இந்த வார துக்ளக் கார்ட்டூன்கள் சில…..

..

ஜனநாயகம் என்பதும், வாக்குரிமை என்பதும்
எதைத் தீர்மானிக்க உதவ வேண்டும் …?

தங்களை ஆட்சி செய்யும் உரிமையை –
எந்த தலைவர்,
எந்த கட்சி,
எத்தகைய கொள்கை உடையவரிடம் ஒப்படைப்பது
என்பதை தீர்மானிப்பதற்கு பதிலாக –

எந்த குடும்பத்தை
அல்லது ஒரே குடும்பத்தில் –
எந்த உறுப்பினரிடம் –
தந்தையா-மகனா,
அண்ணனா-தம்பியா,
மகனா-மகளா –
என்பதை மட்டும் தீர்மானிக்கும் உரிமையாக மாற்றி
விட்ட ஒரு விசித்திரமான நோய் – தொத்து நோய் –

வரிசையாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது.

துவக்கத்தில் தமிழகத்தில் மட்டும் இதைப் பார்த்தபோது
நமக்கு அதிர்ச்சியாக இருந்தது…. இப்போது இந்தியாவில்
அநேக மாநிலங்களில் ( காஷ்மீர், பஞ்சாப், உத்திர பிரதேசம்,
பீஹார், ஹிமாசல பிரதேசம், ஒடிஷா, ஆந்திரா,
தெலங்கானா ) இதே நிலை பரவுவதைக் காண்பது நமக்கு
மன திருப்தியை தருகிறது என்று தானே சொல்ல வேண்டும்..?

நாம் மட்டும் பட்டால் தானே அது துன்பம்…
அனைவருக்கும் அதே நிலை உண்டானால்….?

யாம் பெற்ற இன்பம் பெருக
அனைத்து மாநிலங்களும்… 🙂 🙂

( மேற்கண்ட கருத்து துக்ளக் இதழில் வரவில்லை –
முதல் கார்ட்டூனைக் கண்டதும் என் மனதில் தோன்றியது…! )

..
..

t-cart-2b

t-cart-2a

t-cart-1a

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

இந்த வார துக்ளக் கார்ட்டூன்கள் சில….. க்கு 7 பதில்கள்

 1. selvarajan சொல்கிறார்:

  கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்ட திரு .காமராஜர் அவர்கள் லால் பகதூர் சாஸ்திரிக்கு பிறகு நேருவின் மகளான இந்திரா காந்தியை ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்க வைத்தது தான் ” வாரிசு அரசியலுக்கு முதல் படி ” — அதன் பிறகு ” அரசியல்வாதிகள் அனைவரும் ” நம்மை ஆட்சி செய்ய வாரிசுகளை உள் நுழைத்து பதவிகள் கைமாறாமல் இருக்க ” விஷ நோயை ” பரவ விடுகிறார்கள் … !!! அந்தக்கால மன்னராட்சிக்கு முடிவு கட்டிய நாம் — இந்தக்கால வாரிசு ஆட்சிக்கு முடிவு காட்டும் நாள் — எந்நாளோ …. ?

 2. selvarajan சொல்கிறார்:

  வாரிசு அரசியல் என்று ஒரு பக்கம் ” தூள் கிளப்பிக்கொண்டு ” இருக்கிறது — ” இளிச்சவாயன் தமிழன் ” என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் பல திட்டங்களில் ஒன்று இன்றைய செயதியாக : — // சென்னையில் இருந்து வட இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் ரயில்கள் இயக்கப்படுவதா? தமிழக பயணிகள் வேதனை //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/all-major-trains-oprate-from-chennai-north-india-south-pass-266331.html — தமிழக பயணிகளுக்கு மட்டும் தான் ” வேதனையா ” … ??

 3. gopalasamy சொல்கிறார்:

  Was Sri Kamaraj really king maker ? Nehru’s daughter Smt Indra Gandhi was made PM at that time . If he could bring anybody else we can praise him.

  • vignaani சொல்கிறார்:

   Morarji Desai was a strong contender in 1966 and 1967; he even contested for the Leader of Lok Sabha Congress Party (in 1967). Kamaraj was more inclined to the group of Morarji Desai, SK Patil, Atulya Ghosh, and others. In an interview in 1970 (I think) he had told, he(had then in 1966) sincerely believed Mrs Gandhi would be like her father and preferred her over Morarji and facilitated her becoming PM; as Congress President, he had erred.

 4. LVISS சொல்கிறார்:

  Dynasty politics is entering every state — In Bihar we have Lalu’s relatives in MP it is Mulayam’s family – Some prominent leaders are promoting their sons and daughters —

 5. senthil சொல்கிறார்:

  This is stupid blog…Every one is trying to change society…

  In fact, there is no somethong as society…only individuals here…we are collectively call all individuals as society….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s