பாலகுமாரன் அவர்கள் இப்படி சாணத்தை வாரி பூசிக்கொள்ளலாமா

balakumaran

ஆத்திரம், கோபம் என்பதை விட வருத்தத்தினாலும்,
ஆதங்கத்தினாலும் தான் இதை எழுதுகிறேன்..

பாலகுமாரன் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த
எழுத்தாளர்களில் ஒருவர். கிட்டத்தட்ட 35-40 ஆண்டுகளாக,

அவரது மெர்க்குரி பூக்களில் துவங்கி இன்றைய நாள்
வரை அவர் எழுதியவற்றில் 90 % சதவீதத்திற்கும் மேலாக
நான் படித்திருப்பேன்…

அவரது விளம்பரப் பித்தும், சொந்த வாழ்வும் ஒரு பக்கம்
தனியே இருந்தாலும் – அவரது எழுத்தை மிகவும்
விரும்புபவன் நான்.

வாழ்க்கையின் அனுபவங்களை அழகாகச் சொல்லிக்
கொடுக்கிறார்…. படிப்பவர்கள் விசாலமான சிந்தனையுடன்
வாழ்க்கையை அணுக இவரது எழுத்துக்கள் மிகவும்
துணையாக இருக்கின்றன என்பதாலேயே அவர் மீது
எனக்கு மிகுந்த அபிமானமும் உண்டு.

அண்மைக் காலங்களில், சில சமயங்களில் அவருக்கு
பொருத்தமற்ற சில விஷயங்களை அவர் எழுதுவதை
கவனித்து, இவர் இந்த வயதில் ஏன் (தடு)மாறுகிறார் என்று
நினைத்ததுண்டு.

ஆனால், நேற்றைய தினம், ஒரு நாளிதழின் தீபாவளி
இணைப்பில் “ப்ரியமுடன்” என்கிற தலைப்பில் அவர் எழுதி
இருக்கும் ஒரு கட்டுரை என்னை நொந்து போகச்
செய்து விட்டது.

தனது அம்மாவுக்கு எழுதுவதாக ஒரு கடிதம்…
அதில் உலகில் எந்த ஒரு மகனும் பயன்படுத்த முடியாத
கேவலமான வார்த்தைகளால் தன் தந்தையை ஏசி
இருக்கிறார். தந்தையை ஏசும் வார்த்தைகள் தன் தாயையும்
சேர்த்தே அவமானப்படுத்துவதாக இருக்கின்றன என்பதைக்
கூடவா அவரால் உணர முடியவில்லை…?

எப்போதோ, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே
இறந்து போய் விட்ட தந்தையின் மீது ஒரு மகனுக்கு
இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமா…இருக்கலாமா..?
அதுவும் பாலகுமாரன் போன்ற வயதிலும், உயரத்திலும்
இருப்பவர்களுக்கு…?

எழுத்தாளர், ஆசிரியர் என்கிற நிலையிலிருந்து உயர்ந்து –
குரு, ஆன்மிகவாதி – அடுத்து ஆசிரமம் அமைக்கலாமா
என்று யோசிக்கும் நிலையில் இருப்பவருக்கு…?

ஒருவேளை மனதில் இருந்தாலும் கூட, அதை இப்போது,
இந்த நிலையில், இந்த வயதில் – இப்படி பொதுமேடையில்
அள்ளிக்கொட்ட வேண்டிய அவசியம் என்ன…?

அவரது தந்தை மிகவும் மோசமான மனிதராகவே
இருந்திருந்தாலும் கூட இறந்து போன மனிதரை இப்படி
எல்லாம் அசிங்கப்படுத்தலாமா…? இதன் மூலம் தனது
தாயின் அந்தரங்க வாழ்க்கையையும் சேர்த்து
அசிங்கப்படுத்துகிறார் என்பதைக் கூட உணர முடியாமல்
எது அவரது கண்களையும், சிந்தனையையும் மறைக்கிறது…?
ARROGANCE – தானே…?

தனது தாயின் நினைவையும், உயர்வையும் நினைந்து,
போற்றி எழுத நினைத்திருந்தால் – தந்தையை இகழாமலேயே

அதை மிக அழகாக அவர் செய்திருக்கலாம்….
தன் தாயின் வாழ்க்கையை சொல்வதன் மூலம்
மற்ற பெண்களுக்கு எதாவது செய்தி
சொல்ல நினைத்திருந்தால் – அதையும் கூட, தந்தையை
இப்படி அசிங்கப்படுத்தாமலே சொல்லி இருக்கலாம்…

———————————-
ஆனாலும் – நீங்கள் இப்படி செய்தது குறித்து –
வருந்துகிறேன். உங்கள் நீண்ட நாள் அபிமானி என்கிற முறையில்
மிகவும் வருந்துகிறேன் பாலகுமாரன் அவர்களே.
———————————–

கீழே – பாலகுமாரன் அவர்களின் மேலே குறிப்பிட்டுள்ள
கட்டுரை. இதை மீண்டும் என் மூலமும் வெளியிட
எனக்கு விருப்பமில்லை. ஆனாலும், இதை படித்தாலன்றி,
நண்பர்களால் நான் மேலே எழுதியிருக்கும் செய்தியை சரியாக
உணர முடியாது.
மேலும், லட்சக்கணக்கானவர் படிக்கும் நாளிதழில்
வெளிவந்த பிறகு, நான் இங்கு பிரசுரிப்பதால் புதிதாக
தீமை எதுவும் விளைந்துவிடப்போவதில்லையே…

bala-amma-1a

bala-amma-2-001

bala-amma-3a

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

பாலகுமாரன் அவர்கள் இப்படி சாணத்தை வாரி பூசிக்கொள்ளலாமா க்கு 24 பதில்கள்

  1. avudaiappann சொல்கிறார்:

    unmaiyana karuthu….paarattavendum

    • B.V.Subramanian சொல்கிறார்:

      பாலகுமாரன் தனது “ப்ரியமுடன்” கட்டுரையின் மூலம்,
      தன் தந்தையின் ஜீன் அப்படியே தன்னிடம் வந்திருப்பதை
      நிரூபித்துக் கொண்டார். அவரது தந்தையை பழிக்கும்
      அவரிடமும் அதே குணம் இருப்பதை இந்த கட்டுரை
      வெளிப்படுத்துகிறது.

      பாலகுமாரன் ஒரு வேடதாரி.
      அவரது தோற்றம் அவரது உள்ளத்தையோ,
      எண்ணங்களையோ பிரதிபலிக்கவில்லை.

      • today.and.me சொல்கிறார்:

        //பாலகுமாரன் ஒரு வேடதாரி.
        அவரது தோற்றம் அவரது உள்ளத்தையோ,
        எண்ணங்களையோ பிரதிபலிக்கவில்லை.//
        துரதிர்ஷ்ட வசமாக அவரே அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

  2. marubadiyumpookkum (@tanigaiezhilan) சொல்கிறார்:

    yes you are right,age age and gene factors

  3. ravikumar சொல்கிறார்:

    It is obvious that Vakram not based intelligence. It is hidden quality for everyone. It has been proved in Sri.Bala and Late. Sri.Sujatha Rangarajan case. These two people used Female gender as a slave. Whatever they have written is so far is mere Waste and garbage

  4. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Mr.KM you know very well that ignoring such persons is the best solution to avoid unnecessary
    publicity. Somehow you have slipped this time.

    • B.V.Subramanian சொல்கிறார்:

      கோபாலகிருஷ்ணன்,

      நீங்கள் சொல்வது சரி அல்ல. பாலகுமாரன் போன்ற வேடதாரிகளை
      பலரும் உண்மையான ஆன்மிகவாதி என்று நம்புகிறார்கள்.
      போலி என்று தெரிபவர்களை தோலுரித்துக் காட்ட வேண்டியது
      விஷயம் தெரிந்தவர்களின் கடமை. காவிரிமைந்தன் அவர்கள்
      மிகவும் அவசியமான அதைத்தான் செய்திருக்கிறார்.
      காவிரிமைந்தன் உங்கள் இடுகையை நான் வரவேற்கிறேன்.

  5. Sundar சொல்கிறார்:

    Ithellam oru Jenmam…… Vetkamm

  6. வணக்கம் ஐயா
    முழுவதும் படித்தேன் இவருக்கு என்னவாயிற்று ? நானும் தங்களைப்போல இவருடைய எழுத்தை நேசிப்பவனே…. உண்மையில் இவர் நம்பும் இவரது தாயின் ஆன்மா இவரை மன்னிக்காது

    இறந்தவர்களை பழித்து லாபம் என்ன ? எதிரியாகவே இருந்தும்கூட லாபமில்லை அதிலும் தனது தந்தை அவமானப்படுத்தி இனிமேல் இவர் புகழ் பெற நினைக்கின்றாரா ?

    இன்றைய சூழலில் இவரது மகன் ஏதாவது காரணத்தை சொல்லி இவரை அவமானப்படுத்தினால் இவர் அந்த வலியை உணரமுடியும் என்பது எனது கருத்து ஐயா.

    இவரது வாசகனாக இருந்தமைக்கு வருந்துகிறேன் – கில்லர்ஜி

  7. today.and.me சொல்கிறார்:

    அன்பின் காமை,

    இவர் இப்படி தன் தந்தையைப் பற்றி எழுதியிருப்பதை, இத்தனை வருடங்களாக அதை அடைகாத்துக்கொண்டிருந்ததைப் பற்றி அந்த பதிவிரதை அறிந்தால்… அன்றே கொன்றிருப்பாளோ என்னவோ?

    புகைப்பட இணைப்புகளை இங்கே இணைக்கமுடியவில்லை.

    கொம்பு முளைத்த பேனாக்கள் – ல் இணைத்திருக்கிறேன்.
    http://www.todayandme.wordpress.com

  8. yarlpavanan சொல்கிறார்:

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ypvnpubs.com
    seebooks4u.blogspot.com
    yarlsoft.com

  9. drkgp சொல்கிறார்:

    நன்றாக எழுதும் சிலர் இழிபிறவிகளாகவே இருந்துள்ளனர் என சரித்திரம் சொல்கிறது.
    இவரது ஒழுங்கீனத்தைப்பற்றி முன்பே அறிந்துள்ளேன்

  10. Prabhu T சொல்கிறார்:

    ஐயா, நான் உங்கள் கருத்தோடும், இங்கு பின்னூட்டம் இட்டுருப்பவர்களின் கருத்துகளோடும் முரண்படுகிறேன். இறந்தவர்களை விமர்சிக்கக் கூடாது என்ற ஒரு கற்பிதம் அநேக உண்மைகளை மறைக்க ஏதுவாகிறது என் என்பது எண்ணம். இருந்தாலும், இறந்தாலும் ஹிட்லர் ஹிட்லர்தான், இடி அமீன் இடி அமீன்தான். அவர்களிடம் சிலாகிக்க என்ன இருந்துவிட முடியும்? நமக்கு அறசீற்றம் வருவதற்கு முன் திரு. பாலகுமாரனின் நிலையில் நம்மை பொருத்திப் பார்க்க வேண்டும். பொதுவாக அவருடைய எழுத்துக்களில் இயல்பான பாலுணர்வு விவரணைகள் கொஞ்சம் தூக்கலாகதான் இருக்கும், அது அவருடைய பாணி. தன் சொந்த வாழ்க்கையில் அவர் பட்ட வேதனைகளுக்கும், அனுபவித்த வலிகளுக்கும் இந்தக் கட்டுரையின் மூலம் வடிகால் தேடி, ஒரு ஆறா ரணத்துக்கு மருந்திட்டு முயன்றிக்கிறார். அவ்வளவே! சாரு போன்ற எழுத்தாளனை கொண்டாடும் இந்த தமிழ் சமூகத்துக்கு இது உறுத்தலாய் இருக்கிறது என்பது எனக்கு வியப்பான ஒன்று. Mr. Balakumaran has expressed his angst and pain in a very forthright manner without coating the bitter pills without sugar, thats the end all and be all of this matter…we have to put ourselves into his shoes before we criticize him unfairly.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப பிரபு,

      பாலகுமாரன் அவர்களின் தந்தை ஒரு பொது மனிதர் அல்ல.
      அவர் பொதுவாழ்க்கையில் இருந்தவர் அல்ல.

      பாலகுமாரன் தன் தந்தையைப்பற்றி, தன் குடும்ப உறுப்பினர்களிடையே
      எப்படி வேண்டுமானாலும் விமரிசிக்கலாம். அது அவரது உரிமை.

      ஆனால், பொதுவெளியில், தன் தந்தையைப்பற்றி,
      அதுவும், தாயின் சுயமரியாதையை பாதிக்கும் வண்ணம்,
      தன் கணவருடன் அவர் கொண்ட தனித்த உறவுகளைப் பற்றி –
      எந்தவித தேவையோ, தூண்டுதலோ இல்லாமல் –
      எழுதுவது – அந்த தாய்க்கே இவர் செய்யும் அவமரியாதை.

      இது முழுக்க அவரது அகங்காரத்தையும், திமிரையும்
      காட்டுகிறது. வயதிற்கேற்ற மன முதிர்ச்சி அவரிடம் இல்லை –
      இருப்பதாக காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் வேஷம் –
      என்பதை அவரே வெளிப்படுத்திக் காட்டி விட்டார்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  11. selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! முதலாவதாக : அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் [ நரகாசுரன் நினைவாக ] … !

    இரண்டாவதாக திரு பாலகுமாரன் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் [ 01 – 02 – 2010 ] // உங்கள் எழுத்துக்களை வெகுஜன வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்ததில்”குமுத’த்துக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா? பொதுவாக, வெகுஜனஎழுத்துலகில் அடையாளம் பெற நினைக்கிற யாரும், இந்தக் கோட்டைக்குள் நுழையமுடியுமா என்று அண்ணாந்து பார்க்கிற இதழ்களாக அல்லவா “குமுத’மும்”விகட’னும் அன்று இருந்தன?

    “”ஆமாம்! இந்த விளம்பர யுகத்தில் எவருமே சுயம்புவாகத் தன்னைஅரங்கேற்றிக்கொள்ள முடியாது. நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னைத் தடவித்தடவி வளர்த்தி ருக்கின்றன. அதில் ஒரு கை தழும்பாய் என் நெஞ்சில் இன்னமும் இருக்கிறது. அந்த கைக்குப் பெயர் பால்யூ. அன்றைய “குமுதம்’ இதழின் தூண்போன்ற இதழாளர். பால்யூ மனிதர் களைப் பார்க்கும் விதமும் விசாரிக்கும்விதமும் எனக்குப் புதிதாக இருந்தன. // என்று பேட்டி தொடருகிறது —

    அதிலேயும் // பெண்களைப் பற்றிப் பேசுகிற இந்த இடத்தில் உங்கள் தாயாரைப் பற்றி ஒரு கேள்வி. உங்களுக்கு தமிழைப் புகட்டியதில் தமிழாசிரியராக இருந்த உங்கள்தாயாரின் பங்கு எத்தகையது? பொதுவாக தந்தையை ஒரு கம்பீரமான முன்மாதிரியாகக்கொண்டே சாதனையாளர்கள் வெற்றி கரமாக முன்னேறியிருக்கிறார்கள். மாறாக உங்களுக்கு அந்த இடத்தில் இருந்தவர் உங்கள் தாயார் அல்லவா? // என்ற ஒரு கேள்விக்கு —-

    தன் தந்தையை பற்றி // அப்பாவின் காட்டமான, ஆத்திரமான, அசூயையான பேச்சிற்கு அம்மா பலமுறை இரையாகி இருக்கிறாள். “படிப்பு என்ன பெரிய படிப்பு. உன் படிப்புல நாய் ….’ என்றவசவை அப்பா அடிக்கடி உபயோகப் படுத்துவார். “நான் வேறு, என் படிப்பு வேறு. அதை ஏன் கேவலமாகப் பேசுகிறீர் கள்’ என்று அம்மா எதிர்த்தபோது, “அப்படியாஉன் படிப்பு தலையில இரண்டு அடி போடறேன்’ என்று சொல்லி அவள் கன்னத்தில்அறைந்தார். “நான் உன்னை அடிக்கலையே உன் படிப்பைதானே அடிச்சேன்’ என்றுசொல்ல, நான் விக்கித்துப் போய் நின்றேன். முரட்டுத்தனமாய் அவரிடம் முட்டமுயன்றபோது, தடுத்தபோது, “முட்டினால் அவர்களுக்குப் புரியாது. முரண்டு செய்தால் அவர்களுக்குப் புரியாது. வாழ்க்கை அவர்களுக்குப் பாடம்சொல்லித்தரும். முரடர்களை ஊன்றிக் கவனித்துப் பார், உன்னிடமிருக்கும்முரட்டுத் தனம் விலகும்’ என்று சொன்னாள்.// என்றும் கூறியுள்ளார் —

    மூன்றாவதாக அய்யா … ! அதே ஆண்டு — அதே மாதம் [ 22- 02 – 2010 ] தாங்கள் ஒரு இடுக்கை பதிவிட்டு இருந்திர்கள் — அது : // குமுதம் செய்வது மகா கேவலம் .. பால குமாரனுடன் என்ன பிரச்சினை ? //
    Posted on பிப்ரவரி 22, 2010 by vimarisanam – kavirimainthan — தற்போது அந்த இடுகையை படித்தால் —- ” சில நேரங்களில் சில மனிதர்கள் ” — என்று நினைக்க தோன்றுகிறது —– அவரது உள்மனதில் புரையோடிக் போன தந்தையின் செய்கை மீண்டும் வெளிப்பட்டு இருக்கிறது — தன் தந்தையைப்பற்றிய எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்த விரும்பாத ஒரு மனிதர் — வெளியில் மீண்டும் – மீண்டும் கூறி உறவையே கொச்சை படுத்துகிறாரா … ? கடைசியாக மனம் பக்குவப்பட தாடி வளர்ப்பது மட்டும் போதுமா …. ?

    • selvarajan சொல்கிறார்:

      மேலே உள்ள பின்னூட்டத்தில் நக்கீரன் நேர்காணலுக்கு http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4941 — சொடுக்கவும் …

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      இவரது குணங்கள் பற்றி துவக்கத்திலிருந்தே
      எனக்கு ஓரளவு சரியான மதிப்பீடு உண்டு.
      இருந்தாலும், அவரது எழுத்துக்கள் எனக்கு
      பிடித்திருந்ததாலும், கிட்டத்தட்ட 40 வருடங்களாக
      தொடர்ந்து படித்து வந்ததாலும், ஒரு வித
      அபிமானம் இருந்தது.

      இவரை இன்னும் மிககடுமையாக விமரிசனம்
      செய்ய விடாமல் அது தான் என்னை தடுத்தது.
      இப்போது தானாகவே தன்னை முழுவதுமாக அவர்
      expose செய்து கொண்ட பிறகு,
      ஒரு எரிச்சலும், வெறுப்பும் தான் மிஞ்சுகிறது.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  12. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    அன்புள்ள காமை சார்,

    உங்கள் இந்த இடுகை நிறைந்த அர்த்தம் பொதிந்தது.

    இவர் ஏன் தெரிந்தே தன் மீது சாணி அடித்துக்கொள்கிறார்? வயது அவருக்கு மன விசாலத்தைத் தரவில்லையே. அவர் மட்டும் நியாயமாக நடந்துகொண்டாரா? இரு தாரம். இவரைப் பற்றி இவருடைய மகனோ அல்லது மகளோ எழுதமாட்டார்கள் என்று எண்ணுகிறாரா? பாலகுமாரனும், அவர் அம்மா மற்றும் அவர் அப்பா படைப்புத்தான். அப்பாவின் எந்த எந்த குணங்கள் தன்னிடம் இருக்கின்றன, அவை அத்தனையுமே மோசமான குணங்களாக இருந்தால், எப்படி அதை விலக்குவது என்று யோசிப்பதில் அவர் நேரத்தைச் செலவழித்திருக்கலாம்.

    பிரபு அவர்கள் சொல்லியிருப்பதில் ஓரளவுதான் சரியாகத் தெரிகிறது. தன் அன்னையைச் சரியாக நடத்தவில்லை என்று எண்ணும் (அல்லது தன்னையும்) பாலகுமாரன், தனக்கு இரு மனைவி வைத்துக்கொள்வது, முதல் மனைவியின், அவளின் குழந்தையையும் வருத்தப்படுத்தாதா என்று யோசித்தாரா?

    பொதுவாகவே, நாம் எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும்தான் பார்க்கவேண்டும். படைப்பைப் படித்து, எழுத்தாளனின் யோக்கியதை இப்படி இருக்கும் என்று நினைத்தால் பெரும்பாலும் ஏமாற்றமாகவே முடியும். சுஜாதா காலத்தில், அவருக்குச் சமமாக வரும் வகையில் இவரும் படைப்புகள் கொடுத்துள்ளார். அந்த எழுத்தாளன் பாலகுமாரன் பாராட்டுக்குரியவர்.

  13. senthil சொல்கிறார்:

    உங்களுகு பிடித்த மாதிரி எழுதினால் புகழ்வீர்கள்….இல்லை என்றால் ….இகல்வீர்கள்…..

    உங்கள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ….பாலா….. கிஞ்சித்தும் மயங்குவதில்லை….

  14. senthil சொல்கிறார்:

    அடிபடையில் ….நீங்கள் உங்கள் கருத்துகளுக்கே முக்கியத்துவம் தருகிறீர்கள்…பாலா வுக்கு அல்ல…

    அணைத்தியும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடையவர் பாலா….

    நீங்கள் வரையறுக்கும் ..”.நல்ல மனிதன்”….வட்டத்துக்குல் …அவர் சிக்கி கொள்ள விரும்ப வில்லை….

  15. Barani சொல்கிறார்:

    I don’t see anything wrong in Balakumaran’s article. We are always talking about Good and Bad about dead. Aren’t you reading anything about Hitler? By knowing the past we can avoid same mistakes in future. He clearly mentioned there is no point of accepting a bad person since he is a woman’s husband. He didn’t pretend or hide what his father did. Actually I don’t like Balakumaran and I don’t have any reason for the dislike but after reading this article I think I was wrong.

  16. B.V.Subramanian சொல்கிறார்:

    //Actually I don’t like Balakumaran and
    I don’t have any reason for the dislike //

    – “காரணம் இல்லாமலே நான் ஒருவரை வெறுக்கிறேன்” –

    பின் எந்த தகுதியில் இங்கு பின்னூட்டம்
    போட வந்தீர் அய்யா ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s