கட்டினால் மட்டும் தானா…..???

moulli_-2

mouli-bldg

11 மாடி கட்டிடம் –
220 அடி உயரம் – 150 அடி அகலம் –
அரைகுறையான அஸ்திவாரம் –
எப்போது வேண்டுமானாலும்
சரிந்து விழலாம் என்கிற நிலை –

சுற்று வட்டாரத்தில் குடியிருந்த மக்களை
பத்திரமாக வேறு இடத்திற்கு கொண்டு சென்று,
அவர்களுக்கான அவசிய வசதிகளை செய்து கொடுத்து,
உணவு, தண்ணீர், போக்குவரத்து ஏற்பாடு செய்து –

அவர்களிடமிருந்து வேண்டிய அளவிற்கு
வசவுகளையும், சாபங்களையும் வாங்கி கட்டிக்கொண்டு –

எப்போதுமே மிகவும் அதிக நெருக்கடியாக இருக்கும் –
குன்றத்தூர், போரூர் பாதையில் போக்குவரத்தை
4-5 மணி நேரத்துக்கு நிறுத்தி, மாற்று ஏற்பாடு செய்து,
அங்கேயும் சகட்டு மேனிக்கு வாய்கூச திட்டுபவர்களை
காதில் வாங்காமல் கருமமே கண்ணாகி –

மின் சப்ளையை 5 மணி நேரத்திற்கும் மேலாக
நிறுத்தி வைத்து அதன் மூலம் ஏற்பட்ட பொதுமக்களின்
அதிருப்தியை பொறுமையுடன் சமாளித்துக் கொண்டு –

அருகிலிருந்த பள்ளிகளை 2 நாட்கள் மூடி
சிறுவர்களின் மகிழ்ச்சிக்கு அடிகோலி –

செய்தியாளர்கள், தொலைக்காட்சி சேனல்களை
ஒழுங்குபடுத்தி, இடம், வசதி செய்து கொடுத்து –
இருந்தும் விமரிசனங்களை எதிர்கொண்டு –

மதியம் இரண்டு மணியிலிருந்தே, அனைத்து
தரப்பிலிருந்தும் –
ஆயிற்றா,
எப்போது,
ஏன் இன்னும் தாமதம் ?
-போன்ற கேள்விகளை பொறுமையுடன் சமாளித்து –

மாலை 5 மணிக்கு மேல், மீடியாக்காரர்கள்
அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் –

இருட்டுகிறதே ..?
இருட்டில் எப்படி முடியும் .. ?
தொழில் நுணுக்க கோளாறா…?
திட்டம் கைவிடப்படுமா…?
இல்லை நாளை பகலில் தானா…?
70 கிலோ ஆர்.டி.எக்சை இரவு பூராவும்
அப்படியே விட்டு விட்டு போவது ஆபத்தில்லையா ?
மழை பெய்தால், மின்னல், இடியில் வெடித்து விடுமா ..?

கிளப்பப்பட்ட அத்தனை கேள்விகள், சங்கடங்கள், சந்தேகங்களையும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் –

அப்பப்பா – எத்தனை பிரச்சினைகள்…..!

அத்தனையையும் – பொறுமையுடன் சமாளித்து,

தமிழகத்தின் வரலாற்றிலேயே
(இந்தியாவின் என்று தான் சொல்ல வேண்டும் –
ஏனோ மீடியாக்கள் உறுதி செய்யவில்லை)
முதல்பெரிய கட்டிட தகர்ப்பை –

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்தை
மூன்றே விநாடிகளில், படு பத்திரமாகவும்,
வெற்றிகரமாகவும், இடித்து சாய்த்த –

காஞ்சீபுரம் கலெக்டர் திருமதி கஜலட்சுமி
அவர்கள் தலைமையிலான குழுவிற்கும்,

_kancheepuram-district-collectorn-gajalaxmi_

சென்னை போலீஸ் கமிஷனர்
திரு.எஸ்.ஜார்ஜ் அவர்கள் தலைமையிலான குழுவிற்கும்,
சென்னை தீயணைப்பு படையினருக்கும் –

chennai-police-commissioner

தொழில் நுணுக்க விஷயங்களுக்கு
பொறுப்பான இடிப்பாளிகள் குழுவினருக்கும்,
(அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரியாததால்
எழுத முடியவில்லை….)

இந்த பொறுப்பை துணிந்து முன்வந்து ஏற்று
வெற்றிகரமாக முடித்த திருப்பூர் “மேக் லிங்க்”
நிர்வாக இயக்குநர் பொன்.லிங்கம் அவர்களுக்கும் –

இன்னும் இதில் சம்பந்தப்பட்ட,
வெளியில் பெயர் தெரியாத அத்தனை பேருக்கும்,
அவர்களது கடினமான, அயராத முயற்சிக்கும் –
அற்புதமான சாதனைக்கும் –

நமது மனமார்ந்த பாராட்டுதல்களையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

malar-kothu

கட்டுவது மட்டுமில்லை –
இந்த மாதிரி இடிப்பதும் ஒரு சாதனை தான்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to கட்டினால் மட்டும் தானா…..???

 1. Senthil சொல்கிறார்:

  Really….happy to read the post , happyness is not about the building demolished or the team’s achivement , It is that in the post that every one is praised and no one is being criticized.

  Happy becomes double to see this from KM sir,

  let us spread the positive vibrations.

  Nithyanandham
  senthil

 2. selvarajan சொல்கிறார்:

  இந்த இடிப்புக்கு யார் — யாரோ தான்தான் காரணம் என்று கூறுவது நகைப்புக்குரியது — கன மழையினால் // இடிந்த கட்டடத்தின் அருகிலுள்ள மற்றொரு கட்டடமும் இடிந்து விழும் ஆபத்து இருப்பதால் அதனை இடிக்க கோரிக்கை எழுந்தது.
  2015 அக்டோபர் 19: ஆய்வின் அடிப்படையில் அதை இடிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
  2015 நவம்பர் 26: தொழில்நுட்ப காரணங்களை சுட்டிக்காட்டி ஆட்சியரின் உத்தரவு தடை செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  2016 மார்ச் 18: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து கட்டடம் குறித்து ஆய்வறிக்கை தர உத்தரவிட்டது.
  2016 மே 12: கட்டடத்தை ஆய்வு செய்த நால்வர் குழு, தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி கட்டடத்தை இடிக்க பரிந்துரை செய்தது .
  உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் ஆட்சியர் CMDA விடம் கட்டடத்தை இடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
  இந்நிலையில், மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் 02-11-2016 அன்று தகர்க்கப்பட்டது.// http://ns7.tv/ta/reason-destruction-maulivakkam-apartment.html

  இதுதான் தற்போது ” implosion ” முறையில் அதாவது உள் வெடிப்பு என்கிற தொழில்நுட்பப்படி இடிக்கப்பட்டது — ஆனால் தன்னால் தான் ” இடிக்கப்பட்டது என்று பீலா விடும் ஜென்மங்களை எதில் சேர்ப்பது .. ? அயராது உழைத்த அனைவரையும் — கைதட்டி ஆரவாரம் செய்த மக்களையும் — மற்றும் பாராட்டுகிற அனைவரையும் வாழ்த்துவோம் — ஆனால் இந்த அரசின் தொடர் நடவடிக்கையை பாராட்டாமல் — அதிலேயும் தனக்கு ” ஒரு லாபத்தை தேடிக்கொள்ள ” அலைகின்றவர்களும் இருப்பது தான் — வேடிக்கை ….!!!

 3. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  While appreciating the people who took all efforts to demolish such a building and also for taking all precaution to do the same carefully, we should also think about how permission was given to such an apartments and what about the actions taken on the officials who were involved in this….. The guy who had constructed the building by way of “MANAGING” official questions has now got a fitting reply – happy about it….. What about the govt. officials who were involved in helping the constructor ??….What about the people who might have paid advance to the plots in that apartment ??

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Sanmath,

   Now the mood is to appreciate those who acted well…!!!

   What you are telling is an entirely different matter…
   A different set of people are responsible for that.
   We need not worry much about it…
   The system is very strong…
   Culprits will be identified, and prosecuted
   very shortly – within the next 20 years…
   Then also there are appellete systems
   to take care of their welfare…!!!

   I will not be here to see that…
   Hope atleast you will be able to see the end of this issue.

   -with all best wishes,
   Kavirimainthan

 4. veni bala சொல்கிறார்:

  hi…happy to read ur article……

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  commendable article.

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நான் ஏதோ கமல் மேட்டர்ன்னு நெனச்சு ஏமாந்திட்டேன்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செந்தில் அவர்களின் பின்னூட்டம் நீக்கப்பட்டது.

   நண்ப செந்தில்,

   நண்பர் சைதை அஜீசுக்கு பதிலாக நீங்கள் எழுதிய
   பின்னூட்டம் தரக்குறைவாக இருப்பதால்,
   அதை நீக்கி விட்டேன். அஜீஸ் எனது நீண்டகால நண்பர்.
   அவர் உரிமையுடன், நகைச்சுவையாக எழுதி இருக்கிறார்..

   முன்பொரு முறை நீங்கள் ஏற்கெனவே இங்கு வந்து
   சென்ற அனுபவம் எனக்கு நினைவிற்கு வருகிறது.
   நல்ல முறையில், decent-ஆக எழுதுவதாக இருந்தால்
   மட்டும் இங்கே பின்னூட்டம் எழுதவும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. தமிழன் சொல்கிறார்:

  பெரும்பாலும் செயல்படும் அரசு அதிகாரிகளையும் அதிகார வர்க்கத்தையும் பாராட்ட மறந்துவிடுகிறோம். நல்ல சமயத்தில் வந்த பாராட்டு. சென்னையில் மழைப்புயல் வந்தபோது, ஏரி, மதகுகளைக் காத்தவர்களையும் மக்கள் பாராட்டமறந்தனர். அந்த எளிய அலுவலர்கள், அவர்களுக்குள்ள riskஐயும் பொருட்படுத்தாது, அவர்கள் வீட்டையும் மறந்து தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.

  உங்கள் பாராட்டு இடுகைக்கு நன்றி.

 8. mani சொல்கிறார்:

  we have to thank the concerned departments for executing this huge task and the collector has also
  be appreciated. When an unprecedented floods hit tamilnadu last year many unsung heroes
  risked their lives and saved many people giving the hope that all is not lost . we still have humane
  people among ourselves.

 9. ramanans சொல்கிறார்:

  பாராட்டப்பட வேண்டியவர்கள் தான் அனைவரும்.

  தவறு செய்யும்போது நாம் காவல்துறையினர் உட்பட பலரையும் கண்டிக்கிறோம். கேவலமாகப் பேசுகிறோம். ஆனால், பாராட்டி அவர்களை ஊக்குவித்து கௌரவம் செய்ய வேண்டிய நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். இந்த நிலைமை மாற வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.