – 5 கோடி மதிப்புள்ள நிலத்தை
40 லட்சத்துக்கு வாங்கினாங்க – இது ஒரு தப்பா…?
புக் வேல்யூ வேற அசல் வெலை வேற தெரியாதா..?

அப்புறம் என்ன – அதே நிலத்தை ஒரு
இரும்புச்சுரங்க கம்பெனிக்கு வித்தாங்க ..
யென்ன 40 லட்சத்துக்கு வாங்கின நிலத்தை
20+20 = 40 கோடிக்கு வித்தாங்க…

இது ஒரு தப்பா ?
வியாபாரம் செஞ்சா தப்பா ?
ட்ரஸ்ட் மூலமா வியாபாரம் செஞ்சா தப்பா.. ?

அப்பா சி.எம்.ஆ இருந்தா மகனுங்க, மருமகனுங்க –
ட்ரஸ்ட் வைக்ககூடாது – நிலம் வாங்கி
விக்கக்கூடாதுன்னு இந்தியால எதாவது சட்டம் இருக்கா…?
சத்யமேவ ஜெயதே….!

இரும்பு கம்பெனிக்காரங்க கொடுத்தது எல்லாம் –
லஞ்சம் ஆயிடுமா…?
அவங்க கொடுத்தது நிலம் வாங்கினதுக்காக கொடுத்தது…

என்ன அதுல கொஞ்சம் ட்ரஸ்ட் அக்கவுண்டுக்கு –
கொஞ்சம் பெர்சனல் அக்கவுண்டுக்கு போட்டாங்க –
அவ்வளவு தானே ?

இரும்பு கம்பெனிக்கு சி.எம்.ஆதாயம்
செஞ்சு கொடுத்தாரு – அதுக்கான பணம் தான் இது’ன்னு
சும்மா சொல்லிட்டா போதுமா ?
யாராலயும் நிரூபிக்க முடியுமா ?

சி.எம். எதாவது ஆதாயம் செஞ்சு கொடுத்தாரா..?
சி.எம்.தனியா எதாவது முடிவெடுத்தாரா ?
முழு கேபினட் சேர்ந்து தானே முடிவெடுத்தது ?
முழு கேபினட் சேர்ந்து ஒரு முடிவெடுத்தா –
அது அரசாங்கமே செய்த முடிவு தானே ?

அதை தனிப்பட்ட ஆதாயத்துக்காக முடிவெடுத்ததா
எப்படி சொல்ல முடியும் ?

அநியாயமான குற்றச்சாட்டு –
அதான் நிரூபிக்க முடியல்லை ..!
சத்யமேவ ஜெயதே …!

லோக் ஆயுக்தா சொன்னா –
சந்தோஷ் ஹெக்டே சொன்னா
கேஸ் போட்டூட முடியுமா ?
மேல இருக்கறது யாரு …?

” நாங்களும் சாப்பிட மாட்டோம் –
மத்தவங்களையும் சாப்பிட விட மாட்டோம்…!!!”

பாஜக சி.எம். யாராவது தப்பு பண்ணுவாங்களா…?
( பண்ணினா தான்………………?)

ம.பி. சி.எம். மேல குத்தம் சொன்னாங்க –
“வியாபம்” ஊழல்னு சொன்னாங்க….

சட்டிஸ்கர் சி.எம். மேல குத்தம் சொன்னாங்க –
35,000 கோடி பி.டி.எஸ். ஊழல்’னு சொன்னாங்க….

ராஜஸ்தான் சி.எம். மேல குத்தம் சொன்னாங்க –
45,000 கோடி சுரங்க ஊழல்’னு குத்தம் சொன்னாங்க –

முடிஞ்சுதா ? எதையாவது நிரூபிக்க முடிஞ்சுதா ?
பாஜக சி.எம். ங்க யாரும் தப்பு பண்ண மாட்டாங்க –
ஒரு வேளை தப்பு பண்ணினாலும் ………?

சத்யமேவ ஜெயதே…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பாஜக C.M. எங்கேயாவது தப்பு பண்ணுவாரா…? பண்ணினா தான் …………………… மாட்டுவாரா…?

 1. B.V.Subramanian சொல்கிறார்:

  கொன்னுட்டீங்க கே.எம்.
  ஒங்க கட்டுரைல யாராவது குத்தம் கண்டு பிடிக்க முடியுமா?
  புடிச்சா தான் நிரூபிக்க முடியுமா?

 2. seshan சொல்கிறார்:

  expecting jj also similar to this video…https://www.youtube.com/watch?v=e-A0a0gHnEY

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சேஷன்,

   இரண்டுமே அற்புதமான வீடியோக்கள்.
   லிங்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

   முதல் வீடியோவில், அத்தனை நோய்பாதிப்புகளுக்கு பின்னரும்
   தான் இன்னமும் வலுவுடனே இருப்பதை எம்.ஜி.ஆர்.
   பிடிவாதமாக உணர்த்துவதை பார்க்க –
   பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப்பற்றி
   நான் படித்திருக்கிறேன்… இப்போது தான் வீடியோவில் பார்க்கிறேன்.

   இந்த மனோபலமும் தன்னம்பிக்கையும் தான்
   அவரைக் காப்பாற்றி மீண்டும் கொண்டு வந்தது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! ஒற்றுமை அய்யா … ஒற்றுமை …. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சி.எம் . களும் — வாரிசுகளும் செய்கின்ற கடமையான — நடைமுறை பழக்கமாகி விட்ட ஒன்றை மாற்றுவது என்பது சிரமம் தானே … ? { திருடராய் பார்த்து திருந்தா விட்டால் — திருட்டை ஒழிக்க முடியாது } … 18 மாத பேரனுக்கு பலகோடிகள் கணக்கில் காட்டிய சொத்துக்கள் — இதுஆந்திராவில் — ” பேரன்களுக்கு சாமர்த்தியம் இருக்கிறது – சம்பாதிக்கிறார்கள் ” என்று – இங்கேயும் தமிழகத்திலும் ஒரு மூத்த — கொட்டைப்போட்ட அரசியல்வாதி தனது பேரன்களைப் பற்றி பெருமையாக கூறியதாக ஞாபகம் ….. ! அதுமட்டுமின்றி ” தேனை எடுப்பவன் புறங்கையை நக்குவான் ” என்றும் மாபெரும் தத்துவத்தை உதிர்த்து ஊக்குவித்தவர்களையும் நமது காலத்தில் கண்டு ரசித்துக்கொண்டு தானே … ? இருக்கிறோம் — ” சத்யமேவ ஜெயதே ” …! புரையோடிப்போன புண்ணுக்கு மருந்தாவது … எது … ??

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உங்களைப் பார்க்க எனக்கு மிகவும் பொறாமையாக
   ( பெருமையாகவும் கூட ) இருக்கிறது…..

   அத்தனை விஷயங்களையும் அப்படியே
   நினைவில் வைத்திருக்கிறீர்களே……
   கலைஞரைப் போல … 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Jipsy சொல்கிறார்:

  நன்பரே தேச துரோகி வருன்காந்தி ரானுவ ரகசியம் வெளியீடு பற்றி முழுமையான கட்டுரை எழுதுங்க.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.